புற்றுநோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புற்றுநோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

குறைந்த செலவில் புற்றுநோய்ப் பண்டுவம்

குறைந்த செலவில் புற்றுநோய்ச் சிகிச்சை!

சமூக ஆர்வலர்கள் மற்றும் 60 மருத்துவர்களை ஒருங்கிணைத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறைந்த செலவில் சிகிச்சையளிக்கும், மருத்துவர் மருது துரை: தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தான் பிரதானம்.
சில ஆண்டுகளுக்கு முன், இங்கு புற்றுநோய் மருத்துவராக பணியாற்றினேன். இப்பகுதியின் பெரும்பாலான விவசாயிகள் புகையிலை, பாக்கு, பீடி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். நாங்கள், நோயாளியை சோதனை செய்த பின், "உங்களுக்கு புற்றுநோய் இருக்கிறது' என கூறினால், அவர்களுக்கு உடனே மரண பயம் வந்துவிடும். ஏனெனில், புற்றுநோயை குணப்படுத்த அதிகம் செலவாகும் என்ற பயம் இருந்தது. மேலும், சென்னை அல்லது புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைகளில் தங்கி, தொடர்ந்து சிகிச்சை பெற முடியாமல், பலர் வீடு திரும்பியதும் இறந்தனர். இப்படி, பல துர்மரணங்களை தவிர்க்க, 60 மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து, 2010ம் ஆண்டு, "தஞ்சை புற்றுநோய் மருத்துவமனை'யை ஆரம்பித்தோம். இங்கு, 3 கோடி ரூபாயில், "கோபால்ட்-60' மற்றும் 9 கோடி ரூபாயில், அதிநவீன கதிரியக்க கருவியை வாங்கி, புற்றுநோய்க்கு குறைந்த செலவில், சிறந்த சிகிச்சை அளிக்கிறோம். இங்கு சிகிச்சை பெறும் ஏழை விவசாயிகளுக்கு, கட்டணம் வசூலிப்பதில்லை. மருந்துகளையும், 65 சதவீத கழிவு விலையிலேயே விற்கிறோம். "ஸ்கேன், எக்ஸ்-ரே' என, அனைத்து டெஸ்டுக்கும், 50 சதவீத கட்டணம் தான். எங்கள் சேவையை பாராட்டிய ஸ்டேட் பேங்க், ஓர் ஆம்புலன்ஸ் வண்டியை, இலவசமாக வழங்கியது. இதன் மூலம், நோயாளிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று, வலி உபாதைகளுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்குகிறோம். மருத்துவமனை சார்பில், ஆண்டுதோறும், "சர்வைவல்' தினம் கொண்டாடுகிறோம். அன்று, இங்கு சிகிச்சை பெற்று குணமான நோயாளிகள் மூலம், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறோம்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எல்லா க் கட்டிகளும் புற்றுநோய் அல்ல!

எல்லா க் கட்டிகளும்  புற்றுநோய் அல்ல!

மார்பக ப் புற்றுநோய்ச் சிறப்பு மருத்துவர், செல்வி இராதாகிருட்டிணா: நான், சென்னையை சேர்ந்தவள். பெண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு கேன்சர் இல்லாத கட்டிகள் தான், 80 சதவீதம் வருகின்றன. எனவே, பெண்களுக்கு வருகிற எல்லா கட்டிகளும், "கேன்சர்' எனும், புற்றுநோய் கட்டிகள் தான் என, பயப்பட தேவையில்லை. எனக்கு வந்திருப்பது கேன்சர் கட்டி தான் என, பதற்றமோ, பயமோ அதிகரித்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்யலாம். இதன் மூலம், தேவையற்ற மன உளைச்சல் நீங்கும். "மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' மற்றும் திசு பரிசோதனை மூலம், மார்பக புற்றுநோயை தெளிவாக கண்டறியலாம். ஒருவேளை, மார்பக புற்றுநோய் இருப்பதாக, ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்ட்டால், பயப்பட தேவையில்லை. ஏனெனில், குறைந்த செலவிலேயே நிச்சயம் குணப்படுத்தி விடலாம். அப்படி குணமடைந்த பின், எந்த பிரச்னையும் இன்றி நார்மலான வாழ்க்கை வாழலாம். மார்பக புற்றுநோய் என்பது, தொற்றுநோய் இல்லை. இந்நோய் இருப்பதாக கண்டறியப்பட்டால், அப்பகுதியை உடனே அகற்றியாக வேண்டும் என்ற, தவறான கருத்து பெண்களிடம் உள்ளது. கட்டி, ஆரம்ப கட்டத்தில் சிறிதாக இருக்கும் போது, கட்டியை மட்டும் அறுவை சிகிச்சையால் அகற்றலாம். பின், "ரேடியோதெரபி' எனும் கதிர்வீச்சு சிகிச்சை செய்து, மருத்துவ அறிக்கைக்கு பின், "கீமோதெரபி' செய்யலாம். இது, வேண்டாத செல்களை அழிக்க கூடிய திறன் கொண்ட மருந்துகளை, ரத்த ஓட்டத்தில் கலக்க செய்கிறது. இச்சிகிச்சைக்கு, நோயாளியின் வயது, உடல்நிலை, நோயின் தீவிரம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். ஆனால், நோய் முற்றிய நிலையில், உடலின் மற்ற உடல் உறுப்புகளையும் சிதைக்கும் என்ற நிலையில், அப்பகுதியை அகற்ற வேண்டிய நிலை வரும். எனவே, மார்பக புற்றுநோய் பற்றிய தெளிவான கருத்து மற்றும் விழிப்புணர்வை, மருத்துவர்களிடமிருந்து பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

உலகத் தாய்ப்பால் வார விழா

தமிழகத்தில் 60 %  பெண்கள் குழந்தைகளுக்கு த் தாய்ப்பால் கொடுப்பதில்லை
 
 
சென்னை: ""அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில், 60 சதவீத பெண்கள், குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை,'' என, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை கூறினார்.

அரசு மகப்பேறு மருத்துவமனை: உலக தாய்ப்பால் வார விழா, ஆக., 1ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களுக்கு, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில், சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவில், மருத்துவர் உமா சாந்தி துவக்க உரையாற்றினார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, துணை இயக்குனர் மீனா உமாசந்தர் வரவேற்புரையாற்றினார்.

170 நாடுகளில்:

விழாவை, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர், கனகசபை, துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த, 1991ம் ஆண்டு முதல், உலக முழுவதும் உள்ள, 170 நாடுகளில், "உலக தாய்ப்பால் வார விழா' கொண்டாடப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு, முதலில் கொடுக்கப்படும் சீம்பாலுக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம். சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, பிறந்த, 15 முதல் 30 நிமிடத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், இரண்டு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த, ஆறு மாதம் வரை, கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், டீ, சர்க்கரை தண்ணீர் தருவதை தவிர்க்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பின், உருளைக்கிழக்கு, உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கண்டிப்பாக, இரண்டு ஆண்டு வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, 40 சதவீத பெண்களே, தாய்ப்பால் கொடுக்கின்றனர். அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை.

மார்பக ப் புற்று நோய் வராது:

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, மார்பக புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய் வருவது குறைகிறது. குழந்தை பிறப்பின் போது, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கு, அதிகளவில் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின், அளவில் பெரியதாக இருக்கும் வயிறு, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், சிறியதாகி விடும். இந்திய அளவில், ஆண்டு ஒன்றுக்கு பிறக்கும், 1,000 குழந்தைகளில், 48 குழந்தைகள் இறந்து விடுகின்றன; இதில், தமிழகத்தில், 24 குழந்தைகள் அடங்கும். தமிழகத்தில், பிறந்த ஒரு மாதத்தில், 1,000 குழந்தைகளில், 12 குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதை, 10ஆக குறைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, கனகசபை கூறினார்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

மாற்றிச் சிந்தித்தால் வெல்லலாம்!

மாற்றிச் சிந்தித்தால் வெல்லலாம்!
மின்வெட்டால், நெசவுத் தொழில் முடங்கினாலும், மாற்று சக்தியால், உற்பத்தியை அதிகரித்து, முதல் பரிசு பெற்ற வேலு: நான், திருவண்ணாமலையில் இருந்து, 65 கி.மீ., தூரத்தில் உள்ள, அத்திமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவன். கிராமத்திற்குள் நுழைந்தாலே, தறி நெய்யும் சத்தம், காதுகளில் இசையாய் கேட்கும். சாமுத்ரிகா, ஜரிகை, கல்யாணப் பட்டு என, பல ரகங்களை தயாரித்து, ஆண்டிற்கு, 3 கோடி ரூபாய்க்கு, பட்டு புடவை உற்பத்தி செய்து வந்தோம்.
ஏறக்குறைய, 200 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் கிராமத்தில், மூன்று தலைமுறையாக, நெசவு தொழிலே செய்ததால், வேறு தொழில் தெரியாது. வீட்டின் வெளியிலோ அல்லது கொஞ்சம் பலமாக காற்றடித்தாலோ, பட்டு புடவையை நெய்ய முடியாது. அழுக்கானாலும் விற்க முடியாது என, பல கஷ்டங்கள் இருப்பதால், வீட்டிற்குள்ளேயே தறி வைத்து, "லைட்' வெளிச்சத்தில், மாதத்திற்கு, ஆறு புடவை நெய்வோம்.மின்வெட்டால், இரண்டு புடவை கூட நெய்ய முடியாமல், வறுமையில் தத்தளித்தோம். இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்ற எண்ணத்தில், மாற்றி யோசித்தோம். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற முடிவதை அறிந்து, கூட்டுறவு சங்க மேலாளர் உதவியுடன், முயற்சியில் இறங்கினோம்.நபார்டு வங்கி உதவியுடன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 27 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றோம். அரசு மானியமாக, 10,800 கிடைத்தது. மீதி தொகையை தவணையாக கட்டினோம். மற்ற கிராமங்களில் நெசவுதொழில் முடங்கினாலும், நாங்கள், தொடர்ச்சியாக தறியை இயக்கி, திருவண்ணாமலையின், 27 பட்டு நெசவு கூட்டுறவு சங்கங்களில், சிறந்த சங்கமாக, முதல் பரிசை தட்டி சென்றோம்.
நெசவுக்கு மட்டுமின்றி, வீட்டிற்கும், சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி, மின்கட்டணத்தை குறைத்தோம். ஒரு வாசல் மூடினால், இன்னொரு வாசல் கதவை, நாம் தான் தட்டி திறக்க வேண்டும். மாற்றி யோசித்ததால் தான்,எங்கள் கிராமத்தால் வெற்றி பெற முடிந்தது.

உலகின் கவனத்தை ஈர்த்தேன்!
மருந்தில்லா புரோஸ்டேட் கேன்சருக்கு, தீர்வு ஏற்படுத்திய, சென்னையைச் சேர்ந்த, 27 வயதே ஆன ஆராய்ச்சி மாணவி, பிரீத்தி: நான், சென்னையைச் சேர்ந்தவள். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில், பி.டெக்., பயோ டெக்னாலஜி பிரிவில், தங்க மெடலுடன் தேர்ச்சி பெற்றேன். அமெரிக்காவின், "டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்' முதுநிலை பட்டம் பெற்று, அங்குள்ள சவுத் வெஸ்ட் மெடிக்கல் சென்டரில், சிறுநீரகவியல் துறை ஆராய்ச்சி மாணவியாகப் பணியாற்றுகிறேன். படிப்பிலும், ஆராய்ச்சியிலும், நான் ஆர்வத்துடன் ஈடுபட, பெற்றோர் தந்த ஊக்கமே காரணம்.

ஆண்களின் உடலில் இருக்கும், புரோஸ்டேட் சுரப்பியின் திசுக்களில் ஏற்படும் புற்று நோயே, "புரோஸ்டேட் கேன்சர்' இந்த வகை கேன்சரால், 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களே, அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். என் ஆராய்ச்சியின் பயனாக, புரோஸ்டேட் கேன்சருக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தி, சென்னை பெண்ணாக இருந்தாலும், மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்தேன்.

அதிகப்படியாக வளரும் கேன்சர் புரத செல்களை, ஒரு நுண்ணிய மூலக்கூறை கொண்டு சிதைப்பதன் மூலம், கேன்சர் செல்களை அழிக்க முடியும். "பெப்டிடாமிமெடிக் டி2' என்ற மூலக்கூறு, இந்த வகை கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கும் என்பதைக் கண்டறிந்தேன். இவை, நச்சு தன்மை இல்லாதவை. ஹார்மோனில் ஏற்படும் மரபியல் மாற்றத்தையும் தடுக்க வல்லது.சுண்டெலிக்கு, இம்மருந்தைக் கொடுத்து சோதித்ததில், கேன்சர் செல்களின் வளர்ச்சியை முற்றிலும் கட்டுப்படுத்துவதை உறுதிபடுத்தி, அதை, ஆராய்ச்சி கட்டுரையாகத் தயாரித்தேன். உலகின் எல்லா மருத்துவ ஆராய்ச்சியாளரும், தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேச மருத்துவ இதழில் வெளிவருவதைக் கனவாக நினைப்பர்.

சமீபத்தில், என் ஆராய்ச்சி முடிவுகளும், சர்வதேச மருத்துவ இதழான, "நேச்சர் கம்யூனிகேஷனில்' வெளி வந்தது, மகிழ்ச்சியாக உள்ளது. இக்கட்டுரை, புரோஸ்டேட் கேன்சருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு, புதுநம்பிக்கையை ஏற்படுத்தும்.

சனி, 16 மார்ச், 2013

அலை பேசியால் புற்றுநோய்!







அலை பேசியால் புற்றுநோய்!

காது, மூக்கு ,தொண்டைக்கான சிறப்பு மருத்துவர், சையது சபீர் அகமது:
வரமாய் அமைய வேண்டிய, அறிவியல் தொழில்நுட்ப கருவிகள், இன்றைய இளைஞர்களின் முறையற்ற செயல்பாடுகளால், சாபமாக மாறுகின்றன. மொபைல் போன், "ஹெட்செட்' மூலம், அளவுக்கு அதிகமாக பேசுவது, பாட்டு கேட்பதால், புற்றுநோய் உருவாகிறது.மொபைலால் புற்றுநோய் வந்துள்ளது என, யாரும் ஆதார பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏனெனில், மொபைலின் ஆதிக்கம், இளைஞர்களிடம் தான் அதிகம் உள்ளது. அதுவும் கடந்த, 10 ஆண்டுகளாக தான் உள்ளது. குறைந்த வயது மற்றும் குறுகிய காலம் என்பதால், மொபைலால் ஏற்படும் புற்றுநோயை நிரூபிக்க முடியவில்லை.
மொபைலால் புற்றுநோய் உருவாகும் என, ஆதாரத்தோடு நிரூபிக்கும் நேரத்தில், புற்றுநோயின் தாக்கம், இளைஞர்கள் உட்பட அனைவரிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும்.

"ஐயனைசிங் ரேடியேஷன்' நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அறிவியல் கூற்று. மொபைலின், "நான் ஐயனைசிங்' கதிர் வீச்சு, புற்றுநோயை நேரடியாக உருவாக்காமல், "வெஸ்டிபுலர் ஸ்வானோமா' எனும் கட்டி மூலம், புற்றுநோயை உருவாக்கும்.காதுகள், வெறும் கேட்கும் திறனை மட்டும் கொடுப்பதில்லை; உடலின் சமநிலையை பராமரிக்கும் பணியை, காதில் உள்ள, "வெஸ்டிபுலர்' நரம்புகள் மூலம் செய்கிறது. பஸ், ரயில் போன்ற, இரைச்சலான பயணங்களில், நிம்மதி மற்றும் பொழுதுபோக்குக்காக, மொபைல் போன், "ஹெட்செட்' மூலம் பாட்டு கேட்பதால், காதில், வெஸ்டிபுலர் கட்டிகள் உண்டாகி புற்று நோய் உருவாகிறது.நிம்மதி, பொழுதுபோக்கு, தூக்கம் வர, அசதி நீங்க, புத்துணர்ச்சி பெற என, பல தேவைகளுக்காக, தொடர்ந்து பல மணி நேரம் பாட்டு கேட்பதால், அவர்கள் பெறும் இன்பத்தை விட, புற்றுநோய் மூலம், பல துன்பங்கள் காத்துள்ளன. குறிப்பாக, மொபைலில், குறைவான சார்ஜில் பாட்டு கேட்பது, இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மொபைலில் குறைந்த நேரங்களை செலவிட்டால், ஆபத்தை தவிர்க்கலாம்.

திங்கள், 28 ஜனவரி, 2013

புற்றுநோயை க் கட்டுப்படுத்தும் மஞ்சள்: அமெரிக்க ஆய்வில் தகவல்


புற்றுநோயை க் கட்டுப்படுத்தும் மஞ்சள்: அமெரிக்க ஆய்வில் தகவல்

ஊசுடன் : மஞ்சளை, அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்' என, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தியர் :


அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தைச் சேர்ந்த மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறியதாவது:இந்தியாவில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது. மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக, 20 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.இதில், மூட்டுவலியை குறைப்பதில், மஞ்சள் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், புற்றுநோய், நீரிழிவு நோய், சரும நோய் போன்றவற்றிலிருந்தும், மனிதர்களை காப்பதில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையால், சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை மஞ்சள் சரி செய்து விடுகிறது.

மாத்திரை வடிவில்:
மஞ்சளை அப்படியே சாப்பிடும் வகையில் நம் உடல் அமைப்பு இல்லை என்பதால், இப்போது, மாத்திரை வடிவிலும் மஞ்சள் கிடைக்கிறது. நாம் சமைக்கும் உணவுடன் மஞ்சளையும் சேர்த்துவிட்டால், அது நல்லதொரு பலனை அளிக்கும். மஞ்சளை சேர்த்துக் கொள்வதால் கூடுதலான ருசி கிடைக்காது; மாறாக, உணவுப் பொருளுக்கு நிறத்தை அளிக்கும். மஞ்சளின் முழு பலனையும் பெற, சமையல் எண்ணெயை சூடு படுத்தி, அதில் மஞ்சள் தூளைக் கலந்து உணவுப் பொருளுடன் சேர்க்கலாம். இவ்வாறு, மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறினார்.



திங்கள், 10 டிசம்பர், 2012

உலக ஊழல் ஒழிப்பு நாள்

எப்படித் தடுப்பது எனக் குறிக்கப்பட்டுள்ள செய்திகள்  குழந்தைத்தனமாக உள்ளன. இப்பொழுதும்  இதில் குறிப்பிட்ட நடவடிக்கைள் உள்ளன. மக்கள் ஊழலுக்குப் பழகிவிட்டனர். போட்டிப்போட்டுக் கொண்டு பணம் தந்து வேண்டியதை முடிக்கத்தான் முந்துகின்றனரே தவிர நேர்மையாய் ஒன்றை அடைய எண்ணுவதில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும் பொழுது ஊழல் பெருமளவு குறையும். கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும்  கட்டணமின்றிக் கிடைக்க வேண்டும். பிற நாடுகளில் தவறு செய்யக் கையூட்டு பெறுகின்றனர். நம் நாட்டில் கடமையை ஆற்றக் கையூட்டு பெறுகின்றனர். ஊழலால் உயர்ந்தவ்ர்களை மக்கள் போற்றும் நிலையும் உள்ளது. ஒருவர் எவ்வளவுதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் குறுக்கு வழியில்   முன்னேறியவர் எனில் மக்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு பாராமுகமாக இல்லாமல் ஊழல் பெருச்சாளிகளைப் போற்றவே செய்கின்றனர். இந்த அவல நிலையும் மாற வேண்டும். கீழ்நிலையில் ஊழல் நடைபெற்றால் மேல்நிலையில் உள்ளவர்களைப் பொறுப்பாக்கித் தண்டனை வழங்க வேண்டும். மேல் நிலையில் உள்ளவர்கள் தவறு செய்தால் அமைச்சர்களையும் அமைச்சர்கள் தவறு செய்தால் முதல் அமைச்சரையும் முதல் அமைச்சர் தவறு செய்தால் ஒட்டு மொத்த அமைச்சரவையையும் தண்டிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சமுதாயத்தை அரிக்கும் புற்றுநோய் -இன்று  உலக  ஊழல் ஒழிப்பு நாள்

இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக் கூடியது.

ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் ஊழல் பரவி விட்டது. அரசின் திட்டங்களில், கோடிக்கணக்கில் உயர்ந்து விட்டது.

எது ஊழல் ?

பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது; அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது; விதிகளை மீறுவது; கடமையை செய்ய ஆதாயம் எதிர்பார்ப்பது ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள், தொழிலாக செய்கின்றனர். மக்களும் அதற்கு பழகி விட்டனர். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு.கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக மாறிவிட்டது. அரசு, ஒரு திட்டத்தை உருவாக்கினால் அதை செயல்படுத்துவது, அதிகாரிகளின் கைகளில் உள்ளது. அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம், ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது.
எப்படி தடுப்பது ?


ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், மக்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு, கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதன் விவரத்தையும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்.