நாகர்கோவில், ஆக. 21: இந்தியாவிலிருந்து சிறப்புத் தூதரை அனுப்பிவைப்பதால் அவர் மூலம் என்ன உண்மை வெளியுலகுக்குத் தெரிந்துவிடப் போகிறது என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கேட்டார். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜீவா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 5 எம்.பிக்கள் தில்லிக்கு வந்து பிரதமரை சந்தித்து, இலங்கைத் தமிழர்கள் நிலைமை குறித்து விளக்கியுள்ளனர். சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியையும் சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடைபெறுகிறது. ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர் தமிழர் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரை அங்கு நிரந்தரமாகக் குடியேற்றம் செய்ய வீடுகள் கட்டும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன என்று அந்த எம்.பிக்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், இங்கிருந்து சிறப்புத் தூதரை அனுப்பி என்ன உண்மை தெரியவரும். ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கை அரசு இந்திய அரசின் தூதரை வரவேற்கிறது என்றால் அதன் பொருள் என்ன?இந்தியத் தூதர் வெளியிடும் அறிக்கை, ஐ.நா. குழுவை அனுமதிக்க மறுத்ததற்குப் பதிலாக காட்டப்படும். வேறு எதுவும் நடக்காது.காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளைத் தீர்க்க திமுக அரசு முற்றிலும் தவறிவிட்டது. தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் போன்றவற்றில் ஆளுங்கட்சியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் குடும்பங்களில் இருந்து ஏராளமான அதிகார மையங்கள் உருவாகி நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கிறார்கள்.அரசு நிர்வாகத்தில் தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக்கப்படவில்லை. ஆலயங்களில் தமிழ் இல்லை. நமது பள்ளிகளில் ஏறத்தாழ 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும், அனைத்து மக்களும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தனை பரவும் இக்காலகட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களைப் பின்னோக்கி தள்ளுவதாகும்.மக்களுக்குத் தொண்டாற்றுவோம் என்று நாடாளுமன்றத்துக்கு சென்ற எம்.பிக்கள், மக்களுக்காகப் போராடாமல் அவர்களது சம்பள உயர்வுக்காகப் போராடுவது அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.நாகர்கோவிலில் ஜீவா சிலையைப் பராமரிக்காமலும், அவரது பெயரை சாலைக்கு சூட்டாமலும் இருப்பது அனைத்துத் தமிழர்களுக்கும் வேதனையை ஏற்படுத்துவதாகும். கட்சிக் கண்ணோட்டத்தில் அவரைப் புறக்கணிக்க முயல்பவர்கள் தியாகத்தையும், தொண்டையும் புறக்கணிக்கிறார்கள் என்பதுதான் பொருள் என்றார் பழ. நெடுமாறன்.
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:30:00 AM
8/22/2010 5:30:00 AM
By மதுரைக்காரன்
8/22/2010 4:45:00 AM
8/22/2010 4:45:00 AM
By பூங்கொடி
8/22/2010 4:28:00 AM
8/22/2010 4:28:00 AM
By rajasji
8/22/2010 3:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/22/2010 3:38:00 AM