திங்கள், 10 ஜனவரி, 2011

Talk with govt. about remedy of Ilangai thamizhar problemsஇலங்கைத் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு: அரசுடன் இன்று பேச்சு

௧௯௦௦ இல் தமிழர் வாழ்ந்த பகுதிகளில்  தமிழர்கள் மட்டுமே வாழும் வகையில் குடியேற்றம் அமைய வேண்டும். 
வெல்க  தமிழ்ஈழம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு: அரசுடன் இன்று பேச்சுவார்த்தை


கொழும்பு, ஜன. 9: நீண்ட கால பிரச்னையான இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியாக தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசிய முன்னணிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.  இந்த தகவலை தமிழ் தேசிய முன்னணி செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரமேச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தெரிவித்தார்.  இலங்கை அரசின் தரப்பில் உயர் நிலைக் குழு இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும். கடந்த ஆண்டு இலங்கை அதிபர் ராஜபட்சேவை தமிழ் தேச முன்னணியினர் சந்தித்தபோது பேச்சுவார்த்தை நடத்த உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.  தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுக்காண்பதற்கு திங்கள்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தை அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை தொடருவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றார் அவர்.  இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சியாக கடந்த ஆண்டு தமிழ் தேசிய முன்னணி தலைவர் ஆர். சம்பந்தன் இலங்கை அதிபர் ராஜபட்சேவை இருமுறை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அரசு பிரதிநிதிகளும் தமிழ் தேசிய முன்னணியினரும் சந்தித்துப் பேசினர். இதன் விளைவாகவே இந்த பேச்சுவார்த்தை நடத்த முடிவானது என்றார் அவர்.  தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, மறுகுடியமர்வு மற்றும் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் ஆகியவை குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும்.  பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் கலந்து கொள்ளும் உயர் நிலைக் குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், அடிப்படை கட்டமைப்புத் துறை அமைச்சர் ரத்னசிரி விக்ரமநாயகே, நீர்ப் பாசனத் துறை அமைச்சர் நிமல் சிரிபாலா டிசில்வா ஆகியோரும் தமிழ் தேசிய முன்னணி சார்பில் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம். சுமன்திரன், செல்வம் அடைக்கலநாதன், கனகஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.  முன்னதாக வவுன்யாவில் தமிழ் தேசிய முன்னணி கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அரசுடன் பேச வேண்டிய விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.  மேலும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதற்கும் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா நிர்பந்தித்து வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக