புதன், 16 அக்டோபர், 2013

நலவாழ்வே சிறந்த பரிசு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_827494.jpg

ஆரோக்கியமான வாழ்க்கையேசிறந்த பரிசு!

32 ஏக்கர் வறண்ட தரிசு நிலத்தை, பசுமைக் காடாக மாற்றியதற்கு மத்திய, மாநில அரசுகளிட மிருந்து பல விருதுகள் பெற்ற, அப்துல் கரீம்: நான், கேரள மாநிலத்தை சேர்ந்தவன். நான் பிறந்து வளர்ந்த ஊர், மிகவும் செழிப்பாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன், இன்சூரன்ஸ், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை சப்ளை செய்வது, முந்திரி கமிஷன் ஏஜன்ட், கணக்காளர் என, பல வேலைகள் செய்ததால், வீட்டில் தங்க மாட்டேன்.எனவே, மனைவியின் சொந்த ஊருக்கே குழந்தை களை அனுப்பி வைத்து, மாதம் ஒரு முறை பார்த்து வருவேன். இப்படி பல முறை சென்று வந்ததால், அங்குள்ள கரடு முரடான தரிசு நிலத்தை பார்த்து, மனதில் வெறுமை ஏற்பட்டது. பாலைவனமான வளைகுடா நாடுகளே, மரம் வளர்ந்து செழிப்பாக இருக்கும் போது, இங்குள்ள தரிசு நிலத்தை, ஏன் பசுமை வனமாக மாற்ற முடியாது என்ற சிந்தனை ஏற்பட்டது.காசர்கோடு அருகில், 1977ல், 32 ஏக்கர் தரிசு நிலத்தை விலைக்கு வாங்கினேன். 'பாடுபட்டு சேர்த்த பணத்தை, தரிசு மண்ணில் கொட்டி வீணடிக்கிறானே... இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது' என, மனைவியின் ஊரார் என்னை ஏளனம் செய்தனர். இருந்தும், காடு வளர்ப்பதில் உறுதி யாக இருந்தேன்.நீர் ஆதாரமற்ற தரிசு நிலத்தை சமன் செய்து, 1 கி.மீ., துாரம் வண்டியில் சென்று நீர் எடுத்து வந்து, செடிகளுக்கு ஊற்றினேன். இப்படி தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஊற்றியதால், செடிகள் செழுமையாக வளர்ந்து, 30 ஆண்டுகளில் பசுமை காடுகளாக மாறியதுடன், நிலத்தடி நீரின் அளவும் உயர்ந்துஉள்ளது. சொந்த செலவில், 32 ஏக்கரில் காடு வளர்த்ததற்காக, மத்திய, மாநில அரசுகள் பல விருதுகள் தந்ததுடன், அந்த வனத்திற்கு, 'கரீம் காடுகள்' என, என் பெயரிட்டு, என் சேவையை பாராட்டியுள்ளது. ஆனால், இயற்கை மூலம் கிடைத்த மிகவும் பரிசுத்தமான காற்று, தண்ணீர், குளுமையான தட்பவெப்ப நிலையால் கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையையே, நான் மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன். தொடர்புக்கு: 04672254283.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக