தமிழர் நலனுக்காகச் சென்றிருந்தால் தமிழர்களின் சார்பாளர்களைச் சந்தித்திருப்பார்.சிங்கள நலனுக்காகச் சென்றவர் எப்படிச் சிங்களத் தலைவர் ஒப்புதல் இன்றி அவர்களைச் சந்திக்க இயலும்? இந்த உண்மையை வெளிப்படுத்திய வகையில் கிருட்டிணாவின் பயணம் வெற்றியே! உதவாக்கரை நாட்டில் வாழும் உத்தமர்கள் சார்பாக இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 29 Nov 2010 01:10:00 AM IST
Last Updated :
கொழும்பு நவ. 28: இலங்கையில் 4 நாள் சுற்றுப் பயணம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழர் தேசிய கட்சித் தலைவர்களை சந்திக்காமலேயே தில்லி திரும்பினார்.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுக் கட்சி என்று கருதப்படும் தமிழர் தேசிய கூட்டணி கட்சித் தலைவர்களை கொழும்பில் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மதியமும் சந்திப்பு நடைபெறவில்லை. அமைச்சர் கிருஷ்ணா அம்மன்தோட்டாவில் இருந்து நேராக கொழும்பு விமான நிலையம் சென்று அங்கிருந்து தில்லி திரும்பி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டதாக தமிழர் தேசிய கூட்டணி கட்சி எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரா தெரிவித்தார்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா 4 நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை இலங்கைக்குச் சென்றார். இரு நாடுகளிடையே 7-வது ஒத்துழைப்பு மாநாட்டையொட்டி அவர் கொழும்பு சென்றார். வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட உயர் நிலை குழுவும் உடன் சென்றது.போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுகுடியமர்வுப் பணிகளைப் பார்வையிடவும். தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு திட்டம் குறித்து இலங்கை அதிபரைச் சந்தித்து ஆலோசிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். அதுபோல் இலங்கையில் உள்ள தமிழர் கட்சிப் பிரதிநிதிகளை கிருஷ்ணா சந்தித்துப் பேசவும் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி வெள்ளிக்கிழமை அந்நாட்டு அதிபர் ராஜபட்சவைச் சந்தித்தார் கிருஷ்ணா. பின்னர் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார். அதுபோல் ராஜபட்சவின் சொந்த ஊரான அம்மன் தோட்டாவிலும் இந்திய துணை தூதரக அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். ரயில்வே கட்டுமானப் பணி உள்பட பல்வேறு திட்டங்களில் இரு நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தமிழர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை கிருஷ்ணா சந்திக்கவில்லை. இது தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக