புதன், 2 ஜனவரி, 2013

உரூ 2,263 இற்குச் சிறு கணிணி

சொல்கிறார்கள்

ரூ.2,263க்கு "டேப்லெட்!'
ஆகாஷ் டேப்லெட் கணினியை, 2,263 ரூபாய்க்கு தயாரித்த குழுவிலுள்ள, பேராசிரியர் கண்ணன்: மும்பை, "இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி'யில், பேராசிரியராக பணிபுரிகிறேன். சொந்த ஊர், சேலம். கணினி துறையில், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. லேப்-டாப், ஐ-பேடு காலங்கள் எல்லாம் மலை ஏறிவிட்டது. மத்திய அரசின் உதவியுடன், "டேப்-லெட்' எனப்படும், கையடக்க கணினியை (சிறுவர்கள் பயன்படுத்தும் ஸ்லேட் போன்ற டிஜிட்டல் வடிவம்), குறைந்த விலையில் தயாரிக்க, 20 பேர் கொண்ட குழுவாக, முயற்சி மேற்கொண்டு வருகிறோம். "டேப்லெட் கணினியை, 2,263 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளோம். ஏழை, எளியவர்களும் விலைக் கொடுத்து வாங்கும் வகையில், குறைந்த விலையில், "டேப்-லெட்' கணினியை தயாரித்ததால் அதற்கு, "ஆகாஷ் கணினி' என்று பெயர் வைத்திருக்கிறோம்.
உலகத்தில் உள்ள அனைத்தையும், கையில் அடக்கும் விதமாக தயாரித்திருக்கிறோம். படிப்பு முதல், விவசாயம் வரை, அனைத்து தேவைகளையும், இதன் மூலம், "அப்லோட்' செய்யும் வசதி உள்ளது. அதனால், குழந்தைகளின் புத்தகச் சுமை, பெருமளவு குறையும் வாய்ப்பு உள்ளது. ஆகாஷ் டேப்லெட் கணினியை, ஒரு சில மாதங்களிலேயே தயாரித்து, விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை கழக மாணவ, மாணவியரிடம், ஆகாஷ் கணினி பற்றி, வகுப்பு நடத்திய போது, அவர்களிடம், பெரும் எதிர்பார்ப்பு இருந்ததை, என்னால் நன்கு காண முடிந்தது. ஏழை எளியவர்களின் எட்டாக்கனியாக இருந்த கணினி சாதனங்கள், இனி, ஏழைகளின் பாக்கெட்டிற்குள் இருக்கும். முதல் கட்டமாக, 50 ஆயிரம் ஆகாஷ் கணினிகளை தயாரிக்கும், நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக