திங்கள், 10 ஜனவரி, 2011

entertainment tax exemption to tamil cinema: சிறு முதலீட்டில் வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு

தமிழ்ப் பெயர் சூட்டிய படங்களுக்குத்தான் அரசு கேளிக்கை வரி நீக்குகிறது. இந்தச் செய்தியின் படி பார்த்தால் அரசு எல்லாப் படங்களுக்குமே கேளிக்கை வரிவிலக்குஅளித்துள்ளது. மேலும், கேளிக்கை விரி விலக்கின் பயனாகக் கட்டணம் குறைந்து அதைச் செலுத்தும் மக்களுக்கு அதன் பயன்  சேர வேண்டும். அவ்வாறில்லாமல் மக்களிடம் கேளிக்கை வரி பெற்று அதனைத் திரைப்பட முதலாளிகளிடம் அரசு தந்துள்ள மோசடி நடந்துள்ளது என்றும் புரிகிறது. அரசு விளக்கம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சிறு முதலீட்டில் வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு அளிக்க வேண்டும்: 
தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்


சென்னை, ஜன. 9: சிறு முதலீட்டில் வெளியிடப்படும் நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே அரசு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அச்சங்கத்தின் தலைவர் இராம. நாராயணன் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  துணைத்தலைவர் அன்பாலயா பிரபாகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே. முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான இப்ராஹிம் ராவுத்தர், முக்தா சீனிவாசன், டி.ஜி. தியாகராஜன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.  இந்தக் கூட்டத்தில், கடந்த ஆண்டு ஏற்பட்ட தமிழ் திரைப்படங்களின் தொடர் தோல்வி, கட்டுப்பாடு இல்லாத எண்ணிக்கையில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை, தோல்வியுற்ற படங்களின் தயாரிப்பாளர்களின் நிலை, பையனூர் நிலத்தில் வீடுகள் கட்டுவது, திரையரங்குகள் பற்றாக்குறை, மீடியாக்களின் ஆதிக்கத்தால் சிறு படங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:  கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கி அரசு சலுகை காட்டியதால்தான் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு 145 நேரடித் தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.  ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவிலேயே படங்கள் வெற்றி பெற்றது வருந்தத்தக்கது.  அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் அங்கீகாரம் ரத்து:  இனி பெரிய, சிறிய படங்கள் என்றில்லாமல் அனைத்து திரையரங்குகளுக்கும் படங்கள் கிடைக்க, தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே திரையரங்குகள் மக்களிடம் வசூலிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசிடம் வலியுறுத்துகிறோம்.  அனைத்து திரையரங்குகளிலும் விகிதாச்சார முறையில் மட்டுமே படங்களை திரையிட வேண்டும். 75 திரையரங்குகளுக்குள் திரையிடப்படும் நேரடித் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு அளிக்க வேண்டும். அதற்கு மேல் திரையிடப்படும் படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க வேண்டும்.  சிறு படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.  நடிகர் - நடிகைகளின் உதவியாளர்களுக்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட நடிகர்களே வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தயாரிப்பாளரை நிர்பந்திக்கக் கூடாது. பெருகி வரும் தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்த திரை அமைப்புகள் விரைவில் கூடி முடிவு எடுக்கும்.  பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கள் போல் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் (டிரெய்லர்) முறைப்படுத்தப்பட வேண்டும். பிப்ரவரி 2-ம் தேதி முதல் காலை 5 முறை, மாலை 5 முறை என்ற அளவிலேயே தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் அனுமதிக்கப்படும்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள சேவை வரி சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துகிறோம். படங்கள் மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்களை வெளியிடும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.      
++++++++++++++++++++++++++++++
இது ஒரு வரி மோசடியே. முன்பே நான் இதை எழுதியுள்ளேன்.வள்ளுவனும் அதை இப்போது கூறுகிறார்.
By Tamilian
1/11/2011 9:49:00 AM
அப்படியே, கருணாநிதி குடும்பத்தின் பிடியில் இருந்து திரை உலகை மீட்பதற்கு முயற்சி செய்யவும். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
1/10/2011 10:36:00 PM
வாழ்க்கைக்கு முக்கியம் இது தாங்க. சினிமா பார்த்து நமது வாலிபர்கள் அழிகிறார்கள். ராஜாஜி கூறியது போல் இது நாட்டை கெடுத்து விட்டது.
By ரமணன், துபாய்
1/10/2011 3:27:00 PM 
நானும் இதைத் தொடர்ந்துகூறி வருகிறேன். தினமணியின் பழைய பதிவுகளில் காணலாம். மக்கள் தொலைக்காட்சியின் சங்கப் பலகை நிகழ்ச்சியிலும் தெரிவித்துள்ளேன். எனினும் யாருக்கும் விழிப்பு வந்ததாகத் தெரியவில்லை.   வரி மோசடியைத்தடுக்க அனைவரும் முன் வரவேண்டும். 
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக