திங்கள், 31 டிசம்பர், 2012

நலக்காப்பீடு

சொல்கிறார்கள்

ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியமா?'
ஹெல்த் இன்சூரன்ஸ் ஆலோசகர் பத்மநாபன்: ஆறு மாத குழந்தை முதல், 80 வயது வரை உள்ள எல்லாருக்கும், இன்சூரன்ஸ் தேவை. இன்றைய வாழ்க்கை முறையில், நாம் நோய்களின் கூடாரமாகி விட்டோம். மாறி வரும் வாழ்க்கை சூழலால், சரியான பழக்க வழக்கமோ, தூக்கமோ கிடையாது; சரிவிகித உணவைச் சாப்பிடுவதும் இல்லை. 30 வயதிலேயே சர்க்கரை நோய் வருகிறது. குழந்தைகளை, "கேன்சர்' தாக்குகிறது. இதற்கு ஈடு தருவது போல, மருத்துவச் செலவுகளும் இங்கே அதிகம். லேசாக காலிலோ, கையிலோ அடிபட்டு, 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தாலே, 40 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
இந்நிலையில் தான், ஹெல்த் இன்சூரன்ஸ் முக்கிய தேவையாகிறது. இன்சூரன்ஸ் எடுத்திருந்தால், செலவுகளை நிறுவனமே ஏற்கும்.இன்சூரன்சை பொறுத் தவரை, முன்பு நிறைய கண்டிஷன்கள் இருந்தன. இப்போது தேவைக்கு ஏற்ப, ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க முடியும். ஹெல்த் இன்சூரன்சில் தனிநபர் பாலிசி, குரூப் பாலிசி மற்றும் பேமிலி ப்ளோட்டர் பாலிசிகள் பிரபலமானவை. குரூப் பாலிசிகளை, அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு, அலுவலகமே எடுத்துத் தரும். வேலையின் தன்மையைப் பொறுத்து, மூன்று லட்சத்துக்கோ அல்லது ஐந்து லட்சத்துக்கோ, பாலிசி எடுப்பர். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சேர்த்து எடுப்பது, பேமிலி ப்ளோட்டர் பாலிசி. பாலிசி எடுக்கும் போது, அதிக மருத்துவமனைகளை உள்ளடக்கிய நிறுவனத்தின் பாலிசியை தேர்ந்தெடுப்பது நல்லது. மகப்பேறுக்கும் பாலிசி இருக்கிறது; ஆனால், பாலிசி எடுத்த இரண்டாண்டுகளுக்கு பின் தான், செலவுத் தொகையை நீங்கள், "க்ளெய்ம்' செய்ய முடியும். சர்க்கரை, பி.பி., கேன்சர் நோயாளிகளுக்கும், ஸ்பெஷல் பாலிசிகள் இருக்கின்றன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக