புதன், 2 ஜனவரி, 2013

மறைக்கப்பட்டு வரும் தமிழர் நாகரிகம்


உலகில் பல மனித இனங்கள் இருந்தன, இவைகளின் நாகரிகம் பலவித மானது, உன்னதமானது ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான நாகரிகம், இன்று வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் போன்றவை போன்று அன்றும் இருந்து வந்தது, இதில் முக்கியமானது நதிக்கரை நாகரிகம் மனித இனத்தின் நாகரிகத்தின் தொட்டில்கள் என்று வரலாற்று அறிஞர்கள் கூறு கிறார்கள், இன்று அகழ்வாராய்ச்சிகள் மற்றும் நவீன விஞ்ஞானத்தின் மூலம் அந்த நாகரிகத்தின் தொன்மையை அறிந்து வருகிறோம், நைல், யூப்ரடீஸ் டைகரீஸ், மஞ்சள் நதி, மற்றும் சிந்து சமவெளி நாகரிகம், இன்று நைல் நாகரிகம் எகிப்திய மக்களின் புகழை உலகெங்கும் பறைசாற்றிவருகிறது, அது போலவே யூப்ரடீஸ் டைகரீஸ் இன்று யூதர்கள் அராபியர்கள் என இரண்டு பிரிவாக பிரிந்து உலகை தங்கள் வசம் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்றால் அன்றும் யூப்ரடீஸ் டைகரீஸ் கரைகளில் தங்கள் நாகரிகத்தை கட்டிக்காத்தனர், வல்லரசுகளில் ஒன்றான சீனநாகரிகமும் மஞ்சள் நதிக்கரையில் உருவானது தான்,  ஆனால் சிந்துவெளி நாகரிகம் என்ன ஆனது, உலகத்திற்கே தெரிந்த ஒன்று அது திராவிட நாகரிகம் என்று, நமது கலாச்சாரமும் வாழ்க்கைமுறையும் அதற்கான சான்றுகள் பகர்கிறது, ஆனால் இன்று நடப்பதென்ன சில வருடங்களுக்கு முன்பு திராவிடர் என்று ஒரு இனம் இல்லை, என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார்களாம், ஆந்திர பல்கலைகழகம் ஒன்று இது குறித்து ஆய்வு செய்தார்களாம்  வைகோ அவர்கள் ராஜபக்சே வருகிறார் என்று போராட போனார்களே அதே மத்திய பிரதேச அரசு தென்பகுதியில் வாழ்ப வர்கள் ஆப்ரிக்காவில் இருந்து வந்த இனங்கள் என்று திராவிடர்கள் என்று சொல்லாமல் நம்மை வந்தேறிகள் என்று சொல்லி விடுகிறது,
எடுத்துக் காட்டுக்கு கர்நாடக மேற்கு கடற் கரைகிராமங்களில் வாழும் நீக்ரோவை ஒத்த சில ஆயிரம் பேர் கொண்ட ஓர் இனத்தை காட்டுகிறது,  இதற்கெல் லாம் சிகரம் வைத்தாற் போல் மும்பையில் ஓர் நிகழ்ச்சி நடந்தது, ஆம் 1994-ல் சிவசேனா ஆட்சிக்கு வந்த உடன் இளவரசர் வேல்ஸ் மீயூசியம் பெயர் சத்திரபதி சிவாஜி அருங் காட்சியகம் என்று மட்டும் மாற்றப் படவில்லை, உள்ளே நுழைந்த உடன் கண்ணில் படும் மிகப்பெரிய படங் களான சிந்து சமவெளி நாகரித்தை குறிக்கும் பட விளக்கங்களில் ஒரு பெயர் மட்டும் அளிக்கப்பட்டது அது இங்குவாழ்ந்த இனம் திராவிடம் எனப்பட்டது இந்த வார்த்தை அழிக்கப்பட்டு பெயர் தெரியாத ஓர் இனம் வாழ்ந்தது (ஸீளீஸீஷீஷ்ஸீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீவீஷீஸீ ) எவ்வளவு நுணுக்கமான மாற்றம், அங்கு திராவிடர்கள் என்ற பெயர் 1994 முன்பு இருந்தது, அதற்கான பட ஆதாரங்கள் இன்றும் உள்ளன, ஏன் மாற்றினார்கள் அப்படி என்றால் அவர்கள் யார் என்று கூறப்போகிறார் கள் என்று பார்த்தால் நேற்று க்ஷீணீஸ்மீறீ க்ஷீமீஸீபீ பயணதொலைக்காட்சியில் இதற் கான விளக்கம் ஆரம்பமானது ஆம் தொலவீரா(குஜராத்) என்ற பகுதியில் உள்ள ஹரப்பா நாகரீக பதிவுகளை படமெடுத்து அதற்கான விளக்கம் கூறுகிறபோது பெயர் தெரியாத இந்த உன்னத நாகரிக இனத்தினர் மத்திய ஆசியாவின் பாபிலோனில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறினார்கள், அதாவது அவர்கள் பயன்படுத்திய சில மண்பாண்டங்கள் பாபிலோனியர்கள் பயன்படுத்துவதைப் போல் இருக்கிறதாம் ஆகையால் இந்த முடிவிற்கு அகழ்வாராச்சியாளர்கள் வந்தார்களாம், தொலவீரா என்ற ஹரப்பா பண்டைய நாகரிகம் இன்று கானப்படும் பகுதியே திராவிட என்ற வார்த்தையின் மறுவு தான் என்று கண்ணாடியாய் தெரியும் போது ஏன் மத்திய ஆசியா என்று குறிப்பிட வேண்டும்.
எப்படியும் இன்னும் 5 வருடத்திற் குள் சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர் களின் நாகரீகம் என்று பதிவு செய்து விடுவார்கள், இதற்கான மாற்றம் தான் அசைவம் சாப்பிடுபவர்கள், நாடார்கள் என அடிமட்ட பூச்சுக்கள் பாடத்திட் டங்களின் மூலம் ஆரம்பமாகிவிட் டதோ என்னவோ?
-சரவணா ராஜேந்திரன்


2 கருத்துகள்:

  1. தமிழர் வரலாற்றை எப்படியெல்லாம் சிதைக்க முடியுமோ அப்படியெல்லாம் சிதைத்து வருகிறார்கள்! இதை விடக்கூடாது! மும்பை நாம் தமிழர் இயக்கம் உடனடியாக இதற்கு எதிராகப் போராடா வேண்டும்! அந்த அருங்காட்சியகத்துக்கு எதிராக உடனடியாக அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றில் இறங்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய பற்றை நான் பாராட்டுகிறேன். கவலைபடாதீங்க...பார்த்துக்கொள்ளலாம்.!

      நீக்கு