சனி, 18 ஆகஸ்ட், 2012

மொழித்திறனுக்கான புதுத்திட்டம்



கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் 25 மதிப்பெண்களுக்குச் செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த உயர்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

மொழிப் பாடங்களில் மாணவ, மாணவியரின் தகவல் தொடர்புத் திறமையை வளர்க்கும் நோக்கில், முதன் முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளங்கலை, முதுகலைப் படிப்புகளில், பெருவாரியான மாணவ, மாணவியர் மொழிப் பாடங்களாகத் தமிழையும் ஆங்கிலத்தையும் படிக்கின்றனர். மற்ற பாடங்களைப் போல் மொழிப் பாடங்களுக்கும் தலா 100 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த 100 மதிப்பெண்களுமே எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றன. அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே செய்முறைத் தேர்வு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கும் செய்முறைத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அண்மையில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழநியப்பன் ஆணையிட்டார். அதன்படி, எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் எனப் பிரித்து வழங்கப்பட உள்ளது.

இது குறித்து அமைச்சர் கூறியதாவது: மாணவர்கள், மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறாமல் அவர்களின் தகவல்தொடர்புத் திறன், பேச்சுத்திறன் முதலானவற்றின் அடிப்படையில் செய்முறைத் தேர்வு முறை வகுக்கப்படும். மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் மிகக் குறைவாக இருக்கிறது; ஆங்கிலத்தில் எழுதவும் தெரியவில்லை. எனவே இலக்கணப் பிழையின்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுதல், பேசுதல், குழு உரையாடல், கேள்வி-பதில் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த முறையினால் மாணவர்களின் திறன் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் கூறும்போது, “மொழிப் பாடங்களுக்குச் செய்முறைத் தேர்வு முறை அறிமுகப்படுத்தும் திட்டத்தைப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டங்களுக்கான குழுவின் முன் வைத்து ஒப்புதல் பெறப்படும். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டே மொழிப் பாடங்களுக்குச் செய்முறைத் தேர்வுத் திட்டம் அமலுக்கு வரும்” என்றார்.

- 
செய்தியாளர், தினமலர்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

தொன்மைச்சின்னங்களையும் அழித்துப்பணமாக்கிய கற்குடைவு உரிமையாளர்கள்



புராதன சின்னங்களையும் அழித்து காசு பார்த்த குவாரி உரிமையாளர்கள்



மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே, சமணர் படுகைகள், கல்வெட்டுக்கள் நிறைந்த மலைகளையும், குவாரி உரிமையாளர்கள் விட்டு வைக்காதது, அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், பாமியான் புத்தரை சிதைத்த தலிபான் செயல் போல, இங்கே கொடுமை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலூர் அருகே, கீழவளவு பகுதியில் உள்ள, மூன்று மலைகளும், அரிட்டாபட்டியில் உள்ள ஏழு மலைகளும் மற்றும் திருவாதவூர் மலைகளில் உள்ள, சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குடவறை கோவில்கள், புத்தர், மகாவீரர் மற்றும் ஜெயின் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் பல இடங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இச்சின்னங்கள் நிறைந்த பகுதிகளில், கிரானைட் கற்கள் கிடைத்ததால், படிப்படியாக அவற்றை அழித்து, குவாரி உரிமையாளர்கள், கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதில், கீழையூர் ரங்கசாமிபுரத்தில், டாமின் கட்டுப்பாட்டில் உள்ள, சமணர் படுகை மலை மற்றும் புறாக்கூட்டு மலை முற்றிலும் சிதைந்தன. சர்க்கரை பீர் மலை எனப்படும், பொக்கிஷ மலையை, "கேக்' வெட்டுவது போல் துண்டு துண்டாக வெட்டிய போது, ஊர் மக்கள் எதிர்ப்பாலும், கோர்ட் உத்தரவாலும், பணி, பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு, 7 மலைகளை கொண்ட அரிட்டாபட்டி மலையின் பின்புறம், மக்களுக்கு தெரியாமல், கற்களை வெட்டும் பணி துவங்கியது. தொடர் வெடிச் சத்தம் கேட்டு, மக்கள் அங்கு சென்ற போது, மலையின் சில பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. மக்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, வெட்டும் பணி நிறுத்தப்பட்டது.

குவாரி நடத்துவதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர், சி.ஆர்.ரவீந்திரகுமார் இதுகுறித்து கூறியதாவது: அரிட்டாபட்டியில், ஏழு மலைகள் உள்ளன. இவற்றில், சமணர் படுகைகள், பஞ்ச பாண்டவர் வசித்த இடம், குடவறை கோவில், புத்தர் சிலைகள், பிராமி கல்வெட்டுக்கள் என, புராதன சின்னங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், இம்மலையை தெய்வமாக வணங்கி, இதன் ஊற்று நீரை, புனித நீராக எண்ணி வருகின்றனர். மலைகளில் விழுந்து வரும் மழை நீர், மேல் தருமம் கண்மாயில் சேமிக்கப்பட்டு, விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 1966 முதல், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்விடத்தை, டாமின் நிர்வாகம், செப்., 19, 2008ல், தனியாருக்கு, "லீசு'க்கு கொடுத்தது. 400 ஏக்கரில், இம்மலையை, குவாரி உரிமையாளர்கள் வெட்டி இருப்பர். ஆனால், "மலையில் குவாரி கூடாது' என, ஜூன், 2011ல், ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கற்களை வெட்ட, ஜூன், 28, 2011ல், கோர்ட் தடை விதித்தது. குவாரி உரிமையாளர்கள் தடையை உடைத்து விடக் கூடாது என, ஜூலை 15, 2011ல், உச்ச நீதிமன்றத்திலும், மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் தடையால், இந்த மலைகள் தப்பின, என்றார். அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், குவாரி உரிமையாளர்களால் கற்களை வெட்டி எடுத்துச் செல்ல முடியாது. 1995 முதல், 2012 வரை கனிம வளத்துறை, வருவாய் துறைகளில் பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டால் உண்மை தெரியும் என்ற கருத்து பரவலாக எழுந்து இருக்கிறது.





ஒளிப்படக் காட்சி அழைக்கிறது










 
 
சிறிதாவோ பெரிதாகவோ பராவாயில்லை மனித மனம் ஒவ்வொன்றும் பாராட்டுக்காக ஏங்குகிறது, அதை வஞ்சனையில்லாமல் செய்பவர்களில் முதலில் நிற்பவர்கள் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள்தான். ஆனால் அவர்களது செயல்களுக்கு அரும்பாடுபட்டு எடுத்த படங்களுக்கு ஒரு அங்கீகாரம், ஒரு பாராட்டு கிடைப்பது என்பது அரிதிலும் அரிதே.

இந்த நிலையில் பெங்களூருவில் மட்டும் ஒரு ஆறுதல். அங்குள்ள பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு வருடமும் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு (19/8/12) தங்களது புகைப்படங்களை கொண்டு கண்காட்சி நடத்தி முதல் அமைச்சர் துவங்கி பொதுமக்கள் வரை அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக புகைப்பட ஆர்வலர்களின் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் பெற்றுள்ள இந்த இரண்டு நாள் புகைப்பட கண்காட்சி வருகின்ற 18ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.

நாட்டையும், மக்களையும் உலுக்கியெடுத்த பல பதிவுகள் உள்பட நூற்றுக்கணக்கான படங்கள் இடம் பெறவுள்ளது. இடம்: பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள சித்ரா கலா பரிஷத் கலையரங்கம். நேரம் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை. அனுமதி இலவசம்.

வாசகர்களே இந்த கண்காட்சியில் இடம் பெறப்போகும் படங்களில் சிலவற்றை பார்க்க "போட்டோ காலரி' என்ற சிவப்பு பட்டை பகுதியை கிளிக் செய்யவும். நன்றி!
 

இளைஞர்களுடன் போட்டி போட முடிந்தால் வாகை சூடலாம்!










இளைஞர்களுடன் போட்டி போட முடிந்தால் ஜெயிக்கலாம்!
மனித வளத் துறை ஆலோசகர் கெம்பா ஆர்.கார்த்திகேயன்: நாற்பது வயதுக்கு மேலே வேலை தேடுவது, இப்போது ஒரு, "டிரெண்ட்' ஆகவே இருக்கிறது. இதற்கு காரணங்கள் பல. சொந்தமாக தொழில் செய்ய நினைப்பவர்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பில் சிக்கி வேலை இழந்தவர்கள், வி.ஆர்.எஸ்., வாங்கியவர்கள், ஆசைப்பட்ட துறைக்குப் போக நினைத்து, அது நிறைவேறாமல் போனவர்கள், நேரத்தைப் பயனுள்ளதாக செலவழிக்க நினைக்கும் பெண்கள் என, பலரும் வேலை தேடி வருகின்றனர்.
வேலை போய்விடும் என்பதை நினைத்து பயப்படுபவர்கள், பெரும்பாலும், அறுபதுகளில் பிறந்தவர்கள்; ஐ.டி., துறை வருவதற்கு முன்பே, வேலைக்குச் சென்றவர்கள். இவர்கள் பெரும்பாலும், உற்பத்தி துறையிலேயே வேலைக்கு சேர்ந்திருப்பர்; அன்று உற்பத்தி செய்த பல பொருட்கள், இன்று மார்க்கெட்டில் இல்லை.சர்வீஸ் துறையில், இது மாதிரியானவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கான தகுதிகளை இவர்கள் வளர்த்துக் கொண்டாலே போதும். இங்கு தகுதி என்பது, திறமை தான். தவிர, எந்த வேலையையும், ஆர்வத்தோடு கற்று செய்யும், உற்சாகமான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். தன்னை விட வயதில் சிறியவர்களிடம், பணிவாகப் பேசிப் பழகி, வேலை பார்க்க கற்றுக் கொண்டாலே போதும்; ஜெயித்து விடலாம்.
இளைஞர்கள், ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்ற வெறியில், நிறைய உழைப்பர். அவர்களுடன் உங் களால் போட்டி போட முடியுமா என்பதை, முதலில் உறுதி செய்து கொண்ட பிறகு, களத்தில் இறங்குவது புத்திசாலித்தனம். இருபது ஆண்டுகளுக்கு வேலை பார்த்து விட்டு, அடிப்படைத் தேவைகள் நிறைவேறியதும், "இனி நமக்குப் பிடித்தபடி உழைப்போம்' என நினைப்பவர்கள், பாட்டு பாடுவது, சமூக சேவை செய்வது, ஆசிரியர் தொழில் பார்ப்பது, ஓவியம் வரைவது என, வேலை செய்ய நினைக்கின்றனர். இந்தத் திறமைகளை வைத்து, வேலை தேடுவதை விட, மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பது சிறந்தது.



தொண்டைக்குள் புகுந்த அடுகலன் ஊதல்': விரைவு வேண்டா! விழிப்பு தேவை!



தொண்டைக்குள் புகுந்த "குக்கர் விசில்': அவசரத்தால் பெண் பட்ட அவதி
தினமலர்
மதுரை:தொண்டைக்குள், "குக்கர் விசில்' சிக்கிய பெண்ணுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, விசில் வெளியே எடுக்கப்பட்டது.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த, 57 வயது பெண்ணை, வாய்ப்பகுதி அடிபட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த காது, மூக்கு, தொண்டைப் பிரிவு தலைவர் டாக்டர் கண்ணப்பன் கூறியதாவது:இப்பெண், நேற்று காலை, அடுப்பிலிருந்து குக்கரை இறக்கிய உடன், நேரடியாக மூடியைத் திறந்துள்ளார். அதிக அழுத்தத்தால், மூடியில் இருந்து குக்கர் விசில் எகிறி பறந்தது. "விசில்' இப்பெண்ணின் கீழ்த்தாடையை கிழித்து, நான்கு பற்களை உடைத்து, நாக்கின் அடிப்பகுதி வழி, தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. விசில் தொண்டைக்குள் இருந்தது, அவருக்குத் தெரியவில்லை. வாய் முழுதும் ரத்தமாக இருந்த நிலையில், இங்கு அழைத்து வரப்பட்டார்.

கீழ்த்தாடையில் தையல் இட்ட பின், "ஸ்கேன்' செய்து பார்த்தபோது தான், "விசில்' இருந்தது தெரிந்தது. வாய் வழியாக மயக்க மருந்து கொடுக்க முடியாத அளவு காயம் இருந்தது. தொண்டையின் மூச்சுக்குழாய் வழியாக துளையிட்டு மயக்க மருந்து செலுத்தப்பட்டது; பின், வாய் வழியாக விசில் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது நல்ல நிலையில் உள்ளார்.இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.






வியாழன், 16 ஆகஸ்ட், 2012

Parity of status to Tamils as a nation is the only way

Don't expect justice by changing regimes that deson't recognise Tamils as Nation: Gajendrakumar

[TamilNet, Wednesday, 15 August 2012, 21:16 GMT]
Parity of status to Tamils as a nation is the only way to restore justice in the island. It is meaningless to expect that ‘internal justice’ would come from any regime in Colombo, said Gajendrakumar Ponnambalam, a former parliamentarian and the leader of the Tamil National Peoples Front (TNPF) addressing the participants of a protest organised by the party on Wednesday to condemn the slaying of the Tamil political prisoner Delruxon Mariyathas and Nimalarooban. Wednesday's protest gains significance as the SL military and police that attempted to curb the protest in front of Jaffna were not able to suppress it through their ‘friendly magistrate’ as they managed to do earlier in curbing a protest at the same site by the TNPF.



Tamil political prisoners were slain en masse in Welikade [in 1983] when a different party was in power in Colombo. The Bindunuwewa prison massacre took place under another regime [in 2000]. Now, the slaying of Nimalarooban and Delruxon in the prisons of the Sri Lankan State has taken place under the Rajapaksa regime. One cannot expect justice from any government in Colombo without the recognition that Tamils constitute a Nation on par with the Sinhala nation in the island, Mr. Ponnambalam said, both at his address at the funeral of Delruxon on Saturday and at the TNPF-organised protest held in front of the Jaffna bus stand on Wednesday.


Internecine clashes erupt in East between Muslim parties of UPFA alliance

Internecine clashes erupt in East between Muslim parties of UPFA alliance

[TamilNet, Wednesday, 15 August 2012, 20:38 GMT]
Supporters of Muslim constituent parties in the ruling United Peoples Freedom Alliance (UPFA) government of Mahinda Rajapakse clashed in East over election dispute on Monday evening. Hundreds of supporters of SLMC attacked the election office of the former Provincial Minister who is also contesting the EPC election on the UPFA ticket Mr. M.S.Uthumalebbe and set fire to his office. Two vehicles stationed at the site were also set on fire. Thereafter Akkaraipaththu Police with the Sri Lanka Army arrived at the scene and opened tear gas on the unruly crowd to bring the situation under control.

The National Congress led by Minister A.L.M.Aththaulaah and the Sri Lanka Muslim Congress led by Minister Rauf Hakim are the constituents parties of the UPFA.

The SLMC is contesting the Eastern Provincial Council alone in its own symbol “Tree”.

But the National Congress of Aththaulaah is contesting on the ticket of the UPFA in betel symbol.

However the SLMC is contesting the other two Provincial Council elections, namely North Central Province and Sabragamuwa aligned with the ruling UPFA on BETEL symbol.

தனியார் தொழிற்பயிற்சிகளில் இலவசமாக த் தொழிற்பயிற்சி

தனியார் தொழிற்பயிற்சிகளில் இலவசமாக த் தொழிற்பயிற்சி பெற கலந்தாய்வு

First Published : 16 Aug 2012 06:12:24 PM IST


சென்னை, ஆக.,16: தமிழ்நாடு முதலமைச்சர் தொiலைநோக்குத் திட்டம் 2023-ன் படி அடுத்த 11 ஆண்டுகளில் 20 மில்லியன் மக்களுக்கு திறன் வளர்க்கும் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற இலக்கினை நிறைவேற்றிடும் வகையில் தமிழகத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிரப்பப்படாமல் உள்ள 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலைங்களில் நடக்கும் மாவட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்பிடவும், அம்மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஆகும் செலவை அரசே அந்தந்த தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற இடம் கிடைக்காத மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சேர்ந்து பயன்பெறலாம்.  சென்னை மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் தொழிற்பயிற்சிநிலையங்களில் காலியாக அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பயிற்சி இடங்களில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் துணை இயக்குநர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சென்னை-21என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.தங்களது கல்வி மற்றும் சாதி சான்றிதழ் நகலுடன் நேரில் அணுகி விண்ணப்பிக்குமாறும், விரைவில் நடைபெற உள்ள மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு பெற்று பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் இது குறித்த விபரங்களுக்கு 044 – 25209268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

பட்டதாரி இளைஞர்களுக்கு அரசின் தன்தொழில் பயிற்சி

பட்டதாரி இளைஞர்களுக்கு அரசின் தன்தொழில் பயிற்சி



சென்னை, ஆக., 16 : பொறியியல், கலை, அறிவியல், டிப்ளமோ படித்த இளைஞர்கள் சுயதொழில் துவங்கும் வகையில் பயிற்சியை வழங்கி வருகிறது தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம். சுயமாக தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பும் துறையில் பயிற்சி அளித்து, அனைத்து ஏற்பாடுகளையும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் செய்து கொடுக்கிறது.இந்த ஆண்டுக்கான அனைத்து சுயதொழில் பயிற்சி வகுப்புகளும் ஆகஸ்ட் 22ம் தேதி துவங்குகிறது. இதற்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணி நாளை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில்முனோவர் மேம்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள 22501412/ 8754590965 என்ற தொலைபேசி எண்ணில் ஆர்வி. சுப்ரமணியன் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

சொல்கிறார்கள்


 சொல்கிறார்கள் - தினமலர்


“கார்ப்பரேட் பாணி உதவியது!” பூர்விகா மொபைல்சு நிறுவனர் உயுவராசு: ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலையை விட்டபோது அடுத்து என்ன என்று தெரியாமல் ஒன்றரை ஆண்டுக்காலம் போனது. திருமணம் முடித்திருந்த நேரம். ஏதாவது வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயம். செய்தால், சொந்தத் தொழில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த நேரத்தில் என் உறவினர் ஒருவர், பழைய கைப்பேசிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். “கைப்பேசி விற்பனையில் இறங்கினால் நல்ல எதிர்காலம் இருக்கும்” என்று அவர்தான் எனக்கு யோசனை சொன்னார். கைப்பேசிக்கு உண்மையிலேயே எதிர்காலம் இருக்கிறதா என்பதை நானே நேரடியாகத் தெரிந்து கொள்ளப் பல ஊர்களுக்கும் சென்றேன்; கைப்பேசிக்கு இருக்கும் சந்தையைப் புரிந்து கொண்டேன்; உடனே கைப்பேசி விற்பனையில் இறங்கி விட்டேன். கடன் வாங்கித்தான் முதல் கடை திறந்தேன். ஒரே ஓர் அலமாரி, ஆறு கைப்பேசிகள் மட்டுமே விற்பனைக்கு வைத்தேன். முதல் கைப்பேசியை விற்கவே ஒரு வாரத்துக்கு மேல் ஆனது. சோர்வில்லாமல் உழைக்க வேண்டி இருந்தது. பின், சிறிது சிறிதாகத் தொழில் முன்னேறியது. வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அவர்களின் முதலாளியைப் பார்ப்பதேயில்லை. ஆனாலும் அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்தக் கார்ப்பரேட்டு உளப்பபான்மைதான் எனக்கான திருப்புமுனையைத் தந்தது. முதலில் நம்பகமான ஊழியர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் நலன் மீது நமக்கு அக்கறை இருந்தால் அவர்கள் நமக்கு உண்மையாக இருப்பார்கள். என்னோடு முதலில் வேலை பார்த்த ஐந்து பேரை என் அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தினேன். அந்த ஐந்து பேர் 50 பேராக மாறினர். இன்று என் நிறுவனத்தில், வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை பல நூறாக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் நான் திருப்புமுனைகளை நோக்கி ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன்.