வியாழன், 20 ஜனவரி, 2011

Singhala coast guard attacked thamizh fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில் வீசித் தாக்குதல்

சட்ட மன்றத் தேர்தல் வரை குண்டு வீச வேண்டா எனச் சொன்னதால் குப்பிகளை வீசுகிறார்கள் போலும். அவை வெறும் குப்பிகளா? அல்லது அமிலக் குப்பிகளா?
தமிழர்கள் உயிர்பற்றிக் கவலைப்படாமல் சிங்கள  இறையாண்மை பற்றிக் கவலைப்படும்     இந்திய மேலாண்மை இருக்கும வரை இந் நிலை தொடரும்.  வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 
தமிழக மீனவர்கள் மீது 
இலங்கை கடற்படையினர் பாட்டில் வீசித் தாக்குதல்


வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஆறுகாட்டுத் துறை மீனவர்கள் 12 பேர் 3 கண்ணாடி இழைப்படகுகளில் சென்று கோடியக்கரைக்கு தென்கிழக்குப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை நோக்கி மதுபாட்டில்களை வீசினர். மீனவர்கள் படகுக்குள் மறைந்துகொண்டதால் அவர்கள் மீது பாட்டில்கள் விழவில்லை. ஒரு படகில் இருந்த வலைகள் சேதமடைந்தன.இந்த தாக்குதலையடுத்து மீன் எதுவும் பிடிக்காமல் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பினர். இதுகுறித்து யாரிடமும் புகார் எதுவும் அளிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்

its very bad.
By dinesh
1/19/2011 4:18:00 PM

புதன், 19 ஜனவரி, 2011

Rajapakshe is war ciriminal - Periyar D.K.resolution: இராசபட்ச போர்க் குற்றவாளி: பெரியார் திக மாநாட்டில் தீர்மானம்

சிறப்பான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பெரியார் திராவிடர் கழகத்திற்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


ராஜபட்ச போர்க் குற்றவாளி: பெரியார் திக மாநாட்டில் தீர்மானம்


பெங்களூர், ஜன.18: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ÷கர்நாடக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை சாதி எதிர்ப்பு, ஈழ ஆதரவு மக்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி, பாமக சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தலைவர் சி.ராசன் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய கொளத்தூர் மணி, ஈழத்தமிழர்களுக்காக நடந்து வரும் போராட்டத்தையும், அதற்கு இந்தியாவின் மறைமுக எதிர்ப்பையும் விளக்கினார். ஈழம் மலருவதற்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கடமையாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  ÷இறுதிக்கட்ட போரின்போது ஈழத்தில் நடைபெற்ற கோர சம்பவங்களை வேல்முருகன் உருக்கமாக விளக்கினார். பெங்களூருக்கு டிசம்பர் 10-ம் தேதி வருகைதந்த இலங்கை அமைச்சர் சலிண்டதிசநாயகேவுக்கு கருப்புக்கொடி காட்டி சிறைசென்ற 40 பேருக்கு பொன்னாடை போர்த்தி கொளத்தூர் மணி கெüரவித்தார்.  ÷இலங்கை லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று இனப்படுகொலை செய்த ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். முள்வேலியில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வுப்பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பெரியார் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும். தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Pe.Maniyarasan against renaming of G.H. : சென்னை அரசு மருத்துவமனைக்கு இராசீவ் காந்தி பெயரைச் சூட்ட தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்ப்பு

நல்ல கருத்து. மேலும் தலைவர்கள் பெயர்களை எடுப்பதாக முன்னரே தம் முந்தைய ஆட்சியில் அறிவித்துத் தலைவர்கள் பெயர்களுடன்  சேர, சோழ,பாண்டிய,பல்லவர் பெயர்களையும் நீக்கியுள்ளார். எனவே, அரசியல் காரணங்களால் வட நாட்டார் பெயரைத் தமிழ்நாட்டு மருத்துவமனைக்குச் சூட்டத் தேவையில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 
 
சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்ட தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்ப்பு


தஞ்சாவூர், ஜன. 18: சென்னை அரசுப் பொது தலைமை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டுவதற்கு தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக அந்தக் கட்சிப் பொதுச் செயலர் பெ. மணியரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டவுள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்துள்ளது கண்டனத்துக்குறியது.  இலங்கைக்கு ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையினர் பெண்கள், குழந்தைகள் என 6,000-க்கும் அதிகமான ஈழத் தமிழர்களை கொன்று குவித்தனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. இவைகள் ஆதாரங்களுடன் பல நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.  இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்னை துறைமுகத்தில் வந்திறங்கிய இந்திய அமைதிப் படையினரை வரவேற்க மறுத்து, என் தமிழ்ச் சாதி மக்களை அழித்துவிட்டு வரும் ராணுவத்தை நான் வரவேற்கப் போகவில்லை என்று அப்போது சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.  ராஜீவ் காந்தியின் பாதையில் சோனியா காந்தியும் இலங்கை அரசுக்கு ராணுவ உதவி, நிதியுதவி, உலக அரங்கில் அரசியல் உதவி என அனைத்தும் அளித்து ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதற்கு துணை நின்றார். இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதும், அடித்துக் கொல்வதும் தொடர்கிறது.  இதற்கெல்லாம் பாராட்டுத் தெரிவிப்பது போல, ராஜீவ் காந்தி பெயரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு சூட்ட நினைப்பதை அரசு கைவிட வேண்டும்.  கூட்டணியில் நீடிப்பதாக காங்கிரஸ் உறுதி கொடுத்ததற்கு நன்றிக்கடன் செலுத்துவதாக இருந்தால், திமுக தனது அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதிக்கோ அல்லது தனது கட்சி சார்பில் நடத்தப்படும் வேறொரு நிறுவனத்துக்கோ ராஜீவ் பெயரை வைக்கலாம். அதைவிடுத்து, அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் பெயரை வைக்க நினைப்பது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம் என்றார் மணியரசன்.


பொதுவாக மொழியியல் பிரிவினர் பேச்சுத் தமிழுக்கு முதன்மை அளித்து நல்ல தமிழுக்குச் சிதைவு ஆக்குநர்களாக இருப்பார்கள். அவ்வாறில்லாமல் கணிணித்தமிழ் வளர்ச்சிக்கு இம் மொழியியல் துறை சிறப்பாகச் செயல்பட்டது. முனைவர் தெய்வசுந்தரத்தின் பணியைத் துணைவேந்தர் அவர்களும் பல கூட்டங்களில் பாராட்டியுள்ளார். அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பெற்று அவர் பெரும் முயற்சியால் மேற்கொண்ட சிறப்பான பணிகள் நிறைவுற்று கணித்தமிழ் வளர்ச்சியில் தமிழ் சிறப்பான இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அவருக்கு நீட்டிப்பு தராததுடன் அத்துறையையே மூடிய கொடுமை ஏன் நிகழ்ந்துள்ளது எனத் தெரியவில்லை. உடனே இத்துறைக்குப் புத்தாக்கம் அளிக்க வேண்டும். இதனை மக்களின் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ள தினமணிக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்




தமிழ் மொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை
கணினி வழிப் பயன்பாட்டிற்காக ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து
அனைத்துக் கருத்துகளையும் ஆய்வு செய்திட

ஒய்வு பெற்ற நீதியரசர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து
முதலமைச்சர் கலைஞர் ஆணை!

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் 4-11-2010 அன்று நடைபெற்ற
அமைச்சர் பெருமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் -
தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றைக் கணினி வழிப்
பயன்பாட்டிற்காக, யூனிகோட் சேர்த்தியம் (Unicode consortium) என்னும் நிறுவனம்
ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து விரிவான விவாதம் தேவை எனவும், அதனை
விரிவாக விவாதித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு உயர் மட்டக் குழு
அமைக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்திட, ஓய்வு
பெற்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர்
அவர்கள் இன்று (18-1-2011) ஆணையிட்டுள்ளார்கள்:-
1. பேராசிரியர் ம. இராசேந்திரன்,
துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2. முனைவர் வா.செ. குழந்தைசாமி, முன்னாள் துணை வேந்தர்,
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைவர், தமிழ் இணையக் கல்விக் கழகம்.
3. பேராசிரியர் மு. ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் (அறிவியல்
நகரம், சென்னை)
4. பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ)
5. முனைவர் ஐராவதம் மகாதேவன், இ.ஆ.ப., (ஓய்வு)
6. பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
7. பேராசிரியர் கே. நாச்சிமுத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர்
பேரவை
8. பேராசிரியர் அ.அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
9. முனைவர் ப.அர. நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை
10. முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.
11. திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர் மற்றும் கவிஞர்
12. திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்
13. திரு. மணி மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி), சீமேன்டெக்
கழகம், சென்னை.
14. முனைவர் ந. தெய்வசுந்தரம், சென்னை.

மேற்காணும் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்.

· * * * *

வெளியீடு: - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், செ-9.

இக்குழுவினர் ஒத்துப் போதல் விட்டுக் கொடுத்தல் முதலான நிலைப்பாடுகளை எடுக்காமல் தமிழைக் காக்கும் எண்ணத்திலேயே
செயல்பட வாழ்த்துகள்.
தோழமையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
--

hindu ram - mahindha rajapakshe conversation: இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் புனைவு !


நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள்.

இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். த‌ன‌து நாளேட்டின் த‌லைய‌ங்க‌த்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு‌‌ அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊட‌க‌ நேர்மையின் அடிப்ப‌டைக‌ளை மீறும் வேண்டாத‌ க‌ளைக‌ள் எல்லாம் நீக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் தொட‌ர்ந்து கூறி வ‌ந்துள்ளார்.

ஆனால் இங்குள்ள‌ பிர‌ச்சி‌னை என்ன‌வெனில் திரு.இராமே அவ‌ர் வைத்திருக்கும் இந்த‌ ஊட‌க‌ நேர்மை என்ற‌ வார்த்தைக்கு கூட‌ ம‌திப்ப‌ளித்த‌தே இல்லை என்ப‌து தான். வ‌ங்காளத்தில் உள்ள‌ த‌ன‌து விருப்ப‌மிகு மார்க்சிசுட்டுகள் முதல், த‌மிழ்நாட்டின் ஆன்மீக குருக்கள் வரை சிலரின் கிரிமினல் குற்றங்கள் முதல் படுகொலைகள் வரை திரு.இராமின் தலைமையில் இயங்கும் ஊடகம் வெளியிடுவதில்லை, மாறாக முழுவ‌துமாக‌ மூடி ம‌றைத்து, பொய்யான‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌ர‌ப்புவ‌திலேயே குறியாக‌ இருக்கின்ற‌து.

எல்லா தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளையும் இசுலாமிய‌ ச‌மூக‌மே ந‌ட‌த்துகின்ற‌து என்று இந்திய‌ உள‌வுத்துறை கூறும் ப‌ச்சைப் பொய்க‌ளை க‌ண்ணை மூடிக்கொண்டு அப்ப‌டியே கிளிப்பிள்ளை போல‌ ஒப்புவித்து வ‌ருகின்ற‌து இந்து நாளேடு. மேலும் இது ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ட‌ந்து வ‌ரும் இந்த‌ தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளில் பங்கு கொண்டிருக்கும் இந்துத்துவ‌வாதிக‌ளைப் ப‌ற்றி விசாரிக்க‌க்கூட‌ ம‌றுத்து வ‌ருகின்ற‌து.

”ச‌ர்வ‌தேசிய‌வாதியான” திரு.இராம் இந்தியாவில் ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை ம‌ட்டும் திரித்து எழுதுவ‌தோடு நின்று விடுவ‌தில்லை. உதார‌ண‌த்திற்கு, அவரது ந‌ண்ப‌ரும், இல‌ங்கை அதிபருமான‌‌ ம‌கிந்தாவிற்காக, ஊட‌க‌ நேர்மை எல்லாம் ம‌ற‌ந்துவிட்டே இந்துவில் வ‌ரும் இல‌ங்கையை ப‌ற்றிய‌ செய்திக‌ள் வ‌ருகின்ற‌ன‌.

இல‌ங்கை அர‌சின் இன‌ப் பாகுபாடுக‌ள், போர்க் குற்ற‌ங்க‌ள், இன‌ப்ப‌டுகொலைக‌ள், அர‌சை விம‌ரிசிக்கும் ந‌ப‌ர்க‌ள் மர்மமான முறையில் கொல்ல‌ப்ப‌டுத‌ல், இராச‌ப‌க்சேவின் ச‌ர்வாதிகார‌ப் போக்கு இவை எல்லாம் இந்து என்ற‌ “செய்திக‌ளை ஆவ‌ணப்ப‌டுத்தும்” நாளித‌ழில் அற‌த்தின் வ‌ழியே ந‌ட‌ப்ப‌தாகவே ந‌மக்கு கூற‌ப்ப‌டும். இதை எல்லாம் கேட்டு பொய்யை மெய் போல உரைப்பதில் தன்னையே விஞ்சிவிட்டார்களே இவர்கள், என கோய‌ப‌ல்சே மூச்ச‌டைத்து இற‌ந்தாலும் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை .

நல்ல ஊடகத்தின் அடிப்படையான‌ ஊட‌க‌ நேர்மைக்காகவும், பொதும‌க்க‌ள் இந்த உரையாடலைப் பற்றி பல இடங்களில் விவாதிக்க ‌வேண்டும் என்ற‌ ந‌ல்ல‌ எண்ண‌த்துட‌னும் எங்க‌ளிட‌ம் உள்ள‌ இராம், இராச‌ப‌க்சே புனைவு (Fiction) தொலைப்பேசி உரையாட‌லை உங்க‌ளுக்கு எழுத்து வ‌டிவில் வ‌ழ‌ங்குகின்றோம்.

புனைவுச் செய்திக‌ளை உண்மையான‌ செய்திக‌ளாக‌ வெளியிடும் இந்து நாளித‌ழ் போல் நாங்க‌ள் அல்ல‌; ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பேசுவ‌தை ப‌திவு செய்ய‌ எங்க‌ளுக்கு உரிமை இல்லை என்ப‌தாலும், இந்த‌ தொலைபேசி உரையாட‌ல் முழுமையாக‌ எங்க‌ளால் புனைய‌ப்ப‌ட்ட ஒன்றே என்று உங்க‌ள் எல்லோரிட‌மும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உண்மையான‌(!) செய்தி என்று இன்று ஊட‌க‌ங்க‌ள் கூறும் செய்திகளை விட, இந்த‌ புனைவு உரையாடல் எவ்வளவு உண்மையானது என்பதை வாச‌க‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ளே முடிவு செய்துகொள்ளுங்க‌ள்.

(தொலைபேசி ம‌ணி ஒலிக்கின்ற‌து, இராச‌ப‌க்சே தனது நல்வாய்ப்பு தரும் எண் ஒன்ப‌து வ‌ரை எண்ணிவிட்டு தொலைபேசியை எடுக்கின்றார் !)

இராம்: ஆயுபவ‌ன்(சிங்க‌ள‌த்தில் வ‌ண‌க்க‌ம் என‌ கூறுகின்றார்) அதிப‌ர் அவ‌ர்க‌ளே.

இராச‌ப‌க்சே: வ‌ண‌க்க‌ம் திரு.இராம்

இராம்: நீங்க‌ள் எப்பொழுது என்னை அழைத்தாலும் நான் வ‌ருவேன்

இராச‌ப‌க்சே: நான் “வ‌ண‌க்க‌ம்” என்று தான் சொன்னேனே த‌விர, ‘Wannacome’ என உங்க‌ளை இங்கே வரச்சொல்ல‌வில்லையே. தவிர இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ விவ‌கார‌ங்க‌ளில் நீங்க‌ள் தானே எங்கள் தில்லியின் செல்ல‌ப்பிள்ளை?.

இராம்: எப்பொழுதிலிருந்து நீங்க‌ள் த‌மிழில் பேச‌ தொட‌ங்கினீர்க‌ள் அதிப‌ர் அவ‌ர்க‌ளே? இது உங்க‌ள‌ சிங்க‌ள‌ மொழிக்கு நீங்கள் செய்யும் துரோக‌மாகாதா?

இராச‌ப‌க்சே: நான் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அதிப‌ராக‌ இருந்த‌ கால‌ம் முடிந்து விட்ட‌து ந‌ண்ப‌ரே, இப்பொழுது நான் இல‌ங்கையில் உள்ள‌ எல்லா இன‌க்குழுக்க‌ளுக்குமான‌ அதிப‌ர், த‌மிழ் இன‌க்குழுவையும் சேர்த்தே. அதாவது த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் சிறையில் இருந்தாலும் ச‌ரி, புல‌ம்பெய‌ர்ந்து வேறு நாடுக‌ளில் இருந்தாலும் ச‌ரி நான் தான் அவ‌ர்க‌ளின் அதிப‌ர்.

இராம்: உங்க‌ள் ச‌ர்வாதிகார‌த்தை அண்டி வாழும் சில‌ த‌மிழ‌ர்க‌ளை ம‌ட்டும் நீங்கள் வெளியில் விட்டு வைத்துள்ளீர்க‌ள். நீங்க‌ள் தான் நான் ச‌ந்தித்ததிலேயே மிக‌ப் பெரிய‌ பொறுக்கி (செல்ல‌மாக‌). அதிலும் நீங்க‌ள் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ரும் கூட .

இராச‌ப‌க்சே: பொறுக்கி என்ற‌ சொல்லை எவ்வ‌ள‌வு அன்பாக‌ கூறுகின்றீர்க‌ள் இராம் !. என‌க்காக‌ நீங்க‌ள் உங்க‌ள் அர‌சுட‌ன் ந‌ட‌த்தும் திற‌மையான‌ அர‌சுற‌விய‌ல் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க‌வே மாட்டேன். நீங்கள் எப்போதுமே ஊடகவியலாளர் என்பதற்கு ஒரு படி மேலானவர். எங்கள் அரசினுடைய விருப்பத்துக்குறிய தரகரல்வோ நீங்கள். வரும் ஆண்டுக்கான விபீச‌னா விருது ப‌ட்டிய‌லில் நான் உங்க‌ளின் பெய‌ரை சேர்த்திருக்கின்றேன் . லங்கா இரத்னா விருது பெறும் 'இந்து' என். இராம்

இராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிசுக‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான். அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன்

இராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது. நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.

இராம்: உங்க‌ளுக்கு வ‌ரும் ப‌ண‌த்தின் அள‌வு சுருங்கிவ‌ருகின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே, இது உல‌க‌ப் பொருளாதார‌த்தின் தேக்க காலம். தவிர உங்க‌ள‌து க‌ழுத்தைச் சுற்றியிருக்கும் கயிறு இறுகுவது போலுள்ளது, உங்க‌ள‌து ஆட்சிகால‌த்தில் ந‌டைபெற்ற‌ போர்க்குற்ற‌ங்க‌ளை விசார‌ணை செய்ய‌ வேண்டும் என‌ பன்னாட்டு அமைப்புகள் கோரி வ‌ருகின்ற‌ன. க‌ட‌ந்த‌ ஆண்டு உங்க‌ள‌து இராணுவ‌ம் த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் அமைப்பை ஒன்றும் இல்லாம‌ல் செய்த‌ போது, ஒரு வார‌த்தில் மட்டும் 20,000 அப்பாவி த‌மிழ்ப் பொதும‌க்க‌ளை கொன்றார்க‌ளே, அந்த‌ கோர‌ நிக‌ழ்ச்சி நினைவிருக்கிறதா?

இராசப‌க்சே: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான். நான் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும். அண்மையில் “சேனல் 4″ எம‌து ப‌டையின‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளையும், அவ‌ர்க‌ளிட‌ம் ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருந்த‌ இசைப்பிரியா என்ற‌ பெண்ணையும் ப‌டுகொலை செய்யும் காணொளியை ஒளிப‌ர‌ப்பினார்க‌ளே. அதைப் ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்?

இராம்: கொடூர‌மான‌ ஒன்று, அதாவ‌து கொடூர‌மான‌ ஊட‌க‌விய‌ல் என‌க் கூற‌வ‌ருகின்றேன். உங்க‌ள‌து அர‌சை த‌வ‌றான‌ இட‌த்தில் வைத்துக் காட்டும் ஒரு காணொளியை அவ‌ர்க‌ள் எப்ப‌டி ஒளிப‌ர‌ப்ப‌லாம்? இது ஒரு முறைய‌ற்ற‌ ஊட‌க‌விய‌லை (Bad journalism) பி.பி.சி ஒரு போதும் கடைப்பிடிக்க மாட்டார்க‌ள். சேனல் 4 ம‌ட்டும் இப்படி கீழ்த்தரமாக செல்வார்கள்.

இராச‌ப‌க்சே: நீங்க‌ள் பி.பி.சி யுடனும் ஏதாவ‌து ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ளீர்க‌ளா, என்ன? என்னைப் பொருத்த‌வ‌ரையில் அவ‌ர்க‌ள் எல்லாம் ஒன்று தான். இந்த‌ வெள்ளைய‌ர்க‌ள் இன்னும் த‌ங்க‌ள‌து கால‌னீய‌ ஆட்சி ந‌ட‌ந்து கொண்டிருப்ப‌தாக‌ நினைத்துக் கொண்டு அவ‌ர்க‌ள் ஆப்கானிசுதானத்திலும், ஈராக்கிலும் செய்யும் இன‌ப்ப‌டுகொலைக‌ளை ம‌றைத்து, நாம் செய்த‌ இனப்ப‌டுகொலையை ம‌ட்டும் எல்லோருக்கும் சுட்டிக்காட்டுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ளால் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌முடியுமென்றால் ந‌ம்மாலும் செய்ய‌ முடியும்.

இராம்: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி. இது மனிதநேய முகமூடியுடன் அலையும் உல‌க‌லாவிய‌ ஏகாதிப‌த்திய‌ம். மாநிற‌ ம‌க்க‌ள் ம‌ட்டும் எப்பொழுதும் தவறு செய்து கொண்டும், ம‌னித‌ உரிமை விதிக‌ளை எப்பொழுதும் மீறிக் கொண்டும் இருப்பவர்கள், ஆனால் வெள்ளை இன‌‌ ம‌க்க‌ள் மட்டும் அற‌த்தின் ப‌டி ந‌ட‌க்கும் சாத‌னையாள‌ர்க‌ளாம்… நான் கேட்கிறேன், இப்படி ஒரு மாநிற‌ ம‌க்க‌ள் குழு ம‌ற்றுமொரு மாநிற‌ ம‌க்க‌ள் குழுவை கொல்வ‌திலெல்லாம் அப்படி என்னதான் தவறு இருக்கிறதோ?

இராச‌ப‌க்சே: இராம் இங்கு பிர‌ச்ச‌னை என்ன‌வென்றால் சில‌ மாநிற‌, க‌ருப்பின‌ ம‌க்க‌ளும் வெள்ளையின‌த்த‌வ‌ரை போல‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ ச‌ர‌த் பொன்சேகாவை எடுத்துக் கொள்ளுங்க‌ள், அவ‌ன் என்னிட‌ம் இராணுவத்‌ த‌ள‌ப‌தியாக‌ இருந்தான், ஆனால் ப‌ணியிலிருந்து ஓய்வெடுத்த‌ பின்ன‌ர் அவ‌ன் என்னை அர‌சிய‌லில் எதிர்த்து போட்டியிடுகின்றான். மேலும் நானும், என‌து ச‌கோத‌ர‌ர்க‌ளும் செய்த‌ போர்க்குற்ற‌ங்க‌ளை உல‌குக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டப்போவ‌தாக‌வும் கூறுகின்றான். இவை எல்லாம் எத‌ற்காக‌? அமைதிக்கான‌ ஒரு நோப‌ல் ப‌ரிசிற்காக‌வும், ஓய்வுக்கால‌த்தை சுவீட‌னில் க‌ழிப்ப‌த‌ற்காகவும் தானே?

இராம்: நீங்க‌ள் அந்த ஆளை சிறையில் அடைத்தது நல்லது. இல்லை என்றால் அவ‌ர் ந‌ம‌க்கு மிக‌ப்பெரிய‌ தொந்த‌ர‌வாக‌ இருந்திருப்பார். எங்களுக்கும் அவ‌ரது சத்தத்தை மூடி மறைத்துகொண்டிருந்தது கூச்சமாக இருந்தது.

இராச‌ப‌க்சே: அதற்காக நான் ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ளை வ‌ளைக்க ‌வேண்டியிருந்தது, ஆனால் அது எல்லாம் இல‌ங்கையின் ந‌ல‌னிற்காக‌த்தானே. புத்த‌ர் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் என‌து நாட்டில் அர‌சிய‌லமைப்பு என்று எதுவும் இல்லை. அப்ப‌டியிருக்க‌ இப்போது ம‌ட்டும் எத‌ற்கு ஒரு அர‌சிய‌ல‌மைப்பு? என்ன‌ தான் இருப்பினும் நாங்க‌ள் ஒரு பௌத்த‌ நாடு தானே. எங்க‌ள‌து ம‌த‌க் கொள்கைக‌ளை பாதுகாப்ப‌து எம‌து முக்கிய‌ க‌ட‌மை தானே.

இராம்: ச‌ரியான‌ க‌ருத்து. புதிய‌ வ‌ர‌லாறு எழுதுவ‌த‌ற்கு முன்ன‌ர் ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை முற்றிலுமாக‌ துடைத்து எறிந்துவிடுங்க‌ள். அற‌த்தின் வ‌ழியாக‌ நாம் ந‌ட‌ப்ப‌து போல‌ காட்டிக்கொள்வ‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று. ஏனென்றால் இந்த‌ (அற‌த்தின் வ‌ழி) த‌ள‌த்தில் எல்லோரும் ச‌ற்று குழ‌ம்பியே உள்ளார்க‌ள். மிக‌வும் ச‌த்த‌மான‌, உறுதியான‌ குர‌லே இறுதியில் எளிதாக‌ ம‌க்க‌ளைச் சென்ற‌டையும்.

இராச‌ப‌க்சே: குர‌ல் ம‌ட்டும் போதாது இராம், நம் மீது விம‌ர்சன‌ம் வைத்து ந‌ம்மைக் கீழே இற‌க்க‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ளை அமைதி ப‌டுத்த‌ ந‌ம‌க்கு துப்பாக்கியும் தேவை. ப‌டுகொலை என்ற‌ மிக‌ப்பெரிய‌ த‌ணிக்கை முறையை நான் ப‌ல‌ முறை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ தேவை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு அட‌ம்பிடித்த‌ அந்த‌ முட்டாள் பயல் ‘ச‌ண்டே லீட‌ர்’ இல‌சாந்த‌ விக்ர‌முதுங்காவிற்கும் இதே த‌ணிக்கை முறையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தாயிற்று.

இராம்: இதை எல்லாம் நீங்க‌ள் தொலைபேசியில் கூற‌க்கூடாது. நாம் பேசுவ‌தை எல்லாம் யாரோ ஒருவ‌ர் ப‌திவு செய்தால் என்ன‌வாகும் என‌ நினைத்துப்பாருங்க‌ள்?

இராச‌ப‌க்சே: நான் இந்த‌ தொலைபேசி ப‌திவு ஒரு இர‌ண்டாம் த‌ர‌ த‌மிழ் ந‌டிக‌னை வைத்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என‌க் கூறி ம‌றுத்துவிடுவேன். இப்பொழுது கொழும்பில் எங்க‌ளிட‌ம் எந்த‌ ஒரு ஒலி/ஒளி ஆதாரத்தையும் சிதைத்து போலியென மாற்றக்கூடிய ஆற்றல் படைத்த நிபுணர்கள் உள்ளனர்

இராம்: ஹா,ஹா..! நீரா ராடியா என்ற‌ பெரு முதலாளிகளின் வ‌ர்த்த‌க‌ த‌ர‌கு பெண்ம‌ணியுடனான தங்கள் தொலைபேசி உரையாடல் வெளிவ‌ந்த போது இந்திய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளான‌ ப‌ர்கா த‌த்தும், வீர் சிங்க்வீயும் எப்ப‌டி அதை பொய் என்று ம‌‌றுத்தார்க‌ளே, அவ்வளவு நேர்மையாக உள்ள‌து உங்க‌ள‌து ம‌றுப்புரையும். நான் கூட ஒரு தொலைக்காட்சி நிக‌ழ்ச்சியின் போது அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் வெளுத்து வாங்கி விட்டேன். அது என‌க்கு ந‌ன்றாக‌ இருந்த‌து. தாக்குத‌தல்தான்‌ பாதுகாப்பி‌ற்கான‌ சிறந்த வ‌ழிமுறை !.

இராச‌ப‌க்சே: நான் கூட‌ அந்த‌ நிக‌ழ்ச்சியைப் ப‌ற்றி கேள்விப்ப‌ட்டேன். அதில் நீங்க‌ள் பிர‌பு சாவ்லாவை ம‌ட்டும் க‌ண்டுகொள்ளாம‌ல் விட்ட‌தையும் நான் க‌வ‌னித்தேன். ப‌ர்கா, வீர் சிங்வீயை விட‌ மிக‌ மோச‌மான‌ ஆள் பிரபு சாவ்லா என கேள்விப்படுகிறேன். நீங்க‌ள் செய்த‌து புத்திசாலித்த‌ன‌மான‌ வேலை. அப்புறம், இந்தியாவில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் யாராவ‌து வேலை இழ‌ந்தால் அவ‌ர்க‌ளை உட‌னே இல‌ங்கைக்கு அழைத்து ஊட‌க‌விய‌லை சொல்லித்த‌ரும் க‌ல்லூரிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ளாக‌ ப‌ணியம‌ர்த்த‌வேண்டும் என‌ என‌து ஊட‌க‌ ஆலோச‌க‌ர் என‌க்கு ஆலோச‌னை கூறினார். அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் திற‌மைக‌ளை வைத்துக்கொண்டு நாம் ந‌ம்மை காத்துக்கொள்ள‌வும் முடியும், நமக்கு ஆதரவாக அவர்களை வைத்து பிரச்சாரம் செய்யவும் முடியும். ஒரே க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்க‌ள்.

இராம்: உங்க‌ள் காலடியிலேயே நான் கிடக்கும் போது மற்றவர்களெல்லாம் எத‌ற்கு அதிப‌ர் அவ‌ர்க‌ளே?

இராச‌ப‌க்சே: இத‌ற்கு எல்லாம் ம‌ன‌வ‌ருத்த‌ம் அடையாதீர்க‌ள் இராம். இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என‌க்கு நீங்க‌ள் மிக‌ விசுவாச‌மாக‌ இருந்து வ‌ந்துள்ளீர்க‌ள். இந்திய‌ ஊட‌க‌ங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள‌ ந‌ம்ப‌க‌த்த‌ன்மை, ம‌ரியாதையைக் கொண்டு நான் இதுவ‌ரை செய்த‌ ப‌டுகொலைக‌ளையும் ,குற்ற‌ங்க‌ளையும் வெளியே தெரியாம‌ல் மூடி ம‌றைத்து விட்டீர்க‌ள். ஆனால் உண்மை என்ன‌வெனில் உங்க‌ளுக்கு இப்பொழுது வ‌ய‌தாகிவிட்ட‌து. முன்பிருந்த‌தை போல‌ இப்பொழுதெல்லாம் உங்க‌ள‌து குர‌ல் அறை முழுக்க‌ க‌ணீரென‌ கேட்ப‌து இல்லை.

இராம்: அது உண்மை தான். ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நான் கூறிய‌ வார்த்தைக‌ளையே நான் என்னுள் விழுங்க வேண்டியிருந்ததால் அவை எல்லாம் என‌து குர‌ல் நாள‌ங்களை பாதித்துவிட்ட‌ன‌. எப்ப‌டி இருப்பினும் இந்தியாவில், அதாவ‌து புது தில்லியைப் பொருத்த‌வ‌ரை நான் தான் இருப்ப‌திலேயே தூய்மையான‌ க‌றைப‌டியாத‌ ஊட‌க‌விய‌லாள‌ன்.

இராச‌ப‌க்சே: உங்களுடைய சொந்த நலனையெல்லாம் எப்படித்தான் உங்களால் ஊடகவியல் நேர்மையாக மாற்றி பிடிபடாமல் தப்பிக்க முடிகிறதோ? என்ன‌தான் இருப்பினும் இந்து முனிவ‌ர்க‌ளின் கருத்துப்ப‌டி இது “க‌லியுக‌ம்” தானே

இராம்: இந்த‌ வேலையை எல்லாம் என‌து ஆரவாரமான ஆங்கில‌ம் செய்கின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே. நான் பேசும் போதும், எழுதும் போதும் ப‌ய‌ன்ப‌டுத்தும் சிக்க‌லான‌ வ‌ரிக‌ளை இந்த‌ முட்டாள்க‌ள் எல்லாம் வேத வாக்காக என்றே நினைக்கின்றார்க‌ள். நான் நினைக்கின்றேன் அங்கு உள்ள‌ பெரும்பாலானவ‌ர்க‌ள் என்னை முன்னாள் வைசிராயின் ம‌றுபிற‌வி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

இராசபக்சே: நீங்க‌ள ”மவுண்டு ரோட் மகாவிசுணு” அவதாரம் என்ற‌ல்ல‌வா நான் நினைத்தேன். ஹா,ஹா,ஹா.

இராம்: ஐயோ கடவுளே நான் ஒரு மார்க்சிசுடு கட்சியின் (சி.பி.எம்) உறுப்பினன்! நீங்க‌ள் கூறுவ‌து ந‌கைச்சுவையாக‌ இல்லை அதிப‌ர் அவ‌ர்க‌ளே. அந்த ‌ வ‌ரியை நான் வெறுக்கின்றேன்.

இராச‌ப‌க்சே: க‌ட‌வுளின் அவ‌தார‌மாக‌ இருப்ப‌த‌ற்கு வெட்க‌ப்ப‌டாதீர்க‌ள். நானும் கூட‌ என்னை போர்க்க‌ட‌வுளான‌ துட்ட‌கெமுனுவின் ம‌றுபிற‌வியாக‌க் கூறிக்கொள்வ‌தில்லையா என்ன‌. மார்க்சிசுட்டுக‌ள் கூட‌ க‌ட‌வுள்க‌ளாக இருக்க‌‌லாமே; இதை நாம் ந‌வீன‌ கால‌ வ‌ர‌லாற்றில் இருந்து தெரிந்துகொள்ள‌வேண்டும். ஆனால் உங்கள் மார்க்சிச‌ம் எனக்கு தலைகால் புரியவில்லை, அந்த வானவில்லில் நீங்கள் எந்த நிறத்தில் இருக்கிறீர்கள்? மஞ்சளா, ஊதாவா? க‌ண்டிப்பாக‌ நீங்க‌ள் சிக‌ப்பு நிற‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் கிடையாது என்றே நினைக்கிறேன்.

இராம்: நான் க‌ண்டிப்பாக‌ இந்த‌ உண்மையை ஒப்புக்கொள்ள‌ வேண்டும் அதிப‌ர் அவ‌ர்க‌ளே. என‌து ஆன்மாவிற்குள் என்னுடைய வ‌ர்த்த‌க‌ இலாப‌த்திற்கும் மார்க்சியத்தின் பாலுள்ள அறிவுபூர்வமான கவர்ச்சிக்கும் இடையே மிக‌ப்பெரிய‌ ச‌ண்டை போர் வ‌ருகின்ற‌து. ஒரு அற்ப முன்னாள் சோச‌லிச‌வாதியான‌ உங்க‌ளால் இதெல்லாம் புரிந்து கொள்ள‌முடியாது !.

இராச‌ப‌க்சே: என்னால் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ முடிகின்ற‌து இராம். உங்க‌ள‌து ஆன்மா இலாப‌த்திற்கும் மார்க்சியத்துக்கும் இடையில் முரண்படும் போது, உங்க‌ளிட‌ம் உள்ள‌ பிராமணன் அந்த இர‌ண்டு பக்கங்களிடமும் எவ்வ‌ள‌வு இலாப‌ம் பார்க்க‌முடியுமோ என்பதை கவனமாக கணித்து அதை பெறும் வேலையை செய்துகொண்டிருக்கின்ற‌து.

இராம்: நீங்க‌ள் ஒரு சாதிய‌வாதீ அதிப‌ர் அவ‌ர்க‌ளே. ஒரு ந‌ல்ல‌ பௌத்தரான‌ நீங்க‌ள் இதுபோல‌ல்லாம் பேச‌க்கூடாது. அது ஒரு ச‌ரியான‌ சோச‌லிச‌மோ, மார்க்சிய‌மோ அ‌ல்ல‌ !

இராச‌ப‌க்சே: இப்பொழுது நீங்க‌ள் கூற‌வ‌ருவ‌தை நான் ச‌ரியாக‌ புரிந்துகொண்டேன் இராம். இது போன்ற‌ குழப்பங்களிலிருந்து நீங்க‌ள் வெளியேவ‌ர‌ வேண்டும். நீ ஒரு சாண‌க்கிய‌னைப் போல‌ ந‌ட‌ந்தால், பேசினால். நீ ஒரு சாண‌க்கிய‌ன்! உங்கள் முதுமையை இப்போது நான் கணிக்கிறேன். உங்கள் ப‌த்திரிகைப் பேர‌ர‌சை இளைஞ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பதற்கு மறுப்பது, உங்கள் நண்பர்களை பாதிக்கக்கூடிய செய்திகளை வெளியிடாமல் மூடி மறைப்பது அதே நேரம் ஊடக நேர்மைக்கு வகுப்பெடுக்கும் ஒரு ‘மடமாக’ உங்களை நிலை நிறுத்திக்கொள்வது.

இராம்: நீங்க‌ள் எத்த‌னை கால‌ம் உங்க‌ள் பௌத்த‌ நாட்டிற்கு அதிபராக‌ இருக்கின்றீர்க‌ளோ, அதுவ‌ரை நானும் என‌து ப‌த்திரிகைக்கு ஆசிரியராக‌ இருக்க‌ விரும்புகின்றேன். இந்த ஒரு சின்ன‌ இல‌ட்சிய‌த்தைத் தான் நான் கொண்டுள்ளேன். இது எல்லாம் உங்க‌ள‌து ஆசிர்வாத‌மும், வாழ்த்துக‌ளும் இருந்தால் தான் ந‌ட‌க்கும்.

இராச‌ப‌க்சே: இனிய‌ இர‌வு இராம், உங்களின் மேம்படுத்தப்பட்ட‌ விவரணத்தை (Updated Curriculam Vitae) நான் குறிப்பிட்ட‌ அந்த‌ விபிசன விருதிற்காக‌ அனுப்ப‌ ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்.

இராம்: இனிய‌ இர‌வு அதிப‌ர் அவ‌ர்க‌ளே. உங்க‌ள‌து கெட்ட‌ க‌ன‌வுக‌ள் எப்பொழுதும் ப‌லிக்காம‌லே இருக்கவேண்டும்.

முற்றும்…..

நன்றி
வினவு இணையம்

இந்த புனைவை எழுதிய ச‌த்ய‌ சாக‌ர் ஒரு எழுத்தாள‌ர், இய‌க்குந‌ர். இவ‌ர் தில்லியில் வ‌சித்துவ‌ருகின்றார். இவ‌ரை நீங்க‌ள் sagarnama@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வரியில் தொட‌ர்பு கொள்ள‌லாம் ்
World newsSports

Media silence about eezham tragedy: ஈழப்பதிவுகளுக்கு தமிழக ஊடகங்களில் இடமில்லை. ஆபாசத்திற்கு மட்டும் தாராளமான இடம் ஏன்?'' - மணா

natpu ''ஈழப்பதிவுகளுக்கு தமிழக ஊடகங்களில் இடமில்லை. ஆபாசத்திற்கு மட்டும் தாராளமான இடம் ஏன்?'' - சுடும் உண்மை சமீபத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்தைப் பற்றிய நிகழ்வு. அதில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊடகவியல் மாணவ, மாணவியர் என்பதுதான் இந்த நிகழ்வின் சிறப்பு.
இலங்கை இனஅழிப்புக் கொடுமைக்குப் பிறகு அங்கிருந்து வந்திருக்கும் மாணவர்களைப் பார்த்துப் பேசுவது என்பதே தமிழக ஊடகம் சார்ந்தவன் என்கிற முறையில் ஒருவிதத்தில் அந்நியமாக இருந்தது.
natpu நம்மைப் போலில்லை அவர்களுடைய இயல்பான வாழ்க்கை. போர்ச்சூழலும். ஊரடங்கு அறிவிப்புகளும்,  சொந்தங்களின் மரணங்களும், மொழியை முன்வைத்த துவேசம் காட்டும் அரசின் இறுக்கம் என்று வாழ்வின் உக்கிரமான பலவற்றை அனுபவித்த மக்களின் பிரதிநிதிகளாக வரும் மாணவர்களைச் சந்திக்கும்போது அவர்களை மீறிய எந்த அனுபவத்தை இங்குள்ள ஊடகம் சார்ந்தவர்களால் சொல்லிவிட முடியும்?
இந்தத் தயக்க உறுத்தலுடன் - தமிழகத்தில் உள்ள காட்சி ஊடகங்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் ''உங்கள் வாழ்க்கையின் உக்கிரத்தைப் பதிவு செய்யத் தவறிய குற்ற உணர்வுடன் உங்களுக்கு முன்னால் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டியிருக்கிறது'' என்றுதான் அவர்களுக்கு முன்னால் மென்மையாகப் பேச ஆரம்பித்தேன்.
வேறு எப்படித் துவக்க முடியும்?
தமிழகத்தில் காட்சி ஊடகம் என்கிற வலிமையான கருவிகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைப் பல அனுபவங்களுடன் விவரித்தேன். ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரை மத்திய அரசின் நிலை ஒருசார்புடன் இருந்த நிலையில் - தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் எந்தவிதமான கண்காணிப்பு நிகழ்ந்தது? அதனால் பல செய்திகள் வர இயலாத சூழல் எப்படித் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது? என்பதையும் சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மாணவி ஒருவர் கைப்பட எழுதி கேள்வியொன்றை  அனுப்பினார்.
கேள்வி இதுதான்.
natpu ''ஈழத்தில் எத்தனையோ கொடூரமான நிகழ்வுகள் நடந்தபோதும், மிகச் சமீபத்தில் இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை ''சேனல் 4” போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியபோதும் தமிழகத்தில் உள்ள பல தொலைக்காட்சி சேனல்கள் அவற்றை ஒளிபரப்பாதது ஏன்? வெறும் கேளிக்கையும், ஆபாசமுமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருப்பது எதனால்?''
தமிழகத்தில் ஊடகத்தில் பணியாற்றுபவர்களின் மனச்சாட்சிக்கு முன்னால் தொடுக்கப்பட்ட நியாயமான கேள்வி. அதில் கொஞ்சமாவது சமூக அக்கறை உள்ளவர்களை மனம் குமையச் செய்கிற கேள்வி.
“ஒன்றை மட்டும் முதலில் சொல்லவேண்டும். இங்கிருப்பது தமிழ், தமிழன் மீதான அசலான அக்கறை அல்ல. அக்கறை இருப்பதைப் போன்ற பாவனை. அதைத்தான் குறிப்பிட்ட இயக்கங்களும் செய்கின்றன. அதே பார்வையுடன் இருக்கும் ஊடகங்களும் செய்கின்றன. ஊடகங்கள் சில பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கும் நோக்கம் இருக்கிறது. பேசாமல் மௌனமாக இருப்பதற்கும் நோக்கம் இருக்கிறது. அரசியல் பின்புலம் இருக்கிறது. இது ஏன்? தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களைப் பற்றிய ஆய்வுக்காக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டிற்கு நானும், நண்பர் ஒருவரும் போயிருந்தோம். போய் இறங்கி அங்குள்ள இந்தியத் தூதரான வங்காளியைச் சந்தித்தபோது அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். ''இது அதிகபட்சமான 'தணிக்கை' அமல் செய்யப்பட்ட நாடு. அதனால் தொழிலாளர்களைக் கவனமாகச் சென்று பாருங்கள். இல்லை என்றால் உடனே கைது பண்ணிவிடுவார்கள்'' என்று.
natpu அதையும் மீறித்தான் அங்கு சில நாட்கள் தங்கி பல பகுதிகளில் மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டிருந்த தமிழகத் தொழிலாளர்கள் பலரைச் சந்தித்துப் பேசினோம். சாலைகளின் நடுவே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை, வெக்கை கனக்கிற இடங்களில் தங்கியிருந்த தொழிலாளர்களைச் சந்தித்தோம். தமிழர்களில் பலர் அடுத்தடுத்துக் காணாமல் போனதாகச் செய்திகளும் அங்குள்ள நாளிதழ்களில் வெளிவந்து கொண்டிருப்பதையும் பார்த்தோம். சுமார் முப்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த நாட்டிற்கும் திரும்ப வழியற்று, பாஸ் போர்ட்கள் முடக்கப்பட்டு, வெதும்பிப்போய் வாழ்வதைப் பார்த்து அதிர்ந்து போனோம். சிலர் கண்ணீர் விட்டு அழுததையும் வேதனையுடன் பார்க்க முடிந்தது.
அதேசமயம் அங்குள்ள மலையாளிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை வெளியிட அங்கு மலையாள சேனல்கள் இருக்கின்றன. நாளிதழ்களும், வார இதழ்களும் இருக்கின்றன. உடனே அங்கு வருகை தர கேரள அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்கள். எங்கோ இருந்து உழைத்துத் தன்னுடைய நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தங்களுடைய மாநிலத் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாடு கடந்தும் அவர்கள் பதறுகிறார்கள். செயல்படுகிறார்கள்.
ஆனால் நாடு கடந்து போய் நாங்கள் எடுத்துவந்த தமிழகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளியிட பல முன்னணி இதழ்கள் வெளியிட முன்வரவில்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட பலருக்கு பிரச்சினைகளை அறிக்கையாக அனுப்பியபோது - குளத்தில் கல்லெறிந்த சத்தம்கூடக் கேட்கவில்லை. இறுதியில் ஒரு நடுநிலை இதழில்தான் அந்தக் கட்டுரையை என்னால் வெளிக்கொண்டுவர முடிந்தது.
இங்கும் தமிழகத் தொழிலாளர்கள் மூலம் அந்நியச் செலாவணி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அதை அனுப்பித் தருகிற தமிழர்களின் மிக மோசமான நிலைமையைக் கண்டுகொள்ளக்கூட இங்கு மனமில்லை.
natpu தமிழகத்தில் இருந்து சென்ற தமிழர்களின் துக்கங்களுக்கு இதுதான் மரியாதை. இவர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழக அரசியல் கட்சிகளால் மாற்றி மாற்றி வெவ்வேறு விதமான பார்வைகளை முன்வைக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை ஒட்டி முடிவெடுக்கும் தமிழக மக்கள் ஈழத்தமிழர்கள் பற்றி என்ன முடிவெடுக்க முடியும்? அவர்கள் பார்க்கிற ஊடகங்கள் வழியாக – அவர்கள் நம்பும் தலைமை வழியாக - வந்தடையும் செய்திகள் வழியாகத்தானே அவர்கள் தங்களுக்குள் ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்?
ஈழப் பிரச்சினையில் வட இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஒன்றைக் கொடுக்க தென்னிந்திய தொலைக்காட்சிகள் ஒன்றைக் கொடுக்க அதில் எதை நம்புவது? எதைத் தவிர்ப்பது? என்பதைக் கூட இங்குள்ள தமிழ் மக்களால் முடிவு செய்ய முடியவில்லை. அவர்களைத் தெளிவுபடுத்தும் பணியை எந்த ஊடகங்களும் செய்யவில்லை. இதுதான் உறுத்தக்கூடிய உண்மை.
பக்கத்து நாட்டில் நடந்த மிகக் கொடூரமான இன அழிப்பைப் பதிவு செய்யாத ஊடகங்கள் எப்படி ஆபாசத்தை அனுமதித்துக் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் கேட்கிற கேள்வி மிக நியாயமானது. ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் கேட்கத் தவறியதும் கூட.
யதார்த்தத்தை வெளிப்படுத்துவதைவிட எதை நோக்கியோ திசைதிருப்பும் காரியம்தான் ஆபாசத்தை ஒளிபரப்புவதன் மூலமாக நடக்கிறது. அதைப் பார்ப்பதன் மூலம் தொடர்ந்து ஒருவிதக் கிளர்ச்சி பார்ப்பவர்களுக்கு உருவாகிக்கொண்டிருக்கிறது. பக்கத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அதன் வெக்கை நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் பக்கத்தில் பயாஸ் கோப்பில் ஆபாசமான ஒன்றைப் பார்க்கும் மனிதர்களாக நம்மை மாற்றியமைத்திருக்கிறார்கள். நாமும் அதற்கு மறைமுகமாக இசைந்து கொண்டிருக்கிறோம்.
natpu இங்கு எதை அனுமதிப்பது என்பதிலும் திட்டமிட்ட அரசியல் இருக்கிறது. எதை அனுமதிக்கூடாது என்பதிலும் திட்டமிட்ட அரசியல் இருக்கிறது. இது தான் இங்குள்ள நிலைமை''  என்று பேசி முடித்ததும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த மாணவர்கள் நெருக்கத்துடன் வந்து பேசினார்கள்.
''தமிழக ஊடகங்களைப் பற்றிய கடுமையான விமர்சனமும், கோபமும் எங்களிடம் இன்னும் இருக்கிறது. இப்போது நீங்கள் பேசியது எங்கள் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது'' என்றார்கள் மிருதுவாக.
நம் தரப்பிலான உண்மை எப்படியெல்லாம் சுடுகிறது!




Comments

Thank you for commenting!
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
உண்மைகளை வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார் மணா. ஊழல் வெளிப்பாடுகளும் மறைப்புகளும் கட்சிநலம், அமைப்பு நலம், அரசியல் நலம் சாரந்து அமைகின்றனவே தவிர நேர்மையின் அடிப்படையில் வாய்மையின் அடிப்படையில் அமைவன அல்ல. நம் ஊடகங்கள் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் தமிழ்ஈழ மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். நீங்களாவது. உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(4 days ago) Anonymous said:
மனதுக்கு வலி ஏற்படுத்துகிறது உங்கள் கட்டுரை.


Thiruvalluvar day at Mauritius மொரீசியசில் திருவள்ளுவர் விழா

மொரீசியசில் திருவள்ளுவர் விழா

OLYMPUS DIGITAL CAMERA
மொரீசியசில் திருவள்ளுவர் விழா தை 2 ஆம் நாள் (16/01/2011) அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.முற்பகல் பதினோரு மணிக்குச் சுப்பிரமணிய பாரதியார் விரிவுரையரங்கில் திருவள்ளுவர் நாள் திரு.ஆர்.துவாரகா (ஆட்சிக்குழுத்தலைவர், மகாத்மா காந்தி கல்விநிறுவனம்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 

மாண்புமிகு தகவல் தொடர்புத்துறை அமைச்சர்,தசராசன் பிள்ளை அவர்களின் சொற்பொழிவும் மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் இலக்குவனார் மறைமலை  அழைக்கப்பட்டிருந்தார்.
“திருக்குறளும் அதன் எதிர்காலவியல் நோக்கும்” என்னும் தலைப்பில் பேராசிரியர் மறைமலை சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தமிழ்த்துறைத்தலைவர் கேசவன் சொர்ணம் நன்றியுரை வழங்கினார்.தமிழ் விரிவுரையாளர் திருமதி மாணிக்கம் தொகுப்புரை வழங்கினார்.அரசுத் தலைமைக் கொறடா சுரேன் தயாள்,மோரீசியசு நாட்டுக்கான இந்தியத் தூதர் எம்.கணபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். விழாவுக்கு  மோரீசியசு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் திரளாக  திரண்டு வந்திருந்தனர்.
அதன்பின்னர் பிற்பகல் ஒருமணிக்கு மோரீசியசுத் தமிழ்க்கோவில்கள் கூட்டமைப்பு வளாகத்தில் அமைந்திருந்த திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் தசராசன் பிள்ளை சிதம்பரம்,முகேசுவர் சூனீ, திருமதி லீலாதேவி தூக்குன், அரசுத்தலைமைக் கொறடா  சுரேன் தயாள், மோரீசியசு நாட்டுக்கான இந்தியத் தூதர் எம்.கணபதி ஆகியோரும்  பேராசிரியர் மறைமலையும் கூட்டமைப்புத் தலைவர் திரு.மேனன் மருதையும் ஏனைய தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் மாலை அணிவித்தனர்.
இங்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பெருமக்கள் வந்திருந்து சிறப்பித்தனர்.
தைப்பூச விழாவையொட்டிப் பல்வேறு கோவில்களிலும் விரிவுரை நிகழ்த்த தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த தவத்திரு ஊரன் அடிகள் அவர்களும் சைவசித்தாந்த அன்பர் திருக்கூட்ட அமைப்புத் தலைவர் பேராசிரியர் அருணாசலம் புட்பரதம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
விழா நிகழ்ச்சிகள் வானொலி, தொலைக்காட்சித் துறையினர் மூலம் நாடெங்கும் ஒலிபரப்பபட்டன.

Periyar for separate thamizh nadu: பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! – தலைவர் கொளத்தூர் மணி

பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! – தலைவர் கொளத்தூர் மணி

dscf46994
மீண்டும் மீண்டும் பெரியாரை கொச்சைப்படுத்தும் சில தமிழ்த் தேசியவாதிகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக பதிலளித்தார். டிசம்பர் 24 அன்று வடசென்னை பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் கழகத் தலைவர் ஆற்றிய உரை:
இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக் கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்த நாள் விழாக்களைவிட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்களை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவுக்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய தேவையை, இவை எல்லாவற்றையும் எண்ணி பார்க்கிற நிகழ்ச்சியாகவும் இருக்கும். நினைவு நாள் கூட்டம் என்பதுதான் ஒரு இயக்கத்திற்கு மிகவும் தேவையானது என்ற அடிப்படையில், இன்று நாம் பெரியார் நினைவு நாள் எடுக்கிறோம்.
நம் நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிகப் பெரிய தலைவராக கருதப்பட்ட மனிதர்களுக்கும் மேலாக கருதப்பட்ட ‘மகாத்மா’க்களெல்லாம் வாழ்ந்திருக் கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் என்பது, அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்குவதை படம் பிடிக்க, செய்தியாளர்களை ஏற்பாடு செய்வது என்ற அளவோடு முடிந்து விடுகிறது. நினைவு நாள் கூட்டங்களில் அவருடைய கொள்கைகளைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் நம்மிடம் என்ன எதிர்பார்த்தார் என்பதையோ, நாம் அவருடைய வழியில் ஏன் செல்ல வேண்டும் என்ற தேவையை விளக்குவதற்கோ எந்த முயற்சியும் செய்வ தில்லை. தமிழ்நாட்டிலும் பெரியாருக்கு இணையாக (வயதில்) வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார். இந்த நாட்டின் பொறுப்பில் இருந்தார். குடிஅரசு தலைவருக்கு இணையான, கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு உள்துறை அமைச்சர், இலாகா இல்லாத அமைச்சர், முதலமைச்சர் என இருந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குள் இறந்து போன இராஜாஜி, அவர் உயிரோடு இருந்த காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினர், அவரை மூதறிஞர் என்றெல்லாம்கூட பாராட்டினர். இன்று அவரைப் பற்றிப் பேச ஆள் இல்லை. சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் இராஜாஜி சிலை இருக்கிறது. அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், நகராட்சி ஊழியர்கள் சலிப்போடு ஒரு மாலை அணி விக்கிறார்கள். வேறு யாரும் மாலைகூட அணிவிப்பதில்லை.
ஆனால், பெரியார் மறைந்து இவ்வளவு காலங்களுக்குப் பின்னால், முப்பத்தி ஏழு ஆண்டுகள் கடந்த பின்னாலும், அவருடைய கொள்கைகளைப் பேச, செயலாற்ற பல இயக்கங்கள், பெரியாரை இன்றும் பேசியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பல இயக்கங்கள் இருப்பதை பார்க்கிறோம். பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரை விமர்சித்தவர்கள் கூட, இன்று பாராட்டி போற்றுவதை பார்க்கிறோம். பொதுவுடமை இயக்கங்கள் எல்லாம் அவரைப் பற்றி பேசினர். முதலாளித்துவ சிந்தனையாளர் என்று சொன்னார்கள். “அடிக் கட்டுமானத்தில்” இல்லாத சமயத்தை, சாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எகத்தாளம் செய்தவர்களெல்லாம், இன்று அவர் கொள்கைகளைத் தான் பேசிக் கொண்டிருக் கிறார்கள். அதை செயல் திட்டமாக வைத்துக் கொண் டிருக்கிறார்கள். உலகத்தில் தங்களைவிட அறிவாளி கள் யாரும் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கம் சி.பி.எம். கட்சி. அவர்கள் பெரி யாரைப் பற்றி செய்கிற விமர்சனங்கள் (பெரியாரை மட்டும் அல்லாமல், தமிழர், தமிழீழம் பற்றியும்) எதிராகத்தான் இருக்கும். இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று வைத்துக் கொண்டு, சாதி ஒழிப்பை ஒரு செயல் திட்டமாக வைத்திருக்கிறார்கள். அதை நாம் விமர்சிக்கவில்லை; வரவேற்கிறோம். பெரியார் இறுதியாக கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருந்தார். அனைத்து சாதி யினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவிலின் கருவறையில் தொண்டர்களோடு நுழையப் போவதாக அறிவித்தார். அப்போது வரவேற்றார்களோ இல்லையோ, இப்பொழுது வருகிற ஜனவரி 30-ம் நாளில், இந்திய பொதுவுடமைக் கட்சி அதே மன்னார்குடி ராஜ கோபால்சாமி கோவிலில் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் சொன்ன, சமய வழிபாட்டு இடங்களிலும் சமத்துவம், தமிழ் மொழிக்கு முன்னுரிமை வேண்டும் என்பதைப் பற்றியே பேசுகிறார்கள்.
பெரியார் 1925-க்கு முன்னால் பேசியவற்றை, சுமார் எண்பது, எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுது எல்லோரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல மருத்துவர் என்பவர் நோயை துல்லியமாக தெரிந்து  கொள்வார். அதுவே பாதி மருத்துவம் முடிந்தது போல என்று சொல்வார்கள். அதேபோல பெரியார், இந்த சமுதாயத்தின் நோயை மிகத் துல்லியமாக அறிந்திருந்தார். அதற்கான மருந்தை மிகச் சரியாக மக்களிடத்தில் கொண்டு போய் கொடுத்தார் என்பதை பெரியார் தொண் டர்களைவிட அவர்கள் சரியாக புரிந்து கொண்டிருக் கிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், பழுத்த மரத்தின் மீது தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். இப்பொழுது அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு பழுத்த மரமாக கண்ணுக்கு தெரிவது பெரியார் தான். பெரிய தத்துவங்களை பேசுகிறவர்கள் எல்லாம், பெரியார் மீது தங்கள் விமர்சனங்களை பேச துடிக் கிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர் மீது குற்றச்சாட் டுக்களை வைத்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் கூட, பெரியாரை தமிழ் தேசத்தின் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார். (அவரிடம் நாம் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை) பெரியார் குழப்பமாக பேசினார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியார், தமிழ் தேசியமே பேசவில்லை. தனி தமிழ்நாடு வேண்டும் என்று தான் பேசினார் என்பதை இவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்றால், ஸ்டாலினும், லெனினும் ஒரு கொள்கையை உண்டாக்கி வைத்து விட்டார்கள் என்பதற்காக பெரியார் இங்கு தனி தமிழ்நாடு கேட்கவில்லை. ரஷ்யாவில் தைத்து விட்ட செருப்பை எடுத்துக் கொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் – அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். பிரிந்து செல்லும் உரிமையோடு இணைந்து வாழ விரும்புகிற சிந்தனை அவருக்கு இருக்கவே இல்லை. நாம் இணைந்து வாழ முடியாது, பிரிந்தே சென்றாக வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னவர். “அருகோ” எனும் தோழர் அரு.கோபாலன் சொல்லிக் கொண் டிருக்கிறார் “திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டு நாள் அன்று காலை வரை, தமிழர் கழகம் என்று பெயர் வைப்பதாக இருந்ததாம். நீங்கள் கன்னடராயிற்றே, தமிழர் கழகம் என பெயர் வைப்பதா என்று, சத்யமூர்த்தி அய்யர் பெரியாரிடம் தொலைபேசியில் கேட்டாராம். உடனே திராவிடர் கழகம் என பெரியார் மாற்றிக் கொண்டாராம்”. சத்யமூர்த்தி அய்யர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான், அந்த மாநாடே நடைபெற்றது. இறந்து போனவர் எப்படி தொலைபேசியில் பேச முடியும் என நமது பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதினார். பிறகு இராஜாஜி பேசியதாக மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் நுணுக்கமான கேள்விகளைப் பார்ப்பனர்கள்தான் கேட்க முடியும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலும். 1939 முதல் தமிழர், திராவிடர் என்பதை பற்றி பேசி விவாதிக்கப்பட்டு, பெரியார் தெளிவான விளக்கத்தையும் சொல்லியிருக்கிறார். தமிழர் கழகம் என்பது மொழி போராட் டத்திற்கு தான் பயன்படும். சமூக விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதி தான் மொழி போராட்டமே யொழிய, அதுவே முழு போராட்டமாகி விடாது. இந்தி எதிர்ப்பு என்பது மொழி போராட்டம் அல்ல, தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, சமயயியல் இவற்றில் ஆரியத்தை, மனுதர்மத்தை புகுத்த நினைக்கும் சூழ்ச்சிக்கு எதிரானது என்றே பெரியார் சொன்னார்.
பெரியார் மறைந்த அடுத்த மாதமே, 1974 ஜனவரியில் திராவிடர் கழகத்தால் ஒரு பிரச்சார பயணம் தொடங்கப் பட்டது. அப்பொழுது மணியம்மையார் தலைவராக இருந்த காலம். “பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடிப்போம்” என்று சூளுரையை பொதுக் கூட்டத்தில் நாங்களெல்லாம் உறுதிமொழியாக எடுத்தோம். உறுதிமொழியை எங்களுக்கு சொன்ன மணியம்மையார் மறைந்தார். அவருக்கு பின்னால் சொல்லிக் கொண்டிருந்தவர் சூளுரையை மறந்து விட்டார். இப்பொழுது நாங்கள் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் தான், அதை பின்பற்றச் சொல்ல முடியும். பெரியாரின் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த வீரமணி அவர்கள், நாங்கள் வெளியிட்ட பெரியாரின் நூல்களுக்கு, ‘குடிஅரசு’ தொகுப்பு வெளியீட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார். பெரியார் நீண்டகாலமாக திராவிடர் என்ற சொல்லை எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாரென்பது அந்த குடிஅரசு பக்கங்களை புரட்டும்போது தெரிகிறது. திராவிடர் என்ற சொல்லை இன விடுதலைக்கு, சமூக விடுதலைக்கு அவர் பயன்படுத்தினார். நம்மை அடிமையாக்கிய ஆரியத்திற்கு எதிரான சொல்லாக திராவிடத்தை பார்த்தார். அரசியல் விடுதலைக்கு தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசினார். சமூக விடுதலை என்று வருகிறபோது திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத் தினார்.
1944 இல் தென்னிந்திய நல உரிமை சங்கம், திராவிடர் கழகம் என மாற்றப்படுவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்க தலைமையோடு, நீதிகட்சி தலைமையையும் பெரியார் ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு விட்டன. 1942 ஆம் ஆண்டிலேயே திருச்சியில் உள்ள பொன்மலையில் திராவிடர் கழக ஆண்டு விழா கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார். 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை துவங்கி வைக்கிறார். 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் திராவிடர் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் பேசுகிறார். திராவிடர் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இயங்குகிறது என்றாலும், அதிகார பூர்வமாக பெயர் மாற்ற எப்பொழுது முடிவு செய்தார்கள் என்றால், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியிலுள்ள தேவாங்கர் பள்ளிக்கூடத்தில் நீதிக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடை பெற்றிருக்கிறது. 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாத குடிஅரசில் (26.11.1943) அக்கூட்டத்தின் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம் என்பதை, தமிழில் திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் சௌத் இந்தியன் திரவிடியன் பெடரேசன் (South Indian Dravidian Federation) என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும், கடந்த திருவாரூர் மாநாட்டில் திட்டமிட்ட படி அடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் இதை அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று தமிழ் தேசியவாதிகள், காலையில் முடிவு செய்து, மாலையில் பெரியார் மாற்றிக் கொண்டதாக, பொய்ப் பிரசச்hரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரியார் ஒரு பழுத்த மரம் என்பதுதான்.
பெரியார், திராவிட நாடு என்று சென்னை மாகாணத்தைதான் சொன்னார். நான்கு நாடுகளின் கூட்டு அரசே, திராவிட நாடு என்று அண்ணா தான் சொன்னார். அண்ணாகூட பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளின் கூட்டு அரசாகத் தான் திராவிட நாட்டை கூறினார். மொழி வழி பிரிந்தும், இன வழி கூடியும் உள்ள நாடாகத்தான் திராவிட நாட்டை கூறினார். முப்பது மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையோடு நான்கு நாடுகள் கொண்ட அண்ணாவின் திராவிட நாட்டை ஏன் விமர்சிக்கிறார்களோ, நமக்கு புரியவில்லை.
அப்படித்தான் எல்லைப் போராட்டத்தில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்றும், இப்பொழுது ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 1953 இல் ஆந்திரா பிரிந்தபோதுதான் இந்த சிக்கல் வந்தது. அப்போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று, திருத்தணியில் நடந்த ஒரு எல்லைப் போராட்டம், மற்றொன்று சென்னை நகரை ஆந்திராவுக்குக் கேட்டார்கள் என்பது. இதில் பெரியார் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, வேலூரில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசுகிறார், எல்லைப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். “முதல் கூட்டத்தில் ம.பொ.சி. உட்பட நாங்கள் எல்லோரும் கலந்து கொண்டோம். எல்லைப்போராட்டத்தைப் பற்றி பேசினோம். அப்போது நான் ஐந்து திட்டங்களை முன் வைத்தேன். எல்லைப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயார். இந்தப் போராட்டத்தோடு இந்தி எதிர்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். படை, போக்குவரத்து, வெளியுறவு துறை தவிர அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குதான் இருக்க வேண்டும். சென்னை ராஜ்யம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தட்சிண பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நினைக்கிறது அதை எதிர்க்க வேண்டும்” – என்று.
இந்த ஐந்து கோரிக்கைகளில், தமிழ் தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால், தமிழ் தேசத்தின் தந்தையாக கருதப்படுகிற ம.பொ.சி. சொன்னார் – அவர், “நான் இந்தியன் என்பதால் இந்தி மொழியை ஏற்றுக் கொள்கிறேன். நான் இந்து என்பதால்  என் சமய சடங்குகளில், சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என்றவர். இதை இரண்டையும் எதிர்த்த பெரியார் வைத்த அந்த கோரிக்கைகளுக்கு, “கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவே வேண்டாம்” என ம.பொ.சி. சொன்னார். ம.பொ.சி. உயிரோடு இருந்த காலத்தில் பெரியார் இதை பதிவு செய்துள்ளார். தாராளமாக நீங்கள் போராடுங்கள், நாங்கள் உங்களோடு இணைந்து நிற்க முடியாது என்று பெரியார் தெரிவித்து விட்டார்.
அதன் பின்னால் சென்னையைப் பற்றி விவாதம் வந்தபோது தான், நான் விஸ்தீரணத்திற்கு போராடுபவன் அல்ல. விடுதலைக்கு போராடுபவன் என்று அழுத்தமாக பெரியார் சொன்னார். இருந்தாலும் இதில் ஏன் சம்பந்தப் பட்டிருக்கிறேன் என்றால், மொழிவாரி என்று பேசுகிறவர்கள், மொழிவாரியாக பிரிந்துவிட்டு, மொழி அல்லாத நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார்களே என்ற கருத்துதானே அல்லாமல், மற்றபடி சென்னை நகரம் தமிழர்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது. செய்து வருகிறது. அல்லது செய்ய முன்வரும் என்பதற்காக அல்ல என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டையும் சொன்ன பெரியாரின் கருத்துகளை, எங்கள் பழைய தலைவர் (வீரமணி) மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால், இந்த தமிழ் தேசியவாதிகள் சொல்லும் புரட்டுகளை மக்கள் புரிந்திருப்பார்கள். பெரியாரின் கொள்கைகள் திடலுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது. வெளியே கொண்டு வருபவர்களையும், தடுக்க பார்க்கிறார்கள். குடிஅரசு வழக்கில் பார்த்திருப்பீர்கள். உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கே தகுதி அற்றது என்று தள்ளுபடி செய்த செய்தி, வீரமணி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது. கோரிக்கைளை மாற்றிக் கொள்கிறோம் என்ற மனுவை, இப்பொழுது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் நினைவு நாள் பரிசாக அவருக்கு கொடுத்திருக் கிறது.
பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லுகிற, நடைமுறைபடுத்துகிற, பெரியாரின் வழியில் தொடர்ந்து போராடுகிற இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள சக்தி குறைவாக இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தி, செயல்படுத்த வேண்டும் என்று கருதுகிறோம். அதன் வெளிப்பாடாகத்தான், பல போராட்டங்களை நடத்துகிறோம். அண்மையில் ஆயுத பூஜை அன்று கூட ஒரு போராட்டம் நடந்தது. அரசியல் சட்டம் எழுதப்பட்ட போதே, இது மதசார்பற்ற நாடு என்று எழுதி விட்டார்கள். அரசு அலுவலகங்களை கோவிலாக்காதே, கடவுள் படங்கள் இருந்தால் அகற்றுங்கள் என அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆணை பிறப்பித்தார். அதன் பின்னர், அடிக்கடி கலவரம் ஏற்பட காரணம் என்ன என்பதை கண்டறிய, 1994 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி காலத்தில், உள்துறை மூலமாக ஒரு குழுஅமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் மதம் கலப்பதுதான் இதற்கு காரணம் என அந்த குழு அறிவுறுத்தியது. அரசு அலுவல கங்களில் கடவுள் படங்களை நீக்கவும் மத வழிபாடுகள் கூடாது என்றும், மத சுலோகங்கள் எழுதப்படக் கூடாது என்றும், மத வழிபாட்டிடங்களை கட்டக் கூடாது என்றும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது. தலைமை செயலாளர் இப்போது இருப்பதை போலவே அப்போதும் ஒரு பார்ப்பனர்தான் (ஹரி பாஸ்கர்). அவர் அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு எ.டி.ஜி.பி.யாக இருந்த லத்திகாசரண் (இப்போது டி.ஜி.பி.), காவல் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பாக காவலர் குடியிருப்புகளில்கூட மதவழிபாடு நடத்தக் கூடாது என்று உள்ளது. இவ்வளவு இருந்தும் தொடர்ந்து காவல் நிலையங்களில் ஆயுதபூஜை நடைபெற்று வந்தது. இவ்வாறு இந்த ஆண்டும் நடக்குமேயானால், அதை தடுக்கும் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என, பெ.தி.க. தலைமை செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத் தின்படி, பல இடங்களில் எங்கள் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையிலும், மேட்டூரிலும் தடுத்து, வழக்குகளை சந்தித்தார்கள். பெரியார் வன்முறையை விரும்ப மாட்டார் என்று அப்போது பலர் சொன்னார்கள்.
ஆனால், பாரதிதாசன் பாடல்களை பாட நூல்களில் சேர்க்கப்பட வேண்டும் என்ற செய்திகளைக் குறிப்பிட்டு விட்டு, “எனக்கு பின்னால் இதை சொல்லவும் ஆள் இல்லை, தி.மு.க.வை தவிர இதை செய்யவும் கட்சியில்லை. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றாவிட்டால், நானும் எனது தோழர்களும் உள்ளே நுழைந்து அகற்றுவோம்” என, 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெரியார் விடுதலை நாளேட்டில் ஒரு அறிக்கை விடுகிறார். அதை இன்று நாங்கள் செய்திருக்கிறோம்.பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடித்திருக்கிறோம். இது தானே நாம் பெரியார் மறைந்த வுடன் எடுத்த உறுதிமொழி.
நாம் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பதில் பெரியாரின் நிலைபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் பெரியார் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று பார்ப்பனர்கள் சொல்லி கொண்டிருந் தார்கள். காங்கிரஸ் கட்சியை எதிர்த்த வண்ணம் இருந்த பெரியார், 1954 இல் காமராசர் வந்தவுடன் ஆதரித்தார். அடுத்து தி.மு.க.வை ஆதரித்தார் அவ்வளவுதான்.
காமராசர் ஆட்சியின்போதுகூட காங்கிரசை ஆதரிக் கிறேன் என்பது தவறு. காமராசரைத் தான் ஆதரிக்கிறேன் என்று பலமுறை தெளிவாக கூறியிருக்கிறார். காமராசருக்கு பின், ஆட்சிக்கு வந்த பக்தவத்சலத்தை எதிர்த்து, 1965இல் பக்தவச்சலம் ஆட்சி கண்டன கூட்டம் நடத்தியவர் பெரியார். எப்பொழுதும் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று சொல்லப்பட்டபோது, “எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்கான காரணம்” என்ற தலைப்பில் 19.9.1968 இல் ஒரு அறிக்கை எழுதினார். எனது ஆசை யெல்லாம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாக (நாத்திகர்களாக) ஆக வேண்டும். சாதி ஒழிய வேண்டும். உலகில் பார்ப் பனர்கள் இருக்கக் கூடாது. பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகத்தான். இனி எந்த கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ, எனக்கே தெரியாது” என்று எழுதி விட்டு, கீழே குறிப்பு என்று ஒன்று எழுதுகிறார். அதில், “இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரியானால், என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று எழுதியுள்ளார். அண்ணா ஆட்சியில் இருக்கும்போதே இதை எழுதி யுள்ளார். கல்வித் துறை உட்பட எந்த துறையில் பார்ப்பனர்கள் இருந்தாலும், பெரியார் உடனடியாக “விடுதலை” நாளேட்டில் பட்டியல் போட்டுவிடுவார். ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்வார்கள். எனவே தவறு நடந்தால் பட்டியல் போட்டு சுட்டிக்காட்ட ஒருவர் வேண்டும்.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்….          என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு ஆட்சிக்கு ஜால்ரா அடிப்பதல்ல பெரியார் தொண் டனின் வேலை. 2001 முதல், இந்த நாட்டில் தொடர்ந்து யார் தலைமை செயலாளராக இருக்கிறார்கள்? பாப்பாத்தி ஆட்சியைகூட விட்டுவிடுங்கள். ‘திராவிடர்கள்’  ஆட்சி வந்த பின்னால், திரிபாதி, ஸ்ரீபதி, மாலதி உட்பட எல்லோரும் பார்ப்பனர்கள். இந்த நாட்டின் தலைமை செயலாளராக தொடர்ந்து பார்ப்பனர்களே இருந்தால் நமக்கு என்ன நடக்கும்? இதை சுட்டிகாட்ட வேண்டாமா? சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறு என்றுதான், எங்கள் பங்காளி இயக்கத் திற்கு சொல்கிறோம். கல்லூரி முதல்வராக இருந்தபோது ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சரிசெய்ய மாணவிகளை அனுப்பி வைத்ததாக இரண்டு முறை குற்றம்சாட்டப்பட்ட மீனா என்ற ஒரு பார்ப்பன அம்மையார், திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்திற்கு இப்போது துணைவேந்தராக வந்துள்ளார். உடனே இவ்வளவு காலம் இயங்கி வந்த ‘பெரியார் உயராய்வு மய்யம், பாரதிதாசன் உயராய்வு மய்யம்’ உடனடி யாக மூடப்பட்டுவிட்டது. நாம் யாருமே போராடத் தான் இல்லை.
பெரியாரின் முதல் கொள்கையாக இருந்தது சாதி ஒழிப்பு. காங்கிரஸ்காரராக இருந்தபோதே, கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, அது மலையாள நாடாக இருந்தபோதும், அங்கு சென்று போராடினார். அப்போது, தென்னாட்டில் நடந்த இரண்டு சம்பவங்கள் என் மனதை உலுக்கியது என்றும், அதில் ஒன்று வைக்கத்தில் இராமசாமி நாய்க்கர் நடத்திய போராட்டம் என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஏட்டில் தலையங்கம் எழுதினார்.
1922 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர் களையும், நாடார்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, திருப்பூர் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னாளில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி யதாக சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர் இராமா யணத்தையும் மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டி, அப்போது கோயில் நுழைவை எதிர்த்துப் பேசினார். இராமாயணமும் மனுதர்மமும் என் மக்களை கோவிலில் நுழைய தடுக்குமே யானால், அதை எரிக்க வேண்டும் எனப் பேசினார் பெரியார். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடன், சாதி ஒழிப்பு வேலைகளைத் தான் செய்தது. 1926 முதல் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசினார். 1928 இல் இருந்து பொதுவுடமையைப் பற்றிப் பேசினார். 1938 இல் தனி தமிழ்நாட்டைப் பற்றி பேச தொடங்கினார். பெரியார் தொண்டர்கள் என்பவர்கள் இந்த நான்கு கொள்கைகளை முன்னெடுத்து செல்வோர் தான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்ற பிரச்சினையைப் பற்றி உங்களுக்கு தெரியும். 1971 இல் கலைஞர் சட்டம் போட்டார். 234 சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. ஒட்டு மொத்த தமிழகமும் ஏற்றுக் கொண்டதை, பதினொரு பார்ப்பனர்கள், பதிமூன்று வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார்கள். அப்போது தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும், அதே நேரத்தில் பார்ப்பனர் அல்லாதாரை நியமித்தால் என்னிடம் வா என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ‘ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்’ என பெரியார் சொன்னார். பி.வி.கானே என்ற ஒருவன் ஒரே ஒரு புத்தகம் எழுதினான் (சட்டபுத்தகம் அல்ல). இந்து சட்டங்கள் பற்றிய தொகுப்பு எழுதினான். அதை வைத்து தீர்ப்பு சொன்னார்கள். பெரியார் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். ஒரு குழு அமைத்தார். ஆய்வு செய்தார்கள். கலைஞர் ஆட்சிக்கு
வந்து அர்ச்சகர் பயிற்சி கொடுத்தார். எல்லாம் முடிந்தது. மீண்டும் பார்ப்பனர்கள் தடை ஆணை வாங்கிவிட்டார்கள். நீதிமன்றம் சொல்லிவிட்டது. நான் என்ன செய்வது என கலைஞர் இப்போது சொல்லிவிட்டார்.
ஆனால், சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ உறுப்பினராக இல்லாத பெரியார், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கொள்கையோடு வைத்திருந்த இயக்கத் தோழர்களை கொண்டு பெரியார் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்தார். எனவே நாம் மக்களை திரட்டி போராடியிருக்க வேண்டும். கேரளாவில் ராகேஷ் என்ற தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக்கியதற்கு, ஆதித்யன் என்ற பார்ப்பான் வழக்கு தொடுத்தான். மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் பராசரன் வாதாடினார். இந்தியாவில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னால், சமவாய்ப்புகளை மறுக்கும் சாஸ்திரம் உட்பட எதுவும் செல்லாது என தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பைச் சொன்னவர்கள், தமிழ்நாட்டை சார்ந்த துரைசாமி ராஜூ, கர்நாடகத்தில் பிறந்திருந் தாலும், தமிழ்நாட்டில் படித்து, பகுத்தறிவு பெற்ற ராஜேந்திரபாபு நீதிபதிகளாக இருந்தார்கள். தென்னாட்டைச் சார்ந்தவர்கள் சட்டம் தான் பெரிது என்றார்கள். ஆனால், நமக்கு எதிராக தீர்ப்பு சொன்ன வடநாட்டு பார்ப்பனர்கள், சாஸ்திரம் தான் பெரிது என்கிறார்கள்.
உங்களுக்கு சாஸ்திரம் பெரிது என்றால், எங்களுக்கு தமிழர்களுக்கு, குறைந்தபட்சம் இறை நம்பிக்கையுள்ள தமிழர்களுக்கு, திருமூலம் பெரிது. திருமூலர் சொல்கிறார்,
“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சிக்கில்
போர்கொண்ட மன்னர்க்கு பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”
பார்ப்பான் பூஜை செய்தால், நாட்டில் பஞ்சம், ஆட்சி செய்கிறவர்களுக்கு நோய் வரும் என்கிறார் திருமூலர்.
அதேபோல தொல்காப்பியம், பார்ப்பனர்களுக்கு என்ன வேலை என்பதை சொல்கிறது.
காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,
செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்
அன்னவை பிறவும் பார்பார்க்கு உரிய.
என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர் வந்து விட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டுவிட்டது, சிறுநீர் கழிக்கிறது – இது நல்லது கெட்டது என்று கூறுவது);, செலவுறு கிளவி – இப்போது செல்ல லாம் – அப்பா வெளியூர் போயிருக்கிறார். அம்மா கோவிலுக்கு போயிருக்கிறார். அவள் தனி யாகத்தான் இருக்கிறாள் என்பது போல – செலவழுங்கிளவி – செல்லக் கூடாது என்ற செய்தி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறான். இன்று அந்த பக்கம் போய்விடாதே – உதைத்தான் விழும் என்பது போல…) இவைகள் தானய்யா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக் கூறுகிறார். பூஜை செய்வதை அல்ல….
அவ்வையார் சொல்கிறார்
“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்,
கோலெனிலோ பாங்கே குடிசாயும் – நாலாவான்
மந்திரியுமாவான், வழிநடைக்குத் துணையும் ஆவான்,
அந்த அரசே அரசு”…
என்று! பார்ப்பான் ஆட்சி செய்தால் காட்டிக் கொடுத்து நாடு கெட்டுவிடும். சத்ரியன் ஆட்சி செய்தால், சண்டையாகவே இருக்கும். வைசியன் ஆட்சி செய்தால் வரி போட்டே ஒழித்து விடுவான். சூத்திரன் ஆள்வதுதான் நல்ல அரசு.
தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் இவைகளெல்லாம்தானே சட்டமாக இருந்திருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு எந்த தடையும் வந்திருக்காதே!
பெரியார், காரைக்குடி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசுகிறபோது சொல் கிறார், “பறையன், சக்கலியன் என்பதைவிட சூத்திரன் (வேசிமகன்) என்பவன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது கொள்கை. குடிப்பதற்கு தண்ணீர் தராமல், அவன் குளிக்கவில்லை என்று சொல்வது உன் தவறா? அவன் தவறா? என்று கேட்டார். இப்படி வாழ்கிறபோது இருக்கிற சாதி கொடுமை, இறந்த பின்னால் சுடுகாட்டிலும் இருக்கிறது. இதை ஆதிக்க சாதிகள் மட்டும் அல்ல, அரசும் செய்கிறது.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்படும் சுடுகாட்டில், தாழ்த்தப்பட்டவர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என பிரித்து வைத்திருக்கிறார்கள். தீண்டாமை வன்கொடுமை சட்டம் யார் மீது பாய வேண்டும்? மாவட்ட ஆட்சி தலைவர், திட்ட அலுவலர், வட்டார அதிகாரிகள் மீதல்லவா பாய வேண்டும்? தீண்டாமையை ஒழிக்கிறேன் என போலித்தனமாக பேசிக் கொண்டிருந்த, காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள், போராட்டத்தை எடுத்தோம். அப்போது, குறைந்தபட்சம் அரசு திட்டங்களில் கட்டப்படும், இரட்டை சுடுகாடுகளையாவது அகற்றுங்கள் என்று பெரியாரின் சிந்தனைகளை ஆட்சியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொன்ன அண்ணா அவர்களின் நினைவுநாள் வரை அரசுக்கு ஒரு கால அவகாசத்தை கொடுத்தோம். பெரியார் நினைவு நாளில், பெரியாரின் விரல் பிடித்து அரசியல் நடை பயின்ற, கலைஞரிடம் நாம் வைக்கிற வேண்டுகோள், உங்களை ஆளாக்கி, அமைச்சரவையில் உட்கார வைத்த அண்ணா நினைவு நாளுக்குள் குறைந்தபட்சம் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட சுடுகாடுகளில், இடுகாடுகளில் இருக்கும், இடைச் சுவரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், சட்டவிரோதமாக இருக்கும் இடைச் சுவரை, சட்டத்தை நடைமுறைபடுத்தும் நோக்கத்தோடு, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் உள்ளே நுழைந்து சுவரை உடைப்பார்கள் என்பதை அறிவிக்கிறோம். தாழ்த்தப்பட்டோர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என்று இரட்டை சுடுகாடுகளை அரசே அமைக்கலாமா? இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குற்றமல்லவா? இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டத்தின்போது அரசு நம்மை கைது செய்தது. இப்போது என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்கலாம். பெரியார் நினைவு நாளிலும், வழக்கமாக நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்.
சிந்திக்க முடியாத மூடன் – சிந்தித்து சரியெனப்பட்டதை செயல்படுத்த முன் வராத அறிவாளி, இருவருக்கும் என்ன வேறுபாடு? எனவே நாங்கள் சொன்னதையெல்லாம் சிந்தித்து உங்களுக்கு சரியெனப்பட்டால் – எல்லாம் சரிதான்… இருந்தாலும்… என்றாலும்… என்று வீட்டை, ஊரை, உறவுகளை காட்டி பின்வாங்காமல் சரியெனப்பட்டதை நடைமுறை படுத்த அனைவரும் முன் வாருங்கள் எனக் கூறி விடைபெறுகிறேன்.
}

தமிழ்த் தேசியம் பேசுவோரில் பலர் பெரியாரைத் தாக்கினால்தான் தமிழ்த்தேசியம் என எண்ணித் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர்கள் இந்த உரையைப் படித்த பின்பாவது திருந்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 1/19 இந்த இடுகையை நீக்கு பதிலளி
 

Indira and soniya: இந்திரா அப்படி... சோனியா இப்படி.

அடுக்கடுக்கான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதைவிட நினைவு படுத்தியுள்ளார் எனலாம். எனினும் வாக்காளர்களுக்கு இவை குறித்துக் கவலை இல்லை. வாக்களிக்கும்போது உள்ள ஆதாயம், கொத்தடிமைப் போக்கு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்களிப்பார்கள். யார் நேர்மையானவர் அல்லது யார் ஊழல் பெருச்சாளி? யார் கொள்ளைக்காரர் அல்லது யார் தூய்மையாளர்? யார் கொலைகாரர் அல்லது யார் பண்பாளர் என்பன குறித்தெல்லாம் சிந்திக்கும் போக்கு கிடையாது. இவை பற்றிய உண்மைகளைத் தெரிந்திருந்தாலும் வாக்குரிமையைப் பயன்படுத்த  இவற்றை அளவு கோலாகக்  கொள்வதில்லை. என்ன செய்வது? படித்த அறிவாளிகளே  இவ்வாறு நடந்து கொள்ளும் போது படிக்காத பாமரர் குறித்து நாம் என்ன சொல்வது? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்



இந்திரா அப்படி... சோனியா இப்படி...!


ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப்போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம்.ஆனால், இந்திரா காந்தி ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, "உலகமெல்லாம் நடப்பதுதான்' என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர். இது நடந்தது 1983-ம் ஆண்டில்.இந்திரா காந்தி இப்படிப் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டின் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், ஊழல் சகஜமான ஒன்றுதான் என்று கூறினால், ஊழலை எப்படி ஒழிப்பது என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டார். ஆனால், இந்திராவின் இந்தப் பேச்சு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆம். தம்மைப் பரிசுத்தமானவர் என்று கூறிக்கொள்ளாத ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்திரா மீது எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழவேயில்லை. இப்படி அரசியலில் எதார்த்தமாக இருந்த இந்திராவுக்கு நேர் எதிரானவராக ராஜீவ் நடந்து கொண்டார். தம்மை திருவாளர் பரிசுத்தம் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையடைந்தார். அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விளைவு, போபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, 1989-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சி பறிபோயிற்று.உண்மையிலே நேர்மையானவராக இல்லாதபோது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்வது கூடாது என்பதுதான் இதனால் அறியப்பட்ட அரசியல் பாடம். இந்தப் பாடத்தை சோனியா காந்தி தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஊழலைப் பற்றிப் பேசும்போது இந்திராவின் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுக்காமல், ராஜீவின் அபாயகரமான வழியை சோனியா தேர்ந்தெடுப்பாரா?அலாகாபாத் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், "ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்' என்று ஆவேசமடைந்தார். அத்துடன் விடவில்லை. ஒருவாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தன்னைப் பரிசுத்தமானவராகவும், எந்தவித ஊழல் கறையும் படியாதவராகவும் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டார். "ஊழலை வேரறுக்க வேண்டும்' என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலுக்கு எதிராக உடனுக்குடன் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் முழங்கினார். இந்த முழக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜீவ் காந்தி பேசியதைத்தான் நினைவுப்படுத்துகிறது.இருப்பினும், ராஜீவுக்கும் சோனியாவுக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும். தம்மை "திருவாளர் பரிசுத்தம்' என்று ராஜீவ் கூறிக் கொண்டபோது,  அவருக்கு எதிராக எந்த ஊழல் புகாரும் இருக்கவில்லை. அதனால், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசினார் என்று கூற முடியாது. ஆனால், இப்போது காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடுகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் என ஒன்றன்பின் ஒன்றாகக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில், ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கூறிவருவது முரண்சுவையாக அல்லவா இருக்கிறது.இரண்டாவது வேறுபாடு, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜீவ், போபர்ஸ் ஊழல் வெளியாகும்வரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தார். இதற்கு நேர் எதிராக சோனியா மீது ரகசியமான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், போபர்ஸ் கமிஷன் என நம்பத் தகுந்த ஊழல் புகார்களும், அவருக்கு எதிரான அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களும் வெளியாகியிருக்கின்றன.சோனியாவின் குடும்பம் லஞ்சம் பெற்றதாக பிரபல சுவிஸ் பத்திரிகையில் ரஷியப் புலனாய்வுச் செய்தியாளர் ஆதாரத்துடன் எழுதிய கட்டுரைக்கு சோனியாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கவும் இல்லை. பின்னணி இப்படி இருக்கையில், "திருடன், திருடன்' என்று திருடனே கத்திக் கொண்டு தப்பி ஓடுவதுபோல, ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சோனியா என்பதுதான் வேடிக்கை.2.2 பில்லியன் டாலர் கதை1991-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் "ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட்' இதழ் சோனியாவைப் பற்றி அதிர்ச்சிகரமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ராஜீவ் காந்தி உள்ளிட்ட 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் ரகசியங்கள் அதில் அம்பலமாகின. போபர்ஸ் பேரத்தில் கிடைத்த லஞ்சப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் பகிரங்கமாகக் கூறப்பட்டது.இந்தக் குற்றச்சாட்டு ஏதோ போகிறபோக்கில் கூறப்பட்டதல்ல. குற்றச்சாட்டைக் கூறிய ஸ்வீசர் பத்திரிகையும் சாதாரணமானதல்ல. 2.15 லட்சம் பிரதிகள் விற்கும், 9.17 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபலமான பத்திரிகை. சுவிட்சர்லாந்தில் ஆறில் ஒருபங்கினர் இதை வாசிப்பதாகப் புள்ளிவிவரம் இருக்கிறது. இப்படித் தரமான ஒரு பத்திரிகைதான் ராஜீவ் மீதும் சோனியா மீதும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது.ரஷியாவின் உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களை மேற்கோள்காட்டி,  "இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா ரகசிய வங்கிக் கணக்கில் 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை மைனரான தனது மகனின் பெயரில் வைத்திருக்கிறார்' என்று ஸ்வீசர் கூறியது. அந்தவகையில் பார்த்தால், ராகுலுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது 1988-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே, இந்த 2.2 பில்லியன் டாலர் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்குச் சமம்.வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்விஸ் வங்கிகள் அப்படியே முடக்கி வைப்பதில்லை. வாடிக்கையாளர்களின் சார்பில் பல்வேறு வகைகளில் அந்தப் பணம் வங்கியால் முதலீடு செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலப் பங்குப் பத்திரங்களில் அந்த லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டில் அந்தப் பணம் ரூ. 42,345 கோடியாகப் பெருகியிருக்கும். அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ரூ. 58,365 கோடியாக வளர்ந்திருக்கும். இரண்டிலும் சரிபாதி என்ற வகையில் முதலீடு செய்திருந்தால் ரூ. 50,355 கோடியாகியிருக்கும்.இந்தப் பணத்தை 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்துக்கு முன்பு எடுத்திருந்தால் ரூ. 83,900 கோடி கிடைத்திருக்கும். இதில் எந்த வகையில் கணக்கிட்டாலும் சோனியாவின் குடும்பத்துக்கு ரூ. 43,000 கோடியிலிருந்து ரூ. 84,000 கோடிக்குள் ஏதோ ஒரு அளவில் பெரும் பணம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவு.கேஜிபி ஆவணங்கள்சோனியா மீதான இரண்டாவது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு இன்னும் கடுமையானது. யெவ்ஜீனியா அல்பேட்ஸ் என்கிற ரஷியப் புலனாய்வு எழுத்தாளர் எழுதிய "தி ஸ்டேட் வித்இன் ஏ ஸ்டேட்: தி கேஜிபி அண்ட் இட்ஸ் ஹோல்ட் ஆன் ரஷியா - பாஸ்ட், பிரசன்ட், ப்யூச்சர்' என்ற புத்தகத்தில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன."அரசியல் காரணங்களுக்காக கேஜிபியிடம் இருந்து நேரு குடும்பம், அதாவது ராஜீவ் காந்தியின் குடும்பம் லஞ்சம் பெற்றது' என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் கூறியிருக்கிறார்.கேஜிபி ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்தப் புத்தகத்தில் வரும் ஒரு செய்தி: 1982-ம் ஆண்டில் கேஜிபி தலைவராகப் பொறுப்பேற்ற விக்டர் செப்ரிகோவ் கையெழுத்திட்டிருக்கும் கடிதமொன்றில், "இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுடன் சோவியத் யூனியனின் கேஜிபி, நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வர்த்தக அமைப்புகள், பிரதமர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு அளித்த வாய்ப்புகள் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து ஆர்.காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தவகையில் கிடைத்த பணத்தை ஆர்.காந்தியின் கட்சிக்காகப் பயன்படுத்துவதாக அவர் ரகசியமாகத் தெரிவித்திருக்கிறார்' (பக்.223)இன்னொன்றையும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார். "ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியாவின் தாயார் பவுலா மைனோ ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் பணம் அளிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் அனுமதி கோரி செப்ரிகோவ் கடிதம் எழுதியிருக்கிறார்' என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் தெரிவித்திருந்தார். இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே ரஷியாவின் பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தன. இவற்றைக் கொண்டு 1992-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தி ஹிந்து நாளிதழ், "ராஜீவ் காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு லாபகரமான வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் கேஜிபி ஈடுபட்டிருப்பதை ரஷியாவின் உளவுத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது' என்று செய்தி வெளியிட்டது.இந்திய ஊடகங்கள்ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சுவிஸ் மற்றும் ரஷியாவில் அம்பலமான சோனியாவின் ஊழல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸின் தலைவர் பதவியை சோனியா ஏற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்குள்ளேயே இந்திய ஊடகங்கள் முடங்கியிருந்தன.ராஜீவின் மரணத்துக்கு முன்பாக, 1988 டிசம்பர் 31-ம் தேதி ஸ்டேட்ஸ்மேன் இதழில் பிரபல கட்டுரையாளர் நூரானி எழுதிய கட்டுரையில் ஸ்வீசர் மற்றும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளைக் குறிப்பிட்டிருந்தார். 2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஸ்வீசர் இதழ் மற்றும் அல்பேட்ஸின் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களைத் தனது இணையதளத்தில் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்டிருந்தார். ராஜீவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்யும் ஸ்வீசர் இதழ் அனுப்பிய மின்னஞ்சலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதியின் அசல் படியையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஸ்வீசர் இதழ் அனுப்பியிருந்தது."ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்' என்று 27.04.2009 அன்று மங்களூரில் சோனியா பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், 29.04.2009 அன்று "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் நான் எழுதிய கட்டுரையிலும் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன். ஸ்விஸ் வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரே, அதை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று பேசுவது எப்படி என அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன்.இதற்கு முன்பாக 15.06.2006 அன்று பிரபல பத்திரிகையாளர் ரஜீந்தர் பூரி இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதேபோல், 27.12.2010 அன்று இந்தியா டுடே இதழில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் எங்கே என்று ராம்ஜேட்மலானி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆக, இந்திய ஊடகங்கள் சோனியாவின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அமல் தத்தா இதுபற்றி 7.12.1991-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். ஆனால், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் இதற்கு அனுமதிக்கவில்லை.மெளனமே குற்றச்சாட்டுக்கு ஆதாரம்1991-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து, ரஷிய, இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவும் ராகுலும் எந்தவகையிலும் பதிலளிக்கவில்லை. அவர்களது பதில் வெறும் மெளனமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்படி மெளனமாக இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.ராஜீவ் காந்திக்கு வந்த ஊழல் பணத்தை ராகுல் பெயரில் சோனியா ஸ்விஸ் வங்கியில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று ஸ்வீசர் இதழ் கூறியபோது, அந்தக் குற்றச்சாட்டை எந்த வகையிலும் இருவரும் மறுக்கவில்லை. ஸ்டேட்ஸ்மேன் இதழில் நூரானியின் கட்டுரை வெளியானபோது, அந்த இதழ் மீதோ நூரானி மீதோ, தாயும் மகனும் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. எல்லா ஆவணங்களையும் சுப்பிரமணியன் சுவாமி தனது இணையதளத்தில் வெளியிட்டபோது அதையும் அவர்கள்  கண்டுகொள்ளவில்லை. எனது கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் வந்தபோது என் மீது வழக்குத் தொடுக்கத் துணியவில்லை. தி ஹிந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கேஜிபி பணப்பட்டுவாடா குறித்து செய்தி வெளியிட்டபோது ரஷியாவே அதிர்ந்தது. அப்போதும் சோனியாவும் ராகுலும் எதுவும் நடக்காததுபோல்தான் இருந்தார்கள்.  இப்படி எப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சோனியாவும் ராகுலும் மெளனம் சாதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், சோனியாவின் விசுவாசிகள் அப்படி இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழில் அல்பேட்ஸின் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சோனியாவின் ஊழல் குறித்த முழுப் பக்க விளம்பரம் ஒன்று வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோனியா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சோனியாவுக்கே வழக்குத் தொடரத் துணிவில்லாதபோது, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்குக்கூட அவதூறு வழக்காகத்தான் இருந்ததே தவிர, 2.2 பில்லியன் குற்றச்சாட்டை எதிர்க்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.சோனியா நேர்மையானவர்; ஸ்வீசர் இதழும் அல்பேட்ஸின் புத்தகமும் கூறுவதுபோல அவர் கேஜிபியிடம் பணம் பெறவும் இல்லை, ஸ்விஸ் வங்கிக் கணக்கும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். குற்றச்சாட்டுகள் எழும்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டாமா?ஒரு நேர்மையானவர், பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர் இப்படி மெளனமாகவா இருப்பார்?மொரார்ஜி தேசாய் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று புலிட்சர் பரிசுபெற்ற சேமெளர் ஹெர்ஷ் எழுதியபோது, 87 வயதான மொரார்ஜி கொதித்து எழுந்தார். அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 93 வயதாகியிருந்த மொரார்ஜிக்கு பதிலாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் ஆஜராகி, அவருக்கும் சிஐஏவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.  தம்மீது இல்லாத பழியைச் சொன்னால் தள்ளாத வயதிலும்கூட இப்படித்தான் கடுஞ்சினம் கொள்வார்கள். அதுதான் நேர்மையாளர்களின் குணம்.ஆனால், சோனியாவிடமும் ராகுலிடமும் இருந்து இதுபோன்ற பதிலடி வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிடவில்லை. மொரார்ஜிபோல தள்ளாத முதியோரும் இல்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த மெளனம்?இதுவே ராகுலும் சோனியாவும் இல்லாமல் அத்வானியும் மோடியுமாக இருந்தால் நமது ஊடகங்கள் பேசாமல் இருந்திருக்குமா? இதைத் தலைப்புச் செய்தியாக்கி விவாதப் பொருளாக்கி இருக்காதா? இல்லை, சோனியாவின் கைப்பாவையாக இயங்கும் இந்த அரசு அவர்கள் இருவரையும் சும்மா விட்டிருக்குமா?ரூ. 20.80 லட்சம் கோடி கொள்ளைசோனியாவின் குடும்பத்துடன் விவகாரம் முடிந்துவிடவில்லை. இவர்களுடைய பணமும் அதில் அடக்கம் என்பதால் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க அரசு முயற்சி எடுக்கத் தயங்குகிறது. அதனால், நாட்டுக்கு அவர்களால் ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் விழித்துக்கொண்டு, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிவிட்டன. ஆனால், இந்தியா மட்டும் இந்தக் கள்ளப் பணத்தை மீட்பதில் ஆர்வம் காட்டாமல் சுணங்கியிருக்கிறது.2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் 500 பில்லியன் முதல் ரூ. 1.4 டிரில்லியன் வரையிலான கறுப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.கே. அத்வானி உறுதியளித்தார். முதலில் அவ்வளவு பணம் இருக்காது என காங்கிரஸ் மறுத்தது. நாடு முழுவதும் கறுப்புப் பண விவகாரம் பரபரப்பான பிறகுதான் மன்மோகனும் சோனியாவும் சுதாரித்தார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தததும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்போம் என்று மிகத் தாமதமாக உறுதியளித்தார்கள்.ஜிஎப்ஐ என்கிற கறுப்புப் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபடும் ஒரு சர்வதேசத் தன்னார்வ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி 462 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 20.8 லட்சம் கோடி) கறுப்புப் பணம் இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. "1948 முதல் 2008 வரை வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம், குற்றச்செயல்கள் மூலமாக 213 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை இந்தியா இழந்திருக்கிறது' என்று ஜிஎப்ஐ குறிப்பிட்டுள்ளது. இதில் எந்தக் கணக்கின்கீழ் சோனியா குடும்பத்தில் 2.2 பில்லியன் டாலர் கணக்கு வரும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்.இதுபோக, 2ஜி, காமன்வெல்த் என இப்போதைய ஊழல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்களது பதுக்கல் தொகை இன்னும் பல மடங்காக இருக்கக்கூடும். இப்படி சோனியாவின் குடும்பமே வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும்போது, அவர்கள் எப்படி மற்றவர்களின் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியானால், இந்தக் குடும்பத்தால், இந்தியாவுக்கு ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம்தானே!கொள்ளையர்களுக்குப் பாதுகாப்புவெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசுக்கு அக்கறையில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. லிக்டென்ஸ்டைன் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் 2008 பிப்ரவரியில் சேகரித்தார்கள். அரசுகள் விரும்பினால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த கள்ளக்கணக்கு வைத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜெர்மன் அதிகாரிகளுக்குக் கிடைத்த பட்டியலில் சுமார் 250 இந்தியர்களின் பெயர்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.இந்தப் பட்டியலைத் தருகிறோம் என்று ஜெர்மன் அதிகாரிகள் வெளிப்படையாகச் சொன்ன பிறகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைப் பெறுவதில் ஆர்வம் காட்டவேயில்லை. லிக்டென்ஸ்டைன் வங்கியில் லாக்கர் வசதி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்கு இந்திய நிதியமைச்சகமும் பிரதமர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என "டைம்ஸ் ஆப் இந்தியா' இதழ் ஆதாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டது.விவகாரம் பூதாகரமாவதைப் புரிந்துகொண்ட அரசு, கள்ளக்கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலைப் பெற முன்வந்தது. ஆனால், வெளிப்படையாக அல்ல. ஜெர்மனியுடன் செய்து கொண்ட வரி ஒப்பந்தத்தின் வழியாக வெளிப்படையாகப் பெற்றால், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியிட வேண்டிவரும். அப்படியில்லாமல், ஒப்பந்தத்தின் வழியாக விவரங்களைப் பெற்றால், அவை ரகசியமானவையாக வைக்கப்படும். ஊடகங்களுக்குத் தரவேண்டியது இல்லை.வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையைப்  புரிந்துகொள்வதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா, என்ன?மத்திய அரசின் மெத்தனத்தால் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது. ஹசன் அலி என்ற குதிரை வியாபாரி ஸ்விஸ் வங்கியில் ரூ. 1.5 லட்சம் கோடி வைத்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அவருக்கு ரூ. 71,848 கோடி வரி விதிக்கப்பட்டது. என்ன நடந்ததோ, இந்த வழக்கு இப்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.விவரங்களைக் கேட்டு சுவிஸ் அரசுக்கு எழுதப்பட்ட கோரிக்கை வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்டது. அதனால், தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை. உண்மையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஹசன் அலிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே இந்த வழக்கு மூடப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஹசன் அலியை விசாரித்தால் இன்னும் எத்தனையோ பேரை விசாரிக்க வேண்டுமே!ஒரு குடும்பமும், அவர்கள் சுருட்டிக் கொண்டுபோய் வெளிநாட்டு வங்கியில் வைத்திருக்கும் பணமும்தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவதைத் தடுக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இப்படிப் பல ஆயிரம் கோடி பணத்துக்குச் சொந்தக்காரர்கள், வெறும் ரூ. 3.63 கோடி வைத்திருப்பதாகவும், கார்கூட இல்லை எனவும் தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இத்தாலியர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவர்களோ என்னவோ? இந்தியாவில் ஊழல் அதிகரித்து வருவதாகச் சோனியா வருத்தப்படுகிறார்; ஊழல்வாதிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ராகுல் கோபப்படுகிறார். ஆமென்!
கருத்துகள்

ஒரு இந்தியனால் ஒரு கிலோ வெங்காயம் தக்காளி கூட வாங்க முடியல .....இத்தாலி நாசகாரி சோனியாவுக்கு சொம்பு அடித்தே கூட்டுக்கொள்ளை நடத்தும் காங்கிரஸ் காரர்களை வேட்டையாட வேண்டும் ....என் ரெத்தம் கொதித்து பாதி ஆவியாகி விட்டது
By Luxman
1/19/2011 1:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *