ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

குப்பைகளால் துர்நாற்றம் வீசும் கோயில் குளம்


கோயில் குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.
ஸ்ரீபெரும்புதூர், ஆக. 28: பிளாஸ்டிக் கவர்கள் குப்பைகளால் துர்நாற்றம் வீசும் வல்லக்கோட்டை முருகன் கோயில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் புகழ்மிக்க சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. கோயிலின் அருகே திருக்குளம் அமைந்துள்ளது. இத்திருக்குளத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களும், மொட்டை அடிக்கும் பக்தர்களும் குளித்து விட்டு சாமியை தரிசனம் செய்வது வழக்கம்.இக்கோயில் குளம் தற்போது கோயிலின் அருகில் இருக்கும் கடைகளில் இருந்து வீசப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் குப்பைகளாலும் அருகில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள்  துணி துவைப்பதாலும், குளத்தில் படிந்துள்ள பாசியாலும் தற்போது அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் நீராட முடியாத சூழ்நிலை உள்ளது.இதைத் தவிர்க்க கோயில் குளத்தில் படர்ந்துள்ள பாசிகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் துணி துவைப்பதற்கு தடை விதிக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்  எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்கள்

தமிழ் வளர்ச்சியில் நாட்டம் கொண்ட தினமணி திருப்பெரும்புதூர் எனக் குறிக்கலாமே. திருமுருகன் திருக்கோயில் எனக் குறிப்பிடலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 3:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக