வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி: இந்திய உதவி ஓராண்டு நீட்டிப்பு


கொழும்பு, ஆக. 18: இலங்கையில் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.÷இலங்கையின் வடக்கு பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 7 இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன.அவற்றின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை பொருளாதார மேம்பாட்டு அமைச்சக செயலர் பி.பி.ஜெயசுந்தராவிடம் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.÷போரால் இடம்பெயர்ந்தவர்களை மறுகுடியமர்த்தும் பணியையும், வடக்குப் பகுதியில் ரயில் இருப்புப்பாதை அமைக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபடும்.
கருத்துக்கள்

கண்ணி அகற்றுவதாகக் கூறிச் சிங்களத்திற்கு உதவுவதுதான் இந்திய நிறுவனங்களின் வேலை. இத்தனை ஆண்டுகளாகக் கண்ணி வெடிகளை அகற்ற இயலவில்லை என்றால் கையால் ஆகாத நிறுவனங்களிடம் ஏன் வேலையை ஒப்படைக்க வேண்டும்? சிங்களர் குடியேற்றங்களுக்குக் கண்ணி வெடிகளால் எந்தச் சிக்கலும் இடரும் இல்லையாம். தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்றால் மட்டும் கண்ணி வெடிகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்களம். என்ன செய்வது? ஆட்சியாளர்கள் கேழ்வரகில் இருந்து நெய் வடிகிறது என்றால் ஆமாம் ஆமாம் எனக்கும் ஒரு படி கொடு்த்தார்கள் என்று சொல்லித்தானே ஆக வேண்டும். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 5:29:00 AM
This Information clearly shows the Involvement of Indian Hands for the Genocide of Eezham Taimils in the North East of Srilanka. Presently, they wants to set up an Army Post, Bunkers and Perfect Shelters for Army on behalf of Srilanka. They don,t have any intention to Construct the Houses or Shelters for the Tamil Refugees who are living in the Open Air(Camps)Jails worst than the Nazis surrounded by the Lankan Army. They wants to save the lives of Srilankan Army in future also, therefore the operation to clear the Landmines going vigorously with indian aid. India will realize its mistake of its Genocide against Eezham Tamil People. This is an unforgivable Crime against Tamils all over the world. It will face the Impact in future either internally or Internationally.
By G.Sakthivelu
8/19/2010 2:00:00 PM
இலங்கை அகதிகளால் பிரச்னை தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளால் இந்திய அரசுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசிடமிருந்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் "இலங்கை அகதிகள் அதிக அளவில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வருகின்றனர். இவர்கள் தமிழகத்திலிருந்து வருகின்றனர். இதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசு, தமிழக அரசுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் புகாரை சுட்டிக்காட்டி, "தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்' என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
By naam tamilar
8/19/2010 1:56:00 AM
சங்ககராவுக்கு சரியான ஆள் பங்கர் பிரபா மட்டும்தான்.இந்த இந்திய மடையர்களுக்கு ஏன் இன்னும் விளங்கவில்லை
By srilankan
8/19/2010 1:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக