வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இங்கிலாந்தில் சிந்திக்கும் திறன் கொண்ட எந்திரன்,

இங்கிலாந்தில் சிந்திக்கும் திறன் கொண்ட  எந்திரனை  உருவாக்கிய இந்தியர்
 
இங்கிலாந்தில் சிந்திக்கும் திறன் கொண்ட 'ரோபோ'வை உருவாக்கிய இந்தியர்
இலண்டன், ஏப். 5-

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராம் ராமமூர்த்தி. இவர் இங்கிலாந்தில் உள்ள ஈடன்பர்க் பல்கலைக்கழகத்தில் கணிபொறி அறிவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு புத்திசாலியான புதிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோ செயற்கை சிந்தனை திறன் கொண்டது. இது மனிதர்களுடன் 'ராக்-சிஸ்சர்-பேப்பர்' என்ற விளையாட்டை விளையாடும். இரண்டு நபர்கள் கைகளை நீட்டி, பறை, கத்தரிகோல், காகிதம் என்ற மூன்று வடிவங்களை கைகளால் காண்பிக்க வேண்டும்.

ஒரே வடிவத்தை இரண்டு பேரும் காண்பித்தால் போட்டி முடிந்து விடும். இந்த விளையாட்டினை ரோபோ மனிதர்களுடன் தொடர்ந்து விளையாட முடியும். இரண்டு அடி உயரம் கொண்ட இந்த ரோபோ மனிதனின் சைகைகளை புரிந்து கொள்கிறது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஈடன்பர்க் சர்வதேச அறிவியல் திருவிழாவில் இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ரோபோ 2013-ம் ஆண்டு நடைபெற உள்ள ரோபோ கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி தி.மு.க. நெருக்குதல் கொடுக்குமாம்? ஆட்சியில் முடியாதது இப்பொழுது முடியுமாம்



பின்வருவனவற்றை டி.ஆர்.பாலுவும் அவரை இயக்குபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

1. என்னதான் நாடகமாடினாலும், மக்கள், இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் இருந்த தி.மு.க.வை மன்னிக்க விரும்பவில்லை.
2. மாணவர்கள் போராட்டங்களும் மக்கள் எழுச்சியும் அடியோடு தோல்வியைத் தரும் என அஞ்சிப் பிரிவது போல் பிரிந்து தேர்தலுக்குப்பிறகு காங்.உடன் கூட்டணி சேரும் தி.மு.க. என மக்கள் நம்புகின்றனர்.
3. ஒருவேளை  பா.ச.க.வை ஆதிக்க வேண்டி வந்தாலும் இனப்படுகொலையாளர்களைத் தண்டிக்க மதவாதத்துடன் கூட்டு வைப்பதில் தவறு இல்லை என்றுதான் தி.மு.க. பேசும் என்பதும் மக்கள் நம்பிக்கை.
4.  முதல்வராக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாது என்பவர்கள் ஆட்சி இருந்தும் தம் வீட்டு மக்களைமட்டும் வளர்த்தவர்கள், இப் பொழுது  மட்டும் நெருக்குதல் கொடுக்கும் என்று சொல்வது எப்படி நடக்கும்?  இந்த நெருக்குதலை ஆட்சியில் இருந்த பொழுது கொடுத்திருந்தால் என்ன?

தொடர்ச்சி காண்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

(முன் தொடர்ச்சி)
5. இனப்படுகொலை என்பதை மறைத்துப் போர் என்றும் ஈழம் என்று சொல்வதை விரும்பாமலும் நிலை தடுமாறி உரைப்பதை மக்கள் பொருட்படுத்தவில்லை.
6. மக்கள் மீண்டும் ஆதரிக்க வேண்டும் என்றால்
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாகத் தி.மு.க.தலைமைக்குத் தெரிந்தவற்றைக் கூறி  வெளிப்படையாக ஈழத் தமிழர்களிடமும்  பிற உலகத் தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


மத்திய அரசு மீதான திமுகவின் நிலை இனி கடுமையாக இருக்கும்: டி. ஆர். பாலு


""மத்தியில் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்துவந்த திமுகவின் நிலை இதுவரை மிகவும் இணக்கமான முறையில் அமைந்திருந்தது. இனிவரும் நாள்களில் அவ்வாறு சும்மா இருக்கப் போவதில்லை. மத்திய அரசு மீதான எங்கள் அணுகுமுறையும் விமர்சனமும் இனி மிகக் கடுமையாக இருக்கும்'' என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கூறினார்.
இது தொடர்பாக தில்லியில் "தினமணி' நிருபரிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு விட்டதால் நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டதாக சிலர் பெருமிதப்படுகின்றனர். அரசிதழில் நடுவர்மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது ஒரு தொடக்கம் மட்டுமே.
தீர்ப்பின்படி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.  அப்போதுதான் நீர்ப் பங்கீட்டு நடவடிக்கையை கண்காணிக்கவும் தமிழகத்தின் நீர்ப் பெறும் உரிமையை நிலைநாட்டவும் முடியும்.
இந்த நடவடிக்கையை விரைவுபடுத்த, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கும் திமுக நெருக்குதல் கொடுக்கும்.
தமிழக நலன் குறித்து மத்திய அரசிடம் முறையிட்டு, முறையிட்டு ஏமாந்து போனதுதான் மிச்சம்.
மத்திய அரசின் அலட்சியத்தால் ஏராளமான கசப்பான அனுபவங்களை திமுக சந்தித்துள்ளது. அதன் விளைவாகத்தான், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக திரும்பப் பெற்றது.
இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழகத்தையும், திமுகவையும் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும், போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க சர்வதேச விசாரணை தேவை என்றும் திமுக வலியுறுத்தியது.
போஸ்னியா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டபோது,  முந்திக் கொண்டு இந்தியா குரல் கொடுத்தது. ஆனால், பக்கத்து நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து அலட்சியம் காட்டி வருகிறது.
மீனவர்கள் விவகாரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், சிறைப்பிடிக்கப்பட்டும் வருகின்றனர். அதைத் தடுக்கவும் மத்திய அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்கவில்லை.
இது போன்ற அலட்சியப் போக்குக்கு காங்கிரஸ் கட்சி பதில் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாலு கூறினார்.

கருத்துகள்(1)

திரு .பாலு சார் , இலங்கை தமிழ் மக்களை ,காவேரி பிரச்சனயில் வஞ்சித்து விட்டார்கள் என்று சொல்வது எல்லாம் தமிழ் நாட்டு மக்களும் ,தமிழக முதல்வரும் ,மாணவர்களும் சொல்லிகொண்டுதானே இருக்கின்றார்கள் ,இது அறிந்து கொள்ள உங்களுக்கு 9 வருடம் ஆனதா ? உங்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது என வேறு அது எங்களுக்கு தெரியாது .தமிழகத்தை புறக்கணிப்பது மட்டுமே தெரிந்த எங்களுக்கு உங்களையும் புறக்கணித்து விட்டது என்பதை கேட்கும் போது நெஞ்சு துடிக்கின்றது ,இதயம் வெடிக்கின்றது .திமுகாவை ஏமாற்றிய கட்சியை இனி ஆட்சியில் நிம்மதியாக அமரவிடகூடாது.புறபடு தலைவா இனி தமிழகத்தை ,இலங்கை தமிழ் மக்களை ,முல்லை ,காவேரி போன்று அணைத்து விசயங்களிலும் சாரி பாலு சார் திமுகவை புறக்கணிக்கும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் .தமிழக மக்கள் இனியும் பொறுத்தால் தாங்காது திமுகவை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சியை எதிர்க்க தவறினால் நாம் சொற்றுபிண்டங்கள் ஆகி விடுவோம் .வீறு கொண்டு எழுவோம் .தமிழா வீறு கொண்டு எழு ....(என்ன கொடுமை சார் உஷார் இது பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம எச்சரிக்கை )


இனப்படுகொலையை மறைக்கப் போர் எனச் சொல்லும் பிரணாப்



அமைச்சராக இருந்தபொழுதுதான் சிங்கள இனப்படுகொலைக்குப் பல்வேறு வகையில் இந்திய அரசு சார்பில் உதவியாக இருந்த பிரணாப் இப்பொழுதேனும் மாறலாம் அல்லவா? நூறாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்ததைப் போர் முடிவிற்கு வந்து விட்டது என்று சொல்வதில் இருந்தே இவரது ஒரு தலைச்சார்பும் தமிழின எதிர்ப்போக்கும் வெளிப்படுகிறது. தாய்மண்ணைப்பற்றிச் சிந்திக்காத கலாம் போன்றவர்கள் அல்லாமல் மனித நேயம் மிக்கத் தமிழ் உணர்வாளர்கள் குடியரசுத்தலைவராகவும் தலைமை அமைச்சராகவும் அமர்ந்தால்தான் தமிழர்க்கு விடிவு கிடைக்கும். இனப்படுகொலையைப் போர் என்றும் வன்முறைக்கு எதிர்ப்பான நடவடிக்கை என்றும் சொல்பவர்கள் யாராயினும் அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.  தமிழகச் சட்டமன்றத்தின் தமிழ்  ஈழம் தொடர்பான தீர்மானம் உலகெங்கும் பரவி ஈழத்தமிழ் மக்கள் விடுதலையும் நல்வாழ்வும் அடைய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


இலங்கையில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு: பிரணாப் முகர்சி

போர் முடிவுக்கு வந்ததால் இலங்கையில் ஒற்றுமை நிலவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப்பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் கூறியதாவது: இந்தியா-இலங்கை இடையே  பல்லாண்டு காலமாக கலாசார, வரலாற்று அடிப்படையில் நெருங்கிய உறவு உள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நெருங்கிய நட்புறவின் அடிப்படையில் இலங்கையில் நடைபெறும் சம்பவங்களில் இந்தியாவுக்கும் அக்கறை உண்டு.
போர் முடிவுற்றதால் அரசியல் தீர்வு காண இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் வகையில் தீர்வு காண வேண்டும் என்றார்.


தேர்வாவது எப்படி!


தேர்வாவது எப்படி!தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வழி முறைகளை விளக்கும், பெ.வெங்கடாசலம்: நான், மதுரையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட்டில், நிர்வாக இயக்குனராக இருக்கிறேன். தமிழக அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வுக்கு, தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் மட்டும், தகுதியானவர்களா அல்லது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் படித்தவர்களுக்கும் தகுதி இருக்கிறதா என, குழப்பம் இருக்கிறது. தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில், முறைப்படி பதிவு செய்த அனைவரும், தமிழக அரசு நடத்தும் தகுதித் தேர்வில் பங்கேற்கலாம். டி.ஆர்.பி., எனும் ஆசிரியர் தேர்வு வாரியம், 1ம் வகுப்பிலிருந்து, 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் தேர்வும்; 6லிருந்து, 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் தேர்வும் என, இரண்டு விதமாக நடத்துகிறது. இடைநிலைக்கு, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பிற்கான பாடத் திட்டத்தின் படியும்; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 6 முதல் பிளஸ் 2 மற்றும், பி.எட்., படிப்பிற்கான பாடத் திட்டத்தின் படியும், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., எனும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராக வேண்டும். ஆசிரியருக்கான காலிப் பணியிடங்களை அரசு அறிவிக்கும் போது, டி.இ.டி., தேர்வில் வென்றவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள், அடுத்தடுத்து நடைபெறும், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெறலாம். தற்போது, காலிப் பணியிடங்கள் அதிகம் என்பதால், டி.இ.டி., தேர்வில் வென்றதுமே, பணி உறுதி செய்யப்படுகிறது. ஒருவேளை, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட, டி.இ.டி., தேர்வில் வென்றவர்கள் அதிகமானால், போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி., மதிப்பெண்ணோடு, பிளஸ் 2, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும், குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கியோ அல்லது அரசின் அப்போதைய மாறுதல் படியோ, இறுதி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்புக்கு: 90470 34271.

சௌதியில் குற்றவாளிக்கு முடக்குவாதம் ஏற்படுத்தும் தண்டனை

சௌதியில்  பழிக்குப்பழி த் தண்டனை: குற்றவாளிக்கு முடக்குவாதம் ஏற்படுத்தும் தீர்ப்பால் வாதம்

BySriram Senkottai

First Published : 04 April 2013 02:44 PM IST

சௌதி அரேபியாவில் ஒரு தீர்ப்பு பலரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. பத்துவருடங்கள் முன்னர் அந்தக் குற்றவாளி செய்த தண்டனைக்குத் தீர்ப்பாக, பதிலுக்கு பதில் முடக்குவாதம் ஏற்படுத்த விதிக்கப்பட்ட தண்டனைதான் அது. ஒரு மில்லியன் ரியால் பணத்தை அவரது குடும்பத்தினர் அபராதமாக அளிக்க இயலாத பட்சத்தில் இந்த தண்டனையாம்!
சௌதி அரேபியாவில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளது. இது, கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்ற தண்டனையினை வலியுறுத்துவது.
10 வருடங்களுக்கு முன்னர் செய்த ஒரு தவறுக்காக 10 வருடங்கள் சிறைத் தண்டனையினை அனுபவித்து வரும் இளைஞர் ஒருவர், இப்போது, முடக்கு வாதம் ஏற்படுத்தப்பட்டு, சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழிக்கவுள்ளார். அதுவும், அவரது குடும்பத்தினர் ஒரு மில்லியன் சவுதி ரியால் பணத்தை (1,76,000 யுரோ) பாதிக்கப்பட்டவருக்கு அளிக்காத பட்சத்தில்!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு.
அலி அல்-கவாஹர் என்ற 24 வயது இளைஞர் பத்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் செய்த குற்றம், தனது நண்பர் ஒருவரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபமுற்ற அவர், கத்தியால் நண்பரின் முதுகுத் தண்டு வடத்தில் தாக்கியுள்ளார். இதில், அந்த நண்பருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டு, நடமாட முடியாத நிலை வந்துவிட்டது.
பதிலுக்கு அதே போன்ற நிலையை அல்-கவாஹருக்கு ஏற்படுத்த தீர்ப்பு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்க நாடுகளின் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் துணை இயக்குனர் ஆன் ஹாரிஸன், “ஒரு நபரை முடக்குவாதத்தில் தள்ளுவது என்பது மிகவும் கொடூரமான ஒன்று. அவருக்கு விதிக்கப்படும் கடுமையான துன்புறுத்தல்” என்றார்.
"இதுபோன்ற அதிர்ச்சி தரத்தக்க தண்டனைகள் எல்லாம் சௌதி அரேபியாவில்தான் பார்க்க முடியும்.” என்று கூறியுள்ளார் ஹாரிஸன்.
அல்-ஹாயத் என்ற அரபு மொழி தினசரி இதழ், கவாஹரின் 60 வயது தாயார் கூறியதாக, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. "என் மகன் 14 வயதுச் சிறுவனாக இருந்தபோது இந்தக் குற்றம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர், என்னிடம் 2 மில்லியன் ரியால் சமரசத்துக்கான இழப்பீடாகக் கேட்டார். எங்களால் அவ்வளவு இயலாது என்றதும் ஒரு மில்லியன் ரியால் என குறைக்கப்பட்டது. ஆனால், எங்களிடமோ அதில் 10ல் ஒரு பங்கு பணம் கூட கிடையாது” என்று அவர் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளது பத்திரிகை.
அல்-ஹாயத் மேலும் " இந்த இளைஞனுக்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் இரத்தத்துக்காக பணம் என்ற இதன் கோட்பாட்டுக்காக பணத்தைத் திரட்ட முயன்று வருகிறார். ஆனால், எத்தனை தூரம் அது சாத்தியம் என்று தெரியவில்லை. அதுவும் கவாஹரின் தண்டனை நிறைவேற்றப்படும் முன் அது நடக்குமா என்றும் தெரியவில்லை” என்று கூறியுள்ளது.
இந்த வழக்கு விவரமாக அம்னெஸ்டி கூறுகையில், "சௌதி அரேபியா இதுபோன்ற தனது சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் நேரம் இது. சர்வதேச மரபுகளுக்கு மதிப்பு அளித்து, இதுபோன்ற மிக மோசமான தண்டனைகளை வழங்குவதை அது விலக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
சௌதி நீதிபதிகள், இதற்கு முன்னர் ஷரியத்  சட்டப்படி, பல்லைப் பிடுங்குதல், கண்ணைச் சிதைத்தல், சவுக்கடி அளித்தல்... கொலை வழக்குகளில் மரண தண்டனை அளித்தல் என பல தீர்ப்புகளை அளித்துள்ளனர்.

கருத்துகள்(10)

தினமணி அவர்களே இடையில் ஒரு அப்பா தன் மகளுக்கு ஆசிட் வீசியவன் மீது அதே ஆசிட் வீசி தண்டனை அளிக்க வேண்டும் என்று சொன்னது நினைவில் இல்லையா?
இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஷரியத் சட்டம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனம் ....
முஸ்லிம் சட்டம் மாற்றப்பட வேண்டும். மனித நேய மிக்க கண் பார்வை வேண்டும்
மிக சரியான சட்டம் அப்பொழுதுதான் குற்றம் செய்ய பயப்படுவார்கள் நாம் எப்பொழுதும் பாதிக்க பட்டவர் தரப்பிலிருந்து சிந்திக்க வேண்டும்.
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் உயிருக்கு உயிர் எனபது இஸ்லாமிய சட்டம் அதை நடைமுறை படுத்தினால் குற்றங்கள் கட்டாயமாக குறையும் நமது நாட்டு குற்றவியல் சட்டங்கள் சரியில்லாமல் இருப்பதால் தான் குற்றங்கள் மலிந்து காணப்படுகிறது நாம் அன்றாடம் செய்தி தாள்களில் பார்க்கிறோம் 33 தடவை திருடியவன் மீண்டும் திருட்டு வழக்கில் கைது இது எப்படி அவனால் முடிகிறது வெளியில் இருந்தால் உழைக்க மனம் வரமாட்ட்ங்கிது உள்ள போனால் ராஜா மரியாதை சாப்பட்டுக்கு சாப்பாடு நிம்மதியான தூக்கம் வாரம் வாரம் சினிமா இன்னும் பல சலுகைகள்... இந்த சட்டம் குற்றத்தை கூட்டுமா குறைக்குமா? இன்னும் எத்தனயோ பேர் பல கொலைகளை செய்துவிட்டு சாதரணமாக ஊருக்குள் வளம் வருகிறார்களே.. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? எப்போது சட்டம் கடுமையாக்கப் படுகிறதோ அப்போது தான் குற்றங்கள் குறையும் பல பெண்கள் தங்களது கர்ப்பை இழந்து விட்டு நிற்கிறார்களே அவர்களை கற்பழித்த அந்த கொடூரனுக்கு நமது வரிபனத்தில் சோறு போடப் படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இது போன்ற ஒரு நிலை தனக்கு வந்தால் மட்டுமே இஸ்லாமிய சட்டம் சரியா தவறா என புரிய முடியும்

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு: சப்பான் தமிழர்கள் போராட்டம்

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு: சப்பான் தமிழர்கள் போராட்டம்





















இலங்கை அரசின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்கள் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்கள் குரலை ஒலிப்பதாக ஜப்பான் வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் திரைப்பட இயக்குனர் பி.வாசு கலந்து கொண்டார்.

வியாழன், 4 ஏப்ரல், 2013

சிறப்பு முகாமில் 9- ஆவது நாளாக உண்ணா நோன்பு

பூந்தமல்லி ச் சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்  9- ஆவது நாளாக உண்ணா நோன்பு
  
பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் அகதி 9-வது நாளாக உண்ணாவிரதம்
சென்னை, ஏப். 4-

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வரும் தமிழர்கள் இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு லட்சக்கணக்கான தமிழர்கள் தற்போது வசித்து வருகிறார்கள்.

இப்படி அகதிகளாக வருபவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செங்கல்பட்டு சிறப்பு முகாமில், 48 பேரும், பூந்தமல்லி சிறப்பு முகாமில் 4 பேரும் கடந்த பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

பூந்தமல்லி முகாமில் உள்ள அகதி சந்திரகுமார் தன்னையும், தன்னுடன் இருக்கும் மற்ற கைதிகளான கங்காதரன், ஜெயமோகன், பகீரதன் ஆகியோரையும் திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 27-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து அவரது மனைவி ஜெயநந்தினி, மகன்கள் பரிதி அழகன் (வயது 6), பிருந்தாவன் (3) ஆகியோருடன் சந்திரகுமாரை பார்ப்பதற்காக சென்றார். அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டார்.


இதனால் மனமுடைந்த சந்திரகுமார் அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து கடந்த 1-ந்தேதி அன்று முகாமுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

27-ந்தேதியில் இருந்து இன்றுவரை 9 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையில் போர் நடந்தபோது காயங்களுடன் குடும்பத்துடன் நான் தமிழகத்துக்கு தப்பி வந்தேன். இந்த சமயத்தில்தான் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

3.5 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் நான் வாடி வருகிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு முடிந்த பின்னரும் தனிமைச் சிறையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறேன். அயல் நாட்டவர் சட்டப்படி வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் குடும்பத்தினருடனேயே அவர்கள் தங்கியிருந்து வழக்கை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பு எனக்கும், என்னைப்போல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்ப ர்களுக்கும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. எனவே என்னைப் போன்ற அனைவரையும் திறந்த வெளி முகாமுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் சிறையில் நாங்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி ஈழ விடுதலைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

காற்றின் மாசினால் ஒரே ஆண்டில் 12 நூறாயிரம் சீனர்கள் பலி

காற்றின் மாசினால் ஒரே ஆண்டில் 12  நூறாயிரம் சீனர்கள் பலி
 
காற்றின் மாசினால் ஒரே ஆண்டில் 12 லட்சம் சீனர்கள் பலி
பீஜிங், ஏப். 4-

சீனாவின் தலைநகரான பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களில் காற்றில் பெருமளவிற்கு மாசு கலந்துள்ளது. 'பி.எம்.2.5 துகள்கள்' என அழைக்கப்படும் கண்ணுக்கு புலப்படாத நச்சு துகள்கள் காற்றில் கலந்திருப்பதால் பெருநகரங்களில் வசிக்கும் சீனர்களில் பலர், சுவாசிக்கும் முகமூடிகளை அணிந்தபடி தான் வெளியே செல்கின்றனர்.

எனினும், சுவாசத்தின் மூலம் இந்த துகள்கள் நுரையீரலுக்குள் ஆழ்ந்து ஊடுருவி தங்கிவிடுவதால் ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோயினால் சீனர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் சுமார் 12 லட்சம் சீனர்கள் காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சீனாவில் இவ்வாரம் தாக்கல் செய்யப்பட்ட வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

உணவு சார்ந்த தீமைகள், உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல் ஆகியவற்றிற்கு அடுத்த 4வது இடத்தில் காற்று மாசினால் ஏற்படும் நோய்கள் சீனர்களின் இறப்புக்கு காரணமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடல் எல்லை எச்சரிக்கும் கருவி: புதிய கண்டுபிடிப்பு


மீனவர்களுக்கு க் கடல் எல்லையை எச்சரிக்கும் கருவி: கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

 மீனவர்களுக்கு கடல் எல்லையை எச்சரிக்கும் கருவி: கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
சிவகாசி, ஏப். 2-

சிவகாசி அருகே உள்ள பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ராஜேந்திரபிரசாத், முனியசாமி, முருகேசன், நாகராஜ், நிவாஸ்குமார், ராஜேந்திர தினேஷ் கண்ணன். இவர்கள் அனைவரும் இணைந்து மீனவர்கள் கடல் எல்லைக்குள் நுழையும்போது எச்சரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இதை கப்பல் அல்லது படகில் பொருந்திய பின்பு கடல் எல்லையை நெருக்கும் 100 மீட்டருக்கு முன்பே நமக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும். அப்போதும் நம் கப்பல் நம் எல்லைக்குள் வரவில்லை என்றால் கப்பல் தானாகவே நின்றுவிடும். இதனால் எக்காரணத்தை கொண்டும் படகு மற்றும் கப்பல்கள் நமது எல்லையை தாண்ட முடியாது. இதன் மூலம் மீனவர்கள் எல்லை பகுதியை அறிந்து மீன் பிடிக்க முடியும்.

இது இரவிலும், பகலிலும் இயங்கக்கூடியது. இந்த கருவியின் செயல்பாடு வியப்பை தருவதாக உள்ளது. ஆர்.பி. டிரான்ஸ் மீட்டர் எனப்படும் சிக்னல் டிரான்ஸ்மீட்டரை கடற்கரையில் பொருத்த வேண்டும். இந்த ஒரு டிரான்ஸ் மீட்டர் அனைத்து கப்பல்களுக்கும் சிக்னல்களை கொண்டு செல்லும். இந்த சிக்னல் இலங்கை எல்லை தொடங்கும் 100 மீட்டர் முன்பு வரை தொடர்ந்து டிரான்ஸ்மீட் செய்ய வேண்டும்.

இந்த கருவியை அனைத்து கப்பல்களிலும் பொருத்தி விட வேண்டும். கப்பல்களில் பொருத்தப்பட்ட இந்த கருவி டிரான்ஸ்மீட்டர் தரும் சிக்னல்களை உள்வாங்கி கொண்டே இருக்கும். எப்போது நமது கப்பல் இலங்கை எல்லையை நெருக்க போகிறதோ அப்போது 100 மீட்டருக்கு முன்பு சிக்னல் கிடைக்காது. அதனால் மைக்ரோ கண்ட்ரோலரை பயன்படுத்தி கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து ஸ்பீக்கர்களிலும் எச்சரிக்கை மணி ஒலிக்கும். இதன் மூலம் இலங்கை எல்லையின் ஆரம்பத்தை அறிந்து கொண்டு மீனவர்கள் செயல்பட முடியும்.

இதன்மூலம் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது முன்பே எச்சரிக்கை மணி ஒலிக்கும் என்பதால் மீனவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த கருவி ஈரோட்டில் நடந்த மாநில அளவிலன கண்காட்சியில் முதல் பரிசை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தாளாளர் சோலைச்சாமி, கல்லூரி இயக்குனர்கள் அருண், சுந்தர், டீன் மாரிச்சாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.

மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை அட்டூழியம்

நடுக்கடலில் இராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை க் கடற்படை அட்டூழியம்
 
இராமேசுவரம், ஏப். 4-

ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மீனவர்களை தாக்குவதோடு, அவர்களது வலைகள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர். 16 நாட்களாக நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2 நாட்களாகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று 580 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் பெற்றன. ஆனால் 400 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. ஒரு படகுக்கு 5 பேர் வீதம் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அவர்களது பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலில் கரைக்கு திரும்பிய அவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதல் பற்றி புகார் கூறினர். தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது மீனவர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.