செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

விஜயகாந்திடம் கறுப்புப் பணம்: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை, ஆக. 23: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களுக்காகப் பெறும் சம்பளப் பணத்தில் பெரும் பகுதி, வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, கேள்வி-பதில் வடிவில் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என்றும், அவர்களோடு கூட்டணி கிடையாது எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறார். திமுக தலைவராக இருக்கின்ற நான் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதன் மூலம் வருகின்ற ஊதியம் முழுவதையும் வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்கி விடுகிறேன். சில நேரங்களில் அரசின் முதல்வரின் பொது நிவாரண நிதியிலும் அந்தத் தொகையைச் சேர்த்து வழங்கச் செய்திருக்கிறேன்.  கடந்த 2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்' திரைப்படத்துக்கு நான் திரைக்கதை, வசனம் எழுதினேன். அதன்மூலம் கிடைத்த ஊதியம் மற்றும் "கண்ணம்மா' படத்துக்கு கிடைத்த சம்பளம் ஆகியவற்றை சுனாமி நிவாரணத்துக்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நேரில் அளித்தார்.   அதுபோலவே, "உளியின் ஓசை' படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் வருமான வரி போக மீதியுள்ள தொகையை திரைத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கினேன்.   கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலமாகவும் இதுவரை 2 ஆயிரத்து 49 பேருக்கு  ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களுக்கு "கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை' மூலமாக  பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.   மேலும், | ஒரு கோடியை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்துக்கு வழங்கி, அதன்மூலம் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை வழியாக கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  "பெண் சிங்கம்', "இளைஞன்' போன்ற படங்களுக்கு கதை, வசனம் உள்ளிட்டவை எழுதியமைக்காகக் கிடைத்த தொகையில் வருமான வரி போக மீதியுள்ள தொகை அருந்ததியர் மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.   இதற்கெல்லாம் மேலாக, சென்னை கோபாலபுரத்தில் இப்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டை ஏழைகளுக்குப் பயன்படும் மருத்துவமனையாக மாற்றிட முடிவு செய்து அதற்கான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டு விட்டன. கறுப்புப் பணம்: இப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார். மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார். இந்த இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற விஜயகாந்த், ஒரு படத்திலே கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்.  அந்தப் பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவர் ஊழலைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக இருக்கிறது.கிரீன் பீல்டு விமான நிலையம்: ஸ்ரீபெரும்புதூர் "கிரீன் பீல்டு' விமான நிலையம் குறித்து தெளிவான விளக்கத்தை ஏற்கெனவே எழுதியிருந்தேன். தமிழகத்துக்கு வரக்கூடிய நல்ல திட்டங்களையெல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு ஒருசில கட்சிகள் எதிர்ப்பதால் நாட்டுக்கும், மக்களுக்கும் தானே இழப்பு.  தங்களின் ஆதரவோடு இந்தத் திட்டம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை என செய்தித்தாள்களில் பொது மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்தோடுதான் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

மிகு ஊதியம் பெறும் எல்லாக் கலைஞர்களுமே இரு கணக்கிலும் பணம் வாங்குகின்றனர். எனவே, கருப்புப் பணமோ வெள்ளைப்பணமோ அது உழைப்பிற்குத் த்ரப்படும் ஊதியம். ஊழல் பணமல்ல. ஆனால் பத்து விழுக்காட்டிற்கும் குறைவான வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு தானே தமிழகம் என்று சொல்லக்கூடாது. ஊழலின் மொத்த உருவமான காங்கிரசுடன் கூட்டணி வைக்க முயன்று கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லக்கூடாது. 2. பசுமைவெளி வானூர்தி நிலையம் தொடர்பான முதல்வரின் கருத்தை ஏற்று நாட்டு வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு வரவேற்பதே முறை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 2:52:00 AM
அடடே தமிழினதலைவரின் விளக்கம் பாத்து மெய்சிலிர்கிறது.மஞசள் பையுடன் கிராம்த்திலிருந்து வந்த ஏழை கருணாநிதியும் மகன்கள் ஸ்டாலின்,அழ‌கிரி,க‌னிமொழி எல்லாரும் சில ஆயிரம் சம்பளம் பெரும் மந்திரிகள்.அவ‌ர்க‌ள‌து ம‌க‌ன்க‌ள் எடுத்த் எடுப்பில் பல கோடி பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பது எப்படி? கலானிதி மாற‌னாவ‌து டிவி ஆர்ப்பித்து ப‌டிபடியாக‌ முன்னேறினார் என்ற சொல்லாம்.
By kalanithimaran
8/24/2010 2:03:00 AM
rajasji, what is your brahmin tradition? Cleaned the butt's of white people when they ruled this country. Now you cleaning the butt's of the lesbian ladies. You are talking the tradition of other people.
By ahamed
8/24/2010 1:53:00 AM
சினிமாவில் கூட அவன் கதையை மக்கள் ஏற்றுக் கொள்வதும் பொருட்படுத்துவதும் இல்லை ! இது புரியாமல் எதார்த்த வாழ்க்கையில் உண்மைக்கு புறம்பாக கதை விடுவதையே தொழிலாகக் கொண்டு தன சந்ததிகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தான் ! ஆக இன்று கதைவிடுவது இவனது குலத் தொழில் ! இதனை இன்று அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்து தெளிந்து விட்டார்கள் ! இனி இவனது அரசியல் வியாபாரம் தமிழ் நாட்டில் போணியாகாது !!! @ rajasji
By rajasji bengalore.
8/24/2010 1:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக