சென்னை, ஆக.23: மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தொல்பொருள் ஆய்வுச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதால் அதை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க தொல்பொருள் ஆய்வுத் துறை உருவாக்கப்பட்டு, தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. ஆனால், இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்தவர்கள்தான் பாதுகாத்து வந்தனர்.அப்படிப் பாதுகாத்த மக்களை, அவர்களது வாழ்விடங்களில் இருந்து அகற்றி, உள்நாட்டு அகதிகளாக மாற்றுகின்ற வகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு புதிதாக ஒரு தொல்பொருள் ஆய்வுச் சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளது. இச்சட்டம் குறித்து, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க அளவில் விளம்பரப்படுத்தி உள்ளது.புதிய சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இருந்து 1000 அடி வரை எந்த கட்டுமானமும் கட்ட அனுமதி இல்லை. மீறுவோருக்கு ஒரு லட்சம் அபராதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை.குடும்பத்தினர் எண்ணிக்கை பெருகி இட நெருக்கடி ஏற்படும் நிலையில் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ, கூடுதல் அறையோ, தாழ்வாரமோ, கழிப்பு அறையோ கட்டினால் கூட இச்சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளரும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள்.ஏற்கனவே வாழ்ந்து வரும் வீடுகள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு இருப்பின், அவற்றை இடிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் புதிதாக மின் இணைப்புகள் இனி வழங்கப்பட மாட்டாது.இந்தப் புதிய சட்டம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கு வழங்கப்பட்டு உள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதுமீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மீனவ மக்கள் கிளர்ந்து எழுந்து போராடியதைப் போல, தொல்பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்து உள்ள சட்டத்தையும் எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 6:30:00 PM
8/23/2010 6:30:00 PM
By Kumar
8/23/2010 4:56:00 PM
8/23/2010 4:56:00 PM
By ASHWIN
8/23/2010 4:43:00 PM
8/23/2010 4:43:00 PM
By தமிழன்
8/23/2010 4:30:00 PM
8/23/2010 4:30:00 PM
By MDMK தொண்டன்
8/23/2010 3:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/23/2010 3:49:00 PM