chennai university லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
chennai university லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜனவரி, 2011


பொதுவாக மொழியியல் பிரிவினர் பேச்சுத் தமிழுக்கு முதன்மை அளித்து நல்ல தமிழுக்குச் சிதைவு ஆக்குநர்களாக இருப்பார்கள். அவ்வாறில்லாமல் கணிணித்தமிழ் வளர்ச்சிக்கு இம் மொழியியல் துறை சிறப்பாகச் செயல்பட்டது. முனைவர் தெய்வசுந்தரத்தின் பணியைத் துணைவேந்தர் அவர்களும் பல கூட்டங்களில் பாராட்டியுள்ளார். அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பெற்று அவர் பெரும் முயற்சியால் மேற்கொண்ட சிறப்பான பணிகள் நிறைவுற்று கணித்தமிழ் வளர்ச்சியில் தமிழ் சிறப்பான இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அவருக்கு நீட்டிப்பு தராததுடன் அத்துறையையே மூடிய கொடுமை ஏன் நிகழ்ந்துள்ளது எனத் தெரியவில்லை. உடனே இத்துறைக்குப் புத்தாக்கம் அளிக்க வேண்டும். இதனை மக்களின் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ள தினமணிக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்