பின்வருவனவற்றை
டி.ஆர்.பாலுவும் அவரை இயக்குபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
1. என்னதான்
நாடகமாடினாலும், மக்கள், இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் இருந்த தி.மு.க.வை மன்னிக்க
விரும்பவில்லை.
2. மாணவர்கள்
போராட்டங்களும் மக்கள் எழுச்சியும் அடியோடு தோல்வியைத் தரும் என அஞ்சிப் பிரிவது
போல் பிரிந்து தேர்தலுக்குப்பிறகு காங்.உடன் கூட்டணி சேரும் தி.மு.க. என மக்கள்
நம்புகின்றனர்.
3. ஒருவேளை பா.ச.க.வை ஆதிக்க வேண்டி வந்தாலும்
இனப்படுகொலையாளர்களைத் தண்டிக்க மதவாதத்துடன் கூட்டு வைப்பதில் தவறு இல்லை
என்றுதான் தி.மு.க. பேசும் என்பதும் மக்கள் நம்பிக்கை.
4. முதல்வராக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாது
என்பவர்கள் ஆட்சி இருந்தும் தம் வீட்டு மக்களைமட்டும் வளர்த்தவர்கள், இப் பொழுது மட்டும் நெருக்குதல் கொடுக்கும் என்று சொல்வது
எப்படி நடக்கும்? இந்த நெருக்குதலை ஆட்சியில் இருந்த
பொழுது கொடுத்திருந்தால் என்ன?
தொடர்ச்சி
காண்க.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக்
காப்போம்! இனத்தைக் காப்போம்!/
(முன்
தொடர்ச்சி)
5. இனப்படுகொலை
என்பதை மறைத்துப் போர் என்றும் ஈழம் என்று சொல்வதை விரும்பாமலும் நிலை தடுமாறி
உரைப்பதை மக்கள் பொருட்படுத்தவில்லை.
6. மக்கள்
மீண்டும் ஆதரிக்க வேண்டும் என்றால்
ஈழத்தமிழர்கள்
இனப்படுகொலை தொடர்பாகத் தி.மு.க.தலைமைக்குத் தெரிந்தவற்றைக் கூறி வெளிப்படையாக ஈழத் தமிழர்களிடமும் பிற உலகத் தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க
வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்
காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக