வியாழன், 3 ஜனவரி, 2013

உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதாடும் உரிமை - மரு. இராமதாசு

அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து  உயர்நீதி மன்றத்தில்  தமிழில் வாதாடும் உரிமையை ப் பெற வேண்டும்:  மரு. இராமதாசு கோரிக்கை
 
சென்னை, ஜன.3-
 
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதிடலாம் என வாய்மொழியாக அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் போதிலும் தமிழில் வாதிடுவதற்கான உரிமையை வழக்குரைஞர் ஒருவருக்கு நேற்று மறுக்கப்பட்டிருக்கிறது.
 
தமிழ் மொழியே தெரியாத நீதிபதி எம்.ஒய்.இக்பால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது வழக்குறைஞர்களின் உணர்வுகளை மதித்து தமிழ் மொழியில் வாதிடலாம் என அனுமதி அளித்த நிலையில் தமிழ்மொழி தெரிந்த நீதிபதி ஒருவர் தமிழில் வாதிடுவதற்கு தடை விதித்திருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
 
தாய்மொழியில் வாதங்களை முன்வைக்கும்போது அது தெளிவாகவும், வலிமை யாகவும் இருக்கும் என்ற அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைவதை இந்திய அரசியல் சட்டமும் அனுமதிக்கிறது.
 
இதன் அடிப்படையில் கடந்த ஆட்சி காலத்தில் பா.ம.க. தெரிவித்த யோசனைப்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் 06.12.2006 அன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
 
ஆனால் இந்த விஷயத்தில் குடியரசு தலைவருக்கு மத்திய சட்ட அமைச்சகம் நேரடியாக பரிந்துரை அளிப்பதற்கு பதில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்டதால்தான் சட்டப்பூர்வமான முறையில் சென்னை உயர்நீதி மன்றத் தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது. இந்த முட்டுக்கட்டையை அகற்று வதாக மத்தியில் சட்ட அமைச் சர்களாக வந்த பலரும் உறுதியளித்த போதிலும் இன்று வரை எந்த பயனும் ஏற்படவில்லை.
 
உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அம்மாநில மொழிகள், குடியரசு தலைவரின் ஆணைப்படி உயர்நிதிமன்ற வழக்கு மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அவ்வாறு இருக்கும்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது? என்பது தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் உயர்நீதி மன்றத்தில் அம்மாநிலத்தின் தாய்மொழியில் வாதிடுவதற்கு அரசியல் சட்டம், மரபு, நடைமுறை என எந்த பெயரால் தடை விதிக்கப்பட்டாலும் அதைவிட பெரிய மோசடி இருக்க முடியாது.
 
எனவே சென்னை உயரநீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை மத்திய அரசு அறிவிக்க வேண்டும், இதற்காக மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நெருக்கடி தரவேண்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக