வியாழன், 13 ஜனவரி, 2011

Local holiday for pongal in kerala: பொங்கலுக்குக் கேரளாவின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

மடல் எழுதிய முதல்வருக்கும் விடுமுறைக்குப் போராடிய தமிழ் அமைப்புகளுக்கும் ம.தி.மு.க. முதலான அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. நாம் சிந்திக்க வேண்டியன: காங்.கின் சதியால் தமிழ்ப்பகுதிகள் கேரளத்தில் சேர்க்கப்பட்டன. ௫௪ ஆண்டுகள் கழித்து நம்மால் பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறைதான் வாங்கித் தர முடிந்துள்ளது. பாராட்டுகள். எனினும்  கேரளத்தில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மக்களாகவே வாழும் காலம் வர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கலுக்கு கேரளாவின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை


சென்னை, ஜன.13: பொங்கலுக்கு கேரளத்தின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்குமாறு கேரளத்தை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று, கேரள அரசு பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் அதிகம் உள்ள 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது. இதன்படி, வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள்

தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க கேரள அரசு பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது.ஓணமும் பொங்கலும் சமயச்சார்புக்கு அப்பாற்பட்ட மக்கள் விழாக்களாகும்.கேரள-தமிழக பண்பாட்டுக்கூறுகள் இவ்விழாக்களில் பின்னிப்பிணைந்துள்ளன.மேலும் நல்லெண்ணத்தை வளர்க்கும் இத்தகு நெகிழ்வான செய்திகள் பரஸ்பர நல்லுறவை மேம்படுத்தும்.மனோன்மணீயம் சுந்தரனார் திருவனந்தபுரம் பல்கலையில்பேராசிரியப் பணியாற்றியது இங்கு நினைவுக்கு வருகிறது.-இரா.குமரகுருபரன்,சென்னை-47
By R Kumaraguruparan
1/12/2011 11:41:00 PM
THANKS TO KALAIGER AYYA FOR HIS KIND REQUEST TO OUR CM FOR THIS LEAVE.
By SOMA SUNDER
1/12/2011 8:02:00 PM
லீவ் வேண்டாம் எங்களுக்கு தண்ணீர்தான் வேண்டும். முல்லை பெரியரில் எங்கள் உருமை நிலைநட்டபடவேண்டும்.
By கே.சீனிவாசன் கோவில்பட்டி
1/12/2011 7:35:00 PM
லீவ் கொடுக்குறத விட்டுட்டு தண்ணி கொடுக்குற வழிய பாருங்க. தேங்க்ஸ்.........
By Jahir
1/12/2011 5:23:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக