திங்கள், 11 ஏப்ரல், 2011

Modi refers thirukkural: திருக்குறள் மண்ணில் நான்: நரேந்திர மோடி பெருமிதம்

திருக்குறள் சிலவற்றை அறிந்துள்ள மோடி பிறப்பொக்கும் எலலா உயிர்க்கும் என்னும் குறளையும் அறிந்து சமய வெறியை ஒழித்துத் திருந்தினால் நல்லது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! 
/ எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

திருக்குறள் மண்ணில் நான்: நரேந்திர மோடி பெருமிதம்


சென்னை, ஏப்ரல் 10: தான் தமிழ்நாடு வரப் போவதாகவும், மகரிஷி திருவள்ளுவரின் பூமிக்கு வருவதில் தான் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் நரேந்திர மோடி தன் டிவிட்டர் இணையதளத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.இந்த நேரத்தில் தான் இரண்டு திருக்குறள் கருத்துகளை நினைவு கூர்வதாகவும், அது ஊழல் குறித்த நெருப்பு புகைந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக அணிதிரண்டுள்ள நாட்டு மக்கள் அனைவரும்  போற்றிக் கொண்டாட வேண்டிய கருத்துகள் இவை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.-  பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம், அதைப் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும். நல்ல வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் அவை பிறகு பயன் தரும்... - தவறான வழியில் ஈட்டிய செல்வத்தை பொத்திப் பொத்தி பாதுகாப்பது என்பது, ஈரம் காயாத மண்பானையில் தண்ணீரை ஊற்றிப் பாதுகாப்பதைப் போன்றது. இவ்வாறு குறிப்பிட்டுள்ள நரேந்திரமோடி, கடந்த இரு பத்தாண்டுகளாக ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பம் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தது. இனி, ஈடி (என்விரான்மெண்டல் டெக்னாலஜி) எனப்படும் சுற்றுச்சூழலியல் தொழில்நுட்பம் உலகைக் கோலோச்சும் என்றும் கூறியுள்ளார்.மோடி இன்று மாலை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஓசூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கருத்துகள்

Sir atleast give a Chance to MK to rule Gujarat. Suppose he might get a chance to rule Gujarat definitely with in 5 Years he will makes Gujarat like as a Tamil Nadu but never he can't even dreams develop Tamil nadu as a Gujarat.
By samy
4/10/2011 11:20:00 PM
தி.மு.க ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது. குறிப்பாக உயர்கல்வித்துறையை சொல்லலாம் துணைவேந்தர் பதவி 3 கோடி,பேராசிரியர் 40 லட்சம்,இணைப்பேராசிரியர் 20 லட்சம்,துணைப்பேராசிரியர் 17 இலட்சம் என்று ஏலம்விட்டவர் உயர்கல்வி அமைச்சரும் துணைவேந்தர்களும். மதுரை,நெல்லை,வேலூர்,பாரதிதாசன் ,பெரியார்,சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைப் பற்றி தனித்தனியாக விசாரிக்கப்பட வேண்டும்.தி.மு.க ஆட்சியில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அப்பாயிண்மெண்டு அனைத்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தகுதியற்றவர்கள் நீக்கப்பட வேண்டும். அம்மா செய்வார்களா? -பட்டுராசா
By பட்டுராசா
4/10/2011 9:52:00 PM
இந்த பொன்மொழ்கள் எல்லாம் கண்ணகி சிலையை அகற்றியவர்களுக்கு எப்படி தெரியும்?
By TS
4/10/2011 9:46:00 PM
நீங்கள் இந்த புனித பூமியை மிதித்தது எம் தமிழ் மண்ணுக்கே பெருமை சேர்க்கிறது இனிமேலாவது நல்ல காலம் என்று நினைக்கிறேன்
By Nathan
4/10/2011 9:36:00 PM
நமது நாட்டில் நல்ல முதல்வராக இருக்கும் மோடி தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இவரது பிரச்சாரத்தை தமிழர்கள் கேட்டு உணர்ந்து இந்த தேர்தலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஊழலை தமிழ் நாட்டை விட்டு விரட்டவேண்டும். குஜராத் போல் தமிழ் நாடு வளம் பெறவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களும் மக்களுக்கு இல்லாமல் போய்விடும். ஒரு குடும்பம் சர்வாதிகார ஆட்சி செய்யும். சுதந்திரம் பெற்றதின் அருமை இல்லாமலும் அடிமையாக வாழவேண்டிவரும்.
By மு.நாட்ராயன்
4/10/2011 9:34:00 PM
நீங்கள் தமிழகம் வருவதினால் தமிழகம் புனிதமடையும்! ஊழலின் ஊற்றுகண்னாய் மாறிப்போன இந்த பூமியில் உங்ககளை போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் இருப்பதை கண்டு மாற்று அணி நண்பர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்...s .பிரபாகரன்,rameswaram
By S .PRABHAKARAN RAMESWARAM
4/10/2011 8:15:00 PM
பொருள் ஈட்டியது பற்றி இவ்வளவு தெளிவாக உள்ளவர் இவர். ஆனால் நம் முதல்வர் பொருள் ஈட்டுவது பற்றி மட்டும் அறிந்தவர்.
By ralana
4/10/2011 8:11:00 PM
பொருள் ஈட்டியது பற்றி இவ்வளவு தெளிவாக உள்ளவர் இவர். ஆனால் நம் முதல்வர் பொருள் ஈட்டுவது பற்றி மட்டும் அறிந்தவர்.
By ralana
4/10/2011 8:11:00 PM
பொருள் ஈட்டியது பற்றி இவ்வளவு தெளிவாக உள்ளவர் இவர். ஆனால் நம் முதல்வர் பொருள் ஈட்டுவது பற்றி மட்டும் அறிந்தவர்.
By ralana
4/10/2011 8:10:00 PM
பொருள் ஈட்டியது பற்றி இவ்வளவு தெளிவாக உள்ளவர் இவர். ஆனால் நம் முதல்வர் பொருள் ஈட்டுவது பற்றி மட்டும் அறிந்தவர்.
By ralana
4/10/2011 8:09:00 PM
மனைவியின் வாரிசுகளுக்கு பல ஆயிரம் கோடி சுருட்டல், துணைவியின் வாரிசுகளுக்கு பல நூறாயிரம் கொடிகள் சுருட்டல், சகோதரியின் பேரபிள்ளைகளை முடிசூட மன்னராக ஆகும் அளவுக்கு விட்டு கொடுத்தல், படிக்காத அத்தனை குடும்ப வாரிசுகளுக்கும் என்ன முடியாத அளவுக்கு பணம், பொருள், நிலம் என்று இன்னு எவ்வளவோ அடுக்கி கொண்டு போகும் அளவுக்கு தமிழகம் மற்றும் இந்தியாவை ஓட்டை இட்டு சுருட்டிய கருணாநிதி குடும கட்சி தி மு க வுக்கும், தமிழகத்தையே குறிகிய காலத்தில் சூறையாடிய ஜெயலலிதாவுக்கும் யாரும் ஒட்டு போடாதீர்கள்.
By Balu
4/10/2011 7:44:00 PM
தமிழரசு.. நான் பேசிய வரையில் என்னுடைய குஜராத்தி முஸ்லீம் நண்பர்கள் எல்லோரும் மோடியை வாயாரத்தான் புகழ்கிறார்கள். அவர்கள் போலி மதவாத காங்கிரசையும், அவர்களின் மூளை சலவை செய்யும் சந்தர்ப்பவாதத்தையும் தான் சாடுகிறார்கள். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும், ஊழலிலாத நிர்வாகமும் செய்யும் மோடி உண்மையான தேசியத் தலைவர். இது என்னய்யா கூத்து.. ஊருக்கு ஒரு பொண்டாட்டி வைத்துக்கொள்ளும் கழக அரசியல் வாதிகள் எங்கே.. கல்யாணம் செய்யாமல் நாட்டுக்கு கடமையாற்றும் காமராஜ், மோடி போன்றவர்கள் எங்கே..? அப்பு கல்யாணம் செய்யவில்லை கருமாதி செய்யவில்லை என்பதா பிரச்சினை..? முத்தமிழுக்கும் ஒன்றென மூன்று மனைவி/துணைவிகளை பெற்ற தலைவரை கொண்டாடும் உம்மைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் எப்படி புரியும்?
By Ashok
4/10/2011 7:31:00 PM
greate future PM
By gokul
4/10/2011 7:15:00 PM
சார்.. உங்களை பார்த்து இந்த திராவிட கட்சிகள் தமிழனை காப்பத்தனும்... குஜராத் முதன்மை மாநிலம் ..ஆனா இங்க லஞ்சம்,ஊழல்,குடும்ப அரசியல் ,நம்ம முதல் மாநிலம்...மதவாதிகள் மக்களை முன்னேற்ற நேனைக்கேரங்க...ஆனா தேசியவாதிகள் மக்களை குழி தூண்டி புதைக்கேரர்கள்...
By இன்ப tamizhan
4/10/2011 6:58:00 PM
சாதனை தொடருங்கள்
By nitharsun
4/10/2011 6:14:00 PM
LET'S START VOTING FOR B.J.P.
By Raja
4/10/2011 5:44:00 PM
அப்பு... இங்கு... வெற்றி கிடைப்பது அரிது.... முற்பகல் செயின் பிற்பகல் விளையும். அப்புக்கு தெரியாது... ஏன் அப்பு கல்யாணம் செய்யவில்லை...
By Tamilarasu
4/10/2011 5:06:00 PM
வருக வருகவே !!!
By சங்கரன்.புதுவை
4/10/2011 5:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Kalaignar about poll opinion : கருத்துக் கணிப்புகள் சரியாக இருக்கலாம்: கருணாநிதி

திட்டமிட்டுச் சில பார்ப்பனப் பத்திரிகைகளால் பரப்ப்படுவதாகக் கலைஞர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இதில் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளது. காரணம்,  உண்மை சுடும் என்ற அச்சமா? செய்தி நாகரிகம் கருதிய வெட்டா?  அவரது கருத்தை உள்ளவாறே வெளியிடுவதுதானே செய்தி அறம்! இதனை வெட்டாமல் வெளியிட வேண்டியது தினமணியி்ன் கடமை. (தினமணியால் வெளியிடப்படாத கருத்துகள் குறித்த பதிவு என் வலைப்பூவில் இடம் பெறுவதால் வெட்டினாலும் ஒன்றும் இல்லை.) 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கருத்து கணிப்புகள் சரியாக இருக்கலாம்: கருணாநிதி


சென்னை, ஏப். 10: கருத்து கணிப்புகள் ஒரு வேளை சரியாக இருக்கலாம் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.  ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:  தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. தேவைக்கேற்ப நல்ல ஆட்சி அமைவதற்காகத்தான் கூட்டணியை நாங்கள் உருவாக்குகிறோம். அந்த கூட்டணிக்கே அதிக வெற்றி கிடைத்து அதில் உள்ள ஒரு கட்சிக்கு கிடைக்காமல் இருந்தால்-நியாயமாகச் சிந்தித்து எடுக்க வேண்டிய முடிவு கூட்டணி ஆட்சி தான் என்றார் கருணாநிதி.  கருத்து கணிப்பு முடிவுகள் திமுக அணிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றன என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அந்த முடிவுகள் ஒரு வேளை சரியாக இருக்கலாம். அதில் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார் அவர்.  தேர்தல் முடிவுக்குப் பிறகு கூட்டணிகள் மாறலாம் என்ற கணிப்பை அரசியல் நோக்கர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அதை தான் நம்பவில்லை என்றார்.  2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒரு சந்தேகம்-திட்டமிட்டு சில பத்திரிகைகளால் பரப்பப்பட்டபோது, அது வெளிப்படையாகவே இருக்கட்டும் என்பதற்காகத்தான் அவர்கள் வந்து விசாரித்து விட்டுப் போகட்டும் என்று இருந்தேன் எனவும், அதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.  தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டதற்கு, தலைமைத் தேர்தல் ஆணையாளர் குரேஷி, பொறுப்புக்கு வரும் பொழுதே சவால் விட்டு வந்திருக்கிறார் எனவும், அதனால்தான் அவருடைய பிரதாபத்தை காட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த தேர்தல் முறைகளை எல்லாம் அடக்கி விட்டதாகக் கருதிக் கொண்டு செயல்படுகிறாரே தவிர வேறு ஒன்றுமல்ல என்றார் கருணாநிதி.         

Raghul about curruption: ஊழல் நாட்டின் பெரிய சிக்கலாக உள்ளது: இராகுல் காந்தி

ஊழல் வெளிபப்டும் பொழுது ஊழல் முகவரை இடம் மாற்றம் செய்து மக்களை ஏமாற்றுவது காங். வழக்கம். உண்மையிலேயே ஊழலற்ற ஆட்சியை விரும்புபவராக இராகுல் இருநதால் அவர் காங்.ஐ விட்டு வெளியேறி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கி நாட்டை நேர்மையான வழிக்குத் திருப்ப வேண்டும். ஆனால், தேர்தல் பரப்புரையின் உத்தியாக  இவ்வாறு பேசினால் உரியவிலையை மக்கள் தேர்தலில் தருவர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஊழல் நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது: ராகுல் காந்தி


திருவனந்தபுரம், ஏப்.10: ஊழல் நாட்டின் பெரிய பிரச்னையாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்தார்.  திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ராகுல் மேலும் கூறியது: நாட்டின் பெரிய பிரச்னையாக ஊழல் உள்ளது. இதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மத்தியில் செயல்படும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தகவல் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. ஊழலை ஒழிக்கவும், அரசு நிர்வாகம் வெளிப்படையாக அமையவும் தகவல் உரிமைச்சட்டம் உதவும். ஆட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள இச்சட்டம் உதவும். இந்தச் சட்டத்தைத் தடுக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. மாறாக இதை இன்னும் பொறுப்புடன் செயல்படுத்த சட்டம் கொண்டுவரப்படும்.  காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் ஊழல் பற்றிய புகார் எழுந்ததுமே நாங்கள் நடவடிக்கை எடுத்துவந்துள்ளோம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆளும் கேரளத்தில் ஊழல் புகார் எழுப்பப்பட்டும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மக்களின் பணத்தை சுரண்டும் ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரளத்தின் தொழில் வளர்ச்சியை இடதுசாரி கூட்டணி அரசு அடியோடு அழித்துவிட்டது. தொழில் அதிபர்கள் தொழில் துவங்க விரும்பும் மாநிலங்கள் பட்டியலில் கேரளமில்லை. தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளை கேரள அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நிலம், மது, மற்றும் லாட்டரி மாஃபியாக்கள் கேரளத்தை ஆண்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் 43 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெற வேண்டுமானால் அவர்களுக்கு 3 வழிகள்தான் உள்ளன. ஒன்று வேறு மாநிலத்துக்குச் செல்லவேண்டும், அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வேண்டும், இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என்றார்.  கேரளம் வளர்ச்சியடைய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் இணைந்து செயல்படும் அரசு இங்கு அமைய வேண்டும். மத்திய அரசு ஒதுக்கிய வளர்ச்சித்திட்ட நிதியைப் பயன்படுத்த கேரள அரசு தவறிவிட்டது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு அமையுமானால் இங்கு தொழில் துவங்க சாதகமான சூழ்நிலை உருவாகும். அதன்மூலம் இங்கு வேலைவாய்ப்புப் பெருகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  பிரசாரக் கூட்டத்தில் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, சசிதரூர் எம்.பி. ஆகியோரும் பேசினர்.

Kalaignar knows about the needs of the poor - kovan said : ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி: ஈ.வி.கி.ச.. இளங்கோவன்

கோவனுக்கு அல்லது கோவன் ஆதரவாளர்களுக்கு இடம் தராததால் வந்த  அறிவு எழுச்சி! (ஞானோதயம்!) தெளிந்த புத்தி தொடரட்டும்!  என்றாலும் தேர்தல் முடிந்ததும் மறுபடியும் முருங்கை மரம் ஏறவதற்கே வாய்ப்பு உள்ளது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஏழைகளின் தேவையை அறிந்தவர் கருணாநிதி:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


ஆம்பூர், ஏப். 10: ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர் திமுக தலைவர் கருணாநிதி என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெ. விஜய் இளஞ்செழியனை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது பலமான கூட்டணி. அதிமுக கூட்டணியில் நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. வைகோவும் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. அது இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென நினைப்பது தான்.  திமுக தலைவர் கருணாநிதி கடுமையான உழைப்பாளி. பொருளாதார மேதையும் கூட. ஏழை, எளிய மக்களின் தேவையை அறிந்தவர். அதனால் தான் இலவசங்களை வழங்கினார். வரும் தேர்தலிலும் மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவற்றை நிச்சயம் வழங்குவார்.  கடந்த அதிமுக ஆட்சியில் யானைகள் மீது தான் ஜெயலலிதா அக்கறை காட்டினார். மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. ஆனால் கருணாநிதிக்கு எப்பொழுதும் மக்கள் மீது அக்கறை உண்டு. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென சிந்தித்து செயல்படவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும் என்றார். 

Election commission should be corrects it mistakes - kalaignar said: தேர்தல் ஆணையம் தனது குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்: முதல்வர் கருணாநிதி

முதல்வர் என்ற முறையிலான வருகை எனில் தேர்தல் ஆணையம் இட வசதிக்கு மறுத்து இருக்க மாடடார்கள். வேட்பாளர் என்ற முறையிலும் தேர்தல் பரப்புரைக்கு வரும் கட்சித் தலைவர் என்ற முறையிலும் நடுவுநிலைமையுடன் நடந்து கொண்டிருப்பார்கள். எனவே, முதல்வரின் கீழுள்ள அதிகாரிகள் முதல்வர் என்றும் பாராமல் நடுவுநிலையுடன் நடந்து கொள்கிறார்கள் எனில் முதல்வர் பெருமைப்பட வேண்டும். கவலைப்படக்கூடாது. மேலும்  தேர்தல் விதிமுறைகளை அறியாமல் அரசிடம் இட வசதி கேட்ட தன் கட்சிக்காரரைத்தான் அவர் கடிந்துரைக்க வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாகக் கேட்பானேன்! முதல்வரைச் சங்கடப்படுத்துவானேன்!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தேர்தல் கமிஷன் தனது குறைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்: முதல்வர் கருணாநிதி


கடலூர், ஏப்.10: தேர்தல் கமிஷன் தனது குறைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.  ÷கடலூர் மாவட்ட திமுக கூட்டணிக் கட்சி வேட்பளர்களை அறிமுகம் செய்து வைத்து சனிக்கிழமை கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:  ÷திமுக இந்தத் தேர்தல் கூட்டணியில் கடலூர் மாவட்டத்தில் 9 வேட்பாளர்ளை நவரத்தினங்கள் போல் நிறுத்தியிருக்கிறது. தேர்தலில் தவறு நடக்கக் கூடாது, பணம் கொடுத்து வாக்கு பெறக்கூடாது, அதிக பணம் செலவிடக்கூடாது, தவறான வழியில் செல்லக் கூடாது என்று எல்லோருக்கும் தேர்தல் ஆணையம் வழங்கும் அறிவுரை. அதை தேர்தல் கமிஷன் கடைபிடிக்கிறது. அதை நான் மறுக்க வில்லை. அதற்கு அடங்கி நடக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. எல்லை கடக்கக் கூடாது.  ÷நரிக்கு நாட்டாமை கொடுத்தால் 2 ஆடுகள் கேட்கும் என்பது பழமொழி. தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை, நரிக்குக் கிடைத்த நாட்டாமைபோல் அவர்கள் பயன்படுத்தக் கூடாது. நான் உச்சத்தில் இருப்பவர்களைப் பார்த்து சொல்லவில்லை. அடுத்து கீழே இருக்கும் அதிகாரிகளைச் சொல்கிறேன்.  ÷மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னமும் முதல்வராக பதவியில் இருப்பவன் நான். 13-ம் தேதி ஓட்டு எண்ணிப்பார்த்து அதிக வாக்குகள் இருந்தால் நான் மீண்டும் முதல்வர். இல்லையெனில் நான் வீட்டுக்குப்போக வேண்டியவன். அரசியல் சட்டப்படி, தேர்தல் ஆணையத்தின் பார்வையின்படி அதுவரை நான் முதல் அமைச்சர்தான்.  ÷நேற்று நான் விழுப்புரம் கூட்டத்தில் பேசி முடித்து இரவு தங்கும் இடம் எது என்று கேட்டபோது பொன்முடி கூறினார், அரசு இடம் எதுவும் தரமுடியாது என்று சொல்லி விட்டார்கள். நமது கட்சி அலுவலகத்தில் தங்கிவிடலாம் என்றார். அதைவிட பூரிப்பு எனக்கு வேறு ஒன்றுமில்லை. நமது முயற்சியால் கட்டிய மாளிகை அது. நமது கட்சியிடத்தில் தங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.  ÷எனக்கு ஒரு பயணியர் விடுதியில் தங்குவதற்கு ஒதுக்கப்படாததற்கு என்ன காரணம். தேர்தல் கமிஷனின் கண்டிப்பு. நான் ஊர் ஊராக நகரம் நகரமாகச் சுற்றி, தரையில் துண்டை விரித்துப்போட்டு தூங்கியவன். இன்று புதுவையில் இருந்து கடலூர் வரும் வழியில் மாலைச் சிற்றுண்டிகூட சாப்பிட இடமின்றி வழியில், வேனை நிறுத்தி கூடவந்தவர்களின் துண்டை விரித்துப்போட்டு சாப்பிட்டேன்.  ÷என்னைவிட கேவலமாக, இழிவாக நிறையபேர் இந்த நாட்டில் இருப்பதை நான் அறிவேன். எனது அந்தரங்க அதிகாரியாக இருந்தவரை உடனே அகற்ற வேண்டும் என்று ஜெயலிலதா பொதுக் கூட்டத்தில், தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுகிறார். ஏற்கனவே இருந்த அதிகாரி மாற்றப்பட்டு, வேறு அதிகாரியும் வந்து இருக்கிறார். அந்த அதிகாரியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிடுகிறார். ஒருவேளை அவரும் மாற்றப்படலாம். ÷அதிகாரிகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கியவன் அல்ல. அதிகாரிகளை வைத்துக் கட்சி நடத்துபவன் அல்ல நான். எனது தொண்டன் முதுகை மேடையாக்கி அதில் பேசியவன் நான்.  ÷பிரதமரும் தேர்தல் ஆணையத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை எப்படி அமைப்பது, யார் யாரைக் கொண்டு அமைப்பது எந்த வகையில் அதிகாரங்களை அமல்படுத்த வேண்டும் என்ற நிலையை இனியாவது மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

Subordinates of election commission misuse the powers- kalaignar said : கீழ்நிலை அதிகாரிகள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர்: கருணாநிதி குற்றச்சாட்டு

பாவம்! தேர்தல் ஆணையம் முதல்வரையும் படாதபாடு  படுத்துகிறது போலும்! ஆணையத்தைத் தாக்கியவர் அஞ்சிக் கீழ்நிலை  அதிகாரிகளைக் குற்றம் சுமத்துகிறார். கீழ்நிலையில் உள்ளவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள்தான். எனினும் இந்தக் கெடுபிடி எல்லாம் தேர்தலில் ஊழலைப் பயன்படுத்துபவர்களுக்குத்தான். மக்கள் தொந்தரவு எதுவுமின்றி அமைதியாக நடமாட முடிகிறது. முன்பு பிறந்த நாள் என்றாலே விளம்பரப் பதாகைகள் சுற்றிலும் இருந்து கண்களை மிரட்டி நடமாட்டத்தைத் தடுக்கும்  மதுரையில்  இப்பொழுது நகரம் நன்கு காட்சியளிக்கிறது. எனவே, முதல்வர் பெருமைப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நல்ல செயல்பாடுகளையும் தன் ஆட்சியின் சாதனையாகவே முதல்வர் எண்ண வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

கீழ்நிலை அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்: கருணாநிதி குற்றச்சாட்டு


கடலூர், ஏப்.10: நடுத்தர மற்றும் கீழ்மட்டத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவருவதாக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு எல்லை உள்ளது. அது மீறப்படக்கூடாது என அவர் கூறினார்.எதிர்காலத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆணையத்திடம் என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதிக்க வேணடும் என்றார்.நேர்மையாகவும், நியாயமாகவும், பாரபட்சமில்லாமலும் செயல்படுகிறவரையே எதிர்காலத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும் என கருணாநிதி கூறினார்.தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டு வருவதாகவும் கருணாநிதி குற்றம்சாட்டினார்.தேர்தலை முன்னிட்டு உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டை தேர்தல் ஆணையம் மாற்றியது. கூடுதலாக சென்னை சிறப்புப் பிரிவு போலீஸ் எஸ்பி சி.சந்திரசேகரையும் மாற்றுமாறு ஜெயலலிதா கோரிக்கை விடுத்ததாக கருணாநிதி தெரிவித்தார்.தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்த கருணாநிதி, தற்போது நான்தான் முதல்வர், வாக்குகள் எண்ணப்பட்ட பிறகும் முதல்வராவேன். தோற்றால் வீட்டுக்குச் செல்வேன். அதுவரை நான்தான் முதல்வர் எனக் குறிப்பிட்டார்.


ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

Reservation for Vanniyar -kalaignar promised: 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு'

சாதிமறுப்புக்கட்சியான தி.மு.க.  இவ்வாறு குறிப்பிட்ட ஒரு சாதிக்கு முன்னுரிமை அளிப்பது தவறாகும். எவ்வகை வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும. அதற்கு ஆவன  செய்ய முதல்வரை வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு'


திண்டிவனம்,ஏப் 8: திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமென திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டார்.  ÷விழுப்புரம் திமுக மாவட்ட செயலர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாமக சார்பில் திண்டிவனம்,மயிலம்,செஞ்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மொ.ப .சஙகர், ரா.பிரகாஷ்,அ.கணேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:  பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளாகும். அம்பேத்கருக்கும், எனக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் அவரை மும்பையில் அண்ணா சந்தித்தது பற்றி என்னிடம் கூறியுள்ளார். அதிலிருந்து அம்பேத்கர் மீது எனக்கு தனி மரியாதை.  வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் கருணைத் தொகையை வழங்கி வருகிறேன். ராமதாஸின் இடஒதுக்கிடு கோரிக்கையை நான் கைவிட மாட்டேன் என்றார்.
கருத்துகள்

தி.மு.க விற்கே எனது ஓட்டு
By நீலா
4/9/2011 9:17:00 PM
தி.மு.க விற்கே எனது ஓட்டு
By நீலா
4/9/2011 9:15:00 PM
திரு தினமணி பத்திரிகை அசெரியர் அவர்களே .ஒரு கட்சியென் தலைவர் ஒரு குறுப்பிட்ட ஜாதிக்கு மட்டும் அதை செய்கிறேன் இதை என்று சொல்கிறார் .செட்டியார் ,நாயடு இன்னும் பிற ஜாதிகளு எல்லாம் வாரியம் அமைகவேண்டியதுதனே .எப்பபர்தலும் ஜாதி தமிழ் பற்றிய பேச்சுதான் .இந்த ஒரு மாநிலம் தான் அசிங்கம் ஆகிவிட்டது . தமிழ்நாடு அழிவின் வில்லிம்புக்கு வந்து விட்டது .மக்கள் புரட்சி வெகு விரைவில் வரபோகிறது .
By samy
4/9/2011 5:48:00 PM
மு.க அவர்களே தற்போது ஆதிக்க சக்தி தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம்தானே - அதை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளா. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் அழகரசன்
By alagaeasan
4/9/2011 1:34:00 PM
மு.க அவர்களே தற்போது ஆதிக்க சக்தி தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம்தானே - அதை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளா. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் அழகரசன்
By alagarsan
4/9/2011 1:09:00 PM
எதனை காலம்தான் இவ்வாறு சாதி சொல்லலி நாட்டை கெடுப்பீர்கள்??முதலில் உங்கள் பதவிக்கு ஒதுக்கீடு கொண்டு வாருங்கள் .பார்க்கலாம்.
By cheena
4/9/2011 11:15:00 AM
YOUR POLITICAL PARTNERS BOTH ARE KNOWN FOR THEIR ACTIVITIES LIKE STONING BUSES, CREATING DISTURBANCES FOR PUBLIC, DAMAGING PUBLIC PROPERTIES ETC. BUT YOU ARE KEEPING THEM FOR YOUR OWN WELFARE FOR YR PARTY. TAMILNADU PEOPLE ARE NOT GETTING BENEFITTED FROM YOU ALL THE 3 PARTIES JOINED IN THIS ELECTION. PEOPLE HAS THE RIGHT TO SELECT THEIR OWN CHOICED CANDIDATES !!!!!!!!!!!!! THEY WILL NOT ADHER TO ANYBODY'S FALSE PROPAGANDAS
By JEYAPRAKASH.
4/9/2011 10:47:00 AM
வன்னிய சகோதர்கள் சத்தியமாக நம்ப வேண்டாம் .
By muthu
4/9/2011 9:49:00 AM
குரங்கு ஆப்பத்தை பங்கிட்ட கதை சிறுவயதில் கேட்டதாக ஞாபகம்
By கணேசன்
4/9/2011 9:34:00 AM
மற்றவர்கள் என்ன வாயில் விரலை வைத்து சூபின்கொண்டிருப்பது தான. அருந்ததியர்களுக்கு தாழ்தபட்டவர்களுக்குள்ள சதவீதத்தில் தானே ஒதுக்கீடு செய்யப்பட்டு மற்றவர்களுக்கு குறைந்தது. என் நூறு சதவீதத்தில் கை வைக்கவில்லை. இவர் ஜாதிகளுக்குள்ளே புகுந்து பிரித்து ஒட்டு பிடிக்கிறார். பதவியை காப்பாற்றிக்கொள்ள கலைஞர் "என்னவேண்டுமானாலும், எதைவேண்டுமானாலும் செய்வர். இனி ஐந்தாண்டுகளுக்கு ஸ்ர்வதிகரன்க்தான்
By kala
4/9/2011 9:00:00 AM

First Voter pravinaa : தமிழகத்தின் முதல் வாக்காளர் பிரவீணா!

அடக்கடவுளே! தமிழ்நாட்டுப்பதவிகளில்தான் முதலிடத்தில் தமிழர்கள் இல்லையென்றால். ..... வாக்காளரிலுமா? யாருக்கு வாக்களிப்போம் எனச் சொல்வது சட்டப்படிக் குற்றம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கும்போது  இவ்வாறு இன்னாரு்க்கு வாக்களிக்கிறார் என்பதைக் கேட்டு வெளியிடலாமா?  எப்படியோ தமிழ்நாட்டுச் சாதனைகளை அயலவர் உணர்ந்தால் சரி.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழகத்தின் முதல் வாக்காளர் பிரவீணா!



கும்மிடிப்பூண்டி,ஏப்.9: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் வாக்காளர் என்ற பெருமையை கும்மிடிப்பூண்டி தொகுதியின் எகுமதுரை ஊராட்சியைச் சேர்ந்த பிரவீணா (24) என்பவர் பெறுகிறார்.  தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் எண்ணிக்கை அடிப்படையில் முதல் தொகுதி என்ற பெருமைக்குரியது கும்மிடிப்பூண்டி. இந்தத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முதலாவது வாக்காளராக பாகம்-1 பிரிவில் 1ல் எகுமதுரை ஊராட்சியைச் சேர்ந்த 1-வது வார்டில் வசிக்கும் பிரவீணா இடம்பெற்றுள்ளார்.  எகுமதுரை பகுதியைச் சேர்ந்த குசேலன் என்பவரின் மனைவியான பிரவீணா, இந்தத் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.  இவர் பிறந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடா மண்டலத்தை சேர்ந்த வேநாடு பகுதியாகும். பிற மாநிலத்தில் இருந்து தமிழகப் பகுதிக்கு திருமணம் செய்து கொண்டு வந்த பிரவீணாவுக்கு தமிழகத்தின் முதல் வாக்காளர் என்ற பெருமையை பெற்றுள்ளனர். தேர்தலில் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்பது குறித்தும் பிரவீணாவை கேட்ட போது, அவர் கூறியது: ÷நான் திருமணத்துக்குப் பிறகு இப்பகுதிக்கு வந்து முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பகுதியில் அனைவருக்கும் கலர் டி.வி., இலவச கேஸ் அடுப்பு வழங்கியதோடு மாணவர்கள், இளைஞர்கள் விளையாட விளையாட்டு மைதானம் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி தந்துள்ளார்கள். அதோடு எங்களுக்கு இருந்த ரூ.1 லட்சம் விவசாய கடனையும் தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. எனவே எனது முதல் வாக்கு தி.மு.க. கூட்டணியில் கும்மிடிப்பூண்டியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.என்.சேகருக்கே என்றார்.

Raghu lagainst old man candidature: : 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் இராகுல் பரப்புரை

கலைஞர் மீது உள்ள சினத்தைக் கேரளாவில் காட்டுகிறாரா?  இங்கொரு நீதி, அங்கொரு நீதியா? என மக்கள் நினைக்க மாட்டார்களா? கொள்கையடிப்படையில் பேசலாமே! எனினும் இளைஞர் என்பதற்காகக் கொலைகாரக் கட்சியை ஆதரிக்க முடியாது என்பதை இராகுல் உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? 
கேரளத்தில் ராகுல் பிரசாரம்


கொச்சி, ஏப். 9: 87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரûஸ ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராகுல் காந்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கொச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா? காங்கிரஸýக்கு வாக்களித்தால், இளைஞர்களும், அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் மிக்கவர்களும் சமஅளவில் சட்டப் பேரவைக்குச் செல்வர். இளமைக்கு உரிய துடிப்புடனும், அனுவத்துக்கு ஏற்ற விவேகத்துடனும் ஆட்சி நடைபெறும். கேரள அரசியலில் இப்போது வன்முறை அதிகரித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கு முடிவு கட்டப்படும். கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்தான் வன்முறை அதிகரித்துள்ளது. காந்திய வழியில் வந்த காங்கிரஸôர் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். எனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று ராகுல் காந்தி பேசினார். கேரளத்திலும் தமிழகத்தைப் போல வரும் 13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.