சொல்கிறார்கள்
"பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது!'
"பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது!'
நாகர்கோவிலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சொர்ணலதா: என் பாட்டி சொர்ணம்மாள்,
நாகர்கோவிலில் உரு வாக்கப்பட்ட, கஸ் தூரிபா மாதர் சங்கத்தின் நிர்வாகக்
கமிட்டி மூலம், சமூக சேவை செய்வதில் துடிப்பாகச் செயல்பட்டவர்.அவரைப்
பார்த்து வளர்ந்ததால், எனக்கும் சிறுவயதிலேயே பிறருக்கு உதவி செய்வதில்,
ஈடுபாடு அதிகமானது. படித்து முடித்த பின், நாட்டு நலப்பணி திட்ட அலுவலராகப்
பணிபுரிய, எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
கடந்த, 1983ம் ஆண்டு, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, "இந்திய குடும்ப
நல மகளிர் முன்னேற்ற திட்டம்' அரசால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்
கீழ், 105 கிராமங்களில், மாதர் சங்கம் உருவாக்கப்பட்டு, பெண்களின்
வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.இந்த திட்டத்திற்காக நான் கிராமங்களுக்குச்
சென்ற போது, என்னை முதலில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. "உனக்கு வேறு வேலை
இல்லையா?' என விரட்டினர். அவர்களிடம் பக்குவமாகப் பேசி, மகளிருக்காக அரசின்
திட்டம் பற்றி எடுத்துரைத்த பின், என்னை உள்ளன்புடன் ஏற்றுக் கொண்டனர்.
ஒவ்வொரு கிராமத்திலும், அமைக்கப்பட்ட மாதர் சங்கம் மூலம், பெண்களுக்கு கல்வி, மருத்துவம், பாலியல் பிரச்னைகள், குடும்ப நல வாழ்வு, திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, சுகாதாரம், எய்ட்ஸ் போன்றவை குறித்து, விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்திலும், அமைக்கப்பட்ட மாதர் சங்கம் மூலம், பெண்களுக்கு கல்வி, மருத்துவம், பாலியல் பிரச்னைகள், குடும்ப நல வாழ்வு, திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, சுகாதாரம், எய்ட்ஸ் போன்றவை குறித்து, விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மூலம், வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்த பெண்கள், வெளியுலக
வாழ்வின் விவரத்தை உணர்ந்தனர். படிப்பறிவில்லாத பெண்கள், கையெழுத்து
போடவும், படிக்கவும் கற்றுக் கொண்டனர்.மேலும், குடும்ப நல ஆலோசனை மையத்
தின் மூலம், வீடு, கல்லூரி விடுதிகளில் இருந்து வெளியேறும் மாணவியருக்கு,
கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக