புதன், 19 ஜனவரி, 2011

Rajapakshe is war ciriminal - Periyar D.K.resolution: இராசபட்ச போர்க் குற்றவாளி: பெரியார் திக மாநாட்டில் தீர்மானம்

சிறப்பான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பெரியார் திராவிடர் கழகத்திற்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


ராஜபட்ச போர்க் குற்றவாளி: பெரியார் திக மாநாட்டில் தீர்மானம்


பெங்களூர், ஜன.18: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ÷கர்நாடக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை சாதி எதிர்ப்பு, ஈழ ஆதரவு மக்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி, பாமக சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தலைவர் சி.ராசன் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய கொளத்தூர் மணி, ஈழத்தமிழர்களுக்காக நடந்து வரும் போராட்டத்தையும், அதற்கு இந்தியாவின் மறைமுக எதிர்ப்பையும் விளக்கினார். ஈழம் மலருவதற்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கடமையாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  ÷இறுதிக்கட்ட போரின்போது ஈழத்தில் நடைபெற்ற கோர சம்பவங்களை வேல்முருகன் உருக்கமாக விளக்கினார். பெங்களூருக்கு டிசம்பர் 10-ம் தேதி வருகைதந்த இலங்கை அமைச்சர் சலிண்டதிசநாயகேவுக்கு கருப்புக்கொடி காட்டி சிறைசென்ற 40 பேருக்கு பொன்னாடை போர்த்தி கொளத்தூர் மணி கெüரவித்தார்.  ÷இலங்கை லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று இனப்படுகொலை செய்த ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். முள்வேலியில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வுப்பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பெரியார் எழுத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும். தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக