செவ்வாய், 30 நவம்பர், 2010

நளினியின் விடுதலையை அரசியலாக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்.

சட்ட விதிகளின் கீழ் முடிவெடுக்க ஒன்றை மனித நேயத்தின் அடிப்படையில் அணுகினால் தவறலல .  ஆனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கேற்ப அணுகுவது சட்டத்தை மதிப்பதாகாது. எனவே, சட்ட விதிகளுக்குஎதிராக இதில் தலையிடுபவர்களுக்கு நீதி மன்றம் தண்டனை விதிக்க வேண்டும்.  தண்டனை என்பது குற்றப்பின்னணி, குற்றச் சூழல் முதலான காரணங்கள் அடிப்படையில் முடி வெடுக்க்படுவது. முன்கூட்டி விடுதலை என்பது  சட்டத்தின் நோக்கம் தண்டனை அல்ல; மன்னிப்பதே என்னும் சட்ட அறத்தின் அடிப்படையில் முடிவெடுப்பது. இதனை அரசியலாக்கும் அனைவருக்கும்  நீதிமன்றம்  எச்சரிக்கை தந்து அதையும் மீறினால் தண்டிக்க வேண்டும். சட்டம் வாய்ப்பளிக்கும் முன்கூட்டி விடுதலை என்பது நளினிக்கும் மிகவும் பொருந்தும். எனவே சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அவர் உடனே அவர் விடுவிக்கப்பட்டு விதிகளுக்கிணங்க நன்னடததை அலுவலரின் ௩ ஆண்டு மேற்பார்வையில் வைக்க வேண்டும்.  நீதிக்குக் குரல் கொடுக்கும்  இலக்குவனார் திருவள்ளுவன்

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மனு

சென்னை, நவ.29: ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர். அன்பரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய நளினிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர், அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதனிடையே "கடந்த 19 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறேன். அதனால் என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் நளினியின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.இந்த நிலையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர். அன்பரசு, நளினிக்கு முன்கூட்டியே விடுதலை வழங்கக் கூடாது. நளினி முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரும் வழக்கில் என்னையும் சேர்க்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது:நளினியை மற்ற குற்றவாளிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ராஜீவ் காந்தி கொலையில் அவர் தன்னை விரும்பி ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஒருவர் மீது தவறாக இரக்கம் காட்டுவது என்பது நீதியை தடம்புரளச் செய்வதோடு, குற்றங்களைத் தூண்டவும் செய்யும். தவிர, அந்த சம்பவத்தில் ராஜீவ் காந்தி மட்டும் கொலை செய்யப்படவில்லை. அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆயுள் தண்டனை என்பது அந்தத் தண்டனை பெற்றவரின் வாழ்நாள் முழுவதற்கும் வழங்கப்பட்ட தண்டனை என்றும், சிறை விதிகளில் திருத்தம் கொண்டுவந்து அந்த கால அளவைக் குறைக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது.நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று எந்தவொரு அதிகார அமைப்பையும் கேட்க முடியாது. தவிர, அவ்வாறான நளினியின் மனுவைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு கிடையாது.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டாலும் கூட, அவர் இன்னும் இறக்கவில்லை என்று தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.இந்தச் சூழலில் நளினி முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரேயானால், அவர் அந்த இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து, நாட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தலைவர்களின் உயிர்களுக்கும் ஆபத்துகளை உண்டாக்குவார் என்று அன்பரசு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக