ஞாயிறு, 4 நவம்பர், 2012

உலகின் பிடித்த விலங்காகப் புலி தேர்வு 73 நாட்டு மக்கள் வாக்களிப்பு

உலகின் பிடித்த விலங்காக புலி தேர்வு 73 நாட்டு மக்கள் வாக்களிப்பு

உலகின் மிகவும் பிடித்த விலங்காக, 73 நாட்டு மக்கள் இணைந்து, புலியை தேர்ந்தெடுத்தனர். உலகம் முழுவதும் இந்திய இனம், இந்தோசீன இனம், சுபத்திரன் இனம், சைபீரியஸ் இனம், பாலி இனம், ஹாஸ்பின் இனம், ஜவான் இனம் என்ற, எட்டு வகையான புலி இனங்கள் இருந்தன.
ஆனால், 1940ல் பாலி இனமும், ஹாஸ்பின் இனமும், 1970ல், ஜவான் இனமும் முற்றிலும் அழிந்தது. உலகில் உள்ள நான்கு வகையான புலி இனங்களில், ராயல் பெங்கால் வகை புலிகள் மட்டும் இந்தியாவில் உள்ளது.
கடந்த, 2006ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கை, 1,411 ஆக குறைந்ததால், "புராஜெக்ட் டைகர்' திட்டத்தை மத்திய அரசு முடுக்கிவிட்டது.தற்போது, இந்தியா முழுவதும் உள்ள, 1,706 புலிகளில், தமிழகத்தில் மட்டும், 292 புலிகள் உள்ளன. உலக அளவில், 60 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளதால், புலி எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து, முதலிடத்தில் உள்ளது.
உலகில் வேகமாக அழிந்து வரும் விலங்கில், முதல் இடத்தை நோக்கி, புலி இனங்கள் வேகமாக முன்னேறி வருகிறது. புலிகளை காக்க, உலகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.லகம் முழுவதும் உள்ள சமூக அமைப்புகளும், வன ஆர்வலர்களும், புலிகளை காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும்,பல்வேறு நாட்டு மக்களிடம் வாக்குகள் சேகரித்து, உலகின் பிடித்தவிலங்கினை, விலங்குகள் நடத்தை ஆய்வாளர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு, உலகின் பிடித்த விலங்காக புலி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புலி இனங்கள் அழிந்து வரும் வேளையில், பிடித்த விலங்காக புலி தேர்வு செய்யப்பட்டுள்ளது, வனத்துறையினர் மத்தியில் சற்று ஆறுதலை தந்துள்ளது.
உலகின் பிடித்த விலங்கினை தேர்வு செய்ய, விலங்கியல் நடத்தை ஆய்வாளர் கேண்டி டிசா என்பவர் வாக்கு சேகரித்தார். இதில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பன், சீனா உள்பட, 73 நாடுகளை சேர்ந்த, 50 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.
வாக்கு சேகரிப்பில், 21 சதவீதம் பேரின் ஆதரவோடு, உலகின் மிக பிடித்த விலங்காக புலிகள் தேர்வு செய்யப்பட்டது. 20 சதவீத ஆதரவோடு, நாய் இரண்டாம் இடத்தையும், 13 சதவீத ஆதரவோடு டால்பின்கள், மூன்றாம் இடத்தையும் பிடித்தன.பத்து சதவீதம் பேர் குதிரைக்கும், ஒன்பது சதவீதம் பேர், சிங்கத்துக்கும், எட்டு சதவீதம் பேர், பாம்புக்கும் வாக்களித்தனர். யானை, சிம்பென்ஸி, திமிங்கலத்துக்கு குறைவான வாக்குகளே பெற்றது.
-தினமலர் செய்தியாளர்-
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக