இப்படிப்பட்ட கொடுங் கொடுமைகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்புபவர்களைத்தான் சிங்கள இறையாண்மைக்கு எதிரான குற்றம் என நம் நாட்டு அரசுகள் சொல்கின்றன. நம் நாட்டில் நம் நாட்டுத் தலைவர்கள் பற்றி என்னவெல்லாமோ பேச உரிமை இருக்கிறது. ஆனால், கொடுங்கோலன் பற்றிக் கூறினால்அவனது உடந்தையாளர்கள் இறையாண்மைக்கு எதிரானது என அடக்கி ஒடுக்குகிறார்கள். இவர்களை யெல்லாம் குடும்பத்தினருடன் சிங்களப் படையினரிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த தண்டனையாக இருக்கும். இதற்குப் பிறகும் விடுதலைப்புலிகளையோ
மேதகு பிரபாகரன் அவர்களையோ தமிழ்த்தேசிய
உணர்வாளர்களையோ தாக்குபவர்கள் மனிதப பிறவிகள் அல்லர். மனித நேயம் மலரட்டும்! தமிழ் ஈழம் வெல்லட்டும்!
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, டிச.1: விடுதலைப் புலிகளுடன் போர் நடைபெற்ற காலத்தில், இலங்கை ராணுவம் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதிப்படுத்தும் வகையிலான விடியோவை சேனல்-4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டுள்ளது.இதனால், லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.சேனல்-4 தொலைக்காட்சி ஏற்கெனவே, இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த விடியோ போலியானது என இலங்கை அரசு கூறியது. அது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.இந்நிலையில், அதே காட்சியைக் கொண்ட புதிய விடியோவை சேனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அதில் சில ஆண்களை கண்களையும் கைகளையும் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சிக்குப் பிறகு, நிர்வாணமான நிலையில், ஏழு பெண்களின் உடல்கள் கிடக்கும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.இந்த விடியோவில் சுற்றி நிற்கும் வீரர்கள் பேசிக்கொள்வதை வைத்து, இறந்து கிடக்கும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியாவதாக சேனல் 4 தெரிவித்திருக்கிறது. சில வக்கிரமான காட்சிகளை ஒளிபரப்ப முடியவில்லை என்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் இந்த விடியோ முக்கிய ஆவணமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அந்தத் தொலைக்காட்சி கூறியிருக்கிறது.ராஜபட்ச நேற்று லண்டன் வந்தபோது, விமான நிலையத்தில் அவருக்கு எதிராக ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் பேச இருக்கும் நிலையில், இந்த புதிய விடியோ வெளியாகியிருப்பதும் அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள்
இந்தக் கொடுமைகளுக்கு காலம் பதில் சொல்லியே தீரும்...வாழ்க தமிழ்...மலர்க தமிழீழம்.
By அரையன் இராச இராசன்
12/1/2010 11:36:00 PM
12/1/2010 11:36:00 PM
எந்த தமிழ் இந்திய டிவி உம் இந்த கொடுமையை காட்டவில்லை ..நன்றி சனல் 4 .
By DBS
12/1/2010 10:14:00 PM
12/1/2010 10:14:00 PM
"சனல் போர் தொலைக்காட்சி கொடூரம் வக்கிரம் என்று சொல்லி முழுமையாக ஒளிபரப்பவில்லை அதிர்வு டாட் காம் இல் முழுமையாக பார்வையிடலாம் சிங்களவனுக்கு ஆயுதம் கப்பல் ராணுவம் தொழில் நுட்பம் ஐ நா சபையில் கண்டனம் வராமல் பாதுகாத்தது போலியாக உண்ணாவிரம் இருந்து போர் உக்கிரமாக நடக்கும்போது போர் முடிந்துவிட்டது என்று எம்தமிழ் மக்களை ஏமாற்றியது எல்லாவற்றிற்கும் நாம் தமிழ் நாட்டு தமிழர் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் அத்தோடு விட்டோமா அவன் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டு பொன்னாடை போர்த்திணோமே நாமெல்லோ இனமானத்தமிழர் " டாக்டர்
By வாணி குமார், uk
12/1/2010 9:42:00 PM
12/1/2010 9:42:00 PM
விடாதீர்கள் சகோதரர்களே, அவனை விடாதீர்கள், எதிர்ப்பை தெரிவியுங்கள், அவன் பயப்பட வேண்டும். தாய் தமிழகத்தில் இருக்கும் எங்களை நம்பாதீர்கள் நாங்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள், இங்கு இருக்கும் ஒரு தொண்டு கிழவனும் ஒரு குண்டு ராட்சசியும் சமாளிக்க துப்பு இல்லாமல் எங்கள் சொந்தங்கள் செத்த போதும் அழுகையை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாத அடிமாடுகள்... ஆகவே போராடுங்கள் அது ஒரு சுதந்திர நாடு,இந்திய போல் அடிமை நாடு அல்ல. என் சகோதரர்களே,சகோதரிகளே எங்களை மன்னியுங்கள் உங்களுக்கு நாங்கள் உபயோகப்படாமல் போய் விட்டோம். வீரப்புலிகள் பின்னால் செல்வது முன்னாள் பாய்வதற்கே! தமிழரின் தாகம் , தமிழ் ஈழ தாயகம் !!!
By மானமுள்ள thamilan
12/1/2010 6:30:00 PM
12/1/2010 6:30:00 PM
சனல் போர் தொலைக்காட்சி கொடூரம் வக்கிரம் என்று சொல்லி முழுமையாக ஒளிபரப்பவில்லை அதிர்வு டாட் காம் இல் முழுமையாக பார்வையிடலாம் சிங்களவனுக்கு ஆயுதம் கப்பல் ராணுவம் தொழில் நுட்பம் ஐ நா சபையில் கண்டனம் வராமல் பாதுகாத்தது போலியாக உண்ணாவிரம் இருந்து போர் உக்கிரமாக நடக்கும்போது போர் முடிந்துவிட்டது என்று எம்தமிழ் மக்களை ஏமாற்றியது எல்லாவற்றிற்கும் நாம் தமிழ் நாட்டு தமிழர் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் அத்தோடு விட்டோமா அவன் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டு பொன்னாடை போர்த்திணோமே நாமெல்லோ இனமானத்தமிழர்
By டாக்டர்
12/1/2010 6:07:00 PM
12/1/2010 6:07:00 PM
இது ஒன்னும் புதுசு இல்ல.பழைய காலங்களில் இப்படி நடந்ததால் தான் பிரபாக்ஹரன் அவதரித்தார்.அவர் விட்டுசெண்ட பனி மேலும் தொடரும்.வாழ்க தமிழ் ஈழம்.
By rajanbabu
12/1/2010 5:30:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/1/2010 5:30:00 PM