வெள்ளி, 3 டிசம்பர், 2010

எல்லைச் சிக்கல் இருதரப்பு உறவைப் பாதிக்காது: சீனா

ஏனெனில் இந்தியா எப்பொழுதும் தன் நாட்டு நிலம் பறிபோவதைப்பற்றிக் கவலைப்படாது. அதை மீட்கவும் முயலாது. அடுத்த நாட்டின் பாதுகாப்பு குறித்துத்தான் கவலைப்பட்டுப் பாதுகாப்பு வழங்கும். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
எல்லைப் பிரச்னை இருதரப்பு உறவை பாதிக்காது: சீனா


பெய்ஜிங், டிச. 2: இந்தியாவுடன் நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக இரு தரப்பு உறவுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக கடந்த 7 ஆண்டுகளில் 13 சுற்று பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது.இதில் இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனனும் சீன தரப்பில் அந்நாட்டு பிரதிநிதி தாய் பிங்குவோவும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருதரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "நியாயமான, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு விரைவில் ஏற்படும்' என கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக