வியாழன், 2 டிசம்பர், 2010

இலண்டனில் இராசபட்ச உரை நிகழ்ச்சி நீக்கம்

புகழ் வாய்ந்து (famous ) விளங்குபவர்களுக்கும் இகழ்வாய்ந்தவர்களுக்கும் (notorious )  வேறுபாடு தெரியாமல் அழைக்கும் பல்கலைக்கழகம் என்ன பல்கலைக்கழகமோ? இதில் வேறு வருத்தத்துடன் நிகழ்ச்சியை நீக்கியுள்ளனர். இருப்பினும் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கும் மனித நேயர்களுக்கும் நன்றியும் பாராட்டும். கொலைகாரனைத் தப்ப விடாமல் பிடித்து உசாவினால் கூட்டுக் கொலைகாரர்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கும். அனைவரையும் நடுத்தெருவில் நிற்கவைத்து நாட்கணக்கி்ல் வெயிலிலும் மழையிலும் பனியிலும் வாட விட வேண்டும்.
பட்சேவின் கனவு சிதைந்த மகிழ்ச்சியில் இலக்குவனார் திருவள்ளுவன்
லண்டனில் ராஜபட்ச உரை நிகழ்ச்சி ரத்து

சென்னை, டிச. 1: இலங்கை அதிபர் ராஜபட்ச லண்டனில் வியாழக்கிழமை உரையாற்றுவதாக இருந்த நிகழ்ச்சியை ஆக்ஸ்போர்டு யூனியன் ரத்து செய்துவிட்டது.ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றுவதற்காக அவர் லண்டனுக்கு திங்கள்கிழமை சென்றார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளை மீறும் செயல்களில் ஈடுபட்டார் என்று ராஜபட்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் பிரிட்டனுக்கு அவர் மேற்கொண்ட பயணம் சர்ச்சையை கிளப்பியது.மனித உரிமை மீறலுக்காக அவரைக் கைது செய்ய வலியுறுத்தி பிரிட்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் சார்பாக லண்டனில் நாடாளுமன்றம் எதிரே புதன்கிழமை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்ற வரும்போது ராஜபட்சவுக்கு உரிய பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியான நிலையில், அவருடைய உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக யூனியன் தெரிவித்துள்ளது.உலக நாடுகளின் தலைவர்களில் பிரபலமானவர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் உரையாற்ற அழைப்பது ஆக்ஸ்போர்டு யூனியனில் வழக்கம். அந்த அடிப்படையில் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக யூனியன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.இலங்கை அதிபரின் பயணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடனும் தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீஸôருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு அளிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து காவல் துறையினர் எடுத்துரைத்தனர். எனவே இந்த உரை நிகழ்ச்சியை வருத்தத்துடன் ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது என ஆக்ஸ்போர்டு யூனியன் அறிவித்துள்ளது.தாங்கள் அரசியல் சார்பு ஏதுமின்றித்தான் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் யூனியனின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக