நடுக்கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுக்கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஏப்ரல், 2013

மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை அட்டூழியம்

நடுக்கடலில் இராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை க் கடற்படை அட்டூழியம்
 
இராமேசுவரம், ஏப். 4-

ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. மீனவர்களை தாக்குவதோடு, அவர்களது வலைகள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர். 16 நாட்களாக நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2 நாட்களாகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று 580 விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் பெற்றன. ஆனால் 400 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க சென்றன. ஒரு படகுக்கு 5 பேர் வீதம் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். அவர்களது பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலில் கரைக்கு திரும்பிய அவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதல் பற்றி புகார் கூறினர். தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது மீனவர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 10 டிசம்பர், 2012

கூடங்குளம் : நடுக்கடலில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்

கூடங்குளம் : நடுக்கடலில் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்




கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தியைத் துவக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருநெல்வேலி மீனவர்கள் படகுகளில் வந்து நடுக்கடலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் தலைமை வகித்தார்.
இப்போராட்டத்தின் போது உச்சநீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் நகல்களை போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் கடலில் வைத்து எரித்தனர். போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சுப. உதயக்குமார், செய்தியாளர்களிடம் பேசும்போது அணுமின் சக்தி மற்றும் நாட்டில் உள்ள அணு உலைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்களிடைய பொது விவாதம் நடத்த வேண்டும். பொது விவாதத்துக்குப்பின் பெரும்பான்மையான மக்கள் அணு சக்திக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தால், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அருதிப் பெரும்பான்மைக் கிடைத்தால் நாங்கள் போராட்டத்தைக் கைவிட தயார் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இடிந்தகரை பகுதியில் போலிஸார் நுழைவதற்கு முயற்சித்ததால், பதற்றம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்பு போலிஸார் அங்கிருந்து விலகியதால் பதற்றம் தணிந்தது.