சொல்கிறார்கள்
வார்த்தை ஜால விளம்பரங்கள் பிடிக்காது!
ஆயுர்வேத அழகுக் கலை சார்ந்த பிசினஸ் செய்யும், ஷானாஸ் ஹூசேன்: செல்வாக்கோடு விளங்கிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, தற்போது, 64 வயது. 14 வயதில் திருமணம் செய்து வைத்தனர். 15 வயதில், குழந்தை பிறந்தது. குடும்பம், குழந்தை என்று ஆனாலும், படிக்க வேண்டும் என்ற ஆசை, எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இயல்பாகவே, என்னை அழகாக வைத்துக் கொள்ள, ரொம்பவே மெனக்கெடுவேன். அதனால், எனக்கு பிடித்த, பியூட்டி சம்பந்தமான நிறைய புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.
இந்நிலையில், அலுவல் சம்பந்தமாக, என் கணவர், லண்டன், பா ரீஸ் என, உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். அவர் கூடவே சென்று, அந்நாடுகளில், அப்போது புழக்கத்தில் இருந்த பியூட்டி கோர்ஸ்களை படித்து முடித்தேன். "கெமிக்கல்களை கட்டிக் கொண்டு அழுவதை விட, நம் பாரம்பரியமான, ஆயுர் வேதத்தை கையில் எடுத்தால் என்ன?' என்று தோன்றியது. அப்படியே என் பிசினசும் பிறந்தது. ஆயுர்வேதத்தைப் பற்றி முழுமையாகக் கற்றுக் கொண்டு, அதன் பிறகே, ஆயுர்வேத மூலிகைகளைக் கொண்டு, அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்தேன். அதற்கு, "ஷானாஸ் ஹெர்பல்ஸ்' என்று, பெயர் சூட்டினேன். என் அப்பாவிடம், 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, வீட்டு வராண்டாவை, ஒரு சிறிய பியூட்டி கிளினிக்காக மாற்றினேன். ஆரம்ப காலத்தில், என் தயாரிப்புகளை, எல்லாரிடமும் கொண்டு சேர்க்க, குடும்பத் தலைவிகளைத் தான் நான் ரொம்பவே நம்பினேன்.
நான் பிசினஸ் ஆரம்பித்த கையோடு, "வுமன்ஸ் வேர்ல்ட் இன்டர்நேஷனல்' என்ற டிரெயினிங் கோர்ஸ் ஒன்றை, அழகுக் கலையில் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஆயுர்வேதத்தில் சிற ப்பு பயிற்சி அளித்து, அவர்கள் ஊரில் என் தயாரிப்புகளை, அவர்கள் விற்பதற்கான உரிமத்தைக் கொடுத்தேன். இப்போது, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் என் பிசினஸ் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது. மற்றபடி, வார்த்தை ஜாலங்களில், விளம்பரங்களைத் தயாரித்து, என் தயாரிப்புகளை மக்களிடையே விளம்பரப்படுத்த, எனக்கு, ஒரு போதும் ஆர்வம் இருந்ததில்லை. 10 வருடத்திற்கு முன், ஆண்களுக்காக ஆரம்பித்த, "ஸ்பா' இப்போது சக்கை போடு போடுகிறது. இதுபோன்ற விசாலமான பார்வை மட்டுமே உங்கள் பிசினசை மேலும் உயர்த்தும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக