‘கவிதை உறவு’ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
‘கவிதை உறவு’ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 மே, 2019

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு

 கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
  2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை (மே.18) அன்று நடைபெற்றது.
  இவ்விழாவிற்கு,  மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தலைமையேற்றார்.
கவிஞர் தமிழியலன் அனைவரையும் வரவேற்றார்.
 2018-ஆம் ஆண்டு வெளியான நூல்களில் சிறுவர் இலக்கியப் பிரிவில் சிறந்த நூலாக கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்’  எனும் நூல் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக உரூ.5000/- பரிசுத்தொகையைத் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன்வழங்கினார்.
  சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசினைப் பெற்றுள்ள கவிஞர் மு.முருகேசு, வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக்  கோட்டைத்  தமிழ்ச்  சங்கத்தின் அறிவுரைஞராகவும் இருந்து சமூகம், கல்வி, கலை இலக்கியப் பணிகளைத்  தொடர்ந்து செய்து வருகிறார். இதுவரை 43-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர்  இலக்கியம், திறனாய்வு நூல்களைப் படைத்துள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

‘கவிதை உறவு’ இதழின் 47ஆம் ஆண்டு விழா

அகரமுதல


கவிதை உறவின் 47ஆம் ஆண்டு விழா சென்னை தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது.
தேசிய மணி இல கணேசன் தலைமையில் ஏர்வாடி இராதாகிருட்டிணனின் இரு நூல்களை சென்னை காவல் துறை இணை ஆணையர் கவிஞர் முனைவர் வடுகம் சிவகுமார், கரூர் வைசிய வங்கி மண்டலத் தலைவர் திரு அன்புராசு ஆகியோர் வெளியிட்டனர்.
விழா மலரை நீதியரசர் முனைவர் பி சோதிமணி வெளியிட ஆலிம் முகமது சாலிகு அறக்கட்டளைச் செயலர் திரு செகு சமாலுதீன்பெற்றுக்கொண்டார்.பேராசிரியர் முனைவர் இரா மோகன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருட்ணன் முதலான சாதனையாளர்களுக்கான விருதுகளையும் சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு மாஃபா பாண்டியராசன் வழங்கி வாழ்த்திப்பேசினார்.
நிரம்பி வழிந்த நூலக அரங்கமும், நிகழ்ச்சிகளும் நிறைவாக அமைந்திருந்தன.