நினைவு நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவு நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 16 மே, 2019
வியாழன், 18 ஏப்ரல், 2019
பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்
பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்
சித்திரை 7, 2050 சனி 20.04.2019 மாலை 6.00
இலண்டன்
சித்திரை 8, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00
இலெசிசுடர்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானியா
வெள்ளி, 9 நவம்பர், 2018
புதன், 4 செப்டம்பர், 2013
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாளே, ஆசிரியர் நாள்!

பேராசிரியர்
சி.இலக்குவனார் நினைவு நாளே,
ஆசிரியர் நாள்!
செயலர் கெ.பக்தவத்சலம் அறிவிப்பு
நேற்று (செப்.3.2013) சென்னை
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின்
நினைவரங்கமும் “செந்தமிழ்ச்செம்மல் சி.இலக்குவனார்” நூலின் அறிமுகமும் நடைபெற்றது.
வரவேற்புரையில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், பேராசிரியரின் தமிழ்நலப்பணிகளை நினைவுகூர்ந்து எழுச்சியுரை
ஆற்றினார்.
முனைவர் ப.இரா.அரங்கசாமி, 'மொழிப்போர் தந்தை' என்ற முறையிலான
பேராசிரியர் செயல்பாடு குறித்து வீர உரை
ஆற்றினார்.
கண்ணியம் குலோத்துங்கன் அவர்கள் நலக்குறைவால் வர இயலவில்லை.
புலவர் உதயை மு.வீரையன்
நினைவுரையும் நூல் அறிமுக உரையும் ஆற்றினார்.
இறுதியில் நன்றியுரை ஆற்றிய ஒய்.எம்.சி.ஏ.
பட்டிமன்றச் செயலர் பொறி.கெ.பக்தவத்சலம், கடந்த 30 ஆண்டுகளாகப் பேராசிரியரின்
நினைவு நாளைக் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர், “செப்டம்பர் 5 என்பதை ஆசிரியர்
நாளாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால்,
கல்லூரிகளில் மட்டும் இல்லாமல் களத்திலும் பேராசிரியராகச்
செயல்பட்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவுநாளே
எங்களுக்கு ஆசிரியர் நாள். எனவேதான், தொடர்ந்து அவர் நினைவுநாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
தமிழ் மக்களும் பேராசிரியர் நினைவுநாளான செப். 3 ஆம் நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியருடன்
தொடர்புடையதாக ஆசிரியர் நாள் அமைய வேண்டும். அந்த வகையில் தமிழ்ப்போராளி
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுநாளான செப்.3 ஆம் நாள் ஆசிரியர் நாள் என்பதற்கு வந்திருந்தோரும் வரவேற்பு தெரிவித்தனர்.
நாமும் நடைமுறைப்படுத்தலாமே!
புதன், 26 டிசம்பர், 2012
பேரலை என்ற பேயலை நினைவு நாள்
பேரலை என்ற பேயலை நினைவு நாள்
எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்கள் கேள்விப்படாத வார்த்தை சுனாமி.
2004 டிச., 26ம் தேதி, "கடல் அலை' கோபம் கொண்டு ஊருக்குள் வந்த போது தான்
தெரிந்தது, அது தான் சுனாமி என்று. இதன் கோபமோ வெறும் பத்து நிமிடம் தான்.
அது ஏற்படுத்திய சோகம், மக்கள் மனதில் இருந்து என்றுமே அழியப் போவதில்லை.
சமீபத்தில் கூட, அதே சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்டு, தமிழகத்தின் பல நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 42 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, வாபஸ் பெறப்பட்டது. தற்போது சுனாமி என்றாலே குலைநடுங்கும் நிலை வந்துவிட்டது. சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்திய துணைக்கண்டத்தில் மட்டும், 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் இறந்தனர். இது, உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம் என்ற சோகமான சாதனையைப் பெற்றது.

தமிழகம் அதிகம் :
இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரம் பேர் பலியாக, தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். பூகம்பம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப் பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன. மலைப்பகுதியில் ஏற்படும்போது எரிமலை உருவாகிறது. இதுவே கடலில் ஏற்படும் போது, சுனாமி உருவாகிறது.
இன்னும் வேகம்:
ஆழிப்
பேரலையின் வேகம் ஆரம்பித்த இடத்திலிருந்து கரையை நெருங்க, நெருங்க
அதிகரிக்கும். சாதாரணமாக கடல் அலையின் உயரம் 7 அடி எழும்பும்; கொந்தளிப்பாக
இருந்தால் 10 அடி இருக்கும். ஆனால் சுனாமியின் போது, 100 அடி உயரத்துக்கு
அலை எழும்பியது. சுனாமி, சில நொடிகளில் அதிக கொள்ளவு தண்ணீரை கரைக்கு
தள்ளுகிறது.
எச்சரிக்கலாம்:
சுனாமியை
தடுக்க முடியாவிட்டாலும், அது வருவதற்கு முன் கண்டறிந்து, மக்களை
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன்,
பேரலைகள் உருவாகின்றனவா என கண்டறிய எச்சரிக்கை கருவிகள், கடல்களில்
அமைக்கப்பட்டுள்ளன. இது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து
கண்காணிக்கும். இதன் அடிப்படையில், அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள்
அறிந்து, பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்ந்தால், மக்களை எச்சரிக்கின்றனர்.
இதனால், அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம். திங்கள், 24 டிசம்பர், 2012
எம்(ஞ்)சிஆர். நினைவு நாள் - MGR memorial day
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: இன்று எம்(ஞ்)சிஆர். நினைவு நாள்
மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,
1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.
பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.

தேசிய விருது :
எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்,
தமிழக முதல்வர் :
1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார்.
பாரத ரத்னா:
முதல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)