செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

விஸ்வநாதன் ஆனந்தின் இந்தியக் குடியுரிமை குறித்து சர்ச்சை


ஹைதராபாத், ஆக.24: உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் இந்தியக் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.விஸ்வநாதன் ஆனந்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக ஹைதராபாத் பல்கலைக்கழகம், மத்திய மனிதவள அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. அமைச்சகம்  அதற்கு அனுமதி வழங்காமல், விஸ்வநாதன் ஆனந்த் இந்தியக் குடியுரிமை பெற்றவரா என்ற கேள்வியை எழுப்பியது.தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த் சில ஆண்டுகள் ஸ்பெயினில் இருந்தார். இருப்பினும் இந்திய பாஸ்போர்ட்டையும் அவர் வைத்துள்ளார்.ஆனந்தின் பாஸ்போர்ட் நகலை ஒப்படைத்து, ஏராளமான விளக்கங்களை அளித்த பின்னரும், மனிதவள அமைச்சகம், டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான கோப்பை நிறுத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதையடுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழாவையும் ஒத்திவைத்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்தது.பல்கலைக்கழகத்தின் கணிதப் பேரவை சார்பில் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் பட்டத்தைப் பெற, முன்னதாக விஸ்வநாதன் ஆனந்த், தன் மனைவி அருணாவுடன் ஹைதராபாத் சென்றிருந்தார். ஆனால், பல்கலையின் இந்த அறிவிப்பால் வருத்தம் அடைந்து, இந்த டாக்டர் பட்டத்தை ஏற்கப் போவதில்லை என்று ஆனந்த் தெரிவித்தார். செய்தியைக் கேள்விப்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்,  நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், நாட்டுக்காக விளையாடி கௌரவம் தேடித்தந்த ஆனந்த் அவசியம் இந்தப் பட்டத்தைப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கருத்துக்கள்

இந்தியக் குடியுரிமையை உதறித் தள்ளிய கல்பான சாவ்லாவைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் தருகின்றனர்.தமிழ் நாட்டில் பிறந்து சதுரங்க ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்த ஆனந்தனுக்கு மதிப்புறு பட்டம் தந்து மதிப்பு பெற நினைக்கும் ஐதராபாத் பல்கலைக்கழகத்திற்கு இசைவு மறுப்பு. என்ன அளவுகோல் என்றே தெரியவில்லையே! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2010 5:36:00 PM
திரு விஸ்வ‌நாத‌ன் ஆன‌ந்த் முழுக்க‌ முழுக்க‌ டாக்ட‌ர் ப‌ட்ட‌த்துக்கு த‌குதியான‌வ‌ர் என்ப‌து என் க‌ருத்து என்றாலும் விசாரித்து கொடுப்ப‌தில் த‌வ‌றொன்ருமில்லையே. க‌ல்ப‌னா சாவ்லா இந்திய‌ரே அல்ல‌ ஆனால் அவ‌ர் பெய‌ரில் விருதே இருகின்ற்து. அவ‌ர் உயிருட‌ன் இருக்கும்போது த‌ன்னை இந்திய‌ர் என்று எப்பொழுதும் சொன்ன‌தில்லை. இது போன்று விசாரிப்ப‌தால் இந்திய‌ க‌வுர‌வ‌ டாக்ட‌ர் ப‌ட்ட‌த்தின் ம‌திப்பு உய‌ரும் சில் நாடுக‌ளில் சில் நூரு டால‌ர்க‌ள் கொடுத்தாலே டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் கிடைத்துவிடும். கோட‌ம்பாக்க‌ம் சினிமா கும்ப‌ளிட‌ம் போய் கேளுங்க‌ள் எந்த‌ எந்த‌ நாட்டில் எவ்வ‌ள்வு கொடுத்தால் டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் கிடைக்கும் என்று அவ‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள். ஆன‌ந் நீங‌க‌ள் அதை வாங்கி விருதுக்கு பெருமை சேருங்க‌ள் வாழ்த்துக்க‌ள். எம்.ஜே.அஜ்மீர் அலி
By M.J.AJMEERALI
8/24/2010 5:33:00 PM
There are thousands of honorary doctors in India who don't deserve it. They got it through political influence. Anand should not worry for missing it. Never come back to India where your talents are not respected.
By Siva
8/24/2010 5:31:00 PM
edhu vendumendra seidha sadhi ,enninil avar indiar endra andhusthavathu koduparkala enra iyam ezundhullathu.this is why our indian goverment should be responsible for the incident.The world is looking at this issues.This ia a shame for EMERGING INDIA in the world congress.
By nirmal kumar
8/24/2010 4:21:00 PM
Tamilan enraalae konjam ilappam than vadakkae ullavarkallukku
By sar
8/24/2010 4:18:00 PM
காங்கிரஸ்காரர்கள் இப்படி தான் கேள்வி கேட்பார். இத்தாலி இருந்து அங்கு பாரில் பணி புரிந்த சோனியாவை தலையில் வைத்துகொண்டு ஆடுவார்கள் வெட்கம் கெட்டவர்கள். நமது நாட்டிலேயே பிறந்து நமது நாட்டிலேயே வளர்ந்து போபோர்ஸ் போன்ற ஊழல் எதுவும் செய்யாத நமது நாட்டுக்கு பெருமை வங்கி கொடுத்த ஆனந்த் இப்படி தான் கேட்பார்கள். மானங்கெட்ட காங்கிரஸ். இதற்க்கு வேறு எதையாவது திங்கலாம் சோனியா சொன்னபின் தான் இதற்க்கு கூட ஒத்துபர்களோ
By Observer
8/24/2010 4:17:00 PM
Really an insult to the great Chess master and a Tamilian. Why dont our Tamil Nadu Universities not giving him Doctorate? Hope Our CM will read this article and do the necessary things qith out fail....
By Krishnan
8/24/2010 3:34:00 PM
It is really ridiculous.When Anand happens to be a world Champion,what prevents the Govt.from giving the honorary Degree to Anand?What is the necessity to consider his citizenship?He is an Indian holding only Indian Pass port.He resided in Spain only for some time.The Ministry people are creating unnecessarily a storm over the tea cup.
By K.Thirumalairajan
8/24/2010 3:26:00 PM
விஸ்வநாதன் ஆனந்த் என்ன எம். எஃப். ஹூசைனா, வெளிநாடுதான் என் நாடு என்று அறிவித்த பின்னாலும் டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு?
By bliss
8/24/2010 2:45:00 PM
9 ஆம் கிளாஸ் பாஸ் பண்ணாதவனெல்லாம் பல்கலைக் கழக மாணவனைக் கொலை பண்ணியாவது பட்டம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக டாக்டர் 'கொலை'ஞர் எனப் பட்டம் போட்டுக்கொள்கிறான்! அசந்து மறந்து அந்த ஓட்டைப் பட்டத்தை விட்டுவிட்டு நேரடியாக விளித்தால் என்னையா உண்மைப் பெயர் சொல்லி அழைப்பது என சீறுகிறார்கள். இவன்கள் மத்தியில் 'பட்டமே வேண்டாம்' என சொல்லும் இவர்போன்ற பிழைக்கத் தெரியாதவர்களும் இருக்காங்க!
By MANI
8/24/2010 2:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக