hindu ram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
hindu ram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சிறை செல்லும் சிங்கள இரத்னா இராம்

அச்சிடுக மின்-அஞ்சல்

 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2012 01:45
n-ram
இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த, இந்து ராம் மீது, தமிழக காவல்துறை கூட்டுச் சதி, அத்து மீறி நுழைதல் மற்றும் கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமி என்பவர் சேரன் என்டர்பிரைசஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்து பத்திரிக்கையை நடத்தி வரும் கஸ்தூரி அன்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம், ஸ்போர்டிங் பாஸ்டைம் இன்டியா லிமிட்டெட் (எஸ்.பி.ஐ.எல்) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது.  இந்த எஸ்.பி.ஐ.எல் நிறுவனம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் 400 ஏக்கர் நிலத்தை சர்வதேச தரத்தில் கோல்ஃப் மைதானம் அமைப்பதற்காக வாங்குகிறது.  எஸ்பிஐஎல் நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  ஆண்டுதோறும், 3 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.  இந்நஷ்டம் தொடர்ந்து ஏற்பட்டதால் 24 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, இந்நிறுவனத்தை விற்க கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனம் முடிவெடுக்கிறது.
2004ம் ஆண்டு, கே.சி.பழனிச்சாமியின் சேரன் நிறுவனம், எஸ்.பி.ஐ.எல் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குகிறது.  2004ல் இந்நிறுவனம் வாங்கப்படும் போது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த 400 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 30 கோடி ரூபாய்.  2007ல் இந்நிலத்தின் மதிப்பு 300 கோடியாகிறது. 2007ல் திமுக பதவியேற்றவுடன், இந்து ராம், கருணாநிதியோடு காண்பித்த நெருக்கம் ஊரறிந்தது.   கருணாநிதியின் சொம்பாகவே ராம் மாறிப்போனார்.   இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, 2007ல் சேரன் நிறுவனத்திடமிருந்து 400 ஏக்கர் நிலத்தை 2004ல் வாங்கிய அதே விலைக்கு தருமாறு மிரட்டுகிறார்கள் சிங்கள ரத்னா ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர். 2005 முதல் சேரன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சி.ஜி ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும், ஃபேர் பேக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்துக்கும் சிவில் வழக்குகள் நடந்து வருகின்றன.
இதன் நடுவே சேரன் நிறுவனம் மீது குற்ற எண் 776/2007 என்ற எண்ணில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில், போலி ஆவணம் தயாரித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.  அந்த வழக்கின் விசாரணைக்காக மத்தியக் குற்றப்பிரிவு ஆய்வாளர் லாமெக் என்பவர் 25.02.2008 அன்று கோவையில் உள்ள சேரன் நிறுவன அலுவலகத்தில் சோதனையிட வருகிறார். அன்று சோதனை நடத்தியவர் காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சோதனை நடத்தி விட்டு, எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று மகஜர் ஒன்றை தயாரித்து, சி.ஜி ஹோல்டிங்ஸ் நிறுவன கணக்காளர்கள் கருணாகரன் மற்றும் வினோத் குமார் ஆகியோரிடம் சாட்சிக் கையெழுத்துப் பெற்று விட்டு, சென்று விடுகிறார்.
அன்று மாலையே 5.30 மணிக்கு மீண்டும் அதே அலுவலகத்துக்கு இன்ஸ்பெக்டர் லாமெக் வருகிறார். இரண்டாவது முறை வருகையில் அவரோடு யூனிபார்ம் அணியாத நான்கு நபர்கள் வருகிறார்கள்.  அவர்கள் யார் என்று கேட்டால், வழக்கறிஞர்கள் என்று சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.
வழக்கறிஞருக்கு போலீஸ் சோதனையில் என்ன வேலை என்று கேட்க முடியாமல் அந்நிறுவனத்தினர் திகைத்து நிற்கிறார்கள்.   இந்த லாமெக் இன்ஸ்பெக்டர் இந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாத, மற்ற விலை மதிப்புள்ள ஆவணங்களை எடுத்துச் செல்கிறார்கள்.  அவர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்களுக்கு எவ்வித பட்டியலும் தயாரிக்கப்படவில்லை. சோதனை என்ற பெயரில் இந்தக் கொள்ளை நடந்த பிறகு, விசாரித்தால், வழக்கறிஞர் என்ற போர்வையில் வந்த அந்த நபர்கள் இந்து நிறுவனத்தால் அனுப்பப்பட்ட அடியாட்கள் என்பது தெரிகிறது. இந்து நிறுவனம் இப்படி ரவுடித்தனத்தில் இறங்கியதற்கான காரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த 400 ஏக்கர் நிலம் தொடர்பாக நடந்து வரும் வழக்கில் நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து எப்படியாவது நிலத்தை அபகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நிலம் எங்களுடையது என்று மோசடியாக வழக்கை ஜெயிப்பதற்காகத்தான்.
அந்த ஆவணங்கள் கிடைக்காததால் அவர்கள் அள்ளிச் சென்ற மற்ற ஆவணங்கள் என்ன தெரியுமா ?  ஃபேர்பேக்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தோடு லண்டனில் உள்ள சர்வதேச கிரிக்கெட்  கவுன்சில் முன்பாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கான்ட்ராக்ட் தொடர்பாக நடக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்கள்.
இந்து நிறுவனத்தின் ரமேஷ் ரங்கராஜன் மற்றும் ஃபேர்பேக்ஸ் நிறுவனத்தின்  பால் ரிவெட் ஆகியோர்    அப்போது சென்னை மாநகர ஆணையாளராக இருந்த நாஞ்சில் குமரனை 13.12.2007 அன்று நேராகச் சந்தித்து, இரண்டரை மணி நேரம் எப்படி அசல் ஆவணங்களை கைப்பற்றுவது என்று விவாதித்தாக கே.சி.பழனிச்சாமி தன் புகாரில் தெரிவிக்கிறார். நாஞ்சில் குமரன் இரண்டரை மணி நேரம் இவர்களோடு விவாதிக்கிறார் என்றால் சும்மா விவாதித்திருப்பாரா… சென்னை மாநகரின் கமிஷனராக எப்படியாவது ஆகி விட வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் தவம் கிடப்பதன் பொருள் புரிகிறதா ?
Kumaran_1
நாஞ்சில் குமரன்
இந்த சட்டவிரோதச் சோதனையின் பின்னணியில் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணியிம் இருப்பதாக மனுதாரர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவுப் போலீசார், குற்ற எண் 85/2012ல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120-B, 457 மற்றும் 395 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.  இதில் 395 பிரிவுக்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்பது குறிப்பிடத் தக்கது.
naFIR-85-of-2012_Page_1
FIR_85_of_2012_Page_2
FIR_85_of_2012_Page_3
FIR_85_of_2012_Page_4
FIR_85_of_2012_Page_5
FIR_85_of_2012_Page_7
இந்து ராம், என்று அழைக்கப்படும் நரசிம்மன் ராம், இந்தியா மட்டுமல்லாமல் உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ராம் ஒற்றை ஆளாகவே ராஜீவ் காந்தியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.  போபர்ஸ் ஊழல் வெளி வருவதற்கு இந்துவில் அப்போது பணியாற்றிய சித்ரா சுப்ரமணியம் மற்றும் ராம் பெரிய அளவில் காரணமாக இருந்தார்கள். இந்து நாளேடு வெளியிட்ட போபர்ஸ் ஆவணங்கள் ஒரு ஆட்சி மாற்றத்துக்கே காரணமாக இருந்தன.
இடது சாரி சிந்தனையாளராக பரவலாக அறியப்பட்ட ராமின் உண்மை முகம், இந்து பத்திரிக்கையை தொடர்ந்து கையகப்படுத்தி வைத்திருப்பதில் அவர் கையாண்ட தந்திரங்களின் மூலம் வெளியானது. ஒரு மிகப்பெரிய ஊழலை வெளிக் கொணர்ந்து எப்படி உலகப்புகழ் அடைந்தாரோ, அதே போல, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க சிறிதும் வெட்கமின்றிப் பணியாற்றினார் ராம்.
இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக தொடர்ந்து நீடிக்க, ராம் செய்த தந்திரங்களை அவரது சொந்த சகோதரர் என் ரவி எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை அவர் வார்த்தையிலேயே பாருங்கள்.
When I had proposed 65 as the age of retirement for a Director from any active role, it was with a view to ensuring a smooth succession at the top leadership of the company and of the newspaper while giving professionally qualified younger family members an opportunity to move to the top most echeleons. That suggestion was accepted by all concerned including the Editor-in-Chief who convened an informal meeting of all the five editorial directors on the same day i.e., 25th September 2009. An editorial succession plan was also agreed upon as follows: N. Ram to step down from any active role on May 4, 2010 and N. Ravi who had been the Editor between 1991-2003 would take over as Editor-in-Chief; Malini Parthasarathy would become Editor of The Hindu, Nirmala Lakshman would become Editor of the Sunday Magazine, features  and Frontline and K.Venugopal, the Editor of Businessline. Ram confirmed his commitment to retire and also this succession plan to me not once but twice shortly after. When everyone took his word at face value and in good faith, in the month of February 2010, he reneged on his commitment to retire to my utter shock and dismay.
That act of breach of faith triggered a whole series of unsavoury events which have taken an ugly turn and which are all now in the public domain.
பதவி விலகுகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு, அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய மோசடிப் பேர்விழி என்று ராமை அவர் சொந்த சகோதரரே கூறுகிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராமின் அயோக்கியத்தனங்களை மேலும் வெளிப்படுத்துகிறார் ரவி.
In my book, the two major blots on the journalistic record of The Hindu over the last forty years relate to its stand on the Emergency that was in force between June 1975 and March 1977 and on the largest scam in the history of independent India, the 2G scam. Under it’s then Editor, G.Kasturi, The Hindu disgracefully extended tacit support to and even collaborated with the Emergency regime. On the 2G scam, under the Editor-in-Chief N. Ram, The Hindu shamefully acted as an apologist and mouthpiece of the prime accused A.Raja. It had only muted coverage of the 2G scam. While The Hindueditorially asked for the resignations of Ashok Chavan, Suresh Kalmadi and B.S.Yeddyyurappa, there was not even a whisper about A.Raja’s resignation. On the other hand, two obliging interviews of A.Raja were specially arranged to be done, not by the Correspondent covering telecom, but shockingly by R.K.Radhakrishnan who used to cover matters relating to DMK. After A.Raja’s resignation and arrest, a change in stance reflecting a shameless and seamless U-turn is all too obvious even for a school kid to miss.
இதற்கு பதிலளித்து என் ராம் விளக்கம் அளிக்கிறார்.   இந்த விளக்கத்திற்கு பதிலளித்த சகோதரர் ரவி கூறுவதைப் பாருங்கள்.
Dear Ram,
The Hindu of April 23, 2011 carried on Page 15 of the Chennai edition your refutation of a report that was not carried in The Hindu.  Fairness demands that you publish my account of the issue of the coverage of A. Raja relating to the Telecom licences and 2G spectrum allocation that is given below:
At the meeting of the Board of directors of Kasturi and Sons in January, I had specifically raised the issue of the biased coverage of the 2G spectrum scandal.  While Raja was in office, even as evidence was mounting and there were widespread calls for his resignation, The Hindu did not demand his resignation. On the other hand, it functioned as an apologist for Raja and even on the day of his resignation carried an interview with him on the front page, with the transcript published inside. In this interview as well as the one on May 22, 2010, there were no hard questions but only the obvious ones designed to elicit ready, scripted answers. The entire coverage up to the point of his resignation was tailored to make him look good.
This unexplained softness towards Raja contrasted sharply with the coverage and editorial stand on other scams including those relating to the Commonwealth Games, Adarsh Society and land allotment in Karnataka.  In those instances, The Hindu was quick to demand the resignations of Suresh Kalmadi, Ashok Chavan and Yeddyurappa even at a stage when the evidence was far less compelling than the material that was in the public domain on the 2G scam before Raja resigned. All the editorial outrage was reserved for the period after Raja’s resignation.
With regard to the advertisement that was published in The Hindu of May 22, 2010 along with his interview on the front page with the full transcript inside, records in the Central Government, particularly in the Ministry of Telecommunications relating to the clearance of this particular advertisement and of some others would go to establish by whom and how this advertisement was cleared.  Of all the newspapers that are said to have carried the advertisement, only The Hindu published a friendly interview and not the others. People in the media are aware that promotional advertisements of this type unrelated to any occasion or to any specific announcements are issued as much as rewards to the media as for publicity for the Minister. The Minister’s intention to hugely reward The Hindu that had been so friendly to him in its coverage was obvious. Publication in other newspapers was just a cover, it would have been untenable for any Ministry to have issued an advertisement to just one newspaper.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாள்தோறும் வட இந்திய ஊடகங்களில் குறிப்பாக தி பயனீரில் ஆதாரங்கள் குவிந்த வண்ணம் இருந்தபோது, அந்த ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருந்தது இந்து.  இந்து நாளேடு, நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கறாராக இருந்து வந்தது.  இந்த காரணத்தாலேயே, இந்து நாளேடு பார்ப்பன நாளேடு என்ற பொருளில், கருணாநிதி இந்துவை மவுன்ட் ரோடு மகா விஷ்ணு என்று அழைப்பார். ஆனால், அவர் மகளை மட்டும் மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்த்தார் என்பது வேறு கதை.
அப்படி இருந்த இந்து, ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைத்ததோடு அல்லாமல், அந்த ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கிய ஆ.ராசாவை காப்பாற்றுவதற்காக, அவர் பேட்டியை ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியிட்டது.  ‘It's institutional aberration that needs intervention'.
அந்தப் பேட்டியை எடுத்தவர் இந்துவின் நீண்ட நாளைய மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் என்பவர். இவரை பத்திரிக்கையாளர் என்பதை விட, கருணாநிதியின் ப்ரோக்கர் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும்.  கருணாநிதியின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்வேன் என்று சொல்லிக் கொள்வதில் இவருக்கு அலாதிப் பெருமை.  இந்து நாளேட்டில், தொலைத் தொடர்புத் துறைக்கென்று தனியான செய்தியாளர் இருக்கையில், இந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணனை வைத்து அந்தப் பேட்டியை எடுத்து வெளியிட்டார் என்.ராம்.   அந்தப் பேட்டி வெளியான ஒரு சில நாட்களிலேயே மத்திய தொலைத் தொடர்புத் துறையின் பல லட்ச ரூபாய் மதிப்பிலான விளம்பரங்கள், இந்து நாளேட்டில் வெளி வந்தன.  இந்தச் செயலைச் செய்ததன் மூலம், ஒரு உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளராக அறியப்பட்ட ராம், பத்திரிக்கைத் துறையின் வேசியாக மாறினார்.
rkcrop
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.
2ஜி ஊழலில் ராசா தவறே செய்யவில்லை என்பது போல, ராசா மன்மோகன் சிங்குக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எழுதிய கடிதங்களை ஒரு முழுப்பக்கத்துக்கு வெளியிட்டு ராசாவைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்.ராம்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி செய்த அத்தனை ஊழல்களையும், மறைத்து, அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் ராம்.  கருணாநிதிக்கு அவ்வப்போது நடக்கும் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வது, அவர் எடுக்கும் திட்டங்களைப் பாராட்டி செய்தி வெளியிடுவது என, ஏறக்குறைய ஆங்கில முரசொலியாகவே இந்துவை மாற்றினார் என்.ராம்.
இவற்றையெல்லாம் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.  ஆனால் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் ராமின் சிங்கள சார்பை ஒரு நாளும் மன்னிக்க முடியாது.  இலங்கைத் தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரையில், ராம் சிங்களக் கைக்கூலியாகவே செயல்பட்டார் என்றால் அது மிகைச் சொல் அல்ல.
நினைவு தெரிந்த நாள் முதலாகவே, என்.ராம், சிங்கள சார்பாகவே செயல்பட்டார்.  அவரின் “சிறப்பான சேவையை” பாராட்டியே, இலங்கை அரசு, ராமுக்கு லங்கா ரத்னா விருது வழங்கி 2005ம் ஆண்டு கவுரவித்தது.  இந்த விருது, இந்தியாவின் பாரத ரத்னா விருதுக்கு இணையானது என்பது குறிப்பிடத் தக்கது.  இப்படி தொடர்ந்து தனது சிங்கள ஆதரவு நிலையை கடைபிடித்து வந்த ராம், இலங்கையில் அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்ட போது கூட சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நிலைபாடு எடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
2005111517191402
2010ல் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் பேட்டியை வெளியிட்டார் ராம்.  N. Ram interviews Sri Lanka's President Mahinda Rajapaksa அந்தப் பேட்டியை எடுத்த ராம், இலங்கை அரசின் இனப் படுகொலையை மறைப்பதற்காகவே இப்படிப்பட்ட ஒரு பேட்டியை வெளியிட்டார் என்று பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு தலைச் சிறந்த பத்திரிக்கையாளரான ராம், ராஜபக்ஷேவின் ஊதுகுழலாக செயல்பட்டார் என்று ரெட்டிஃப் இணையதளம் செய்தி வெளியிட்டது.
ஒருவர் தீவிரமான புலிகள் எதிர்ப்பாளராகவே இருக்கட்டும்.  விடுதலைப் புலிகள் என்றால் வேப்பங்காயாகவே கசக்கட்டும். அப்படிப்பட்ட ஒரு மனிதர் கூட, சிங்களப் படைகளின் படுகொலைகளை நியாயப்படுத்த முடியுமா ?  அந்தத் தமிழ் மக்கள் சிங்களக் காடையர்களின் குண்டு வீச்சுக்களுக்கு இரையாகி கையிழந்து, காலிழந்து தவித்ததைக் கண்டு மனிதனாக உள்ள யாருக்காவது மனம் பொறுக்குமா ?
3
11 மே 2009 அன்று பிபிசியும், இந்து நாளேடும் வெளியிட்ட செய்திகளில் வேறுபாடுகள்
ஆனால் அந்தக் கொலைகளை நியாயப்படுத்தி, ராஜபக்ஷேவின் செய்தித் தொடர்பாளராகவே செயல்பட்டார் என்.ராம்.  போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்ததன் மூலம், ஒவ்வொரு பத்திரிக்கையாளரின் ஆதர்சமாக இருந்த ராம், எப்படி இருக்கக் கூடாது என்ற முன்னுதாரணமாக மாறிப் போனது சோகமான உண்மை.   பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்கிறார் வள்ளுவர்.  தன் செயல்களால் இழிவான சிறுமையில் வீழ்ந்து விட்டார் ராம்.
400 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்காக, ரவுடிகளைப் பயன்படுத்தி ஆவணங்களைக் கொள்ளையடித்த குற்றச் சாட்டுக்கு ஆளாகியிருக்கும் என்.ராமுக்கு சிறிதாவது மனசாட்சி இருக்குமென்றால், தற்போது இந்து பத்திரிக்கை தொடங்கியிருக்கும், The Hindu Centre for Politics and Public Policy என்ற அமைப்பின் நிர்வாகக் குழுவிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.  தொலைக்காட்சிகளில் தோன்றி பத்திரிக்கை உலக ஜாம்பவான் போல நடிப்பதை நிறுத்த வேண்டும்.
இலங்கையில் அல்லலுற்ற மக்கள், தமிழரல்லாதவராகவே இருக்கட்டும்.  ஒரு மக்கள் கூட்டமே, ஒரு இனமே அழிக்கப்படுகையில், அழிப்பவனுக்கு ஆதரவாக நிலையெடுத்ததன் மூலம், ஒரு கம்யூனிஸ்டாக இருக்கும் தகுதியை மட்டுமல்ல….  ஒரு உணர்வுள்ள மனிதன் என்ற தகுதியையே இழந்து விட்டார் ராம்.  அந்த மக்கள் இட்ட சாபம் வயிரெறிந்து விட்ட சாபமல்லவா ?
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்,  பெரும் செல்வத்தையே தேய்க்கும் படையல்லவா ?
 

வெள்ளி, 16 மார்ச், 2012

Ram journalism faces criticism in JNU for pro-Sri Lanka bias, endorsing genocide

Ram journalism faces criticism in JNU for pro-Sri Lanka bias, endorsing genocide

[TamilNet, Thursday, 15 March 2012, 06:04 GMT]
Activists of Delhi Tamil Students’ Union, Democratic Students Union, Students for Resistance and other common students raised slogans against N. Ram accusing him of being a ‘media fascist’ and ‘a stooge of Rajapaksa’ at a public meeting in JNU after his reply to a question on The Hindu’s role in whitewashing the Sri Lankan state genocide of the Eezham Tamils, wherein he had extensively blamed the LTTE. The meeting on ‘Paid news and media ethics’ was organized at JNU on Wednesday by the Student’s Federation of India, which is the students wing of the CPI(M). The fact that N.Ram and The Hindu have unethically manipulated news to cover up the war crimes of Colombo makes them complicit in the genocide committed on the Eezham Tamils, a Tamil Nadu research scholar in JNU told TamilNet.

Mr. Ram was talking about journalist coverage in India elections and during the US’ wars and on the theme of media ethics, referring greatly to Noam Chomsky’s Manufacturing Consent, a classic on understanding how news is manipulated and on editorial bias.

An activist of the DTSU raised a question on why Ram, who had talked about journalists being attacked in Palestine and Iraq, had nothing to say about media freedom and assault on journalists in Sri Lanka, including murder of Sinhala journalist Lasantha Wikramatunga.

When he has been silent about this, used his newspaper to support the genocidal war on the Eezham Tamils, called a visit to the IDP camps in Vavuniya an uplifting experience when they were reality in concentration camps, how could he talk about the ethics of journalism, the activist further asked.

As a reply, N. Ram had said that those who criticize the GoSL do not criticize the LTTE [an argument highlighted by Mahinda Rajapaksa too nowadays]. After criticizing the ‘ruthlessness’ of the LTTE in his reply, he added a line that had the GoSL committed excesses, he would criticize that too.

When an activist of the DSU observed that his bias was obvious in his reply itself, where he had criticized the LTTE for ten minutes, but had only one line to say about the GoSL, and whether this was his idea of media ethics, Ram fumbled for a response. At this, students in the audience remarked loudly that ‘this is why they gave you Sri Lanka Ratna’ and shouted ‘shame’.

Student organizations and common students then raised slogans calling him a ‘media fascist’ and a ‘stooge of Rajapaksa’.

“More than anyone else, N. Ram and The Hindu know what happened in Vanni was genocide. They had access to not just the highest rungs of power, but their reporters were also in the field, with the invading Sinhala army. The fact that they have unethically manipulated news to cover up all the war crimes which are now being exposed by outlets like Channel 4, makes them complicit in the genocide of the Eezham Tamils,” a DTSU activist in JNU told TamilNet.

Related Articles:
26.03.10   Coup in The Hindu means more than a family feud
16.10.08   Attack on media: freedom, arrogance and playing with the wil..

புதன், 19 ஜனவரி, 2011

hindu ram - mahindha rajapakshe conversation: இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் புனைவு !


நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள்.

இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். த‌ன‌து நாளேட்டின் த‌லைய‌ங்க‌த்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு‌‌ அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊட‌க‌ நேர்மையின் அடிப்ப‌டைக‌ளை மீறும் வேண்டாத‌ க‌ளைக‌ள் எல்லாம் நீக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் தொட‌ர்ந்து கூறி வ‌ந்துள்ளார்.

ஆனால் இங்குள்ள‌ பிர‌ச்சி‌னை என்ன‌வெனில் திரு.இராமே அவ‌ர் வைத்திருக்கும் இந்த‌ ஊட‌க‌ நேர்மை என்ற‌ வார்த்தைக்கு கூட‌ ம‌திப்ப‌ளித்த‌தே இல்லை என்ப‌து தான். வ‌ங்காளத்தில் உள்ள‌ த‌ன‌து விருப்ப‌மிகு மார்க்சிசுட்டுகள் முதல், த‌மிழ்நாட்டின் ஆன்மீக குருக்கள் வரை சிலரின் கிரிமினல் குற்றங்கள் முதல் படுகொலைகள் வரை திரு.இராமின் தலைமையில் இயங்கும் ஊடகம் வெளியிடுவதில்லை, மாறாக முழுவ‌துமாக‌ மூடி ம‌றைத்து, பொய்யான‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌ர‌ப்புவ‌திலேயே குறியாக‌ இருக்கின்ற‌து.

எல்லா தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளையும் இசுலாமிய‌ ச‌மூக‌மே ந‌ட‌த்துகின்ற‌து என்று இந்திய‌ உள‌வுத்துறை கூறும் ப‌ச்சைப் பொய்க‌ளை க‌ண்ணை மூடிக்கொண்டு அப்ப‌டியே கிளிப்பிள்ளை போல‌ ஒப்புவித்து வ‌ருகின்ற‌து இந்து நாளேடு. மேலும் இது ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ட‌ந்து வ‌ரும் இந்த‌ தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளில் பங்கு கொண்டிருக்கும் இந்துத்துவ‌வாதிக‌ளைப் ப‌ற்றி விசாரிக்க‌க்கூட‌ ம‌றுத்து வ‌ருகின்ற‌து.

”ச‌ர்வ‌தேசிய‌வாதியான” திரு.இராம் இந்தியாவில் ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை ம‌ட்டும் திரித்து எழுதுவ‌தோடு நின்று விடுவ‌தில்லை. உதார‌ண‌த்திற்கு, அவரது ந‌ண்ப‌ரும், இல‌ங்கை அதிபருமான‌‌ ம‌கிந்தாவிற்காக, ஊட‌க‌ நேர்மை எல்லாம் ம‌ற‌ந்துவிட்டே இந்துவில் வ‌ரும் இல‌ங்கையை ப‌ற்றிய‌ செய்திக‌ள் வ‌ருகின்ற‌ன‌.

இல‌ங்கை அர‌சின் இன‌ப் பாகுபாடுக‌ள், போர்க் குற்ற‌ங்க‌ள், இன‌ப்ப‌டுகொலைக‌ள், அர‌சை விம‌ரிசிக்கும் ந‌ப‌ர்க‌ள் மர்மமான முறையில் கொல்ல‌ப்ப‌டுத‌ல், இராச‌ப‌க்சேவின் ச‌ர்வாதிகார‌ப் போக்கு இவை எல்லாம் இந்து என்ற‌ “செய்திக‌ளை ஆவ‌ணப்ப‌டுத்தும்” நாளித‌ழில் அற‌த்தின் வ‌ழியே ந‌ட‌ப்ப‌தாகவே ந‌மக்கு கூற‌ப்ப‌டும். இதை எல்லாம் கேட்டு பொய்யை மெய் போல உரைப்பதில் தன்னையே விஞ்சிவிட்டார்களே இவர்கள், என கோய‌ப‌ல்சே மூச்ச‌டைத்து இற‌ந்தாலும் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை .

நல்ல ஊடகத்தின் அடிப்படையான‌ ஊட‌க‌ நேர்மைக்காகவும், பொதும‌க்க‌ள் இந்த உரையாடலைப் பற்றி பல இடங்களில் விவாதிக்க ‌வேண்டும் என்ற‌ ந‌ல்ல‌ எண்ண‌த்துட‌னும் எங்க‌ளிட‌ம் உள்ள‌ இராம், இராச‌ப‌க்சே புனைவு (Fiction) தொலைப்பேசி உரையாட‌லை உங்க‌ளுக்கு எழுத்து வ‌டிவில் வ‌ழ‌ங்குகின்றோம்.

புனைவுச் செய்திக‌ளை உண்மையான‌ செய்திக‌ளாக‌ வெளியிடும் இந்து நாளித‌ழ் போல் நாங்க‌ள் அல்ல‌; ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பேசுவ‌தை ப‌திவு செய்ய‌ எங்க‌ளுக்கு உரிமை இல்லை என்ப‌தாலும், இந்த‌ தொலைபேசி உரையாட‌ல் முழுமையாக‌ எங்க‌ளால் புனைய‌ப்ப‌ட்ட ஒன்றே என்று உங்க‌ள் எல்லோரிட‌மும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உண்மையான‌(!) செய்தி என்று இன்று ஊட‌க‌ங்க‌ள் கூறும் செய்திகளை விட, இந்த‌ புனைவு உரையாடல் எவ்வளவு உண்மையானது என்பதை வாச‌க‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ளே முடிவு செய்துகொள்ளுங்க‌ள்.

(தொலைபேசி ம‌ணி ஒலிக்கின்ற‌து, இராச‌ப‌க்சே தனது நல்வாய்ப்பு தரும் எண் ஒன்ப‌து வ‌ரை எண்ணிவிட்டு தொலைபேசியை எடுக்கின்றார் !)

இராம்: ஆயுபவ‌ன்(சிங்க‌ள‌த்தில் வ‌ண‌க்க‌ம் என‌ கூறுகின்றார்) அதிப‌ர் அவ‌ர்க‌ளே.

இராச‌ப‌க்சே: வ‌ண‌க்க‌ம் திரு.இராம்

இராம்: நீங்க‌ள் எப்பொழுது என்னை அழைத்தாலும் நான் வ‌ருவேன்

இராச‌ப‌க்சே: நான் “வ‌ண‌க்க‌ம்” என்று தான் சொன்னேனே த‌விர, ‘Wannacome’ என உங்க‌ளை இங்கே வரச்சொல்ல‌வில்லையே. தவிர இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ விவ‌கார‌ங்க‌ளில் நீங்க‌ள் தானே எங்கள் தில்லியின் செல்ல‌ப்பிள்ளை?.

இராம்: எப்பொழுதிலிருந்து நீங்க‌ள் த‌மிழில் பேச‌ தொட‌ங்கினீர்க‌ள் அதிப‌ர் அவ‌ர்க‌ளே? இது உங்க‌ள‌ சிங்க‌ள‌ மொழிக்கு நீங்கள் செய்யும் துரோக‌மாகாதா?

இராச‌ப‌க்சே: நான் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அதிப‌ராக‌ இருந்த‌ கால‌ம் முடிந்து விட்ட‌து ந‌ண்ப‌ரே, இப்பொழுது நான் இல‌ங்கையில் உள்ள‌ எல்லா இன‌க்குழுக்க‌ளுக்குமான‌ அதிப‌ர், த‌மிழ் இன‌க்குழுவையும் சேர்த்தே. அதாவது த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் சிறையில் இருந்தாலும் ச‌ரி, புல‌ம்பெய‌ர்ந்து வேறு நாடுக‌ளில் இருந்தாலும் ச‌ரி நான் தான் அவ‌ர்க‌ளின் அதிப‌ர்.

இராம்: உங்க‌ள் ச‌ர்வாதிகார‌த்தை அண்டி வாழும் சில‌ த‌மிழ‌ர்க‌ளை ம‌ட்டும் நீங்கள் வெளியில் விட்டு வைத்துள்ளீர்க‌ள். நீங்க‌ள் தான் நான் ச‌ந்தித்ததிலேயே மிக‌ப் பெரிய‌ பொறுக்கி (செல்ல‌மாக‌). அதிலும் நீங்க‌ள் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ரும் கூட .

இராச‌ப‌க்சே: பொறுக்கி என்ற‌ சொல்லை எவ்வ‌ள‌வு அன்பாக‌ கூறுகின்றீர்க‌ள் இராம் !. என‌க்காக‌ நீங்க‌ள் உங்க‌ள் அர‌சுட‌ன் ந‌ட‌த்தும் திற‌மையான‌ அர‌சுற‌விய‌ல் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க‌வே மாட்டேன். நீங்கள் எப்போதுமே ஊடகவியலாளர் என்பதற்கு ஒரு படி மேலானவர். எங்கள் அரசினுடைய விருப்பத்துக்குறிய தரகரல்வோ நீங்கள். வரும் ஆண்டுக்கான விபீச‌னா விருது ப‌ட்டிய‌லில் நான் உங்க‌ளின் பெய‌ரை சேர்த்திருக்கின்றேன் . லங்கா இரத்னா விருது பெறும் 'இந்து' என். இராம்

இராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிசுக‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான். அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன

இராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது. நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.

இராம்: உங்க‌ளுக்கு வ‌ரும் ப‌ண‌த்தின் அள‌வு சுருங்கிவ‌ருகின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே, இது உல‌க‌ப் பொருளாதார‌த்தின் தேக்க காலம். தவிர உங்க‌ள‌து க‌ழுத்தைச் சுற்றியிருக்கும் கயிறு இறுகுவது போலுள்ளது, உங்க‌ள‌து ஆட்சிகால‌த்தில் ந‌டைபெற்ற‌ போர்க்குற்ற‌ங்க‌ளை விசார‌ணை செய்ய‌ வேண்டும் என‌ பன்னாட்டு அமைப்புகள் கோரி வ‌ருகின்ற‌ன. க‌ட‌ந்த‌ ஆண்டு உங்க‌ள‌து இராணுவ‌ம் த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் அமைப்பை ஒன்றும் இல்லாம‌ல் செய்த‌ போது, ஒரு வார‌த்தில் மட்டும் 20,000 அப்பாவி த‌மிழ்ப் பொதும‌க்க‌ளை கொன்றார்க‌ளே, அந்த‌ கோர‌ நிக‌ழ்ச்சி நினைவிருக்கிறதா?

இராசப‌க்சே: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான். நான் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும். அண்மையில் “சேனல் 4″ எம‌து ப‌டையின‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளையும், அவ‌ர்க‌ளிட‌ம் ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருந்த‌ இசைப்பிரியா என்ற‌ பெண்ணையும் ப‌டுகொலை செய்யும் காணொளியை ஒளிப‌ர‌ப்பினார்க‌ளே. அதைப் ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்?

இராம்: கொடூர‌மான‌ ஒன்று, அதாவ‌து கொடூர‌மான‌ ஊட‌க‌விய‌ல் என‌க் கூற‌வ‌ருகின்றேன். உங்க‌ள‌து அர‌சை த‌வ‌றான‌ இட‌த்தில் வைத்துக் காட்டும் ஒரு காணொளியை அவ‌ர்க‌ள் எப்ப‌டி ஒளிப‌ர‌ப்ப‌லாம்? இது ஒரு முறைய‌ற்ற‌ ஊட‌க‌விய‌லை (Bad journalism) பி.பி.சி ஒரு போதும் கடைப்பிடிக்க மாட்டார்க‌ள். சேனல் 4 ம‌ட்டும் இப்படி கீழ்த்தரமாக செல்வார்கள்.

இராச‌ப‌க்சே: நீங்க‌ள் பி.பி.சி யுடனும் ஏதாவ‌து ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ளீர்க‌ளா, என்ன? என்னைப் பொருத்த‌வ‌ரையில் அவ‌ர்க‌ள் எல்லாம் ஒன்று தான். இந்த‌ வெள்ளைய‌ர்க‌ள் இன்னும் த‌ங்க‌ள‌து கால‌னீய‌ ஆட்சி ந‌ட‌ந்து கொண்டிருப்ப‌தாக‌ நினைத்துக் கொண்டு அவ‌ர்க‌ள் ஆப்கானிசுதானத்திலும், ஈராக்கிலும் செய்யும் இன‌ப்ப‌டுகொலைக‌ளை ம‌றைத்து, நாம் செய்த‌ இனப்ப‌டுகொலையை ம‌ட்டும் எல்லோருக்கும் சுட்டிக்காட்டுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ளால் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌முடியுமென்றால் ந‌ம்மாலும் செய்ய‌ முடியும்.

இராம்: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி. இது மனிதநேய முகமூடியுடன் அலையும் உல‌க‌லாவிய‌ ஏகாதிப‌த்திய‌ம். மாநிற‌ ம‌க்க‌ள் ம‌ட்டும் எப்பொழுதும் தவறு செய்து கொண்டும், ம‌னித‌ உரிமை விதிக‌ளை எப்பொழுதும் மீறிக் கொண்டும் இருப்பவர்கள், ஆனால் வெள்ளை இன‌‌ ம‌க்க‌ள் மட்டும் அற‌த்தின் ப‌டி ந‌ட‌க்கும் சாத‌னையாள‌ர்க‌ளாம்… நான் கேட்கிறேன், இப்படி ஒரு மாநிற‌ ம‌க்க‌ள் குழு ம‌ற்றுமொரு மாநிற‌ ம‌க்க‌ள் குழுவை கொல்வ‌திலெல்லாம் அப்படி என்னதான் தவறு இருக்கிறதோ?

இராச‌ப‌க்சே: இராம் இங்கு பிர‌ச்ச‌னை என்ன‌வென்றால் சில‌ மாநிற‌, க‌ருப்பின‌ ம‌க்க‌ளும் வெள்ளையின‌த்த‌வ‌ரை போல‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ ச‌ர‌த் பொன்சேகாவை எடுத்துக் கொள்ளுங்க‌ள், அவ‌ன் என்னிட‌ம் இராணுவத்‌ த‌ள‌ப‌தியாக‌ இருந்தான், ஆனால் ப‌ணியிலிருந்து ஓய்வெடுத்த‌ பின்ன‌ர் அவ‌ன் என்னை அர‌சிய‌லில் எதிர்த்து போட்டியிடுகின்றான். மேலும் நானும், என‌து ச‌கோத‌ர‌ர்க‌ளும் செய்த‌ போர்க்குற்ற‌ங்க‌ளை உல‌குக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டப்போவ‌தாக‌வும் கூறுகின்றான். இவை எல்லாம் எத‌ற்காக‌? அமைதிக்கான‌ ஒரு நோப‌ல் ப‌ரிசிற்காக‌வும், ஓய்வுக்கால‌த்தை சுவீட‌னில் க‌ழிப்ப‌த‌ற்காகவும் தானே?

இராம்: நீங்க‌ள் அந்த ஆளை சிறையில் அடைத்தது நல்லது. இல்லை என்றால் அவ‌ர் ந‌ம‌க்கு மிக‌ப்பெரிய‌ தொந்த‌ர‌வாக‌ இருந்திருப்பார். எங்களுக்கும் அவ‌ரது சத்தத்தை மூடி மறைத்துகொண்டிருந்தது கூச்சமாக இருந்தது.

இராச‌ப‌க்சே: அதற்காக நான் ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ளை வ‌ளைக்க ‌வேண்டியிருந்தது, ஆனால் அது எல்லாம் இல‌ங்கையின் ந‌ல‌னிற்காக‌த்தானே. புத்த‌ர் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் என‌து நாட்டில் அர‌சிய‌லமைப்பு என்று எதுவும் இல்லை. அப்ப‌டியிருக்க‌ இப்போது ம‌ட்டும் எத‌ற்கு ஒரு அர‌சிய‌ல‌மைப்பு? என்ன‌ தான் இருப்பினும் நாங்க‌ள் ஒரு பௌத்த‌ நாடு தானே. எங்க‌ள‌து ம‌த‌க் கொள்கைக‌ளை பாதுகாப்ப‌து எம‌து முக்கிய‌ க‌ட‌மை தானே.

இராம்: ச‌ரியான‌ க‌ருத்து. புதிய‌ வ‌ர‌லாறு எழுதுவ‌த‌ற்கு முன்ன‌ர் ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை முற்றிலுமாக‌ துடைத்து எறிந்துவிடுங்க‌ள். அற‌த்தின் வ‌ழியாக‌ நாம் ந‌ட‌ப்ப‌து போல‌ காட்டிக்கொள்வ‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று. ஏனென்றால் இந்த‌ (அற‌த்தின் வ‌ழி) த‌ள‌த்தில் எல்லோரும் ச‌ற்று குழ‌ம்பியே உள்ளார்க‌ள். மிக‌வும் ச‌த்த‌மான‌, உறுதியான‌ குர‌லே இறுதியில் எளிதாக‌ ம‌க்க‌ளைச் சென்ற‌டையும்.

இராச‌ப‌க்சே: குர‌ல் ம‌ட்டும் போதாது இராம், நம் மீது விம‌ர்சன‌ம் வைத்து ந‌ம்மைக் கீழே இற‌க்க‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ளை அமைதி ப‌டுத்த‌ ந‌ம‌க்கு துப்பாக்கியும் தேவை. ப‌டுகொலை என்ற‌ மிக‌ப்பெரிய‌ த‌ணிக்கை முறையை நான் ப‌ல‌ முறை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ தேவை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு அட‌ம்பிடித்த‌ அந்த‌ முட்டாள் பயல் ‘ச‌ண்டே லீட‌ர்’ இல‌சாந்த‌ விக்ர‌முதுங்காவிற்கும் இதே த‌ணிக்கை முறையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தாயிற்று.

இராம்: இதை எல்லாம் நீங்க‌ள் தொலைபேசியில் கூற‌க்கூடாது. நாம் பேசுவ‌தை எல்லாம் யாரோ ஒருவ‌ர் ப‌திவு செய்தால் என்ன‌வாகும் என‌ நினைத்துப்பாருங்க‌ள்?

இராச‌ப‌க்சே: நான் இந்த‌ தொலைபேசி ப‌திவு ஒரு இர‌ண்டாம் த‌ர‌ த‌மிழ் ந‌டிக‌னை வைத்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என‌க் கூறி ம‌றுத்துவிடுவேன். இப்பொழுது கொழும்பில் எங்க‌ளிட‌ம் எந்த‌ ஒரு ஒலி/ஒளி ஆதாரத்தையும் சிதைத்து போலியென மாற்றக்கூடிய ஆற்றல் படைத்த நிபுணர்கள் உள்ளனர்

இராம்: ஹா,ஹா..! நீரா ராடியா என்ற‌ பெரு முதலாளிகளின் வ‌ர்த்த‌க‌ த‌ர‌கு பெண்ம‌ணியுடனான தங்கள் தொலைபேசி உரையாடல் வெளிவ‌ந்த போது இந்திய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளான‌ ப‌ர்கா த‌த்தும், வீர் சிங்க்வீயும் எப்ப‌டி அதை பொய் என்று ம‌‌றுத்தார்க‌ளே, அவ்வளவு நேர்மையாக உள்ள‌து உங்க‌ள‌து ம‌றுப்புரையும். நான் கூட ஒரு தொலைக்காட்சி நிக‌ழ்ச்சியின் போது அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் வெளுத்து வாங்கி விட்டேன். அது என‌க்கு ந‌ன்றாக‌ இருந்த‌து. தாக்குத‌தல்தான்‌ பாதுகாப்பி‌ற்கான‌ சிறந்த வ‌ழிமுறை !.

இராச‌ப‌க்சே: நான் கூட‌ அந்த‌ நிக‌ழ்ச்சியைப் ப‌ற்றி கேள்விப்ப‌ட்டேன். அதில் நீங்க‌ள் பிர‌பு சாவ்லாவை ம‌ட்டும் க‌ண்டுகொள்ளாம‌ல் விட்ட‌தையும் நான் க‌வ‌னித்தேன். ப‌ர்கா, வீர் சிங்வீயை விட‌ மிக‌ மோச‌மான‌ ஆள் பிரபு சாவ்லா என கேள்விப்படுகிறேன். நீங்க‌ள் செய்த‌து புத்திசாலித்த‌ன‌மான‌ வேலை. அப்புறம், இந்தியாவில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் யாராவ‌து வேலை இழ‌ந்தால் அவ‌ர்க‌ளை உட‌னே இல‌ங்கைக்கு அழைத்து ஊட‌க‌விய‌லை சொல்லித்த‌ரும் க‌ல்லூரிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ளாக‌ ப‌ணியம‌ர்த்த‌வேண்டும் என‌ என‌து ஊட‌க‌ ஆலோச‌க‌ர் என‌க்கு ஆலோச‌னை கூறினார். அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் திற‌மைக‌ளை வைத்துக்கொண்டு நாம் ந‌ம்மை காத்துக்கொள்ள‌வும் முடியும், நமக்கு ஆதரவாக அவர்களை வைத்து பிரச்சாரம் செய்யவும் முடியும். ஒரே க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்க‌ள்.

இராம்: உங்க‌ள் காலடியிலேயே நான் கிடக்கும் போது மற்றவர்களெல்லாம் எத‌ற்கு அதிப‌ர் அவ‌ர்க‌ளே?

இராச‌ப‌க்சே: இத‌ற்கு எல்லாம் ம‌ன‌வ‌ருத்த‌ம் அடையாதீர்க‌ள் இராம். இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என‌க்கு நீங்க‌ள் மிக‌ விசுவாச‌மாக‌ இருந்து வ‌ந்துள்ளீர்க‌ள். இந்திய‌ ஊட‌க‌ங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள‌ ந‌ம்ப‌க‌த்த‌ன்மை, ம‌ரியாதையைக் கொண்டு நான் இதுவ‌ரை செய்த‌ ப‌டுகொலைக‌ளையும் ,குற்ற‌ங்க‌ளையும் வெளியே தெரியாம‌ல் மூடி ம‌றைத்து விட்டீர்க‌ள். ஆனால் உண்மை என்ன‌வெனில் உங்க‌ளுக்கு இப்பொழுது வ‌ய‌தாகிவிட்ட‌து. முன்பிருந்த‌தை போல‌ இப்பொழுதெல்லாம் உங்க‌ள‌து குர‌ல் அறை முழுக்க‌ க‌ணீரென‌ கேட்ப‌து இல்லை.

இராம்: அது உண்மை தான். ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நான் கூறிய‌ வார்த்தைக‌ளையே நான் என்னுள் விழுங்க வேண்டியிருந்ததால் அவை எல்லாம் என‌து குர‌ல் நாள‌ங்களை பாதித்துவிட்ட‌ன‌. எப்ப‌டி இருப்பினும் இந்தியாவில், அதாவ‌து புது தில்லியைப் பொருத்த‌வ‌ரை நான் தான் இருப்ப‌திலேயே தூய்மையான‌ க‌றைப‌டியாத‌ ஊட‌க‌விய‌லாள‌ன்.

இராச‌ப‌க்சே: உங்களுடைய சொந்த நலனையெல்லாம் எப்படித்தான் உங்களால் ஊடகவியல் நேர்மையாக மாற்றி பிடிபடாமல் தப்பிக்க முடிகிறதோ? என்ன‌தான் இருப்பினும் இந்து முனிவ‌ர்க‌ளின் கருத்துப்ப‌டி இது “க‌லியுக‌ம்” தானே

இராம்: இந்த‌ வேலையை எல்லாம் என‌து ஆரவாரமான ஆங்கில‌ம் செய்கின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே. நான் பேசும் போதும், எழுதும் போதும் ப‌ய‌ன்ப‌டுத்தும் சிக்க‌லான‌ வ‌ரிக‌ளை இந்த‌ முட்டாள்க‌ள் எல்லாம் வேத வாக்காக என்றே நினைக்கின்றார்க‌ள். நான் நினைக்கின்றேன் அங்கு உள்ள‌ பெரும்பாலானவ‌ர்க‌ள் என்னை முன்னாள் வைசிராயின் ம‌றுபிற‌வி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

இராசபக்சே: நீங்க‌ள ”மவுண்டு ரோட் மகாவிசுணு” அவதாரம் என்ற‌ல்ல‌வா நான் நினைத்தேன். ஹா,ஹா,ஹா.

இராம்: ஐயோ கடவுளே நான் ஒரு மார்க்சிசுடு கட்சியின் (சி.பி.எம்) உறுப்பினன்! நீங்க‌ள் கூறுவ‌து ந‌கைச்சுவையாக‌ இல்லை அதிப‌ர் அவ‌ர்க‌ளே. அந்த ‌ வ‌ரியை நான் வெறுக்கின்றேன்.

இராச‌ப‌க்சே: க‌ட‌வுளின் அவ‌தார‌மாக‌ இருப்ப‌த‌ற்கு வெட்க‌ப்ப‌டாதீர்க‌ள். நானும் கூட‌ என்னை போர்க்க‌ட‌வுளான‌ துட்ட‌கெமுனுவின் ம‌றுபிற‌வியாக‌க் கூறிக்கொள்வ‌தில்லையா என்ன‌. மார்க்சிசுட்டுக‌ள் கூட‌ க‌ட‌வுள்க‌ளாக இருக்க‌‌லாமே; இதை நாம் ந‌வீன‌ கால‌ வ‌ர‌லாற்றில் இருந்து தெரிந்துகொள்ள‌வேண்டும். ஆனால் உங்கள் மார்க்சிச‌ம் எனக்கு தலைகால் புரியவில்லை, அந்த வானவில்லில் நீங்கள் எந்த நிறத்தில் இருக்கிறீர்கள்? மஞ்சளா, ஊதாவா? க‌ண்டிப்பாக‌ நீங்க‌ள் சிக‌ப்பு நிற‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் கிடையாது என்றே நினைக்கிறேன்.

இராம்: நான் க‌ண்டிப்பாக‌ இந்த‌ உண்மையை ஒப்புக்கொள்ள‌ வேண்டும் அதிப‌ர் அவ‌ர்க‌ளே. என‌து ஆன்மாவிற்குள் என்னுடைய வ‌ர்த்த‌க‌ இலாப‌த்திற்கும் மார்க்சியத்தின் பாலுள்ள அறிவுபூர்வமான கவர்ச்சிக்கும் இடையே மிக‌ப்பெரிய‌ ச‌ண்டை போர் வ‌ருகின்ற‌து. ஒரு அற்ப முன்னாள் சோச‌லிச‌வாதியான‌ உங்க‌ளால் இதெல்லாம் புரிந்து கொள்ள‌முடியாது !.

இராச‌ப‌க்சே: என்னால் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ முடிகின்ற‌து இராம். உங்க‌ள‌து ஆன்மா இலாப‌த்திற்கும் மார்க்சியத்துக்கும் இடையில் முரண்படும் போது, உங்க‌ளிட‌ம் உள்ள‌ பிராமணன் அந்த இர‌ண்டு பக்கங்களிடமும் எவ்வ‌ள‌வு இலாப‌ம் பார்க்க‌முடியுமோ என்பதை கவனமாக கணித்து அதை பெறும் வேலையை செய்துகொண்டிருக்கின்ற‌து.

இராம்: நீங்க‌ள் ஒரு சாதிய‌வாதீ அதிப‌ர் அவ‌ர்க‌ளே. ஒரு ந‌ல்ல‌ பௌத்தரான‌ நீங்க‌ள் இதுபோல‌ல்லாம் பேச‌க்கூடாது. அது ஒரு ச‌ரியான‌ சோச‌லிச‌மோ, மார்க்சிய‌மோ அ‌ல்ல‌ !

இராச‌ப‌க்சே: இப்பொழுது நீங்க‌ள் கூற‌வ‌ருவ‌தை நான் ச‌ரியாக‌ புரிந்துகொண்டேன் இராம். இது போன்ற‌ குழப்பங்களிலிருந்து நீங்க‌ள் வெளியேவ‌ர‌ வேண்டும். நீ ஒரு சாண‌க்கிய‌னைப் போல‌ ந‌ட‌ந்தால், பேசினால். நீ ஒரு சாண‌க்கிய‌ன்! உங்கள் முதுமையை இப்போது நான் கணிக்கிறேன். உங்கள் ப‌த்திரிகைப் பேர‌ர‌சை இளைஞ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பதற்கு மறுப்பது, உங்கள் நண்பர்களை பாதிக்கக்கூடிய செய்திகளை வெளியிடாமல் மூடி மறைப்பது அதே நேரம் ஊடக நேர்மைக்கு வகுப்பெடுக்கும் ஒரு ‘மடமாக’ உங்களை நிலை நிறுத்திக்கொள்வது.

இராம்: நீங்க‌ள் எத்த‌னை கால‌ம் உங்க‌ள் பௌத்த‌ நாட்டிற்கு அதிபராக‌ இருக்கின்றீர்க‌ளோ, அதுவ‌ரை நானும் என‌து ப‌த்திரிகைக்கு ஆசிரியராக‌ இருக்க‌ விரும்புகின்றேன். இந்த ஒரு சின்ன‌ இல‌ட்சிய‌த்தைத் தான் நான் கொண்டுள்ளேன். இது எல்லாம் உங்க‌ள‌து ஆசிர்வாத‌மும், வாழ்த்துக‌ளும் இருந்தால் தான் ந‌ட‌க்கும்.

இராச‌ப‌க்சே: இனிய‌ இர‌வு இராம், உங்களின் மேம்படுத்தப்பட்ட‌ விவரணத்தை (Updated Curriculam Vitae) நான் குறிப்பிட்ட‌ அந்த‌ விபிசன விருதிற்காக‌ அனுப்ப‌ ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்.

இராம்: இனிய‌ இர‌வு அதிப‌ர் அவ‌ர்க‌ளே. உங்க‌ள‌து கெட்ட‌ க‌ன‌வுக‌ள் எப்பொழுதும் ப‌லிக்காம‌லே இருக்கவேண்டும்.

முற்றும்…..

நன்றி
வினவு இணையம்

இந்த புனைவை எழுதிய ச‌த்ய‌ சாக‌ர் ஒரு எழுத்தாள‌ர், இய‌க்குந‌ர். இவ‌ர் தில்லியில் வ‌சித்துவ‌ருகின்றார். இவ‌ரை நீங்க‌ள் sagarnama@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வரியில் தொட‌ர்பு கொள்ள‌லாம் ்
World newsSports

சனி, 11 ஜூலை, 2009

தலையங்கம்:
வாளாவிருத்தல் நியாயமில்லை!



சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான். எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி! அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது. மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்? பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன? வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்? உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும். முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை. நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல! நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?
கருத்துக்கள்

சிறந்த ஆசிரியருரைக்கு விருதுகள் வழங்குவதாயின் இவ்வுரைக்குத்தான் இவ்வாண்டு வழங்கப்பட வேண்டும். 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்பனவற்றை வெற்று முழக்கமாகக் கொள்ளாமல் இலக்காகக் கொண்டு இவ்வுரை அமைந்துள்ளது. ஆசிரியவுரையே தன்னிறைவாக உள்ள போது, ஊடகத் தரகர்கள் பற்றி நான் வேறு எழுத வேண்டிய தேவையில்லை. ஆனாலும தூங்குவது போல் நடிக்கும் இந்திய, தமிழக அரசுகள் கேளாக் காதினராகத்தான் இருக்கும். மக்கள்தாம் விழித்து எழுந்து அவர்களின் செவிகளில் விழச் செய்ய் வேண்டும். அல்லது அவர்களை வீழச் செய்ய் வேண்டும். மக்கள் எழுச்சியால் வீழாத அரசு எதுவும் உண்டா? ''சொந்த நாட்டில் பரர்க்கு அடிமை செய்தே துஞ்சிடோம் - இனி அஞ்சிடோம்!'' என வாழும் தமிழ் மக்களை நாளும் அழிக்கும் அரசுகள் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலக மக்களே தினமணி உரையை உணர்ந்து எழுச்சி கொள்வீர்! வாழ்க மனித நேயம்! வெல்க தமிழ்ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/11/2009 4:02:00 AM

heartly thanks for dinamani to publish srilankan tamil issue

By kannan
7/11/2009 3:41:00 AM

HEART IS BURSTING. OH MOTHER NATURE KINDLY SHOW YOUR LOVE AND PEACE FOR THE POOR SUFFERING SL TAMILS OR ANY ONE SUFFERING SUCH GENOCIDE IN THE WORLD. WHY IS THIS SUFFERING FOR SL INNOCENT TAMILS.

By tamizhan
7/11/2009 3:34:00 AM

பொய்ச் செய்திகள் போட்டு தனது அரிப்பை வெளிப்படுத்திய இந்து ராம் ஒரு முற்போக்குவாதியாம்? சீனசார்பு மார்க்ஸ்சிஸ்ட் எனச் சொல்கிறார்கள். சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்குவது போலவே சீனாவுக்கும் வக்காலத்து வாங்குவது இந்து ராமின் முழுநேரத் தொழில். இதைவிட வெட்கக் கேடு வேறு இருக்க முடியாது. தமிழர்கள் கொட்டிய குருதி மகிந்த வடித்த கண்ணீர் இராசபக்சேயின் கைகளில் மட்டுமல்ல அவரோடு விருந்துண்டு மகிழ்ந்த இந்து ராம் கைகளிலும் தாராளமாகப் பூசப்பட்டிருக்கிறது. தமிழக தமிழர்கள் இந்து ராமுக்கு தக்க பாடம் படிப்பிக்கிறார்கள் இல்லையென்பதுதான் எமது ஆதங்கம். இப்படியான ஒரு எட்டப்பனை புறங்கட்டாது எப்படி விட்டு வைத்துள்ளார்கள்?

By Keeran
7/11/2009 3:04:00 AM

26-12-2004 அன்று வீசிய சுனாமி யின்போது பிரபாகரனும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மானும் பேரலைகளால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை யென்றும் ஒரு பரபரப்பான செய்தியை இந்து நாளிதழ் வெளியிட்டது. பிரபா கரனுக்காக விலைஉயர்ந்த சவப்பெட்டி ஒன்று தமிழ்ப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இந்து இதழ் கூறியது. அதுமட்டுமல்ல இலங்கைக் கடற்படையின் வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி, பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று அறிவித்தார். முன் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டு மகிழ்ந்த இந்து நாளிதழ் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளி யிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக்கவே இல்லை. ஆனால் 10 நாட்கள் கழித்து நோர்வே நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்பீட்டர்சன் கிளிநொச்சியில் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்து வெளியிட்டது. பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியதற்கு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்து இதழுக்கு இருக்கவில்லை. இவ்வாறெல்லாம் பிரபாகரனை மாத்தையா சுட்டுவிட்டார். அவரது சடலம் ஊர்வலாமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்று பொய்ச் செய்திகள் போட்டு த

By Keeran
7/11/2009 3:02:00 AM

உங்கள் தலையங்கத்துக்கு எமது பாராட்டுக்கள். ஆனால் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள்? யார் காதில் போடப்போகிறார்கள்? தமிழக முதல்வரே எந்த வெட்கமோ துக்கமோ இன்றி சிங்களவனுக்கு கோபம் வராத வகையில் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று திருவாய்மலர்ந்துள்ளாரே? இந்து இராம் கடந்த பத்து ஆண்டுகளாக வி.புலிகளைக் கொச்சைப் படுத்துவதையே தனது முழுநேர வேலையாக வைத்திருப்பவர். ஒருமுறைக்கு இருமுறை உயிரோடு பிரபாகரனைச் சாகடித்த பெருமையும் அவரைத்தான் சாரும். 25-7-89 அன்று ஒரு திடுக்கிடும் செய்தியை இந்து வெளியிடப்பட்டது. புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருப்ப தாகவும் இந்து சொல்லியது. வடக்கு கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், பிரபாகரன் இறந்த செய்தியை உறுதிசெய்தார்.ஆனால் 2 நாட்களில் இச்செய்தி யில் கொஞ்சம் கூட உண்மையில்லை – பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக்கிறார் என்பது

By Keeran
7/11/2009 2:59:00 AM

very very thanks for your editorial.Only medias can turn the leaders on innocent Tamils' 'HORRIBLE' lives in tortured Nazi's concentration camps in Vanni.People in Vanni never sent back visitors without giving food and milks, even Jaffna Tamils can't afford to do this.Unfortunately, Todays message is very sad that cooked food contractors refused to give the foods because government did not paid their expenditure so they spent it.Look like 300 thoousan people now in hungry and thirsty.Only reason They only born as Tamils and They speak only Tamil and They follow Tamil cultures.Still are we living in 21 th cetury?? Used to be king now dishwasher

By Thamilan
7/11/2009 2:24:00 AM

TO WHOEM YOU ARE TELLIN HIS?EVRYTHING IN SL IS BEING DONE BY INDIAN ADVICE,AFTER ALL TAMILS NADU SLAVES ARE PREPARE TO SELL THEM FOR MONEY INCLUDING THE LEADERS.LET THE TAMILS DIE QUIETLY,LET THE ITALINA MONSTER BE HAPPY,LET THE BILLION SHEEPS WORDHIP HER.BUT ONE THING IS CLEAR THIS TEARS OF TAMILS WILL ONE DAY DESTROY INDIA.

By DANDY
7/11/2009 2:23:00 AM

Yaru enna sonnalum ethum nadakka povathu illai.Ingu america-il oru nayai-i(dog) kondratharkku,oru varudam jail thandanai kodukkirarkal.Anal eelathilo tamilanai kondral,tamil pennai tharugirarkal.. Tamilan endru sollada,,thalai kuninthu nillada.LTTE eelathil potta sandayai,chennai-il pottu irunthal,vidivu kidaithurukkum

By Anbu
7/11/2009 2:21:00 AM