சனி, 21 ஆகஸ்ட், 2010

மாநில உரிமைகளில் தில்லி தலையிடுகிறது: முதல்வர் கருணாநிதி


சேலம், ஆக. 20: மாநில அரசுகளின் உரிமைகளை எடுத்துக் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.சேலத்தில் ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ரூ.39 கோடி கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.273 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா, ரூ.36 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து கருணாநிதி பேசியது:சேலத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 2007-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது திறப்பு விழா காணும் இந்தப் புதிய அலுவலகம் தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 51 துறைகளின் அலுவலகங்களைக் கொண்டு மிகப் பெரிய அலுவலகமாகத் திகழ்கிறது. இதேபோல் ரூ.139 கோடி மதிப்பீட்டில் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அதி நவீன மருத்துவமனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையானதாகத் திகழ உள்ளது.நுழைவுத் தேர்வு:மருத்துவமனைகள் மத்திய அரசின் பொறுப்பில் வரும். அப்படி வந்தால் இனி நுழைவுத் தேர்வு உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே திமுக  ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வு இருந்தால்  கிராமப்புற மாணவர்கள் முன்னேற முடியாது, உயர்ந்த பதவிகளுக்கு வர முடியாது என்ற காரணத்தால், நுழைவுத் தேர்வு என்னும் கதவு இல்லாமலேயே மாணவர்கள் முன்னேறி வர வசதியாக சட்டம் இயற்றினோம். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பதில் எந்தக் கட்சிக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. காங்கிரஸ், பாமக கட்சிகள் இதே கருத்து உடையவை. அதிமுக கூட நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அக்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மத்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருகிறது, ஆனால் இவர் கடிதம் எழுதுகிறார் என்று அறிக்கை வெளியிட்டார்.கடிதத்தின் பலனே இது... நான் கோரிக்கைகளுக்காகவும், தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன். நுழைவுத் தேர்வு குறித்த கடிதத்தில் சாமானிய குடிமகன்களின் வாழ்வை நுழைவுத் தேர்வு அழித்துவிடும் என்று தமிழக மக்களின் மனதை பிரதிபலித்து கடிதம் எழுதினேன். அதன் பலனாகத்தான் இப்போது நுழைவுத் தேர்வு நிறுத்தி வைப்பு என்ற தகவல் அங்கிருந்து கிடைத்துள்ளது.உரிமைகளை பறிக்கக் கூடாது: அப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சியை அளித்தாலும் கூட, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு எடுக்கும் முறையில் இருந்தால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.மத்திய அரசு எடுக்கும் நுழைவுத் தேர்வு முடிவானாலும், வரி விதிப்பு போன்ற எந்த செயலாக இருந்தாலும் மாநிலங்களின் கருத்தைக் கேட்டறிந்தே மத்திய அரசு  முடிவெடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இங்கிருந்து எழும் குரல் பொதுவான விஷயங்களுக்கு ஒருமித்த குரலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றார் முதல்வர்.விழாவில், நிதி அமைச்சர் க.அன்பழகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீரபாண்டி ஆறுமுகம், மத்திய இணையமைச்சர் காந்திச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது குறித்து தமிழ்நாட்டின் முசிபூர் இரகுமான் அவர்கள் வருத்தப்பட்டால் பயனில்லை. மாநிலத்தில் தன்னாட்சிக்கு உரிமை கொடுக்கும் அவர் பிற மாநில அரசுகளுடன் இணைந்து போராடி வெற்றி பெற வேண்டும்.தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் கடலோரக் காவலை மத்திய அரசிடம் ஒப்படைக்கக்கூறிய கருத்தையும் திரும்பப் பெற வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதே வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றால் எதற்கு ஆட்சிப் பொறுப்பு என்று கேட்க மாட்டார்களா? பதவிகளுக்குப் போராடுவது போல் தமிழகத்தின் / தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் முயன்று வெற்றி காண ‌வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 5:56:00 AM
நிருபாமா – கருணாநிதி: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் “போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியா உதவும். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும், அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ்,
By முத்தமிழ்
8/21/2010 4:43:00 AM
அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறியுள்ள நிருபமா ராவ், போர் நடந்த பகுதியில் தமிழர்களின் வாழ்வும், மறுவாழ்வுப் பணிகளும் எப்படி நடைபெறுகிறது என்பதை நேரில் கண்டறிய இந்திய அரசின் மூத்த அதிகாரி அடுத்த மாதம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வார். “எங்கே வீடு கட்டித் தரவேண்டும் என்று (சிறிலங்க அரசு) இடம் ஒதுக்கித் தருகிறார்களோ அந்த இடத்தில் இந்தியா வீடு கட்டித்தரும்” என்று கூறியுள்ளார்.” என்று இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியும்,
By முத்தமிழ்
8/21/2010 4:42:00 AM
இனப்படுகொலையின் பின்னணியில் செயலாற்றிய( தெலுங்கன் தட்சணாமூர்த்தி என்ற) மானில கருணாநிதி அரசு, மத்தியரசின் இத்தாலிய சோனியா இலங்கை இராயபக்ச‌ அரசு என்ற முக்கோண கூட்டணிக்கு எதிரான உணர்வலைகளும் இந்திய அரசிசைப் பயத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவும் அதே வேளை தமிழ் நாட்டின் அதிகரித்துவரும் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட மிகவும் நுணுக்கமான முயற்சியே இந்த உதவியின் பின்புலமாகும். உழைத்து வாழ்ந்த வன்னி மக்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவர்களின் விளைநிலங்கள் பல் தேசிய முதலீட்டுக்காகவும், பௌத்த விகாரைகளின் புனிதப் பிரதேசங்களுக்காகவும், இராணுவக் குடியிருப்புக்களுகாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வளம்மிக்க நிலங்களை வன்னி மக்களிடமிருந்து பறிமுதல் செய்து
By முத்தமிழ்
8/21/2010 4:40:00 AM
வன்னி மக்களிடமிருந்து பறிமுதல் செய்து அவற்றில் சிங்களக் குடியேற்றங்களையும்,இந்திய- பல்தேசியக் நிறுவனங்களை அமைக்கவும், இராணுவக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்படுவதற்கான அறிகுறியே இந்த உதவியின் சாராம்சம். தவிர, இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு நிதிக் கொடுப்பனவுகளிலிருந்து வழங்கப்பட்ட பணத்தில் அரசால் அழிக்கப்பட்ட வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு அடிப்படையான உதவிகள் கூட வழங்கப்படவில்லை. புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசு திட்டமிட்டது போல எழுச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழ் நாட்டில் இதனை மட்டுப்படுத்தி அழிப்பதற்கான ஆயுதமாகவும் இந்த உதவி பயன்படுத்தப்படுகிறது. தமிழ்ப் பேசும் மக்களின் இனச் செறிவைக் குறைத்து அவர்களின் அடையாளத்தை அழிக்கும் இலங்கை – இந்திய அரசுகளிகளின் முதல் நோக்கமும் எழுச்சிகளை ஒடுக்கும் இரண்டாவது நோக்கமும் கொண்ட இலங்கை அரசிற்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உதவிகள் இனம்காணப்பட வேண்டும்.
By முத்தமிழ்
8/21/2010 4:39:00 AM
Congress politcians suck poor people money and live in Ac rooms, travel in AC cars, Go aboroad , send their children to America to study. Our Chilren study under the trees, no tailets, no teachers . Are Poor indian so stupid still believe in congress party. Congress is dead after Mahathma Gandi is dead. jey hinth!இந்திய எம்.பி.க்கள் சம்பளம் உயர்வு இந்திய நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை 3 மடங்காக அதிகரிக்க இந்திய அமைச்சரவை இன்று காலை ஒப்புதல் அளித்தது. ஆனால், அந்த உயர்வு போதாது என்று பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மாதம் 16 ஆயிரம் ரூபாயாக உள்ள சம்பளம், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுதவிர, தினப்படி, தொகுதி சுற்றுப்பயணப்படி, அலுவலக ஊழியர் ஊதியம், இலவச விமானப் பயணக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், அரசுத்துறைச் செயலர்களின் ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் புகார் கூறுகிறார்கள். அரசுத்த
By Vadivel
8/21/2010 3:56:00 AM
Sir.Karunanithi Iyaaa it is too late ! Sonia madam and Rahul sir chested you and yamilnadu people. They want distroy DMK as Stilankan Tamils in Srilanka. It is the tuth. Still you don't understand who is Sonia jajeeve gandi madam is.They betrays all Tamil people by Killing the freedom fighters who wanted freedom for Tamils. Sorry Sir, you have about 50 years experience in politics;but, you do not understand Italian womens sir.
By George
8/21/2010 3:50:00 AM
It was said that hindia did not interfere in eelam affairs. So we won't believe that hindia govt is interfering in tamil nadu affairs. Ass hindia had not interfered in the tamil nadu affairs. Screw yourself karuna ni(kabo)dhi.
By jandian
8/21/2010 3:42:00 AM
நாம் தமிழர் இயக்கத் தலைவர் திரு. சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட் டுள்ளமையினை மிகவும் கவலைக்கும் கண்டனத்து க்குரிய விடயமாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நோக்குகிறது.திரு சீமான் தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மக்களுக்குமாக எழுப்பும் ஆதரவுக்குரல் ஒடுக்கப்படும் மக்களுக்கு நியாயம் கோரும் வகையிலானது. எல்லை தாண்டும் சிறீலங்காவை அச்சுறுத்தக்கூடியது. சீமான் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறியீட்டு வடிவில் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழினத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்படுவதற்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்து விடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.எனவே தமிழக அரசு இவ்விடயத்தினைக் கவனத்திற் கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுத்த திரு.சீமான் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காக ஆவன செய்ய வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கின்றது.செயலகம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் secretariat@tgte.org
By naam tamilar
8/21/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதே வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றால் எதற்கு ஆட்சிப் பொறுப்பு என்று கேட்க மாட்டார்களா? பதவிகளுக்குப் போராடுவது போல் தமிழகத்தின் / தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும்....Well said Ilakkuvanar..wonderfull arguement.
By Seralaathan-Melbourne
8/21/2010 7:36:00 AM

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சமூகத்திற்காக சிந்திப்பவர்கள் கவிஞர்கள்
 





 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2010,00:00 IST
சென்னை: "கவிஞர்கள் தங்களுக்காக அல்லாமல், மக்களுக்காகவும், வருங்கால சமூகத்திற்காகவும் சிந்திக்கின்றனர்' என, கவியோகி பேகன் (பி.பாண்டியன்) கவிதைகள் குறித்த ஆய்வரங்கத்தில், முனைவர் மறைமலை இலக்குவனார் பேசினார். சென்னை எஸ்பிளனேடு ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில், வாழும் தமிழ்க் கவிஞர்கள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்த 113 வது ஆய்வரங்கம் நடந்தது. ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற தலைவர் கிருஷ்ணசந்த் சோர்டியா தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், செயலர் பெ.பக்தவச்சலம் வரவேற்றார். பேராசிரியர்கள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.பாண்டியனின் கவியோகி பேகன் கவிதைகள் குறித்து, ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் துணைத்தலைவர் மறைமலை இலக்குவனார் ஆய்வுரை வழங்கினார். அதில் அவர் கூறியதாவது: கவிதைகளை கவிஞர்கள் தொடர் முயற்சியாக செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் கவிதை சிந்தனையை முழுமையாகவும், பழக்க வழக்கமாகவும் கவியோகி பேகன் கொண்டுள்ளார். 60 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அவர் தமிழ் கீதாஞ்சலி, காதல்பரிசு உள்ளிட்ட பல கவிதை நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். பேகன் கவிதைகள், குறளைப் போன்று எளிமையாக உள்ளன. "தமிழ்த்தாய் பிள்ளைத் தமிழ்' என்ற இவரது நூலில் தமிழை பிள்ளையாகக் கருதி கவிதை படைத்துள்ளார். சிறந்த கவிஞர்கள் தங்களுக்காக அல்லாமல் மக்களுக்காகவும், வருங்கால சமூகத்திற்காகவும் சிந்திக்கிறார்கள். கவிஞர் பேகன் நமக்கும் தமிழுக்கும் கிடைத்த விருது. இவ்வாறு மறைமலை இலக்குவனார் பேசினார்.
கவியோகி பேகன் பேசிய தாவது: எனக்கு சிந்தனையை கவிதையாக எழுதுவதும், பாடுவதும் இயல்பாகி விட்டது. கவிஞன் படைக்கும் போது உணர்ச்சியின் <உச்சத்திற்கு செல்ல வேண்டும். சமகால சிந்தனையில் சொற்கள் வெளிப்பட வேண்டும். இவ்வாறு பேகன் பேசினார். ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றம் இணை செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
தமிழா, நீ பேசுவது தமிழா?


ஹாய் வியூவர்ஸ், இன்னைக்கு நம்ப ஷோவுக்கு வந்திருக்கிற கெஸ்ட் யாருன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸô இருக்கும். ப்ளீஸ், இப்ப ரெடியா இருங்க அவங்கள வெல்கம் பண்ண. அதுக்கு முன்னாடி சின்ன கிளாப் பண்ணுங்க' "நீங்க ரொம்ப லைக் பண்ற "சாங்'க கேட்கிறதுக்கு முன்னாடி, இப்ப சிட்டியோட டிராபிக் கண்டிஷனைப் பார்ப்போம். ஒகே. டா. ஈவ்னிங் மீட் பண்ணலாம். கண்டிப்பா பிலிம் போறோம். ஒகே.வா. பை! மேற்குறிப்பிட்ட உரையாடல்கள் தமிழகத்தில் செம்மொழியின் பெருமைக்குரியவர்களான நாம் பேசும் அன்றாடப் பேச்சுகளே. தொலைக்காட்சிகளில், பண்பலை வானொலிகளில், நண்பர்களுடனான உரையாடல்களில் புழங்கும் தமிழுக்கு உதாரணங்கள். "உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால் பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை. நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. இன்றுள்ள தமிழ் வேறு. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதி வரை தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளத் தமிழே பேச்சுவழக்காகவும், இலக்கிய வழக்காகவும் இருந்தது. மொழிக்கலப்பை எதிர்த்து ஓர் இயக்கமே உருவான பெருமையும் சிறுமையும் தமிழுக்கே உரியது. தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழின்மேல் இருந்த தீராக் காதலால் கட்டியமைத்தார்கள். தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்தைப் பிரித்தெடுத்தது. இன்று சம்ஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலம் வந்து உட்கார்ந்துவிட்டது. ஸ்ரீதரன் எல்லாம் திருக்குமரன் ஆனார்கள். மீண்டும் இப்பொழுது விக்கியும், மிக்கியுமாக நம் பிள்ளைகள். உலகம் முழுவதும் வாழும் இனத்தினர் தங்களுக்குள் தாய்மொழியில்தான் பேசிக்கொள்கிறார்கள். படித்த தமிழர்கள் மட்டும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள்.  தாய்மொழியில் பேசிக்கொள்வதும், மொழியைக் கலப்பின்றிப் பேசுவதும் ஏன் நாகரிகக் குறைவான செயலாக, படிக்காதவர்களின் பழக்கமாகப் பார்க்கப்படுகிறது? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தொடக்கவிழாவில் பேசிய தமிழறிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி ஒரு கருத்தை வலியுறுத்தினார். ""உலகில் உள்ள 6,000 மொழிகளில் 6 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழித் தகுதி உள்ளது. 6 மொழிகளிலும் தமிழ் மட்டுமே இன்றும் மக்கள் பேசும் மொழியாக உள்ளது'' என்று. கடந்த இருபதாண்டுகளில் தமிழின் பேச்சுவழக்கு படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. பேச்சின் வழியாகவே ஒவ்வொரு குழந்தையும் மொழியை உள்வாங்கிக் கொள்கிறது. பேச்சின் மூலமே  ஒரு மொழியை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும். இன்றைக்குப் பிறந்து வளரும் ஒரு குழந்தை நம் மொழியை எப்படி உள்வாங்கிக் கொள்ளும் என்று நினைத்துப் பார்த்தால் ஆழ்பள்ளத்தில் விழுகிறார்போல் கிடுகிடுவென நடுங்குகிறது நெஞ்சம். நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் உள்ள குடும்பங்களில் அம்மா-அப்பாவின் பேச்சுகளைக் கேட்கும் நேரத்தைவிட, ஒரு குழந்தை, தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் குரலைக் கேட்கிறது. ஒளி - ஒலி ஊடகத் தொகுப்பாளர்களுக்கு நல்ல தமிழ் தெரியக்கூடாது என்பதுதான் முதல் தகுதியாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தமிழை அவ்வளவு வேகமாக உச்சரிக்கவே முடியாது. ஆங்கிலத்தை உச்சரிக்கும் லாவகத்துடன், தமிழை விழுங்கி உச்சரித்து தமிழே நாவின் அடியில் அமுங்கிப் போகிறது. ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்களை இன்னும் தங்கள் பிடியில் வைத்திருப்பவை செய்தித்தாள்கள். வெகுஜன ஊடகங்களில் அன்றாடச் செய்திகளுக்காக மக்கள் இன்னும் தினசரிகளையே சார்ந்திருக்கிறார்கள். கிராமத்து அரசமரத்து தேநீர்க் கடை தொடங்கி, அலுவலகங்கள்வரை செய்தித்தாளின் இருப்பு மிக முக்கியமானது. ஆங்கிலக் கலப்பில்லாத தலைப்புகளையும், செய்திகளையும் ஒருகை விரலுக்குள் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையிலான பத்திரிகைகள் மட்டுமே வெளியிட்டு வருகின்றன. அநேகப் பத்திரிகைகளின் தலைப்புகளைப் பார்த்தால் நாம் படிப்பது தமிழ் நாளிதழ்தானா என்ற குழப்பமே மிஞ்சும். "மந்திரிசபை டிஸ்மிஸ், மாஜி அமைச்சருக்கு கல்தா, கைதிக்கு வாரண்ட்' இந்தத் தலைப்புகள் சொல்லும் உண்மை என்ன? நாம் தமிழில் சிந்திப்பது குறைந்து ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கி விட்டோம் என்பதா? தொலைக்காட்சிகளில் எத்தனை தொலைக்காட்சிகளுக்குத் தமிழில் பெயர் உள்ளன? பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க ஒரு காலவரையறை வைத்ததைப்போல்,திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க ஊக்கத்தொகை வழங்கியதைப்போல்  தொலைக்காட்சிகளுக்கும் பெயர் மாற்றம் செய்யலாமே? நிகழ்ச்சிகள் பெரும்பான்மைக்கு ஆங்கிலப் பெயர்கள். படித்த, நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களில் தமிழில் உரையாடுவது அருகி வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களின் பல தனியார் அலுவலகங்களுக்குச் சென்றால் அத்தனையும் ஆங்கிலம்.அமெரிக்கத் தூதரகத்துக்கோ, பிரிட்டிஷ் தூதரகத்துக்கோ வந்துவிட்ட திகைப்பு. தமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம் இனத்துக்கு நேரும் அவமானமல்லவா? "தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ? பரவலாகிவிட்ட ஆங்கிலவழிக் கல்விதான் மொழிக் கலப்புக்கான அடிப்படையா என்று யோசித்தால், தமிழகத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 20 சதவீதம் மாணவர்களே ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். மீதமுள்ள 80 சதவீத மாணவர்கள் தமிழ் வழியில்தான் பயில்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஆங்கிலக் கல்வியின் தரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கிடையாது. "வாட்' மா? "டெல்' மா, "ரீட்' பண்ணு, "ரைட்' பண்ணு போன்ற அரைகுறை வாக்கியங்கள்தான்.  தமிழிலும் புலமை பெறாமல், ஆங்கிலத்திலும் புலமை பெறாமல் இரண்டுங்கெட்டானாகி விடுகிறார்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள். மாநகரங்களில் உள்ள சில பள்ளிகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். எந்த மொழியின் கலப்பின்றியும் நம்மால் பேச முடியாதா? எழுத முடியாதா? நிச்சயம் முடியாது. இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கும்பொழுதே மொழியின் கலப்பு உருவாகியிருக்கக்கூடும். வணிகத்தின் பொருட்டு உலகம் முழுவதும் இருந்த மக்கள் இப்பூமிப் பந்தைச் சுற்றத் தொடங்கியபொழுதே, பொருள்களுடன் அவர்கள் மொழியையும் பண்டமாற்றுச் செய்திருப்பார்கள்.நம் வழக்கத்தில் இல்லா பொருள்களை பிற நாடுகளிடம் இருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கியபொழுது, அப்பொருளுடன், அப்பொருளுக்கான அம்மொழியின் பெயரையும் சேர்த்தே பெற்றிருப்போம். தமிழிலிருந்து வெளிச்சென்ற பொருள்களும் நம் தமிழ்ச்சொற்களுடன் சேர்ந்துதான் போயிருக்கும். உலகம் முழுக்க உள்ள தொன்ம மொழிகளில் பல சொற்களுக்கான வேர்ச் சொல்லாகத் தமிழ் இருப்பதை இன்றைய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இஸ்லாமியர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு நிறைய கொடுக்கல் - வாங்கல்கள் இருந்தன. மொழிசார்ந்தும் கலாசாரம் சார்ந்தும் தமிழ் பல மாற்றங்களை உள்வாங்கியது. ஆங்கிலேய ஆட்சி நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது.ஆங்கிலேயர்களுடன் நமக்கு நிறைய இயந்திரங்களும், போக்குவரத்து வசதிகளும் வந்தன. தண்டவாளம் வந்தது. ரயில் வந்தது. தபால் வந்தது. வந்த புதிதில் நாம் அப்படியே ஆங்கிலச் சொற்களுடன்தான் ஏற்றுக் கொண்டோம். பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன.நிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம். "தொடர்வண்டி' என்பதைவிட "ரயில்' நமக்கு எளிதாக இருக்கிறது. "வானொலி'யைவிட "ரேடியோ' பிடித்திருக்கிறது. பொருளின் வேர்ச்சொல்லோடு கூடிய சொற்களைப் பயன்படுத்துவது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கலப்பு மொழியை வளப்படுத்தும், ஆங்கிலம் மிகச்சிறந்த உதாரணம். கலைச்சொற்களுக்காக, தொழில்நுட்பப் பெயர்களுக்காக நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து நிற்பதுகூட நமக்கு இழுக்கென அறிவியல் தமிழ்ச்சொற்கள் உருவாக்கும் தமிழறிஞர்கள் வேதனைப்படுகிறார்கள். நாமோ அன்றாட உரையாடல்களிலேயே அன்னிய மொழியை அனுமதிக்கிறோம். தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் எல்லோரும் நிற்கிறோம். "மம்மி'களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஒருபோதும் "அம்மா'க்களை "மம்மி'யாக்க அனுமதியோம். "ம்மா' மொழியின் ஒற்றைச் சொல் அல்ல. ஐயாயிரம் ஆண்டு தமிழ் வாழ்வின் தொடர்ச்சி. உலகின் கடைசி மனிதன் வாழும் வரை, தமிழன் தமிழைச் சரியாக உச்சரிக்க மொழியைக் காப்போம்.
கருத்துக்கள்

இந்நிலை மாற முதல்வர் அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டுத் துறவிபோல் செயல்பட்டார் என்றால் எளிதில் இவை யாவும் நிறைவேறும். குடும்பப்பாசமே அவரது தமிழ்ப்பற்றைச் சிறை வைக்கின்றது. மாறாக அவர் ஒருவரால் மட்டுமே இவ்வாறெல்லாம் செய்ய இயலும் என்பதை நினைத்துப் பார்த்துச் செயல்பட்டார் என்றால் பாரதியும் பாரதிதாசனும கண்ட கனவு விரைவில் நிறைவேறும். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கக்காணலாம். தமிழ்நாட்டின் தமிழ்த்தெருக்களில் தமிழ் மணக்கக் காணலாம். குடும்பத் தலைவர் என்ற நிலையை மறந்து இனத் தலைவராகச் சிந்தித்துச் செயலாற்ற அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 5:44:00 AM
கட்டுரையாளரின் பெயர் இல்லையே! அவருக்குப் பாராட்டுகள். இந்நிலை மாற முதல்வர் அவர்கள் தம் குடும்பத்தினரின் நிறுவனங்கள் பெயர்களைத் தமிழில் மாற்றவும் சூட்டவும் நடவடிக்கை எடுத்து முன் மாதிரியாகத் திகழ வேண்டும். அடுத்துத் தம் கட்சியினரிடம் இக்கொள்கையைப் பின்பற்ற வலியுறுத்த வேண்டும். இதனை மீறுவோரைக் குடும்பத்திலிருந்தும் கட்சியலிருந்தும் விலக்கி வைக்க வேண்டும். தம் குடும்ப ஊடகங்களில் மொழிக் கொலை புரிவதைத் தடுக்க வேண்டும். பிற கொலைகாரர்கள் அப்பொழுது தாங்களாகவே திருந்துவர். மொழிக்கொலை புரியாத படங்களுக்கும் நிறுவனங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமே அரசுதவி, விளம்பர உதவி, பட்டம் எதுவாயினும் தர வேண்டும். தம் குடும்பக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டுத் துறவிபோல் செயல்பட்டார் என்றால் எளிதில் இவை யாவும் நிறைவேறும். குடும்பப்பாசமே அவரது தமிழ்ப்பற்றைச் சிறை வைக்கின்றது. மாறாக அவர் ஒருவரால் மட்டுமே இவ்வாறெல்லாம் செய்ய இயலும் என்பதை நினைத்துப் பார்த்துச் செயல்பட்டார் என்றால் பாரதியும் பாரதிதாசனும கண்ட கனவு விரைவில் நிறைவேறும். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கக்காணலாம். தமிழ்நாட்ட
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 5:43:00 AM
இந்த காசு வரக்ளுக்கு தூசு அவர்கள்தான்kariyapattinam,614806 tasmack ஒரு நாளைக்கு 2000 குறிவு இல்லாம பணம் சம்பதிகிரர்கள்
By regee.kariyapattinam
8/20/2010 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி: இந்திய உதவி ஓராண்டு நீட்டிப்பு


கொழும்பு, ஆக. 18: இலங்கையில் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.÷இலங்கையின் வடக்கு பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 7 இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன.அவற்றின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை பொருளாதார மேம்பாட்டு அமைச்சக செயலர் பி.பி.ஜெயசுந்தராவிடம் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.÷போரால் இடம்பெயர்ந்தவர்களை மறுகுடியமர்த்தும் பணியையும், வடக்குப் பகுதியில் ரயில் இருப்புப்பாதை அமைக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபடும்.
கருத்துக்கள்

கண்ணி அகற்றுவதாகக் கூறிச் சிங்களத்திற்கு உதவுவதுதான் இந்திய நிறுவனங்களின் வேலை. இத்தனை ஆண்டுகளாகக் கண்ணி வெடிகளை அகற்ற இயலவில்லை என்றால் கையால் ஆகாத நிறுவனங்களிடம் ஏன் வேலையை ஒப்படைக்க வேண்டும்? சிங்களர் குடியேற்றங்களுக்குக் கண்ணி வெடிகளால் எந்தச் சிக்கலும் இடரும் இல்லையாம். தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்றால் மட்டும் கண்ணி வெடிகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்களம். என்ன செய்வது? ஆட்சியாளர்கள் கேழ்வரகில் இருந்து நெய் வடிகிறது என்றால் ஆமாம் ஆமாம் எனக்கும் ஒரு படி கொடு்த்தார்கள் என்று சொல்லித்தானே ஆக வேண்டும். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 5:29:00 AM
This Information clearly shows the Involvement of Indian Hands for the Genocide of Eezham Taimils in the North East of Srilanka. Presently, they wants to set up an Army Post, Bunkers and Perfect Shelters for Army on behalf of Srilanka. They don,t have any intention to Construct the Houses or Shelters for the Tamil Refugees who are living in the Open Air(Camps)Jails worst than the Nazis surrounded by the Lankan Army. They wants to save the lives of Srilankan Army in future also, therefore the operation to clear the Landmines going vigorously with indian aid. India will realize its mistake of its Genocide against Eezham Tamil People. This is an unforgivable Crime against Tamils all over the world. It will face the Impact in future either internally or Internationally.
By G.Sakthivelu
8/19/2010 2:00:00 PM
இலங்கை அகதிகளால் பிரச்னை தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளால் இந்திய அரசுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசிடமிருந்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் "இலங்கை அகதிகள் அதிக அளவில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வருகின்றனர். இவர்கள் தமிழகத்திலிருந்து வருகின்றனர். இதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு, தமிழக அரசுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் புகாரை சுட்டிக்காட்டி, "தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்' என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
By naam tamilar
8/19/2010 1:56:00 AM
சங்ககராவுக்கு சரியான ஆள் பங்கர் பிரபா மட்டும்தான்.இந்த இந்திய மடையர்களுக்கு ஏன் இன்னும் விளங்கவில்லை
By srilankan
8/19/2010 1:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
சென்னை: ரயில்கள் புறப்படும் நேரம்


சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள்எண் விரைவு ரயிலின் பெயர் புறப்படும் நேரம்2675 சென்னை - கோயம்புத்தூர் கோவை விரைவு ரயில் காலை 6.15. 6057 சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் காலை 6.25.2639 சென்னை - பெங்களூர் பிருந்தாவன் விரைவு ரயில் காலை 7.15.2842 சென்னை - ஹவுரா கொரமண்டல் ரயில் காலை 8.45.6627 சென்னை - மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் ரயில் காலை 11.30.1042 சென்னை - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் காலை 11.55.2609 சென்னை - பெங்களூர் விரைவு ரயில் பகல் 1.35.6053 சென்னை - திருப்பதி விரைவு ரயில் பகல் 1.50.2679 சென்னை - கோயம்புத்தூர் இன்டர்சிட்டி விரைவு ரயில் பிற்பகல் 2.30.2695 சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் மாலை 3.25.              2607 சென்னை - பெங்களூர் லால்பாக் விரைவு ரயில் மாலை 3.35.6203 சென்னை - திருப்பதி கருடாத்ரி விரைவு ரயில் மாலை 4.35.6089 சென்னை - திருப்பத்தூர் ஏலகிரி விரைவு ரயில் மாலை 5.55.2615 சென்னை - புதுதில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இரவு 7.15.2671 சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில் இரவு 9.00.2601 சென்னை - மங்களூர் மெயில் இரவு 8.25.6041 சென்னை - ஆலப்புழை விரைவு ரயில் இரவு 9.15.6222 சென்னை - மைசூர் காவேரி விரைவு ரயில் இரவு 9.30.2621 சென்னை - புதுதில்லி தமிழ்நாடு விரைவு ரயில் இரவு 10.00.2681 சென்னை - கோயம்புத்தூர் சேரன் விரைவு ரயில் இரவு 10.10.6669 சென்னை - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் இரவு 10.40.1028 சென்னை - மும்பை சிஎஸ்டி மெயில் இரவு 10.50.2657 சென்னை - பெங்களூர் விரைவு ரயில் இரவு 11.15.2840 சென்னை - ஹவுரா விரைவு ரயில் இரவு 11.40.2691 சென்னை - ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம்       (வாராந்திர- வெள்ளிக்கிழமைகளில்) விரைவு ரயில் இரவு 11.30.எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள்103 சென்னை - புதுச்சேரி விரைவு பாசஞ்சர் ரயில் காலை 6.35.2164 சென்னை - தாதர் விரைவு ரயில் காலை 6.50.6127 சென்னை - குருவாயூர் விரைவு ரயில் காலை 7.50.6853 சென்னை - திருச்சி விரைவு ரயில் காலை 8.20.2635 சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் பகல் 12.40.6735 சென்னை - திருச்செந்தூர் (வாராந்திர- வெள்ளி) ரயில் பிற்பகல் 2.40.2605 சென்னை - திருச்சி பல்லவன் விரைவு ரயில் மாலை 3.45.6713 சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் மாலை 5.00.2633 சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயில் மாலை 5.30.6115 சென்னை - புதுச்சேரி விரைவு ரயில் மாலை 6.10.2667 சென்னை - நாகர்கோவில் (வாராந்திர-வியாழன்) ரயில் மாலை 6.50.6723 சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் இரவு 7.15.2693 சென்னை - தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் இரவு 7.35.2661 சென்னை - செங்கோட்டை விரைவு ரயில் இரவு 8.05.2631 சென்னை - நெல்லை விரைவு ரயில் இரவு 8.50.2637 சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரயில் இரவு 9.15.6701 சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் இரவு 9.40.6177 சென்னை - கும்பகோணம் மலைக்கோட்டை ரயில் இரவு 10.30.2793 சென்னை - மதுரை (வாரம் இருமுறை- வெள்ளி,ஞாயிறு) இரவு 10.45.1063 சென்னை - சேலம் விரைவு ரயில் இரவு 11.30.6175 சென்னை - நாகூர் விரைவு ரயில் இரவு 11.35.
காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் நிலை உருவாகும்: கார்த்தி சிதம்பரம்


ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மந்தைவெளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் அகில இந்திய காங்கிரஸ்
சென்னை, ஆக. 19: ராகுல் காந்தியின் கைக்குப் பொறுப்புகள் வந்தவுடன் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் சூழ்நிலை உருவாகும் என்றார் அ.இ.கா.க. உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம். மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் அவர் கூறினார்.சென்னை மந்தைவெளியில் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதில் கார்த்தி சிதம்பரம் பேசியது:சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல.தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் பெரிய அளவில் விளம்பரம் செய்கின்றனர். 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறும் திட்டத்துக்கு இப்போதே விழா நடத்தி விளம்பரம் தேடுகின்றனர். அந்தத் திட்டம் பின்பு நிறைவேறுமா இல்லையா என்பதைக் கூற முடியாது. ஆனால் அந்த திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் திராவிடக் கட்சிகள் என்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்த பிறகுதான் பல இளைஞர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. என் தந்தைக்கு 39 வயது இருக்கும்போது அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது.  இப்போதும் காங்கிரஸ் கட்சிதான் மத்தியில் ஆட்சி செய்கிறது. ஆனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. நமது கட்சியில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்ட தயங்கக்கூடாது. அப்போதுதான் கட்சி வளரும்.மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி. இதை காங்கிரஸ்தான் சாதித்தது என்று மக்களிடம் நாம் பேசவில்லை.இலங்கைப் பிரச்னை குறிóத்து காங்கிரஸ் கட்சி மெüனமாக உள்ளது. ராஜீவ் காந்தி என்ன செய்தார், காங்கிரஸ் கட்சிதான் என்ன செய்தது என்று குறை கூறுகின்றனர். இலங்கையிóல் தமிழர்கள் பாதிக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ளது போன்று தனித்தனி மாநிலமாக இலங்கையிலும் செயல்பட வேண்டுóம் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். இதுதான் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா உடன்பாடு. ஆனால் தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட விடுதலைப் புலிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை இதை ஏற்றுக் கொண்டிருந்தால், மக்கள் செல்வாக்கு பிரபாகரனுக்கு இருந்திருந்தால் அவர் தமிழர் பகுதிக்கு முதலமைச்சராகி இருப்பார்.ஆனால் இதை விடுத்து, தனி நாடு கோரிக்கை ஏற்புடையது அல்ல. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன. அவை தனி நாடு கோரிக்கை விடுத்தால் நாம் யாராவது ஏற்றுக் கொள்வோமா? ஆனால் புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ராஜீவ் காந்தி ஆதரவு அளிக்காததால் அவரை 1991-ல் படுகொலை செய்தனர். இதை நாம் எப்படி மன்னிக்க முடியும்? திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் யாருக்காவது இது போன்ற கதி ஏற்பட்டிருந்தால் யாராவது மன்னிப்பார்களா?1967-களில் காங்கிரஸ் கட்சிமீது பல்வேறு அவதூறுகளைக் கூறித்தானே திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. நான் இப்போது தேர்தல் கூட்டணி குறித்துப் பேசவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எந்தக் கட்சியும் வெற்றிபெற முடியாது, ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது. போராடும் குணம் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும். சர்ச்சைகளை கண்டு அஞ்சக்கூடாது. பக்கத்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் போராடும் குணம் இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் இல்லை? சர்ச்சை வேண்டாம் என்றால் காங்கிரஸ் கட்சி விடுதலைப் போராட்டத்தல் ஈடுபட்டிருக்க முடியுமா? அதிக சர்ச்சைகளையும், போராடும் குணத்தையும் கொண்ட கட்சிதான் காங்கிரஸ்.விமர்சனம் இல்லாமல் முன்னேற முடியாது. தமிழகத்தில் மக்கள் பிரச்னை குறித்து மேடைகளில் பேசத் தயங்கக்கூடாது. அப்படிப் பேசினால்தான் நாம் வளர முடியும். இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பது காங்கிரஸ் கட்சி. தீவிரவாதம் குறித்து திராவிடக் கட்சிகள் எங்காவது பேசுவது உண்டா? தமிழகத்துக்கு தேசியக் கட்சி அவசியம் தேவை. தமிழர்களாக இருப்பதில் தவறில்லை. முதலில் இந்தியராக இருக்க வேண்டும். கூட்டணியே வேண்டாம் என்று 1989-ல் ராஜீவ் காந்தி தனித்து நின்று சாதனை புரிந்தார். ஆனால் அப்போது நாம் ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் நமது பெயர் நிலைத்திருந்தது. இப்போது மீண்டும் அதே நிலை, ராகுல் காந்தி கைக்கு அனைத்து பொறுப்பும் வந்தவுடன் வரும் என்பது நிச்சயம் என்றார் கார்த்தி ப. சிதம்பரம்.சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், அ.இ.கா.க. உறுப்பினர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகள் பாதிப்புதனியார் பள்ளிகளுக்கான மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிóல் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்தால் பள்ளிகளை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நியாயமான கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பல பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இப்பிரச்னையில் தெளிவான நல்லதொரு முடிவு எடுக்கப்பட வேண்டும். முதல்வர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும் என்றார் கார்த்தி ப.சிதம்பரம்.
கருத்துக்கள்

அப்படியாவது காங்.கூண்டோடு ஒழிந்து தமிழ்நாட்டிற்கு விடிவு ஏற்படட்டும்.காங்.,எந்த ஒரு சிறு கட்சியுடனும் கூட்டு வைக்காமல் தனித்து நின்றது என்றால், போட்டியிடக்கூட யாரும் முன் வரமாட்டார்கள். எனினும் தேர்தல் செலவுத்தொகையைக் கோடிக்கணக்கில் பெற்றுப் பதுக்கும் எண்ணம் உடையவர்கள் போட்டியிடுவர். ஆனால், ஒதுங்கியிருப்பர். கோவனும் கார்த்தியும் இணைந்து தமிழகத்திற்கு மீட்சி ஏற்படுத்த தனித்து நின்றால் முழு வெற்றி என்ற மாயையை இராகுலுக்கு ஏற்படுத்த வேண்டும். தமிழினப்படுகொலைகளுக்கான தண்டனையை விரைவில் பெற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். (நல்ல கருத்துகளைப் பதியும் மதுரைக்காரன் தன் சொந்தப் பெயரிலேயே வெளியிடலாமே!)
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 5:07:00 AM
தேசியக்கட்சியாக இருந்தாலும், திராவிடக்கட்சியாக இருந்தாலும், தமிழர் நலனைக் காக்காவிட்டால், அந்தக்கட்சி எஙகளுக்குத் தேவையே இல்லை. மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/20/2010 2:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம் செல்லாது: தமிழக அரசு உத்தரவு


சென்னை, ஆக. 19: திறந்தநிலை பல்கலைக்கழக பட்டச் சிக்கலுக்கு தமிழக அரசு முடிவு தீர்வு கண்டுள்ளது. பள்ளிப் படிப்பை முடிக்காமல் நேரடியாக பெறும் பட்டங்கள் அரசுப் பணிக்கு செல்லாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிப் படிப்பு அதாவது பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படிக்காமலேயே திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்கள் பெறும் முறை உள்ளது. 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் படித்து எம்.ஏ., வரை பட்டம் பெறலாம்.10-ம் வகுப்பு வரை கூட எட்டாதவர்கள் அரசுப் பணிகளில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று விடுகின்றனர். பணியில் சேர்ந்ததும் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்று பதவி உயர்வுக்கு முயற்சிக்கின்றனர். இந்த நிலையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அரசுப் பணிக்கு எடுக்கக் கூடாது' எனக் கூறியது.இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிரொலித்தது.தமிழக அரசின் நிலை என்ன? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது.இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தவரை பிளஸ் டூ படிப்புக்கு இணையாகக் கருதலாமா என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழக அரசிடம் ஒரு கருத்தைக் கேட்டது. அப்படிக் கருத முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. இந்தப் பிரச்னையில் மட்டுமே அரசு தனது நிலையைத் தெரிவித்தது என்றும், ஒட்டு மொத்தமாக திறந்தநிலை பல்கலைக்கழகப் பிரச்னையில் அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்று தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர் அப்போது தெரிவித்தனர்.அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடிதம்: திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டங்களை தமிழக அரசு ஏற்கிறதா, இல்லையா என்ற குழப்பங்கள் தொடர்ந்து வந்தன. இந்தச் சூழலில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, "திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டம் அறிவை வளர்ப்பதற்கு மட்டும்தான்' எனத் தெரிவித்திருந்தார்.இது ஒருபுறமிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழுக் கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் எந்தெந்தப் பட்டங்களுக்கு இணையானது என்பதை முடிவு செய்யவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும் அது.இந்தக் கூட்டத்தில்,இளங்கலைப் பட்டங்களைப் படிக்காமல், திறந்தநிலை பல்கலைக்கழங்கள் மூலம் நேரடியாக எம்.ஏ. போன்ற முதுகலைப் பட்டங்களைப் படித்தால் அதை அரசுப் பணிகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.அரசின் நிலை அறிவிப்பு: இந்தக் கருத்துருவை தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைத்தது. இதை தீவிரமாக ஆராய்ந்த அரசு, பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் கே.என்.வெங்கடரமணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 175 பேருக்கு பணி கிடையாது...அரசின் உத்தரவால், குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்ற 175 பேருக்கு பணி கிடைக்காது. அவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தனர். அரசின் உத்தரவு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற தலைமைச் செயலக ஊழியர்களில் சிலர் வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தினர். அடுத்த வாரத்தில் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து முறையிட அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கருத்துக்கள்

அறிவுப் பெருக்கத்திற்காகப் படிக்க வேண்டும் என எண்ணுபவர்களைவிடப் பணி வாய்ப்பிற்காகப் படிப்பவர்கள்தாம் மிகுதி. இளங்கலை படித்த பின்பு பொதுநிலைப் பல்கலைக்ழகத்தில் முதுகலைப் பட்டம் பெறுவோரும் உள்ளனர். எனவே, அவற்றின் கல்வித்தகுதி சரியில்லை என எண்ணினால் செம்மையுறச் செய்ய வேண்டியதுதான் அரசின் கடமை.மாறாகத் தகுதியில்லை என்று அறிவிப்பது மடமை. இல்லையேல் உடனடியாகப் பொதுநிலைப் பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும். பொதுநிலைப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக முறையாகப்படித்தவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது ; ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிடுகின்றன. இது குறித்தும் விளக்க வேண்டும்.உரியவாறு கல்விமுறையைச் செப்பம் செய்து உயர்நீதிமன்றத்தில் மறு முறையீடு செய்து தக்க ஆணை பெற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 4:45:00 AM
1.GRADUATION IS NOT AN IMPORTANT AND AS LONG AS THE PERSON IS SKILLED TO DO THE JOB(IT CAN BE A STUPID CLERICAL OR ANYTHING)HE SHOULD BE EMPLOYED 2.EVEN IF THE PERSON IS QUALIFIED BY A RECOGNISED UNIVERSITY AFTER THE DUE PROCESS OF EDUCATION AND AFTER GOING THROUGH ALL 10TH,12 CLASSES, STILL HE IS A FOOL/IDIOT AND INCAPABLE OF APPLYING HIS MIND AND DOING A JOB AT A DECENT EXPECTED LEVEL, HE SHOULD BE FIRED OUT
By ramakrishna paramahimsai
8/20/2010 4:31:00 AM
அப்புறம் எதற்காக திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களை நடத்த வேண்டும்? பல்கலைக் கழகங்கள் பணம் சம்பாதிக்க மட்டுமா? இவற்றின் தரம் குறைவு என்றால், இவற்றின் தரத்தை உயர்த்த வழி செய்ய வேண்டும், இல்லையென்றால் இவற்றை மூட வேண்டும். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
8/20/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *