C.P.I. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
C.P.I. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 10 ஏப்ரல், 2012
செவ்வாய், 13 மார்ச், 2012
Without international investigation accused will become judge: CPI
Without international investigation accused will become judge: CPI
[TamilNet, Sunday, 11 March 2012, 22:25 GMT]The Tamil Nadu Assistant Secretary of the Communist Party of India (CPI), Mr C. Mahendran in an interview to Junior Vikatan this week, rejected a statement by the Marxist Communist Party (CPM) central committee member and parliamentarian, TK Rangarajan saying that there is no need for an international investigation on Sri Lanka. Mr Rangarajan’s statement has found opposition even inside his party. Commenting, Mahendran said, he was surprised and he didn’t understand that in what sense Rangarajan had made the statement. Rangarajan should realise that expecting Sri Lanka to conduct the investigations is like appointing the murderer as the judge to deliver justice, Mahendran said.
When the communist ideology argues for the right of even recalling elected representatives, Rangarajan rejecting the idea of conducting a referendum among Eezham Tamils, is contradictory and surprising, Mahendran said.
What is happening in Sri Lanka is a historically continuing genocide. Annihilation of the identity of Tamils is the long-term agenda of the Sinhala chauvinists. It started with the disenfranchisement of plantation Tamils immediately after the independence.
Tamils in the island have been fighting through peace means for 35 years and deploying militancy in the next 25 years, just for their fundamental political rights.
In the last days of the war alone, 40,000 were killed in a war without witnesses. How come Rangarajan, a parliamentarian, is unaware of it?
The argument that a genocide crime has to be resolved internally could never be accepted. The international organisations like the UN, International Court of Justice and the UNHRC have been created just to see no state should breach the limits. The international communist movement played an important role in the creation of these institutions.
One could come out with ample evidence to prove why Sri Lanka will not resolve the crisis. If every country were left to resolve issues domestically, many of them would go back to the times of savagery. TKR rejecting international option is surprising, Mahendran observed.
Why the CPM is on record for opposing the liberation of genocide-affected Eezham Tamils is a puzzle for many.
Those who theoretically explain the phenomenon cite its Stalinist orientation that favours Indian imperialist solutions rather than liberations inside and in the neighbourhood. They cite at the stand of the party on the North Eastern Frontier nations in India and on the war in the tribal belt.
But there are the others who cite at the social structure of the party that is paranoid especially at the national question of Eezham Tamils.
The CPM strongholds are in the states of West Bengal and Kerala in India.
In Kerala the undivided Communist Party came to power in 1957 itself.
After the Russia–China divide of 1960s, the CPM was long dominating the State of West Bengal. It was the ruling force that took up the issue of the liberation of Bengalis in Bangladesh in 1971.
People of Kerala in the long run will be much benefited and will find conducive milieu in the neighbourhood, if on their own they take an articulating stand supporting the universally righteous question of Eezham Tamils, revolting against their own elite in New Delhi and parties like the CPM, is a strong opinion in Tamil Nadu.
The CPM polity is very close to The Hindu establishment in Chennai, is widely known in the circles of political observers.
Chronology:
புதன், 10 ஆகஸ்ட், 2011
ஈழச்சிக்கல் - மாநிலங்கள் அவையில் விவாதம்
இந்தியப் பொதுவுடைமைக்கட்சி ,தமிழினப் பகைக்கட்சி. ஆதரவாளர்போல் நடித்து. ஒன்றுபட்ட இலங்கையில் தன்னாட்சி என்ற கருத்தை வலியுறுத்தித் தமிழ்ஈழ விடுதலையைத் தள்ளிப் போடச் செய்யும் சதிகாரக்கட்சி. எனினும் பிற கட்சிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திச்சிங்களத்தின் இனப்படுகொலைகளைப்பற்றி உலகறியச் செய்து மாநிலங்கள் அவையில் பதிவு செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
நான் இ.பொ.க. என மார்க்சியக் கட்சியை (சி.பி.எம்.) குறிப்பிட்டுள்ளேன்.
ஈழப்பிரச்சினை: மாநிலங்கள் அவையில் விவாதம்
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் கொண்டு வரப்படும் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்வரும் வியாழக்கிழமை விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக அறிவித்தல் விடுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா, விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மார்க்சிஸ்ட் சார்பாக டி.கே. ரங்கராஜன், பாஜக சார்பில் வெங்கைய நாயுடு, காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Short URL: http://meenakam.com/?p=32970
புதன், 3 ஆகஸ்ட், 2011
இலங்கைத் தமிழர்படுகொலை தொடர்பில் தொடர்ந்து மெளனம் ஏன்? டி.இராசா
First Published : 03 Aug 2011 02:46:22 AM IST
Last Updated :
சனி, 9 ஜூலை, 2011
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தில்லியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
இனப்படுகொலையைப் போர்க்குற்றம் எனச் சுருக்குவதும் தமிழ் ஈழ அரசிற்கு ஏற்பளிப்பது குறித்துக் கூறாததும் ஈழத்தமிழர்களின் இன்னல்களையும் அடிமை நிலையையும் புரிந்து கொள்ளாமல் போராடுவதைக் காட்டுகின்றது. எனினும் இந்த அளவிலாவது தில்லியில் பிறர் கவனத்தைக் கவரும் வண்ணம் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்குப் பாராட்டுகள். தமிழர் வரலாற்றையும் அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் புரிந்து கொண்டு தமிழ் ஈழ மலர்ச்சிக்கு அடுத்துப் போராடி வெற்றி காண வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
First Published : 09 Jul 2011 01:45:19 AM IST
Last Updated :
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
புது தில்லி, ஜூலை 8: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜூலை 8- ம் தேதி, இலங்கைத் தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நாடுதழுவிய அளவில் கடைப்பிடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டி. ராஜா பேசியதாவது: இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், ஜனநாயக உரிமைகள் கிடைக்கப்பெறவும், சிங்களரைப் போல தமிழர்களும் சரி சமமாக எல்லா உரிமைகளும் பெறவும் கடந்த 50 ஆண்டுகளாக நீண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அடுத்தடுத்து இலங்கையை ஆண்ட அரசுகள், தமிழர்கள் கோரிய உரிமைகளை வழங்காமல், வஞ்சகம் செய்தன. இது ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. பின்னர் நடந்த உச்சகட்ட போரில் சர்வதேச சட்டம், நெறிமுறைகளை மதிக்காமல் கொத்துக் குண்டுகளை வீசி 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான விடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் வேறெங்கும் நடக்காத போர்க்குற்றங்கள் இலங்கையில் நடந்தேறியுள்ளன. கடந்த 2009- ம் ஆண்டே போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டாலும், இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கைப் பிரச்னைக்கு அரசியல்ரீதியாக தீர்வு காண வேண்டும். இதற்கு இந்தியா உதவிட வேண்டும். ராஜபட்ச உள்ளிட்ட போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் ஜூன் 7- ம் தேதி நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வலியுறுத்தப்படும் என்றார் டி. ராஜா. இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி. லிங்கம், துணைப் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, துணைச் செயலர் அமர்ஜித் கெüர், தில்லி மாநில செயலர் தினேஷ் வர்ஷ்னேய் உள்பட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க.வினரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.வியாழன், 7 ஜூலை, 2011
இனப் படு கொலை புரிந்த சிங்களக் காடைகளைத் தண்டிக்க வேண்டும் பொதுவுடைமைக் கட்சியின் போராட்டம் வெற்றி பெற வைகோ வாழ்த்து
கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டம் வெற்றி பெற வைகோ வாழ்த்து
First Published : 07 Jul 2011 12:35:37 PM IST
Last Updated : 07 Jul 2011 12:38:48 PM IST
சென்னை, ஜூலை.7: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 8-ம் தேதி மேற்கொள்ளவிருக்கும் அறப்போராட்டம் வெற்றிபெற மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தீவில் ஈழத் தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜ பட்சவையும் இப்படுகொலையில் ஈடுபட்ட கொடியோரையும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், இலங்கை அரசுக்குப் பொருளாதார தடை ஏற்படுத்தவும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழகத்திலும், இந்திய நாடெங்கிலும் ஜூலை 8-ஆம் தேதி மேற்கொள்ள இருக்கும் அறப்போராட்டம் மகத்தான வெற்றி பெறவும், போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையில் மக்கள் ஆதரவு திரளவும் மதிமுக சார்பில்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
By பழனிசாமி T
7/7/2011 2:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 7/7/2011 2:36:00 PM
வியாழன், 2 செப்டம்பர், 2010
Last Updated :
கோவை, செப். 1: கம்யூனிஸ்டுகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கூறும் கருத்துகள் துரதிருஷ்டவசமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறினார். தமிழகத்திலும் மாவோயிஸ்டு தாக்குதல், வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்டுகள் திட்டமிட்டு வருவதாக கருணாநிதி குற்றஞ்சாட்டினார்.÷இதற்குப் பதில் அளிக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன், கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் தூண்டிவிடவில்லை. அவர்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தான் போராட்டத்தைத் தூண்டியுள்ளது. இப்படியிருக்க, கம்யூனிஸ்டுகளைப் பற்றி முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியுள்ள கருத்துகள் துரதிருஷ்டவசமானது. போராட்டம் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்துணவு ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் வேலைநிறுத்தம் அல்ல. அப்படியிருக்க முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்பது தேவையற்றது. கோரிக்கைகளுக்காக போராடுவது குற்றம் அல்ல; ஆனால் சத்துணவு ஊழியர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர். ÷அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், விடுவதும் முதல்வரின் கையில் இருக்கிறது. இப்படியிருக்க, அவர்களது போராட்டத்துக்காக கம்யூனிஸ்டுகளை பழிபோடுவது ஏற்புடையதல்ல. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பரிசாகவே ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில், அடித்தட்டு மக்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள்தான் எப்போதும் துணை நிற்கும். கம்யூனிஸ்டுகளையும், மாவோஸ்டுகளையும் ஒன்றுபடுத்தி முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் எவ்வித வன்முறையும் இன்றி ஜனநாயக முறைப்படிதான் நடந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பொதுக் கூட்டத்தில் திமுகவினர் கல்லெறிந்த சம்பவத்தையெல்லாம் அவர் மறந்துவிட்டார். இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் அது இல்லை, இது இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். திமுக அரசு செய்யாத நல்ல பல விஷயங்களை இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் கடைப்பிடிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மாவோயிஸ்டுகளைப் பற்றி நன்றாகவே தெரியும். அக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரே மாவோயிஸ்டுகளின் பேரணியை துவக்கி வைத்துள்ளதையும் முதல்வர் கருணாநிதி மறந்துவிட்டார். கம்யூனிஸ்டு கட்சிகளுடன் இதற்கு முன் திமுக கூட்டணி வைத்திருந்ததே, அப்போது கம்யூனிஸ்டுகள் பற்றி தெரியவில்லையா?. தனக்கும், தனது கட்சிக்கு எதிர்காலம் சாதகமாக இல்லை என்பதாலேயே இத்தகைய கருத்துகளை முதல்வர் கூறிவருகிறார். தமிழக முதல்வர் இனிமேல் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீதெல்லாம் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும்போதுதான் மாவோயிஸ்டுகள் உருவாக்கப்படுகின்றனர். நியாயமான கோரிக்கைக்காக ஜனநாயக ரீதியில் போராடிய சத்துணவு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். அகில இந்திய வேலைநிறுத்தம்...: தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் சார்பில் செப்.7-ல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டம் வெற்றி அடைவதோடு, வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய போராட்டமாக இருக்கும். யாருக்கும் கவலையில்லை...: குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் இடதுசாரிகள் கூட்டணி வைத்தன. அந்த செயல்திட்டத்தில் இருந்து விலகும்போதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டினோம். மக்களைப் பாதிக்கும் விஷயங்களைத் தடுத்து நிறுத்தினோம். இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு குறிக்கோள், கோட்பாடுகள் கிடையாது. மத்திய அமைச்சர்கள் ராசா, அழகிரி என யாராக இருந்தாலும் அவரவர் விரும்பிய போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கிடங்குகளில் இருக்கும் உணவு தானியங்களை பற்றாக்குறை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவின் இலங்கை பயணம் அங்குள்ள தமிழர்களின் நலனுக்குச் சாதகமாகவே இருக்கும் என்றார்.
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 5:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்9/2/2010 5:14:00 AM
நண்பர் கிருட்டிணராசு அவர்களே! உங்கள் பாராட்டிற்கு நன்றி. (தமிழனுக்கும் நன்றி.)ஆரியக் கருத்தைக் குறை கூறுவதால் ஆரியர்களை வெறுப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. ஆரியத்தைக் காப்பதற்காகச் சிலர் ஆரியம் என்பது வெள்ளைக்காரர்களால் கட்டிவிட்ட கதை என்கிறார்கள். அப்படியாயின் ஆரியம் குறித்த பல செய்திகள் சமற்கிருதத்திலேயே உள்ளனவே. தமிழ் உணர்வாளர் பாரதியார் கூட ஆரியமயக்கத்தால் வரலாற்றுப்பிழையாக ஆரிய நாடெங்கள் நாடே என்றார். ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முயற்சிகள் என்றார். உங்கள் கேள்விகளுக்கான விடைகளை முன்னரே தமிழறிஞர்கள் அளித்துள்ளனர். தமிழிய இதழ்களில் வந்துள்ளன. உங்களின் மின்வரியைத்தெரிவித்தால் நான் வாய்ப்பு ஏற்படும் பொழுது அவற்றைத் தெரிவிக்கின்றேன். வெள்ளையர்களை நானும் ஆரியன் நீயும் ஆரியன் என்று மயக்கி ஏமாற்றியவர்களைப் பற்றி அறிவீர்களா? தமிழ்நாட்டில் வாழும் ஒரு பகுதியினர் தங்களை ஆரியர்களாக எண்ணிக் கொண்டுதானே தமிழுக்கு எதிரான அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான சூழலில் ஆரியத்தை வெல்வதுதானே மனித நேயம் மிக்கவர்களின் கடமையாக இருக்க வேண்டும்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:39:00 PM
9/2/2010 4:39:00 PM
By Indian nation
9/2/2010 3:38:00 PM
9/2/2010 3:38:00 PM
By ம.கி.சந்திர மௌலீஸ்வரன்
9/2/2010 2:59:00 PM
9/2/2010 2:59:00 PM
By Abhishtu
9/2/2010 2:17:00 PM
9/2/2010 2:17:00 PM
By Tamilan In Qatar
9/2/2010 8:30:00 AM
9/2/2010 8:30:00 AM
By krishnaraj
9/2/2010 7:25:00 AM
9/2/2010 7:25:00 AM
By G Sankaran
9/2/2010 7:10:00 AM
9/2/2010 7:10:00 AM
வியாழன், 10 ஜூன், 2010
Last Updated :
புது தில்லி, ஜூன் 9: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண அந் நாட்டு அரசை வலியுறுத்த இந்திய அரசு தவறி விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா எம்.பி., தில்லியில் புதன்கிழமை கூறியதாவது: பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இலங்கை அதிபருக்கு, இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. ஆனால், அங்கு பல்வேறு இன்னல்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்தியா, இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அதுபோல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இது, தமிழர்களுக்கு மத்திய அரசு இழைக்கும் மற்றொரு துரோகம் என்றார் டி. ராஜா.
கருத்துக்கள்
இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவித்துக் கைம்மாறாக மேலும் சில ஒப்பந்தப் பரிசுகளை நல்கும் சந்திப்பு. அவ்வாறிருக்க தமிழர் நலன் எங்கே இடம் பெறும். நாம் நம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2010 3:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *6/10/2010 3:42:00 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)