ஆசுதிரேலியா மட்டைப் பந்தாட்டப்போட்டி: மீண்டும் தமிழ் அமைப்புகள் போராட்டம்
இலங்கை அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஏற்கெனவே முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத்
தழுவியது.
இந்நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழர்கள் போராட்டம்: இப்போட்டியின்போது மைதானத்துக்கு வெளியே
ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்,
இலங்கைக்கு எதிரான இப்போட்டியை ஆஸ்திரேலியா கைவிட வேண்டுமென்று
போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது
அந்நாட்டு ராணுவம் போர்க்குற்றங்களைப் புரிந்தது. இதனை பாரபட்சமின்றி
சர்வதேச சமுகம் விசாரிக்க வேண்டும். அதுவரை இலங்கை அணியுடன் கிரிக்கெட்
விளையாடக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தமிó
அமைப்புகள் முன்னரே தெரிவித்திருந்தனர். "ஐம்பதுக்கும் மேற்பட்ட
போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி போராட அனுமதியளித்ததாக' ஆஸ்திரேலிய
கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக