திங்கள், 5 நவம்பர், 2012

தவிர்க்க வேண்டிய மோசமான கடவுச் சொற்கள் 25

டாப் 25 மொக்கை பாஸ் வேர்டுகள்

இணைய தள பாவனை என்று வந்து விட்டால் கண்டிப்பாக ஒரு பயனர் கணக்கு ஒன்று பயன்படுத்த அவசியம் இல்லாமல் இப்போதைய நிலையில் பல தளங்கள் இயங்குவதில்லை என்று கூட சொல்லலாம். கூகிள், பேஸ்புக், டுவிட்டர், யாகூ என ஏன் நம்ம தமிழ்மணம் கூட பயனர் கணக்கை தான் கேட்கும். காரணம் நமது தனிப்பட்ட
தகவல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை மையமாக வைத்தே இது ஆரம்பித்தது என்று கூட சொல்லலாம். 

இதற்காக தகுந்த நுழைவுச்சொற்களை அல்லது மின்னஞ்சல் முவரிகளையும் பாதுகாப்பான கடவுச்சொற்களையும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறில்லாவிடின் எமது கணக்குகளை மற்றவர்கள் திருடி மோசடி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். 

எனினும் தொடர்ச்சியாக பல்வேறு இணைய நிறுவனங்களால் பாதுகாப்பான கடவுச்சொற்கள் பற்றி அறிவுத்தப்பட்டு வந்தபோதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இம்மோசடிகளை நிறுத்த முடியாது காணப்படுகின்றது.

இவற்றின் அடிப்படையில் 2012ம் ஆண்டில் இதுவரை Hackers-களினால் திருடப்பட்ட மிகவும் மோசமான கடவுச்சொற்கள் 25 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அவர்கள் வெளியிட்டுள்ள டாப் 25 பாஸ்வேர்ட்ஸ்
  1. password 
  2. 123456
  3. 12345678
  4. abc123  
  5. qwerty
  6. monkey  
  7. letmein 
  8. dragon 
  9. 111111 
  10. baseball 
  11. iloveyou 
  12. trustno1 
  13. 1234567 
  14. sunshine 
  15. master 
  16. 123123 
  17. welcome 
  18. shadow 
  19. ashley 
  20. football 
  21. jesus 
  22. michael 
  23. ninja 
  24. mustang 
  25. password1

இதில் இன்னொரு சுவாரிசியமான செய்தி ""jesus," "ninja," "mustang," "password1," and "welcome." இவை மட்டுமே கடந்த வருடத்தில் இருந்து இந்த வருடத்திற்கு புதிதாக பட்டியலுக்குள் நுழைந்துள்ளதாம். மற்றவை எல்லாம் ஏற்கனவே பட்டியலில் இருந்தவை தானாம். நம்மாளுங்க என்ன சொன்னாலும் இப்படி தான் பாருங்க


http://ideasofharrypotter.blogspot.com/2012/11/waste-25-passwords.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக