(ஓடுதளம் இல்லா வானூர்தி விடுதலைப் புலிகள் உருவாக்கினர் அல்லவா?)
+++++++++++++++++++++++++++++++++++++++
ஓடுதளம் இல்லாமல் விண்ணில் பறக்கும் அதிநவீன ஆளில்லா விமானம்: ஈரான் தயாரிக்கிறது
தெக்ரான், நவ. 5-
தற்போது
ஆளில்லா விமானங்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது. அதன் மூலம்
பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து வெடிகுண்டுகள் மற்றும்
ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த
நிலையில் அமெரிக்காவுக்கு போட்டியாக ஈரானும் ஆளில்லா விமானங்களை
தயாரிக்கும் பணியில் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க ஆளில்லா
விமானங்கள் ஓடுதளத்தில் சிறிது தூரம் ஓடி விண்ணில் பறக்கிறது.
ஆனால்
ஈரான் அதிநவீன ஆளில்லா விமானங்களை தயாரித்து வருகிறது. இவற்றுக்கு ஓடுதளம்
தேவையில்லை. ராக்கெட் போன்று விண்ணில் விர்ரென பறந்து செல்லக்கூடியது.
அப்பாஸ்ஜாம்
என்ற ஆராய்ச்சியாளர் இதை வடிவமைத்து வருகிறார். இதுபோன்ற விமானம் உலகில்
தயாரிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த விமானம் அடுத்த ஆண்டு
பயன்பாட்டுக்கு வருகிறது.
இஸ்ரேலில் ஜீவில்
மாகாணத்தில் கடந்த அக்டோபர் மாதம் அத்து மீறி நுழைந்த ஒரு ஆளில்லா விமானம்
சுட்டு வீழ்த்தப்பட்டது. அது தங்களுடையது என லெபனான் ராணுவம் உரிமை
கொண்டாடியது.
ஆனால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த
விமானத்தின் உதிரிபாகங்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டு லெபனானில்
பொருத்தப்பட்டிருப்பதை இஸ்ரேல் ராணுவ மந்திரி அகமது வகிடி தெரிவித்து
இருந்தார்.
தற்போது அது ஈரானில்
தயாரிக்கப்பட்டிருப்பது உண்மையாகிவிட்டது. ஈரானில் வருகிற ஞாயிற்றுக்கிழமை
கப்பல்படை தளம் திறக்கப்படுகிறது. அப்போது தனது அதிநவீன ஆளில்லா விமானம்
குறித்த அறிவிப்பை ஈரான் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக