வெள்ளி, 3 டிசம்பர், 2010

தமிழர் படுகொலையை முன் நின்று நடத்தியவர்கள் இராசபட்ச, பொன்சேகா

விக்கிலீக்சு மேலும் பல தகவல்களை வெளியிட வேண்டும். இவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்துத் தண்டனைகள் வழங்கப்பெற வேண்டும். இதன் நிறுவனத் தலைவரைச் சிறந்த மனச்சான்றின் குரல் எனப் பாராட்ட வேண்டுமேயன்றி உளவு பார்த்ததாகக் குற்றம்  சாட்டக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் படுகொலையை முன் நின்று நடத்தியவர்கள் ராஜபட்ச, பொன்சேகா


வாஷிங்டன், டிச.2: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் பல நாட்டுத் தலைவர்களின் போலி முகமூடிகள் கிழிந்து வருகின்றன.இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.இதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பாகிஸ்தானை சமாதானப்படுத்திய அமெரிக்கா: இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதால் அதிருப்தியடைந்த பாகிஸ்தானை அமெரிக்கா எவ்வாறு சமாதானப்படுத்தியது என்ற ரகசியத்தையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையினர் பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரியிடம் பேசியுள்ளனர்.அப்போது, ராணுவ ரீதியில் அணுசக்தியை பயன்படுத்த மாட்டோம் என்பது உள்பட பல நிபந்தனைகளுடன் தான் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் எனவே பாகிஸ்தான் அதிகம் கவலையடையத் தேவையில்லை. பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைந்த பின்னர் உங்களுடனும் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று அமெரிக்க அதிகாரிகள் ஜர்தாரியிடம் கூறியுள்ளனர்.தங்கள் நாட்டுடன் வணிக ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் ஜர்தாரியை வலியுறுத்தியுள்ளனர் என்பதையும் விக்கிலீக்ஸ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.இந்தியாவுடன் பேச ஜர்தாரி விரும்பவில்லை: இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு எதிராக ஜர்தாரி உள்ளார் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வீஸ் கியானி அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.2009 அக்டோபரில் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் அனி பீட்டர்சனை, பர்வீஸ் கியானி சந்தித்துள்ளார். அப்போது, இந்தியாவுனான அமைதி பேச்சு நடைபெறாதது குறித்து அனி பீட்டர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கு, இந்தியாவுடன் பேச்சு நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதிபர் ஜர்தாரிதான் இந்தியாவுடன் பேச விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் அமீத் சுஜா பாஷாவும் அப்போது உடன் இருந்துள்ளார்.ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளின் ஆதிக்கப்பகுதியான வஜிரிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பவதிலும் ஜர்தாரிதான் தாமதித்து வருகிறார் என்று அமெரிக்க தூதரிடம் கிலானி கூறியுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இந்த உரையாடலை விக்கிலீக்ஸ் கைப்பற்றி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக