tamil new year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil new year லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தமிழ் ஆண்டு காப்புக்குழு தொடக்கம்

தமிழ் ஆண்டு காப்புக்குழு தொடக்கம்
வலிமை வாய்ந்த குரலாகத் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தைய அரசு சட்டசபையில் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய, தமிழக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட தை மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவது, கடைப்பிடிப்பது என்ற கொள்கையை அதே சட்டசபையில் எந்த போராட்டமோ, தமிழக எந்த அமைப்போ, மக்களோ போராடாத, கூக்குரலிடாதபோது தானே வலியவந்து தை முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்திருப்பது செய்த தவறையே திரும்பச் செய்யவைப்பது போலாகும் என்பதைக் கண்டித்து  சென்னை பிரஸ் கிளப்பில் இன்று காலை 11 மணியளவில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி  தமிழ்ப் புத்தாண்டு காப்பு மாநாடு கூடிய விரைவில் நடத்துவது பற்றியும், அதன் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், தமிழ் ஆண்டுத் தொடக்கத்தை தற்போதைய தமிழக அரசு சித்திரையை முதலாக வைத்துத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சுறவம் 1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை தமிழ் அறிஞர்களின் வழி விளக்கிட, செய்தியாளர் சந்திபபு

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு

வணக்கம். தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது.

இவற்றைப் பார்த்தும் தமிழ் உணர்வாளர்கள், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது

மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ஒரு கருத்தை யார் சொன்னார்கள் என்பதை விட, அந்த கருத்து நமது தமிழ் இனத்திற்கு தேசத்திற்கு

நலம் பயக்கக்கூடியதாக இருந்தால் வரவேற்பவனே உண்மை தமிழன்.

எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு,

சுறவம் 1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை தமிழ் அறிஞர்களின் வழி விளக்கிட,
 
தமிழர் எழுச்சி இயக்கம் செய்தியாளர் சந்திப்பை வருகின்ற 26-04-2012, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு
 
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் மண்றத்தில் ஏற்பாடு செய்துள்ளது.



மேற்கண்ட செய்திகளை தமிழ் உணர்வாளர்களுக்கு பரப்பி, அனைவரும் வருகைத் தந்து

ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்
கின்றேன்.

 
நன்றி!

ப.வேலுமணி

ஒருங்கிணைப்பாளர்

9710854760
TNYear-banner.jpg

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

thamizh new year - photoon: அடடே இதுக்குத்தான் தைப் புத்தாண்டா?

சில மாற்றுக்கருத்துகளை வெளியிட்டுத் தன்னை நடுநிலையாகக் காட்டிக் கொண்டாலும் தினமணி  தன மூலக் கருத்திற்க எதிரான மாற்றுக் கருத்துகளை வெளியிடு

வதில்லை. எனவேதான் பல நண்பர்கள் தினமணியில் கருத்துப் பதிவைத் தொடருமாறு வேண்டினாலும் பெரும்பாலும் எழுதுவதில்லை. இருந்தும் சொல்கிறேன். ஆண்டுப்பிறப்பு எது என்பதில்  கருத்து வேறுபாடு இருக்கலாம்.  அதற்காகக், ''கருணலொள்ளுவர் ''  என்றா சொல்வது.
தினமணியின் தமிழ்ப்பற்று உண்மை என்றால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரைச் சிதைக்க வேண்டா. திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /



ஃபோட்டூன்
அடடே இதுக்குத்தான் தைப் புத்தாண்டா?

First Published : 14 Jan 2012 10:30:16 AM IST


இவிங்களுக்கு மட்டும் பூத்தாண்டு பொறக்குதுங்கோஓஓஓஓ!கருணலொள்ளுவர் ஆண்டுசுடாலிங் மாதம் சென்றுகனிவலி மாதம் பிறக்கும் முதல்நாளில்தம்மில்லத்தாருக்கு பூத்தாண்டு பொறந்ததைதம்மில்லருக்கு பொறந்ததாய் துக்ளக் தர்பார் நடாத்தினீய்ங்களே!!நீவிர் வாழ்க வாழ்க!!ம்.....தன்னேரில்லாத் தமிழே!உனக்கும் கறுப்பு (கண்ணாடி) திரையிட்டு உன்புகழை மறைக்கக் கூடும் ஒரு நாள்...ஓர் நாள்!எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கருத்துகள்

வைரமுத்து என்ற 'பெருங்கவிதான்' கருத்து சொல்ல பொருத்தமானவர்.
By JANAKIRAMAN
1/14/2012 7:19:00 PM
வள்ளுவரை இப்படி வரைந்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.இது தான் தமிழ் பெயரில் உள்ள அன்பா! வக்கிர புத்தி உள்ளவர்கள் எதையும்/ எப்படியும் நியாயப் படுத்துவர்.தமிழ் மக்கள்/அறிஞர்கள் இதை கண்டுகொள்வார்களா? இதுவே அ தி மு க செய்து இருந்தால்...? தி.மு.க /தி.க போல் ஒரு வக்கிர எண்ணம் உள்ளவர்கள் கிட்டுவது அரிது.
By ராமச்சந்திரசேகரன்.
1/14/2012 5:28:00 PM
ஊரை அடிச்சு உலையில் போட்டது ஊழல் கொள்ளையில் முதலிடம் வகிப்பது. பொய் அறிக்கை தினமும் விடுப்பது. ஆட்களை குளப்புவது. தொண்ணூறு வயதாகியும் அரச இயந்திரத்தை இயக்க அனிஞாயம் பண்ணுவது,, இவை போக காலாகாலமாக இருந்துவந்த புது வருஷம் சித்திரையை மாற்றி தை என்று சமூகத்தையே ஏமாற்றுவது இதுக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாவித்து கழுவில் ஏற்ற பரிந்துரைக்கிறேன்.
By ஊர்க்குருவி.
1/14/2012 3:24:00 PM
அடடா அடடா அடடடா ங்கொப்பன் வள்ளுவன் குருடனா? லிப்ஸ்டிக் அடிச்சு செவந்ததா? அல்ல வெத்தல போட்டு செவந்ததா? கறுப்பு கண்ணாடி எதுக்குங்க? எல்லாம் பொங்கல் கொண்டாடறத மறைக்கவா? ஆண்டு பிறப்புக்கு இருக்குது இன்னும் மூணு மாசம் தாங்களே!!!! அதுக்குள்ள போஸ்டர் ஏனுங்க?
By நச்சினார்க்கினியன்
1/14/2012 2:15:00 PM
வள்ளுவ கருணாநிதியாரை , 'வழக்கு' மாற்றிய ஒளி விளக்கை, உள்ளத்தில் வைத்து நித்தம், உவகையாய் வாழ்த்தலாமே. தமிழ் ஆண்டை, மாற்றி வைத்து, தவிக்க விட்ட பெருமை தன்னை தமிழர் இனி மறக்க மாட்டார்.
By கம்பம் பி.டி.முருகன்,திருச்சி
1/14/2012 1:44:00 PM
அய்யோ பாவம் வள்ளுவர்....
By ஜெயகுமாரன்
1/14/2012 1:40:00 PM
படம் வேண்டுமானால் ஏற்று கொல்லாமல் இருக்கலாம். ஆனால், உண்மையான புத்தாண்டு தை தான். இதை 1921 -ம் ஆண்டு தமிழ் அறிஞர்கள் கூடி முடிவெடுத்தது. சித்திரை மாத பிறப்பில் கொண்டாடும் புத்தாண்டில் மரபு என்று சொல்லாமே தவிர அதன் விளக்கம் அசிங்ககமாக இருக்கிறது. சூரியனை மையமாக வைத்தே நாம் நாளின் பிறப்பையும்; வாரத்தின் (ஞாயறு) பிறப்பையும் குறிப்பிடுகிறோம். அதுபோலவே ஆண்டின் பிறப்பையும் சூரியன் ஒரு சுழற்சி முடித்து மிண்டும் தொடரும் நாளான தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்ட முடிவு செய்தார்கள் தமிழ் அறிஞர்கள். நாம் சூரியனை வழிப்பட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதை அரசியல் வேறுபாடு பார்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துகள்.
By S சுரேஷ்
1/14/2012 1:37:00 PM
உலக புகழ் பெற்ற ஒருவரின் உருவத்தில் உலக மகா அயோக்கியன் படம் உள்ளது வேதனையான விஷயம். இது போதாது என்று எந்த ஒரு மக்களும் ஏற்றுக்கொள்ளத விஷயத்துக்கு வீணான விளம்பரம் வேறு. நாடு எங்கே சென்ற கொண்டிருக்கிறது? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
By வெங்கடேஷ்.ம
1/14/2012 12:48:00 PM
உலக புகழ் பெற்ற ஒருவரின் உருவத்தில் உலக மகா அயோக்கியன் படம் உள்ளது வேதனையான விஷயம். இது போதாது என்று எந்த ஒரு மக்களும் ஏற்றுக்கொள்ளத விஷயத்துக்கு வீணான விளம்பரம் வேறு. நாடு எங்கே சென்ற கொண்டிருக்கிறது? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
By வெங்கடேஷ்.ம
1/14/2012 12:47:00 PM
தமிழ் புத்தாண்டை கேலி கூத்தாகிவர்கள், மக்கள் இவர்களை ஒதுக்கவேண்டும். நம் பண்டைய மரபு மாற்ற இவர்கள் யார்,??????.
By swaminathan
1/14/2012 12:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 15 ஜனவரி, 2011

thai month is the begining of the year: தைப்பொங்கல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாளாகும்!

தைப்பொங்கல் தினமே

தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!

images
தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!
“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?
பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகி;ன்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.
‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.
இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.
பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் – என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.
தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.(A Social History of the Tamils-Part 1)
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு – அதாவது 24 மணித்தியாலங்களோடு – அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)
(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.
தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில்FONKARA – FONKARA – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.
தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.
பருப்புத் தவிடு பொங்க – பொங்கஅரிசித் தவிடு பொங்க – பொங்க -என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில்‘HONGA-HONGA’ என்றே பாடுகிறார்கள்.
இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.
இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.
“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? – தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .
- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!
“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”
பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்!
இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகி;ன்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது.
பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.
“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” – என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.
“இல்லை – நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)
தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது.
அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும், புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட, தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன.
இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.
அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் – எதையும் – எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.
தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன.
முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு – மலேசியச் சிறப்பு மலர், தமிழர் – யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன.
சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.
- சபேசன் (மெல்பேர்ண் – அவுஸ்திரேலியா)
}

வியாழன், 15 ஏப்ரல், 2010


தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து



சென்னை, ஏப். 13: சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள்: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா: மலர இருக்கும் விக்ருதி ஆண்டு அனைவருக்கும் வளம் கொழிக்கும் ஆண்டாகவும், வளர்ச்சியையும், வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாகவும் விளங்கட்டும்.செயற்கைத் தடைகளைத் தகர்த்தெறிந்து, புதிய வளர்ச்சியையும், மலர்ச்சியையும் தமிழக மக்களுக்கு வழங்கும் வகையில், புதிய சாதனைகள் படைக்கும் ஆண்டாக, சிறப்பான மாற்றங்களை மக்களுக்கு தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்.வைகோ: கத்திரி வெயிலுடன் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருநாள் பிறக்கின்றது. வாசம் சேர்க்கும் வசந்தம் இத்திங்களில் வருவதால், பண்டைத் தமிழர் வசந்த விழாக்களை சித்திரை நாளில் சிறப்புறக் கொண்டாடினர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.இப்போது மக்களை வாட்டும் பிரச்னைகள் மாறி, மக்கள் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் சிறப்புகள் சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.பொன். ராதாகிருஷ்ணன்: உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சித்திரை முதல் தேதி வரும் புத்தாண்டினை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். தமிழர்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.மழை பொழிந்து, மண் செழித்து விவசாயம் பெருகவும், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவும் இந்த தமிழ்ப் புத்தாண்டு அடித்தளம் அமைத்து தர வாழ்த்துகிறேன்.அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் எஸ்.ஷேக் தாவூத், இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எஸ்.ஜே. இனாயத்துல்லா, நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என். ராமமூர்த்தி, அகில இந்திய கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கப் பொதுச் செயலாளர் வி. ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கருத்துக்கள்

அரசால் ஆதாயம் அடைந்து கலைஞரின் கைப்பிள்ளையாக வேடமிடும் தினமணி அரசின் கொள்கைக்கு மாறாகச் சித்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டு எனக் குறிக்கலாமா? கிறித்துவப் புத்தாண்டு சனவரி 1 க்கு மாறியபின்பும் ஏப்பிரல் 1இல் கொண்டாடியவர்கள் ஏப்பிரல் முட்டாள்கள் என அழைக்கப்பட்டார்கள். அப்படியாயின் தை முதல் நாளை ஆண்டின் தொடக்கமாக அறிவித்த பின்பும் சித்திரையில் கொண்டாடுபவர்களைச் சித்திரை முட்டாள்கள் என்று சொ்ல்லும் வழக்கம் வருமோ?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
4/15/2010 2:58:00 AM

தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

By usanthan
4/15/2010 12:18:00 AM

புதன், 14 ஏப்ரல், 2010

அன்று ஒரு விக்ருதி (1950-51)



ஆறுபது ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டுப்போன விக்ருதி இன்று புத்தாண்டுக் கோலமணிந்து மீண்டும் வருகை தருகிறது. இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட நிலையில் அன்றைய விக்ருதியில் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தால் சுவையாகவும் சிறிது வியப்பாகவும் கூட இருக்கலாம்.1950 ஏப்ரலில் விக்ருதி ஆண்டு வந்தபோது இந்தியக் குடியரசு பிறந்து பதினோரு வாரங்களே ஆகி இருந்தன. குடியரசுடன் நமது தேசப்படமே மாறிவிட்டிருந்தது. மத்தியபாரதம், விந்தியப்பிரதேசம், செüராஷ்டிரம், ராஜஸ்தானம் என்று பல புதிய ராஜ்யங்கள் (அப்போது மாநிலம் என்ற வார்த்தை இல்லை) உதயமாகி இருந்தன.ஆனால் சென்னை மாகாணத்தில், பெயரைத் தவிர, மாற்றம் ஏதுமில்லை. அதாவது மாகாணம் (பிராவின்ஸ்) இப்போது ராஜ்யம் என்றும் அதன் பிரதமர் (பிரிமியர்) குமாரசாமிராஜா இப்போது முதல்மந்திரி என்றும் அழைக்கப்பட்டதும்தான் மாற்றம்.சென்னையின் பிரதம காரியதரிசி (முதன்மைச் செயலாளர்) மட்டுமல்லாது ஜில்லா கலெக்டர்கள் (மாவட்டம் வர இன்னும் இருபதாண்டுகள் இருந்தன) கூட ஐ.சி.எஸ். அதிகாரிகள்தான். ஐ.ஏ.எஸ். என்ற குழந்தைக்கு இரண்டு வயதுகூட நிறையாத பருவம். போலீஸ் இலாகாவின் தலைவர் ஐ.பி. (ஐ.பி.எஸ். அல்ல) என்ற ஆங்கிலேயர் கால சர்வீûஸச் சேர்ந்தவர். டி.ஜி.பி. என்று ஓர் உத்தியோகமே அப்போது கண்டுபிடிக்கப் படவில்லை. ஐ.ஜி. அந்தஸ்தில் கூட ஒரே ஒருவர்தான் இருக்க முடியும்.மத்திய அரசாங்கத்தில் கூட அன்று போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்தான் தபால்-தந்தி இலாகாவுக்கு மாகாணத் தலைவர். (சி.பி.எம்.ஜி. என்று எவரும் இருக்கவில்லை). ஜெனரல் என்றாலே அப்படித்தான் அர்த்தமாம். முப்பதாண்டுகளுக்குப் பின்னால் எப்படியோ இதெல்லாம் மாறிப்போயிற்று. ஹைவேஸ் இலாகா கப்பிக்கல்லுக்குப் பதில் தார்ரோடுகள் போட ஆரம்பித்தது இந்த ஆண்டில்தான். அன்று பள்ளிப்படிப்பு பதினோரு ஆண்டுகள். அதன்பின் கல்லூரி (இந்த வார்த்தை அப்போதுதான் வந்திருந்தது. கலாசாலை என்ற பெயர்தான் அதிகம் வழங்கியது). அதாவது இரண்டு ஆண்டு இண்டர்மீடியட், அதற்குப்பிறகு பி.ஏ. அல்லது பி.எஸ்ஸி. என்ற இரண்டாண்டுப் பட்டப்படிப்பு. ஆனர்ஸ் என்ற மூன்றாண்டுப் பட்டப்படிப்பு, எம்.ஏ.க்குச் சமமானது. நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் அதில் இடம் கிடைக்கும். பண்டித ஜவாஹர்லால் நேருதான் பிரதம மந்திரி. அயல்நாட்டு விவகாரம் அவரிடமும், உப பிரதம மந்திரி சர்தார் பட்டேலின் பொறுப்பில் உள்நாட்டு விவகாரமும் இருந்தன.இந்தியா என்ற வண்டியை ஓட்ட இவ்விருவரையும் ஜோடிக்குதிரைகள் போல மகாத்மா காந்தி ஏற்படுத்தியிருந்தார். விக்ருதி ஆண்டில் நிகழ்ந்த பேரிழப்பு பட்டேலின் மரணம். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கொண்டாடப்பட்டவர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைத்து தேசத்தின் ஐக்கியத்தைச் சாதித்தவர், இந்தியாவின் பிஸ்மார்க் என்று அவருடைய அரிய சாதனையை எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள். சர்வதேச அரசியல் திடீரெனச் சூடு பிடிக்கலாயிற்று. சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கும் (ஜனாதிபதி ட்ரூமன்) சோவியத் ரஷியாவுக்கும் (சர்வாதிகாரி ஸ்டாலின்) நடைபெற்றுவந்த பனிப்போர் திடீரென்று கிழக்காசியாவில் கொரியா என்ற குட்டி தீபகற்பத்தில் நிஜமான யுத்தமாக வெடித்தது விக்ருதி ஆண்டில்தான்.சொல்லப்போனால் இரு உலக வல்லரசுகளுக்குமிடையே நடந்த பலப்பரீட்சை, சில மாதங்களுக்கு முன்னர்தான் சீனாவில் தேசியவாதிகளுக்கும் (சியாங்-கை-ஷேக் என்ற பெயர் ஞாபகமிருக்கிறதா) கம்யூனிஸ்டுகளுக்கும் ஆண்டுக்கணக்காக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிந்திருந்தது. மாபெரும் வெற்றிபெற்ற மாவோ, சீனாவின் முடிசூடா மன்னராகி இருந்தார். அவரும் ஸ்டாலினும் கைகோர்த்து நிற்க இப்போது வட ஆசியா முழுதும் கம்யூனிஸ்டு கோட்டையாய் இருந்தது. கொரிய தீபகற்பத்திலும் வடபகுதியில் கம்யூனிஸ்டு ஆட்சி.சின்னஞ்சிறு தென் கொரியா மட்டும் இன்னும் வெளியே, அதுவும் அமெரிக்க செல்வாக்கில், இருந்தது மாஸ்கோ-பீக்கிங் (இன்றைய உச்சரிப்பு பெய்ஜிங்) கூட்டின் கண்ணை உறுத்தியது. விளைவு, அவர்களின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டிருந்த வட கொரியா, தென் கொரியா மீது திடுமெனப் படையெடுத்து வெகுவேகமாக முன்னேறியது. உடனே அமெரிக்கா ஐ.நா.சபைக்குச் செல்ல, அதன் தீர்மானத்தின்படி ஒரு சர்வதேசப் படை (90 அமெரிக்கப்படை) கொரியாவில் வந்திறங்கி வட கொரியாவுக்குள்ளேயே முன்னேற சீனா நேரடியாகவே சண்டையில் குதித்தது. யுத்தப்பிரகடனம் ஏதுமில்லாமல் நடந்த இந்த யுத்தம் அடுத்த மூன்று ஆண்டுகள் நீடித்து யாருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்ததென்பது பின்னாள் கதை.அந்த யுத்தத்தால் அளவுகடந்த சேதத்தை அனுபவித்த தென் கொரியா அந்தக் காரணத்தாலேயே பின்னால் வரலாறு காணாத செல்வமும் செழிப்பும் அடைந்தது என்பது ஒரு சரித்திர முரண்.எப்படி நடந்ததென்றால், அதன் புனர்நிர்மாணத்துக்காக அப்போது குபேர நாடாக இருந்த அமெரிக்கா, பணத்தைக் கொண்டுபோய்க் கொட்டியது. யானை விழுந்தால் எழுந்து நிற்பது கஷ்டம், பூனைக்கு சுலபம் என்பார்கள். தென் கொரியாவோ சின்னஞ்சிறு நாடு. கொரியர்கள் கடின உழைப்பாளிகள், நல்ல வேலைத்திறமை உடையவர்கள். (இதற்கு, அவர்களை அரை நூற்றாண்டு ஆண்ட ஜப்பானியரின் பாதிப்பும் காரணம்).இந்த நிலையில் அவர்கள் கிடுகிடுவென்று முன்னேறி இன்று உலகச் சந்தையில் ஆகட்டும், உலக சினிமாவில் ஆகட்டும், தங்களுக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமில்லைதான். நேர்மாறாக, அதே மக்களைக் கொண்ட வட கொரியாவைச் சரித்திரம் சதி செய்துவிட்டது.இன்றைய ஒரே இரும்புத்திரை நாடாக அது அகில உலகத்திலிருந்தும் தனிப்பட்டுப் போய் ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தில் நசுங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பின்னால் வெகுவாகப் பாதித்த ஒரு விக்ருதி ஆண்டு நிகழ்வு சீனா கிழக்கு திபெத் மீது படையெடுத்தது.திபெத்தின் பழையகால ராணுவம் சுலபமாக முறியடிக்கப்பட்டு சுமார் 5000 வீரர்களையும் இழந்தது. சீனர்கள் தலைநகர் லாஸôவை நோக்கி முன்னேறவுமில்லை, தங்கள் ஊருக்குத் திரும்பவுமில்லை. சமாதானமாக சரணடையுமாறு அப்போது இளைஞரான தலாய்லாமாவுக்கு நெருக்கடி கொடுக்கலாயினர்.நாற்பதாண்டு முந்திய சீன-பிரிட்டிஷ் இந்திய-திபெத் முத்தரப்பு ஒப்பந்தப்படி திபெத்தின் நடுநிலைமையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நிலையில் திபெத் தன்னைக் காப்பாற்றுமாறு இந்தியாவை இறைஞ்சியது. இமயமலை நாடான திபெத் முற்றிலும் இந்தியாவாலும் சீனாவாலும் (நேபாளத்தாலும்) சூழப்பட்டிருப்பதால் பாரதத்தையன்றி அவர்களுக்கு வேறு யாரும் உதவ வழியில்லை.அதேசமயம் பலம் வாய்ந்த சீனாவின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நேரு தயங்கினார். சுதந்திர திபெத் இந்தியாவுக்கு அவசியமான பாதுகாப்பு அரண், அங்கே சீன ஆதிக்கம் வந்தால் அடுத்தது நமது இமாலய எல்லைக்கே சீனாவிடமிருந்து ஆபத்து வரும் என்று விளக்கி, நேருவுக்கு ஒரு நீண்டகடிதம் அனுப்பினார் சர்தார் பட்டேல். திபெத்துக்கு உதவியே ஆகவேண்டும் என்றார்.சீனா தன் பங்குக்கு, திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் உத்தேசமில்லை, திபெத்தின் உள் சுதந்திரமும் கலாசாரமும் பத்திரமாயிருக்கும் என்று நமக்கு உறுதியளித்துக் கொண்டிருந்தது. அதற்குள் சர்தார் காலமானார். உதவி ஒன்றும் வராத நிலையில் கர ஆண்டின் (1951-52) தொடக்கத்தில் திபெத் சீனாவிடம் சரணடைந்ததும் சில ஆண்டுகளில் சீனர்கள் நமது லடாக்கில் ஊடுருவி அக்சாய்-சின் சாலை போட்டுக் கொண்டதும் அதை நேரு அரசு தட்டிக்கேட்டதைத் தொடர்ந்து சீன-இந்திய யுத்தம் (1962) மூண்டதும் பிற்காலக் கதைகள்.
கருத்துக்கள்

தினமணி ஆசிரியர் குழுவில் உள்ளவரால் எழுதப்பட்டகட்டுரையா? குழப்புவது என்ற முடிவிற்கு வந்து விட்டீர்கள்; போகட்டும்! நல்ல நடையிலாவது எழுதக் கூடாதா?அதுதான் போகட்டும்! தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்பதைத்தினமணி ஏற்கவில்லையா? தினமணி தெளிவாக எழுதினால்தான் வாசகர்களும் தெளிவாக இருக்க முடியும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/14/2010 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *