திங்கள், 5 நவம்பர், 2012

கழிப்பிடத்தை ப் படிப்பகமாகமாற்றினோம்!'

சொல்கிறார்கள்

கழிப்பிடத்தை ப் படிப்பகமாகமாற்றினோம்!'
 
புதுச்சேரி, காந்தி நகரில், "பாரதி இலவசப் படிப்பகம்' நடத்தி வரும், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன்: எங்கள் ஆட்டோ ஸ்டாண்டிற்கு அருகில் உள்ள பிளாட்பார பகுதியானது இதற்கு முன், மிக அசுத்தமாக இருந்தது. பொதுமக்களின் இலவசக் கழிப்பிடமாகவே இந்த இடம் விளங்கியது; மிகவும் துர்நாற்றம் வீசும். எனவே, இந்த இடத்தைச் சுத்தமான இடமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

என்ன செய்யலாம் என, யோசித்த போது, அங்கு செய்தித் தாள்களை வாங்கிப் போட்டு, பலரும் படிப்பதற்குப் பயன்படும் இடமாக அதை மாற்றலாம் என்ற யோசனை வந்தது. அதன் படி, அங்கு தட்டி அமைத்து, எங்கள் சொந்தச் செலவிலேயே நாளிதழ்கள் வாங்கிப் போட்டோம்.
பொதுமக்களும் இங்கு வந்து, நாளிதழ்களைப் படிக்க ஆரம்பித்தனர். மேலும், ஆட்டோ டிரைவர்களும் சவாரி இல்லாத நேரத்தில், இந்தச் செய்தித் தாள்கள் மூலம், நாட்டு நடப்புகளை தெரிந்து கொண்டோம். இப்படித்தான் இந்தப் படிப்பகம் உருவானது.மழைக் காலத்தில் இந்தப் படிப்பகம் செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டது. எங்கள் ஸ்டாண்ட் சார்பாக, படிப்பதற்கென, ஒரு குறிப்பிட்ட தொகையை உறுப்பினர்களிடமிருந்து சந்தாவாக வாங்கி அதைச் சேர்த்து வைத்தோம். பின், அந்தச் சேமிப்புத் தொகையால், சுவர் எழுப்பி, சிமென்ட் ஷீட் போட்டு கட்டடமாக மாற்றினோம்.

ஆரம்பத்தில், அருகில் உள்ள சிலரும், ஆரோவில் பகுதியில் வசிப்பவர்களும் எங்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்து உதவினர். அது மட்டுமில்லாமல், எங்கள் ஸ்டாண்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் எங்கு புத்தகக் கண்காட்சி நடந்தாலும் அவர்கள் சார்பில், சில புத்தகங்களை வாங்கி வைப்பது வழக்கம்.தற்போது மழை பெய்வதால், நூலகத்தின் ஒரு பக்கச் சுவர் மூலம், தண்ணீர் ஒழுகுகிறது; மேலும் மின்சாரம் இல்லாத காரணத்தினால், பொது மக்கள், படிப்பகத்தினுள் காற்றோட்டமாகப் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக