வியாழன், 8 நவம்பர், 2012

நிலவேம்பு கிழாயம் (கசாயம்') பொதுமக்கள் ஆர்வம்

நிலவேம்பு  கிழாயம் (கசாயம்') பொதுமக்கள் ஆர்வம்

முதுகுளத்தூர்:நில வேம்பு "கசாயம்' பெற, முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனர்.சமீபகாலமாக, மர்ம காய்ச்சல், டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டு, சிலர் பலியாவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் காலை 8-11 வரை வழங்கப்படும் நில வேம்பு கஷாயத்தை பெற, பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுஜாதா கூறியதாவது: எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியம் தரும், நிலவேம்பை அப்படியே வழங்கினால், அளவு தெரியாமல், சாப்பிட்டு, பல உபாதைகளால், பாதிக்கபடுவர். எனவே கொதிக்க வைத்த கஷாயத்தை, ஒருவருக்கு 30 மில்லி லிட்டர் வழங்குகிறோம். இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், என்றார்.
-தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக