சனி, 16 மார்ச், 2013

அலை பேசியால் புற்றுநோய்!







அலை பேசியால் புற்றுநோய்!

காது, மூக்கு ,தொண்டைக்கான சிறப்பு மருத்துவர், சையது சபீர் அகமது:
வரமாய் அமைய வேண்டிய, அறிவியல் தொழில்நுட்ப கருவிகள், இன்றைய இளைஞர்களின் முறையற்ற செயல்பாடுகளால், சாபமாக மாறுகின்றன. மொபைல் போன், "ஹெட்செட்' மூலம், அளவுக்கு அதிகமாக பேசுவது, பாட்டு கேட்பதால், புற்றுநோய் உருவாகிறது.மொபைலால் புற்றுநோய் வந்துள்ளது என, யாரும் ஆதார பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏனெனில், மொபைலின் ஆதிக்கம், இளைஞர்களிடம் தான் அதிகம் உள்ளது. அதுவும் கடந்த, 10 ஆண்டுகளாக தான் உள்ளது. குறைந்த வயது மற்றும் குறுகிய காலம் என்பதால், மொபைலால் ஏற்படும் புற்றுநோயை நிரூபிக்க முடியவில்லை.
மொபைலால் புற்றுநோய் உருவாகும் என, ஆதாரத்தோடு நிரூபிக்கும் நேரத்தில், புற்றுநோயின் தாக்கம், இளைஞர்கள் உட்பட அனைவரிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும்.

"ஐயனைசிங் ரேடியேஷன்' நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அறிவியல் கூற்று. மொபைலின், "நான் ஐயனைசிங்' கதிர் வீச்சு, புற்றுநோயை நேரடியாக உருவாக்காமல், "வெஸ்டிபுலர் ஸ்வானோமா' எனும் கட்டி மூலம், புற்றுநோயை உருவாக்கும்.காதுகள், வெறும் கேட்கும் திறனை மட்டும் கொடுப்பதில்லை; உடலின் சமநிலையை பராமரிக்கும் பணியை, காதில் உள்ள, "வெஸ்டிபுலர்' நரம்புகள் மூலம் செய்கிறது. பஸ், ரயில் போன்ற, இரைச்சலான பயணங்களில், நிம்மதி மற்றும் பொழுதுபோக்குக்காக, மொபைல் போன், "ஹெட்செட்' மூலம் பாட்டு கேட்பதால், காதில், வெஸ்டிபுலர் கட்டிகள் உண்டாகி புற்று நோய் உருவாகிறது.நிம்மதி, பொழுதுபோக்கு, தூக்கம் வர, அசதி நீங்க, புத்துணர்ச்சி பெற என, பல தேவைகளுக்காக, தொடர்ந்து பல மணி நேரம் பாட்டு கேட்பதால், அவர்கள் பெறும் இன்பத்தை விட, புற்றுநோய் மூலம், பல துன்பங்கள் காத்துள்ளன. குறிப்பாக, மொபைலில், குறைவான சார்ஜில் பாட்டு கேட்பது, இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மொபைலில் குறைந்த நேரங்களை செலவிட்டால், ஆபத்தை தவிர்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம்: செ.., எதிர்ப்பு







மேற்கு த் தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம்: செ.., எதிர்ப்பு


சென்னை: "மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைப்பது, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழுவை அமைத்து, அக்குழு மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையம் அமைப்பதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் கருத்தை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் கேட்கிறது. மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை அமைப்பது, சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்ற பெயரில், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். மாநிலங்களில் உள்ள வேளாண்மை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கு, ஆணை பிறப்பிக்கும் அமைப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குகின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, நிலம் மாநில அரசின் பட்டியலில் வருகிறது. இந்நிலையில், நிலத்தில் செய்யும் பணிகளுக்கு, மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என, நிர்பந்திப்பது, மாநில அரசின் அதிகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாகும். தமிழகத்தில் உள்ள இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்புக்கும், மலைப் பகுதிகள் மேம்பாட்டுக்கும், தனி விதிகளை வகுத்துள்ளோம். மேலும், மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை பின் பற்றியும் வருகிறோம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழு, வனத்தை பாதுகாக்க சிறப்பான திட்டங்கள் எதையும் பரிந்துரைக்கவில்லை.

தமிழக வனத்தை பாதுகாக்கும் வகையில், மூன்று புலிகள் காப்பகம், மூன்று தேசிய பூங்காக்கள் மற்றும் எட்டு வன உயிரின சரணாலயங்களைக் கொண்டு, உரிய சட்டங்களை பின்பற்றி வருகிறோம். இச்சூழலில், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ஆணையத்தை அமைப்பது, மேலும் ஒரு அதிகார மையத்தை உருவாக்கும் செயலே. வன பாதுகாப்பு என்ற பெயரில் தேவையற்ற அதிகார மையமாகவே இந்த ஆணையம் இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் மீதான கருத்துக்களை, தமிழக அரசு அமைத்துள்ள சுற்றுச்சூழல் வனத் துறையின் சிறப்புக் குழு அளிக்கும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டம் இடர்வினை ஆகும் முன் உரிய விடை தாருங்கள்





 



 மாணவர்கள் போராட்டம் இடர்வினை ஆகும் முன் உரிய விடை தாருங்கள்

இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர்.
தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூரி மாணவர்களின், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், தமிழகமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா கல்லூரிகளுமே, களத்திற்கு வரும் சூழ்நிலை காணப்படுகிறது. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில், தாக்கலாகியுள்ள தீர்மானத்தை, ஆதரிக்கும் முடிவை, மத்திய அரசு எடுக்க வேண்டும். இலங்கை மீது, நடுநிலையான விசாரணைக்கு வழி வகை செய்ய வேண்டும். இதன் மூலமே, மாணவர்களை அமைதிப்படுத்த முடியும். மத்திய அரசுக்கு, இதில், பொறுப்பும் கடமையும் உள்ளது. இந்த பிரச்னையில், தெளிவான உறுதியான பதிலை மத்திய அரசு தர வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், தமிழகம் எங்கும் கடும் விளைவுகள் ஏற்படுவது நிச்சயம். எதிர்காலத்தில் நடக்கப்போகும், விரும்பத்தகாத நிகழ்வுகளை, தடுத்து நிறுத்த வேண்டும் எனில், மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல், உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சிவா பேசினார்.
அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம், திருப்திகரமானது அல்ல. அதிலுள்ள அம்சங்கள் எல்லாமே, பெரிய அளவில், அழுத்தத்தை தரக்கூடியவை அல்ல. அத்துடன், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட, மேலும் வலு இல்லாதவைகளாக மாற்ற, பல சக்திகள் முயன்று வருகின்றன. பாரபட்சமற்ற வகையில், சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு குறைவாக எதையும் ஏற்க முடியாது. மேலும், அமெரிக்காவின் தீர்மானத்தை, இந்தியா ஆதரித்தால் மட்டும் போதாது. அந்த தீர்மானத்தை, வலுவான தீர்மானமாக மாற்ற வேண்டிய பொறுப்பும், மத்திய அரசுக்கு உள்ளது. கடந்த, 1960ம் ஆண்டுகளில், இந்தி மொழியை திணித்தபோது, தமிழகம் பற்றி எரிந்தது. மாணவர்களே, அப்போதும் களத்தில் நின்றனர். அந்த இந்தி எதிர்ப்பு போராட்டம்தான், தமிழகத்தில் காங்கிரசை இல்லாமல் செய்து விட்டது. இப்போதும், மாணவர்களே களத்திற்கு வந்துள்ளனர் என்பதை இங்குள்ளவர்கள் உணர்ந்தால் சரி. இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் பேசுகையில், ""தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பிரச்னையில், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் போராட்டத்திற்கு, மத்திய அரசு போதிய உறுதி மொழியை அளிக்க வேண்டும். எத்தகைய முடிவை, மத்திய அரசு எடுத்தாலும், அதற்கு முன், மாநில அரசையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்,'' என்றார். இறுதியாக பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜிவ் சுக்லா, ""எம்.பி.,க்களின் உணர்வுகளை, அரசு கவனத்தில் கொள்ளும். இந்த கருத்துக்கள் எல்லாம், வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். இதுகுறித்து, அறிக்கை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார். லோக்சபாவிலும், இதே பிரச்னைக்காக குரல் கொடுத்த தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு, ""அமெரிக்காவின் தீர்மானத்தை, மேலும் கூர்மையானதாக, இந்தியா மாற்ற வேண்டும். இல்லையெனில், விபரீத விளைவுகள் ஏற்படும்,'' என்றார். அ.தி.மு.க.,வின் தம்பி துரை, ""அமெரிக்காவை விட, இந்தியாவே இந்த விவகாரத்தில், முன்னின்று செயல்பட வேண்டும். இந்தியா சார்பில், அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர, மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.
விரைவில் இறுதி முடிவு: ""இலங்கை எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுபற்றி தீவிரமாக ஆய்வு செய்கிறது. இது முடிவு எடுக்கப்பட்ட உடன் சபையில் தெரிவிக்கப்படும்,'' என, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், ராஜ்யசபாவில் தெரிவித்தார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கைக்குப் பின், ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்த, சல்மான் குர்ஷித் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தீர்மானம் தொடர்பாக, என்ன நிலையை கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து, மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியது தேவையோ, அதை மத்திய அரசு எடுக்கும். போர்க் குற்றங்கள் தொடர்பாக, பாரபட்சமற்ற, சுதந்திரமான, ஒளிவுமறைவற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு குர்ஷித் கூறினார்.
- நமது தில்லிச் செய்தியாளர் -

அருவினை ஆற்ற ஊனம் தடையல்ல: முதல் இடம் பெற்றார் மாற்றுத்திறனாளி






அருவினை ஆற்ற ஊனம் ஒரு தடையல்ல: பல்கலை., முதல் இடம் பெற்றார் மாற்றுத்திறனாளி

கோவை: "சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்' என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர் ஒருவர். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - மல்லிகா தம்பதியர். இவர்களின் ஒரே மகன் சங்கர் சுப்ரமணியம், 26. பிறவியிலேயே 90 சதவீத பார்வை குறைபாடு உடையவர்; இரண்டு கால்களுக்கும் வளர்ச்சியில்லாமல், நடக்க முடியாது. பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது. பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாக தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்; எந்த விஷயத்தையும் எளிதில் மறந்துவிடாத, நுட்பமான ஞாபக சக்தி உண்டு. அதைவிட மேலாக, சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதி மனதில் உண்டு. இதுவே, சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றி வருகிறது. முழுமையாக பார்வை குறைபாடு இருப்போர், "பிரெய்லி' முறையில் படிக்க முடியும்; ஆனால், சங்கர் சுப்ரமணியத்துக்கு 10 சதவீத பார்வை இருக்கிறது; எனினும், பாட புத்தகங்களை படிக்க முடியாது; பிறரை வாசிக்கச் சொல்லி தான், இவரால் படிக்க முடியும். பாடங்களை மனம் பாடம் செய்து, "ஸ்கிரைப்' ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதி வருகிறார்.

கணுவாய் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு தேர்வில் 62 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். பாட புத்தகத்தை புரட்டாமல், பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தந்த பாடங்களை மனதில் பதிய வைத்தே, இவர் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார். தற்போது, சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பில், முதல் ரேங்க் வாங்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலையில் நடந்த விழாவில், கவர்னர் ரோசைய்யா தங்கப்பதக்கம் வழங்கி, சாதனை மாணவர் சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் அருகேயுள்ள காற்றாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். தாய், தந்தையின் தளராத ஊக்கமும், அரவணைப்பும், சிறப்பாசிரியர்களின் பயிற்சியும் சங்கர்சுப்ரமணியத்தை, படிப்பின் சாதனை படிகளில் ஏற வைத்துள்ளது. ""பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதே, எனது அடுத்த லட்சியம்,'' என்கிறார், சங்கர் சுப்ரமணியம்.

அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மல்லிகா கூறியதாவது: பிறவியிலேயே கால்கள் ஊனம், கண் பார்வை குறைவுடன் பிறந்ததால், குழந்தையை வளர்ப்பதும், படிக்க வைப்பதும் சிரமம் என கருதினோம். எனினும், அர்ப்பணிப்புடன் வளர்த்து வந்தோம். இன்று, அந்த குழந்தை சாதனை இளைஞனாக மாறி எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளான். முதலில், பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம்; பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். அங்குள்ள ஆசிரியர்களின் ஊக்குவிப்பு, சிறப்பு ஆசிரியர்கள் ரகுபதி ஐயர், பத்மநாபன் ஆகியோரின் பயிற்சி ஆகியவை, எங்கள் மகனின் திறமையை வெளியே கொண்டு வர மிகவும் உதவியது.

சங்கர் சுப்ரமணியத்துக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. கோவை அரசு இசைக்கல்லூரியில் குரலிசை பிரிவில் படிக்க "அட்மிஷன்' கிடைத்தது. பார்வை குறைபாடு மற்றும் கால் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, வாரம் இரு முறை மட்டும் வகுப்புக்கு வர தனிப்பட்ட சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், சுல்தான்பேட்டையில் இருந்து கோவைக்கு காரில் வர வேண்டும் என்றால், தினமும் 1,000 ரூபாய் செலவாகும் என்பதால், பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. எங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு வேலை அளித்து உதவ வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


முதல்வர் புலிக்குட்டிகளுக்கு த் தமிழ்ப் பெயர் சூட்டாமை


முதல்வர் புலிக்குட்டிகளுக்கு த் தமிழ்ப் பெயர் சூட்டாமை



கருத்துகள்(7)

தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பதாலும் தமிழ் மக்களின் கட்சித் தலைவராக இருப்பதாலும் தமிழ்ப் பெயர்களை சூட்டுவதே தமக்கு அழகு என்பதை முதல்வர் உணர வேண்டும். அணுக்கத்தில் இருப்போர் அதை உணர்த்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
நன்றி, திரு.இலக்குவனார் திருவள்ளுவன் நான் மனம் நொந்து போனேன்-புலிக்குட்டிகளின் பேர்களை பார்த்ததும்! ஜெநிவாவிலே (Geneva)ஈழதமிழர்கள் "அம்மா உங்களால் முடியும்" ( Ammaa You Can) என்று எழுதப்பட்டஅட்டைகளை தூக்கி சென்றார்களாம். பாவம்,.ஈழ உணர்வு இருந்தால், ஒரு புலி குட்டிக்காவது பாலச்சந்திரன் என்று பெயரிட்டிருக்கலாம் ! மேலும் நீங்கள் "அணுக்கத்தில் இருப்போர் அதை உணர்த்த வேண்டும்." என்று சொல்லியுள்ளீர்கள்.. எல்லாமே தெரிந்தா கலைஞர் தமிழை கை கழுவி விட்டார்.முதல்வர் செல்வி. ஜெயலலிதாவா தம்ழை வளர்க்க போகிறார்? எனினும் தங்களை பாராட்டும் வகையிலும் தங்களுக்கு ஊக்கம் தரும் வகையிலும் நானும் தங்களின் முழக்கங்களை பதிவு செய்கிறேன்சிறு மாறுதலுடன்: "தமிழே வாழ்க! தமிழே வளர்க! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/: " வெல்க தமிழினம் . வளர்க அவரின விழிப்புணர்வும் எழுச்சியும்!
நன்றி உங்களுக்கும் தமிழில் பெயர் சூட்ட  வலியுறுத்தும்   பிறருக்கும்.  தமிழே விழி! தமிழா விழி! என்பதில் முதலில் தமிழை நம் கண்விழியாக நினைவுபடுத்தி இரண்டாவது , கண்விழியைக் காப்பாற்றுவதில் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிப்பதாக அமைந்துள்ளது.
 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தமிழக முதல்வர் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமா? பெயர் அடுத்த மொழியில் இருப்பதனால் ஒன்றும் "தமிழ் பற்று" குறைந்துவிடாது. பெயரில் என்ன இருக்கிறது?...
திரு."கௌஷிக் சாஸ்த்ரி: "தமிழக முதல்வர் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமா?"- தேவையில்லை. ஆயினும் மொழி தாழ்வுற்று வரும் சூழ்நிலைகளில் ஒரு சிறு செயலும் நம்பிக்கையை ஊட்டும். . இன உணர்வை , பற்றை வளர்க்கும். "பெயர் அடுத்த மொழியில் இருப்பதனால் ஒன்றும் "தமிழ் பற்று" குறைந்துவிடாது." -பொது வாழ்வில் முன்நிற்பவர்கள் அனைவராலும் கவனிக்கபடுகிறார்கள். தமிழில் பெயர் வைத்து முன்னுதாரணமாக இருக்கலாமே.? " பெயரில் என்ன இருக்கிறது ?"- அது இனபற்றை, மொழி பற்றை வெளிக்காட்டும் ஒருவழி.. தமிழ் நாட்டு முதல்வர் தமிழ் நாட்டில் உள்ள மிருக காட்சி சாலையில் சிறு புலி குட்டிகளுக்கும் கூட நல்ல தமிழ் பெயர்களை சூட்டீருந்தால் அவர் தற்போது அமர்ந்துள்ள தமிழ் நாடு முதல்வர் என்ற பதவிக்கு மிகவும் மதிப்புகூடியிருக்கும் . .
அனைத்து மொழிகளையும் அரவணைத்து செல்வதே தமிழ் மக்களின் அழகு. "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழியை தன் செயல்பாடு மூலம் உறுதி செய்து வரும் முதல்வர் ஒரு மஹா நிர்வாகி. இராசாராமன் வெ இராமன் ஹைதராபாத்
"அனைத்து மொழிகளையும் அரவணைத்து செல்வதே தமிழ் மக்களின் அழகு."- இருக்கட்டும். ஆனால் பிற மொழிகளின் ஆதிக்கத்தால் நம் தொன்மை மொழி அடிமைபட்டுவிட கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இறுதியில் வழக்கொழிந்து விட கூடாது! தமிழ் நாட்டில் தனித்தமிழ்இயக்கம் தோன்றி இருக்காவிடில்- திருமண அழைப்பு கூட "விவாக சுப முகூர்த்த பத்திர்க்கை -யாகத்தான் இருந்திருக்கும். சிரஞ்சீவி, சவுபாகியவாதி, கண்சிஹ்ட குமாரன் கனிஷ்ட குமாரத்தியே புழகத்திலிருந்தது வந்திருக்கும்,.
பாலச்சந்திரன் என்பதும் சமஸ்க்ரித சொல்லே. மொழியில் ஒன்றும் இல்லை. தமிழன் தன்னுடைய கடின உழைப்பிலும் , மனித நேயத்திற்கும், கடவுள் பக்திக்கும், தேசப்பற்றிர்க்கும், வீரத்திற்கும் யாருக்கும் சளைத்தவன் அல்ல.
 
 
 

மத்திய அரசில் நீடிப்பது குறித்த கலைஞரின் எச்சரிக்கை நாடகமா?



இவ்வறிப்பு குறித்து மகிழ ஒன்றும் இல்லை. காரணம் கலைஞர் மத்திய அரசில் பங்கேற்பதிலிருந்து நடத்தும் நாடகங்கள்தாம். இதற்குக் காரணங்கள் இரண்டாக இருக்கலாம். ஒன்று, முன்புபோல்  மத்திய அரசு தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவிப்பதாக இருந்து அதை அறிந்து எச்சரிப்பதுபோல் வீர உரை பேசுவது. இந்தியா ஆதரிப்பது என்ற போர்வையில் தீர்மானத்தை முன்புபோல் நீர்க்கச் செய்யும் என்பது அறிந்ததுதான். அது குறித்து எதுவும் கவலைப்படப்  போவதில்லை. இரண்டு,  வழக்குகளில் இருந்து தம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக விடப்படும் மிரட்டலாக இருக்கலாம். இரண்டும் இல்லை என்றால்  சில மணி நேர உண்ணா நோன்பு நாடகத்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயச் சூழலையும் மத்திய அரசின் இன அழிப்புப் பங்கேற்பையும் வெளிப்படையாகக்  கூறித் தமிழ் மக்களிடம் தாம் வாய்மூடி இருந்து கட்சியின் வாயையும் கட்டிப்போட்டதற்கு மன்னிப்பு கேட்பதுதான்.  என்ன செய்வது? இரண்டாம் முசிபூராக இருந்தவர் இரண்டாம் மன்மோகனாக மாறிவிட்டாரே! வருத்தத்துடன்  இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


திருத்தம் செய்யாவிடில் மத்திய அரசில் இனிமேலும் நீடிப்பது அர்த்தமற்றது: கருணாநிதி எச்சரிக்கை!


அமெரிக்க அரசின் தீர்மானத்தில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையும், திருத்தமும் மேற்கொள்ளப்படாவிடில் இந்த அரசில் இனிமேலும் நீடிப்பது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசு கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறித்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வ தேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. வின் சார்பில்
வலியுறுத்துகிறோம்.
இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவை யிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெள்ளி, 15 மார்ச், 2013

மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்

மத்திய அரசிற்குப் பாராட்டுகள். கண் துடைப்பாக அல்லாமல் அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். கட்சி வேறுபாடின்றிப் போராடிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள். இது குறித்து மடல் எழுதிய முதல்வருக்கும் பாராட்டுகள். உடனே அவர் தமிழகத்  தேர்வாணையத்திலும் தமிழுக்கு முதன்மை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வி அமைய ஆவன செய்ய வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்





மத்திய அரசுப் பணியாளர் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வு முறையில் மாநில மொழிகளைப் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இன்று காலை முதல் 3 முறை மக்களவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் முடங்கியது. இந்த நிலையில், மக்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் வி. நாராணயசாமி, இந்த விஷயம் குறித்து யுபிஎஸ்சி அதிகாரிகளுடன் மத்திய அரசு விரிவாக ஆலோசனை நடத்திய உரிய நடவடிக்கை எடுக்கும். அதற்கிடையே, யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பு நிறுத்தி உடனடியாக வைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

யு.பி.எஸ்.சி. தேர்வில் புதிய விதிமுறை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
யு.பி.எஸ்.சி. தேர்வில் புதிய விதிமுறை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச் 15-

யு.பி.எஸ்.சி. தேர்வு முறையில் புதிய விதிமுறைகைள மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததாலும், பிராந்திய மொழிகளில் இத்தேர்வுகளை எழுத பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாலும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இப்பிரச்சினை இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக பேசிய உறுப்பினர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்கான புதிய விதிமுறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய மத்திய இணை மந்திரி நாராயணசாமி, “புதிய விதிமுறைகள் தொடர்பாக யு.பி.எஸ்.சி. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும். அதுவரை இந்த விதிமுறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்வு காணப்படும் வரை யு.பி.எஸ்.சி. தேர்வில் பழைய முறையே தொடரும்” என்றார்.

Tamil Nadu student upsurge gains momentum overcoming manipulations

Tamil Nadu student upsurge gains momentum overcoming manipulations

[TamilNet, Friday, 15 March 2013, 06:03 GMT]
The Tamil Nadu student protests against the pro-LLRC US resolution being tabled at Geneva has intensified in all major towns and cities even despite attempts by certain sections of the Indian media and certain political elements to twist the purpose of the protest, Thanjavur based sources told TamilNet. A protest involving over 5000 students took place on Wednesday at Thanjavur, a city of great historical and cultural importance to Tamils. Speaking to TamilNet, the sources said that while the student protests across Tamil Nadu were all about rejecting the US resolution as it did not meet any of the just expectations of the Eezham Tamils, some sections of the media and political circles were trying to give a false image that the students were urging India to support this hollow resolution.

The protesters were pressing New Delhi to come out with an alternative resolution to the US tabled one with absolute measures against the genocidal State of Sri Lanka. The protests were equally against the attitude of the government in New Delhi as they were against the empty resolution tabled by the USA. The effigies of Indian PM Manmohan Singh were also burnt in some of the protests.

The US resolution was burnt by students in Thirunelveali and Chithamparam on Wednesday.

On Thursday, this was repeated by hundreds of activists in Koodangku'lam, where people have been on a continuous protest against the Indian government’s nuclear project.

The people of Koodangku’lam, including the aged, women and children, have also undertaken an one-day fast on Thursday demanding a just political solution to the Eezham Tamils.

In a solidarity statement sent to the protesting students, S.P. Udayakumar, who is leading the protests in Koodangku’lam, said that “The American resolution is asking the murderer to be the policeman. It is asking for just food and clothing to be given to the slaves who are fighting for freedom. It is asking a nation who has lost more than one and a half lakh of their people to accept that they have committed crimes too. Therefore, we refuse to accept the American resolution.”

The protests are now staged, mostly by the university and university college students as the high school students are writing pre university examinations. The student participation is likely to escalate in the coming days.

More than 1000 students have protested in Madurai on Thursday. The protests in Madurai involved a large participation of female students. Sources also reported that the Sri Lankan flag was burnt and that there was an attempt to ghereao the post-office.

Student activists have also faced arrests and temporary detentions at several towns.

Likewise, a protest by the Popular Front of India, an Indian Muslim political organization, outside the collector’s office in Chennai on Wednesday, called for India to bring a strong resolution against the genocidal Sri Lankan state.

Chronology: