wicky லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
wicky லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இராசபட்ச மீது போர்க்குற்றம்: விக்கிலீக்சு அம்பலம்

உலகறிந்த செய்தியைச் சொல்வது கமுக்கப்பொருளை அம்பலப்படுத்துவது ஆகாது. போர்க்குற்றவாளிகளுக்குத் துணை நின்ற பிற நாட்டுத் தலைவர்கள், பிற நாட்டு அதிகாரிகள், நடைபெற்ற ஊழல், பேரங்கள் முதலானவற்றையும் விக்கிலீக்சு வெளியிட வேண்டும். வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ராஜபட்ச மீது போர்க்குற்றம்: விக்கிலீக்ஸ் அம்பலம்



வாஷிங்டன், டிச.2: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.இதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள்

கருணாநிதி செய்த பாவத்திற்கு எந்த காலத்திலும் மன்னிப்பு கிடையாது .
By செந்தில்
12/2/2010 11:09:00 PM
இலங்கையின் ஜனாதிபதி போர்குற்றவாளி என்று சொல்வது யார்? அவர் மனிதகுலத்தின் துயர் துடைக்க வந்த புத்தரின் வாரிசு தமிழ்மக்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாய் ஆடுமாடுகளாய் கிடந்து துன்பத்தில் உழலுகிறார்களே என்ற பச்சாதாபத்தில் அவர்களை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்த உத்தமர் அவரை குற்றவாளி என்றால் பூமி தாங்காது இப்படித்தான் இந்திய அரசாங்கம் நினைக்கிறது இந்த எண்ணம் மாறுகின்றவரை யார் என்ன சொல்லியும் எதுவும் ஆகாது இதுதான் தமிழனின் தலைவிதி !
By யோகி ஸ்ரீ ராமானந்த குரு
12/2/2010 10:54:00 PM
இவனுக்கும் முசோலினி போல வளமான வாழ்வுகாத்துள்ளது... இலண்டனில் உள்ள எதிர்ப்பு கூட இங்கு இல்லையே... எந்த மொழியில் இவனை திட்ட மிக கேவலமான இழிசொற்கள் உள்ளது யாரவது சொல்லுங்களேன்... என்ன செய்வது வேறு எதுவும் செய்யமுடியவிள்ளையே....
By arun
12/2/2010 9:50:00 PM
இந்த செய்தியை தினமணியில் பார்த்துவிட்டு "மக்கள் தொலைகாட்சி" பார்த்தேன். "அங்காடி தெரு" என்ற நிகழ்ச்சி. அவர்களுக்கு தேவை திமுக உறவு. தேவையற்றது தொப்புள் கொடி உறவு. நன்கு கவனியுங்கள் இனி அவர்கள் இலங்கை அரசை மட்டுமே குறை கூறுவார்கள். தமிழக மற்றும் மத்திய உறவு தேர்தல் வரை இனிக்கும். அம்மையார் கட்சி வென்றால் "நான் ரசிகன்" என்று கூவிக்கொண்டே அங்கே ஓடி விடுவார்கள்.
By நல்லவன்
12/2/2010 9:16:00 PM
ஓட்டுக்கு பணம், அண்ணா சமாதியில் நான்கு மணி நேர உண்ணாவிரதம் இது போதும் தமிழக மக்களுக்கு தமிழின படுகொலையை மறைக்க என்று நிருபித்தவர் நம் தலைவர். விக்கி லீக்ஸ் என்ன உலக மக்களையே திசை திருப்புவார் நம் தலைவர்.
By தமிழன்
12/2/2010 9:15:00 PM
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டையில் இருந்தாலும் சரியே!(அல் குரான் -4;78)
By ilyas
12/2/2010 8:30:00 PM
தமிழக முதல்வருக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! உங்கள் தமிழினப் பற்று குறித்து கவிதையிலும் இலக்கியத்திலும் பார்த்து மகிழ்ந்தவன். ஆனால் இலங்கை தமிழன் கொல்லப்பட்ட பொது நீங்கள் நடந்து கொண்ட முறைகள் வெறும் கேலிக்கூத்து என்பதை நெஞ்சுக்கு நீதி எழுதிய உங்களுக்கே நன்றாகத் தெரியும். இன்று விக்கி லீக்ஸ் ராஜபக்ச ஒரு கொலைகாரன் என்று பகிரங்கமாக சொல்லிவிட்டது. இதற்கு துணையாக நின்ற உங்கள் டில்லித் தோழிகளும் தோழர்களும் குற்றவாளிகள் தான். அவர்களுடைய தயவில் வாழும் நீங்களும் குற்றவாளிகள் தான். நீங்கள் பார்க்காத பதவி, புகழ் இல்லை. இனிமேலாவது மனச்சாட்சியைத் தொட்டு நேர்மையாக இலங்கைத் தமிழனுக்கு எதையாவது செய்ய முடியுமா? பாவம் அவர்களை வைத்து ஏமாற்றி வாழ்வது ஒரு வாழ்க்கையா? மிகுதி நாட்களையாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கப் பயன்படுத்துவீர்களா? வேண்டாம் இந்த ஊழல் வாழ்க்கை. சோனியாவை திருப்திப்படுத்த பல ஆயிரம் தமிழர்களை காவு கொடுக்க உடந்தையாக இருந்தீர்கள். அதை நாமும் மறக்கின்றோம். மாறுவீர்களா?
By VIJI
12/2/2010 8:12:00 PM
எங்கள் தொப்புள்கொடி உறவே எங்களை கொடியவர்களிடம் இருந்து காப்பாத்து
By sasikumaran
12/2/2010 7:47:00 PM
இப்படி புலம்புவதால் என்ன பயன், ஒரு உயிருக்கு 10௦ உயிர் எடுக்க ஏன் இந்த ஈழத் தமிழர்க்கு தோன்ற வில்லை?
By thamizhan
12/2/2010 7:29:00 PM
RAJAPAKSE IS A WAE CRIMINAL MAN AMERICA IMMEDIATELY TAKE SERIOUS ACTION AGAINST RAJAPAKSE AND IMPOSE ECNOMIC BAN AND TAKE FAIR ENQUIERY IN WARCRIMES TO WORLD COURT KARUNANITHI MANMOHAN SONIA CHIDAMBARAM ALSO INVOLVE AND INDIRECT SUPPORT TO RAJAPAKSE TAMILNADU PEOPLE GIVE REPLY SHORTLY, NITHYANADHAM MUMBAI
By nithyanandham
12/2/2010 7:14:00 PM
வெட்கம் கெட்ட தமிழர்கள் நாம் , நமக்கு ஒரு தட்டுகெட்ட தமிழ் தலைவர்கள் , இந்த அரசியல் நாய்கள் காசு காசு என்று தமிழனையே கூறு போட்டு விற்கும் கூட்டம் , தரம் கெட்ட முதல்வர் அவரின் வாரிசுகள் ... தமிழனை பிச்சை காரனாகவே மாற்றி , வசியம் செய்து நாட்டையே சூறை ஆடி கொண்டிருக்கும் இவர்கள் காட்டில் aடை மழை பெய்கின்றது .. எப்போது நமக்கு சொரணை வரும் என்று தெரியவில்லை. தமிழனை தமிழன் தான் கெடுக்கின்றான் ..
By veera
12/2/2010 7:11:00 PM
THE SINGALAVA CRIMINALS SHOULD BE PUNISHED FOR THE TAMIL GENOCIDE. TAMIL ELLAM SHOULD BE LIBERATED FROM SINGALAVA DOGS. UNION INDIAN GOVT SHOULD BE ALSO ASHAMED FOR WELCOMING THESE MAN EATERS. LONG LIVE TAMIL ELLAM. LONG LIVE TAMIL.
By Paris EJILAN
12/2/2010 7:08:00 PM
இது அனைவருக்கும் தெரியும். தமிழக முதல்வருக்கும் தெரியும். புதியது அல்ல. இந்தியாவின் பெயர் வெளிவராமல் இருக்க இந்திய அரசும் ஊடகங்களும், முனைகின்றன. தமிழக் முதல்வர் ஜால்ரா அடிக்கின்றார். எந்த இலங்கைத் தமிழனும் கருணாநிதியின் பாவத்தை மன்னிக்கமாட்டான். கேவலமான வாழ்க்கை. காங்கிரஸ் - மு.க குட்டனி பற்றி செய்தி வரும். வெட்கம் இல்லாதவர்களுக்கு மானம் கெட்ட பிறவிகளுக்கு அரசியல் ஒரு கேடா?
By kannan
12/2/2010 6:58:00 PM
இனி யார் இனத்தைச் சொன்னாலும் என்ன பயன்? கருணா,இராசபட்ச,கருணாநிதி,சோனியா கூட்டணியால் மூன்று இலச்சத்திற்கும் மேற்பட்ட ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உலகம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது? மனித உரிமை பேசும் அறிஞர்கள் முடிவு கூறுவார்களா?
By VENDHAN
12/2/2010 6:50:00 PM
Rajapakse should resign on moral grounds for killing thousands of innocent Tamil people.
By ssk
12/2/2010 6:38:00 PM
இனி யார் என்னத்தைச் சொன்னால்தான் என்ன?கருணா,கருணாநிதி,சோனியா,இராசபட்ச கும்பல் திட்டம் போட்டு தமிழர்களைக் கொன்றுபோட்டுவிட்டதே! மனித நேயம்,மனித உரிமை என்பதெல்லாம் தான் செய்த தவறுகளை மறைப்பதற்குத்தான் போலும்!
By vendhan
12/2/2010 6:28:00 PM
ஐயோ! ராஜபக்ச அப்படியான மனிதன் அல்ல. அவர் குற்றவாளி என்றால் கலைஞ்சர் , சோனியா, முகர்ஜி, அவங்களுமா? ஐயோ. 40 000 தமிழர்கள் கொல்லப்பாட்டால் என்ன? அதுக்காக சோனியாஜி, மகிந்த அரசைக் கண்டிப்பதா? என்ன அநியாயமா இருக்கு? யாருமே கேக்கமாட்டிங்க்களா?
By kannan
12/2/2010 6:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

தமிழர் படுகொலையை முன் நின்று நடத்தியவர்கள் இராசபட்ச, பொன்சேகா

விக்கிலீக்சு மேலும் பல தகவல்களை வெளியிட வேண்டும். இவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்துத் தண்டனைகள் வழங்கப்பெற வேண்டும். இதன் நிறுவனத் தலைவரைச் சிறந்த மனச்சான்றின் குரல் எனப் பாராட்ட வேண்டுமேயன்றி உளவு பார்த்ததாகக் குற்றம்  சாட்டக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் படுகொலையை முன் நின்று நடத்தியவர்கள் ராஜபட்ச, பொன்சேகா


வாஷிங்டன், டிச.2: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச,அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் முக்கியக் காரணம் என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்கள் பலவற்றை கைப்பற்றியுள்ள விக்கிலீக்ஸ் அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் பல நாட்டுத் தலைவர்களின் போலி முகமூடிகள் கிழிந்து வருகின்றன.இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.இதில், இலங்கையில் போரின் போது அப்பாவித் தமிழர்கள் பலரும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அதிபர் ராஜபட்ச, அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது தம்பிகள், ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம். போரின் போது மனித உரிமைகளை மீறி, இலங்கை ராணுவத்தினர் செயல்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பாகிஸ்தானை சமாதானப்படுத்திய அமெரிக்கா: இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதால் அதிருப்தியடைந்த பாகிஸ்தானை அமெரிக்கா எவ்வாறு சமாதானப்படுத்தியது என்ற ரகசியத்தையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையினர் பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரியிடம் பேசியுள்ளனர்.அப்போது, ராணுவ ரீதியில் அணுசக்தியை பயன்படுத்த மாட்டோம் என்பது உள்பட பல நிபந்தனைகளுடன் தான் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் எனவே பாகிஸ்தான் அதிகம் கவலையடையத் தேவையில்லை. பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைந்த பின்னர் உங்களுடனும் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று அமெரிக்க அதிகாரிகள் ஜர்தாரியிடம் கூறியுள்ளனர்.தங்கள் நாட்டுடன் வணிக ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் ஜர்தாரியை வலியுறுத்தியுள்ளனர் என்பதையும் விக்கிலீக்ஸ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.இந்தியாவுடன் பேச ஜர்தாரி விரும்பவில்லை: இந்தியாவுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு எதிராக ஜர்தாரி உள்ளார் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வீஸ் கியானி அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.2009 அக்டோபரில் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் அனி பீட்டர்சனை, பர்வீஸ் கியானி சந்தித்துள்ளார். அப்போது, இந்தியாவுனான அமைதி பேச்சு நடைபெறாதது குறித்து அனி பீட்டர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கு, இந்தியாவுடன் பேச்சு நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதிபர் ஜர்தாரிதான் இந்தியாவுடன் பேச விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் அமீத் சுஜா பாஷாவும் அப்போது உடன் இருந்துள்ளார்.ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளின் ஆதிக்கப்பகுதியான வஜிரிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பவதிலும் ஜர்தாரிதான் தாமதித்து வருகிறார் என்று அமெரிக்க தூதரிடம் கிலானி கூறியுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இந்த உரையாடலை விக்கிலீக்ஸ் கைப்பற்றி வெளியிட்டுள்ளது.

வெள்ளி, 26 மார்ச், 2010

செம்மொழி மாநாடு இன்னும் 90 நாள்கள்: கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா தகவல் பக்க போட்டி



உ ​​லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு }​ தமிழ் விக்கிபீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான "விக்கிபீடியா தகவல் பக்கங்கள்' என்ற போட்டியை நடத்துகிறது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது.​ இந்த மாநாட்டுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இணைய மாநாட்டுக் குழுவுக்கு,​​ கான்பூர் ஐ.ஐ.டி.​ தலைவரான மு.ஆனந்தகிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.உறுப்பினராக கனிமொழி எம்.பி.,​​ அமைப்பாளராக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை,​​ ஒருங்கிணைப்பாளராக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டேவிதார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு:​​ கலை,​​ அறிவியல்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ விளையாட்டு,​​ வேளாண்மை,​​ சட்டம்,​​ இயக்குநர் மருத்துவம் ​(பிசியோதெரபி),​​ சித்த மருத்துவம்,​​ பல் மருத்துவம்,​​ செவிலியர்,​​ கால்நடை மருத்துவம்,​​ பல தொழில்நுட்பப் பயிலகம் என பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு,​​ தனியார்,​​ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ,​​ மாணவியர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.தமிழ் விக்கிபீடியா போட்டி:​​ தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் அமைய வேண்டும்.​ இனம்,​​ சமயம்,​​ அரசியல்,​​ தனிநபர் குறை,​​ வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு,​​ தமிழ் விக்கிபீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும்.தகவல் பக்கங்கள் ஏப்ரல் 30}ம் தேதிக்குள் நிறைவு செய்து http:​/​/​tamilint2010.tn.gov.in​ என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு http:​/​/​ta.wikipedia.org என்ற இணையதளத்தைப் பார்த்து வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.​ தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்களை உலகளாவிய தமிழ் விக்கிபீடியாவில் அமைக்கப்படும்.கேமரா,​​ லேப்-டாப் பரிசுகள்...:​​ இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு லேப்}டாப்,​​ எம்.பி.​ 3 பிளேயர்,​​ டிஜிட்டல் கேமரா ஆகியவைப் பரிசாக வழங்கப்படும்.

செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்!



தகவல் தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது.​ இதனால் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களைத் தமிழால் தொடர்புகொள்ள முடிகிறது.​ தமிழ்ப்பணிகள் தனியொருவர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து பலரும் இணைந்து குழுப்பணியாகச் செய்யும் நிலை உருவாகியுள்ளது.​ தமிழ் நூல்கள் மின்னூல்களாக மாறியதும்,​​ தமிழ் இதழ்கள் தேசம் கடந்த வாசகர்களைப் பெற்றதும் தமிழ் இணையத்தால் எனில் மிகையன்று.​ அச்சு ஊடகங்களில் இருந்த தகவல்கள் மின்னணு ஊடகங்களுக்கு வந்ததால் தகவல்கள் பலமுனை வசதிகளைக் கொண்டதாக மாறியது.​ ​அவ்வகையில் அச்சில் இருந்த அகரமுதலிகள் இணையத்தில் மின் அகரமுதலிகளாக மாறியதும்,​​ சொற்களுக்குப் பொருள்கள் என்ற நிலையிலிருந்து மாறி,​​ கூடுதல் தகவல்களைக் கொண்டதாக மலர்ந்தது ​(ஒலிப்புமுறை,​​ படங்கள்,​​ வரைபடங்கள்,​​ தொடர்புடைய சுட்டிகள்,​​ தொடர்புடைய பிறமொழிச் சொற்கள்).​ தமிழ் அகரமுதலிகள் பல இணையத்தில் மின் அகரமுதலிகளாக உள்ளன.​ அவற்றுள் ஒன்று விக்கிமீடியா நிறுவனத்தின் தமிழ் விக்சனரியாகும்.​ ​உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.​ விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன.​ அதாவது ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரவரிசையில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது.​ ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது.​ 2002 டிசம்பர் 12-ல் ஆங்கில விக்சனரி உருவானது.​ 172 மொழிகளுக்கான விக்சனரிகள் விக்கிப்பீடியா வழியாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.​ தமிழ் விக்சனரி இலக்கியம்,​​ இலக்கணம்,​​ அறிவியல்,தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்ச்சொற்களுக்கும்,​​ ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தருகிறது.​ ​தமிழ்மொழியில் உள்ள சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004-ல் தொடங்கப்பட்டது.​ தமிழ் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடக்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களாகவும் அதற்குரிய விளக்கங்களாகவும் உள்ளன.​ பலதுறை சொற்களாக இன்று விரிவுபெற்று காணப்படும் தமிழ் விக்சனரி 1,05,390 சொற்களைக் கொண்டு ​(23-2-2010) உலக அகரமுதலிகளில் 14-ம் இடத்தில் உள்ளது.​ ​தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.​ தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் ​(எ.கா.​ ஆங்கிலம்,​​ பிரெஞ்ச்,​​ ஜெர்மன்,​​ இந்தி,​​ மலையாளம்,​​ கன்னடம்)​ உள்ளன.​ ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது.​ தமிழில் ஒலிப்புமுறை தொழில்நுட்பம் முழுமை பெற்றால் தமிழ் விக்சனரியையும் ஒலிப்புமுறை கொண்ட வசதியுடைய மின் அகரமுதலியாக மாற்ற முடியும்.​ தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.தமிழ் விக்சனரியைப் பயன்படுத்த நேரடியாகத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் சென்று,​​ தமிழ் விக்சனரி என்ற தலைப்பை அழுத்தி அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து,​​ சொற்களுக்கு உரிய பொருள் அறியலாம்.​ அல்லது கூகுளில் சென்று ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சிட்டு,​​ தமிழ் என்று அருகில் அச்சிட்டால் நமக்குரிய தமிழ்ச்சொற்பொருள் விக்கிப்பீடியாவில் கிடைக்கும்.தமிழ் விக்கிப்பீடியாவை முறையாகப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று.​ நம்முடைய பயனாளி பெயர்,​​ கமுக்கக்குறியீடு உள்ளிட்டவற்றை வழங்கி,​​ கலைந்த எழுத்துகளை உற்றுநோக்கி,நம் மின்னஞ்சல் முகவரி வழங்கிப் பதிந்தால் நம் பெயரை ஏற்றுக்கொண்டு,​​ நமக்கு மின்னஞ்சல் வழி விக்கிமீடியா நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பும்.​ அம்மடலைத் திறப்பதன் வழியாக நாம்தான் கணக்குத் தொடங்கியுள்ளோம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.​ அதன் பிறகு விக்சனரி பக்கத்தில் புகுபதிவு செய்துகொண்டு நாம் விக்சனரியைப் பயன்படுத்தலாம்.​ புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச் செய்யலாம்.​ நம் கணிப்பொறியின் ஐ.பி.எண் விக்கிப்பீடியா தளத்தில் பதிவாகும்.​ எந்தக் கணிப்பொறியிலிருந்து திருத்தப்பட்டது என்ற விவரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.தமிழ் விக்சனரியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி மற்றும் புகழ்பெற்ற பதிப்பாளர்களின் அகராதிகள் மற்றும் தனியாரின் பங்களிப்பும் உண்டு.தமிழ் விக்சனரியை வளப்படுத்துவதன் வழியாகத் தமிழின் சிறப்பை உலகுக்கு அறிவிக்க முடியும்.​ இதற்குப் பேராசிரியர்கள்,​​ ஆசிரியர்கள்,​​ ஆய்வாளர்கள்,​​ மாணவர்கள்,​​ தமிழ் ஆர்வலர்கள்,துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் தேவையாக உள்ளது.விக்சனரி தன்னார்வலர்களால் உருவாக்கப்படுவது.​ எனவே தமிழார்வம் ஒன்றையே பற்றுக்கோடாகக்கொண்டு பணிபுரியும் தொழில்நுட்பம்,​​ பொறியியல்,​​ மருத்துவத்துறை சார்ந்த ஆர்வலர்கள் எழுதும் தமிழில் உள்ள பிழைகளை,வழுக்களை நீக்குவதில் தமிழறிந்தோர் முன்னிற்கலாம்.​ அதற்குரிய எளிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டால் இப்பிழை நீக்கப் பணியில் இணையலாம். நமக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்க விக்கி ஆர்வலர்கள் ஆர்வமாக இருப்பதால் நம் அறியாமையாலும் கவனக்குறைவாலும் செய்யும் சிறுபிழைகள் தொடர்பாகக் கவலைகொள்ளாமல் பணியாற்றலாம்.​ உலகெங்கும் பரவி வாழும் தமிழார்வலர்களும் விக்கி ஆர்வலர்களும் இவற்றை உடனுக்குடன் கண்ணில்பட்டதும் சரி செய்துவிடுவார்கள்.காப்புரிமை என்ற பெயரில் தமிழின் சொல்வளம்,​​ குடத்திலிட்ட விளக்காக ஒரு சிலரிடத்தில் இருக்கிறது.​ நிதியுதவி செய்யும் ஆதரவாளர்கள் இருந்தும்,​​ தரமாகத் தமிழில் தட்டச்சு செய்யப் பங்களிப்பாளர்கள் இல்லை.வளர்நிலையில் இருக்கும் தமிழ் விக்சனரிக்கு,​​ தமிழ் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்,​​ முனைப்பாகச் செயல்படுபவர் வேண்டும்.​ அத்தகையவர் தமிழ் விக்சனரியின் ஆலமரத்தடி என்ற பகுதியில் தங்கள் பெயரை,​​ மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்தால்,​​ பதிவு செய்தவருக்கு உரிய நேரத்தில்,​​ செய்ய வேண்டிய பணிகள் குறித்து குறிப்புகள் அனுப்பப்படும்.​ அதில் அவரவருக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப்பணி செய்யலாம்.​ தமிழ் விக்சனரி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தமிழ்வளம் காட்டும் களமாகவும் தளமாகவும் உள்ளது.
கருத்துக்கள்

விக்கி அகராதி பற்றி நல்ல அறிமுகக் கட்டுரையை அளித்துள்ளார். பாராட்டுகள். விக்சனரி என்பதைத் தமிழில் குறிப்பிடுவதுடன் மேலும் பிற சொற்பட்டியலையும் இதில் சேர்க்க வேண்டும்; சொல்வங்கி போன்ற முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும். விக்கி நிறுவனத்தின் இணைய ஊடகப் பணி சிறக்கட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்