சென்னை, ஆக. 22: தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் துணைத் தலைவரும், நடிகருமான ஏ.கே.வீராசாமி (84) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.÷இவர், உன்னைப்போல் ஒருவன் (பழைய படம்) படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன், சிவாஜி கணேசனுடன் முதல் மரியாதை, கமலுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்.கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஏ.கே.வீராசாமி, ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.÷இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் ராயப்பேட்டை கிருஷ்ணாபேட்டை மயானத்தில் நடைபெறும்.
கருத்துக்கள்
துயரத்தில் பங்கேற்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/23/2010 4:40:00 AM