சென்னை, செப். 1: தமிழக சட்ட மேலவைக்கான தொகுதி வரையறை குறித்த பிரச்னைகளை ஆராய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தொகுதி வரையறை தொடர்பான வரைவு அறிக்கை முறையானதாக இல்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில், சட்ட மேலவைக்கான தொகுதி வரையறை தொடர்பாக கருத்தறிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தை கடந்த 28-ம் தேதி தேர்தல் ஆணையம் கூட்டியது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 171-வது பிரிவின்படி பட்டதாரிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு வாக்களிக்க உரிய வாய்ப்பளிக்கும் வகையில் தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும். ஆனால், இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை முறையானதாக இல்லை. மாவட்ட வாரியாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் தொகுதி வரையறுக்கப்பட வேண்டும். மேலும், தொகுதி வரையறை என்பது மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையிலும், பூகோள அடிப்படையிலும் ஒரே மாதிரியாக, சமமாக இருக்க வேண்டும். தொகுதி வரையறை குறித்த வரைபடம் தெளிவான எல்லையுடன் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். தொகுதி வரையறை குறித்த வரைவு அறிக்கை அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அனுப்பப்பட வேண்டும். தொகுதி வரையறை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். அந்தக் குழுவானது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அறிஞர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். அந்தக் கருத்துகளை தொகுத்து குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தொகுதி வரையறை குறித்த இறுதி முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் கருத்தை அறிய போதுமான கால அவகாசம், அதாவது குறைந்தது 2 மாத அவகாசமாவது அளிக்க வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் சட்ட மேலவைக்கான தொகுதி வரையறை அவசர கோலத்தில் நடைபெறாமல், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்று ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:17:00 AM
9/2/2010 4:17:00 AM
By இந்திய நேசன்
9/2/2010 2:22:00 AM
9/2/2010 2:22:00 AM
By ahamed
9/2/2010 2:08:00 AM
9/2/2010 2:08:00 AM
By PA Valarmathi
9/2/2010 2:05:00 AM
9/2/2010 2:05:00 AM
By வான்முகிலன்
9/2/2010 1:31:00 AM
9/2/2010 1:31:00 AM
By வான்முகிலன்
9/2/2010 1:30:00 AM
9/2/2010 1:30:00 AM
By rajasji
9/2/2010 1:23:00 AM
9/2/2010 1:23:00 AM
By மதுரைக்காரன்.
9/2/2010 1:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/2/2010 1:18:00 AM