தமிழில் வாதாடிய வழக்கறிஞர்: வேறு நீதிபதி விசாரிக்க ப் பரிந்துரை
சென்னை: தமிழில் வாதாடிய வழக்கறிஞரின் வழக்கை, வேறு நீதிபதியின்
விசாரணைக்கு மாற்ற, ஐகோர்ட் நீதிபதி பரிந்துரைத்தார்.ஐகோர்ட்டில்,
வழக்கறிஞராக இருப்பவர், பாரி. இவர், ஒரு தமிழ் ஆர்வலர். ஐகோர்ட்டில், தமிழை
வழக்காடும் மொழியாக, கொண்டு வர வேண்டும் என்பதில், முனைப்பு
காட்டுபவர்.இவர் ஆஜரான ஒரு வழக்கு, நீதிபதி சிவகுமார் முன், நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழில் வாதத்தை துவக்கினார்.
அதைத் தொடர்ந்து, நீதிபதியின் கேள்விகளுக்கு, தமிழில் பதிலளித்தார்.இதையடுத்து, நீதிபதி சிவகுமார் பிறப்பித்த உத்தரவு:ஐகோர்ட் அலுவல் மொழி தொடர்பாக, வழக்கறிஞர் சர்ச்சையை எழுப்பியுள்ளார். ஐகோர்ட் அலுவல் மொழியில், தமிழும் இருப்பதாக, அவர் குறிப்பிட்டார்.அவர் கூறியிருப்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை. அதிருப்தியான விளைவுகளை தவிர்ப்பதற்காக, இந்த வழக்கை, வேறு நீதிபதியின் முன், பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்.இவ்வாறு, நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கோர்ட்டுகளில் தமிழை வழக்காடு மொழியாக்கும் சட்டம் பரிசீலனையில் உள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நீதிபதி இக்பால் தலைமையிலான குழுவினர் ஏற்கனவே வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தமிழில் வாதாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக