திங்கள், 28 பிப்ரவரி, 2011

if, no share in the govt., no support to d.m.k.ஆட்சியில் பங்கு இல்லாமல் திமுகவை தொடர்ந்து ஆதரிக்க வேண்டியதில்லை

மத்தியில் ஆளும் காங்கிரசால் இந்திய நிலப் பகுதிகள்  சீனாவிற்கும் பாக்கிசுதானுக்கும்  தாரை வார்க்கப்பட்டன. தமிழ் நிலமான கட்ச    தீவு  சிங்களவனுக்கு  அளிக்கப் பட்டது .     தமிழ் நாட்டை ஆண்டாள் முழு தமிழ் நிலமும் சிங்களவனுக்கு தரப்படும். எனவே காங்கிரசை அடியோடு தோற்கடிப்போம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் . / தமிழே விழி! தமிழா விழி ! /   


தமிழகம்
ஆட்சியில் பங்கு இல்லாமல் திமுகவை தொடர்ந்து ஆதரிக்க வேண்டியதில்லை

First Published : 28 Feb 2011 02:25:08 AM IST

Last Updated : 28 Feb 2011 04:31:24 AM IST

திருவாரூர், பிப். 27: ஆட்சியில் பங்கு இல்லாமல், தொடர்ந்து திமுகவை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் பேசியது:காங்கிரஸýக்கு எத்தனை தொகுதிகள் அளிப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு காங்கிரஸôர் 234 தொகுதிகளையும் கேட்கிறார்கள் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியான முதல்வரின் இந்தக் கருத்தை காங்கிரûஸ கிண்டல் செய்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இது உண்மையாகக்கூட இருக்கலாம். நாங்கள் 234 தொகுதிகளையும் கேட்கவில்லை. அதில் பாதி அல்லது 110 தொகுதிகள் அளித்தாலும் போதுமானது.பெரும்பான்மை இல்லாவிட்டாலும், காங்கிரஸ் ஆதரவுடன் 5 ஆண்டுகள் ஆட்சியை திமுக நடத்தியுள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை. ஆனால், தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. இந்த நிலையில், நாங்கள் துணை முதல்வர் பதவியோ, அமைச்சர்களில் 50 சதவீத இடமோ கோரவில்லை. மூன்றில் ஒரு பங்காவது அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும்.இங்குள்ளவர்கள் தில்லியில் அமைச்சர்களாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் நாங்கள் உங்களுடன் (திமுக) அமைச்சர்களாக இருக்கக் கூடாதா? கூட்டணியில் எத்தனை இடம், அமைச்சரவையில் எத்தனை சதவீதம் என்பதை காங்கிரஸ் கட்சியின் 5 பேர் குழு முடிவு செய்யும்.தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு ஓரளவுக்கேனும் திருப்தி தரும் வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். நாங்கள் வாக்களிப்போம், யாரோ ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்வார்கள். நாம் அடிமைகளாகவே இருப்பதா?வரவுள்ள ஆட்சியில் நமக்கும் பங்குண்டு என்ற நிலை இருந்தால்தான் காங்கிரஸ்காரர்கள் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் தேர்தல் பணியாற்றுவார்கள்.எங்களுக்குப் பணம் தேவையில்லை. கௌரவம், அந்தஸ்து, சுயமரியாதை இவைதான் முக்கியம் என்றார் இளங்கோவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக