புதன், 5 ஜனவரி, 2011

air india free ticket : 100- ஆவது பயணிக்கு இலவசப் பயணச் சீட்டு -ஏர் இந்தியா

இலவசச் சீட்டை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது என்றும்  வேறு ஒருவருக்கப் பரிசு அளிக்கலாம் என்றும் உள்ளது. இரண்டிற்கும் என்ன  வேறுபாடு? தெளிவாக  இல்லையே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

100-வது பயணிக்கு இலவச டிக்கெட்: ஏர் இந்தியா


சென்னை, ஜன. 4: உள்ளூர் பயணங்களுக்கு இணையதளம் மூலம் சாதாரண வகுப்பில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய சலுகையை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:  இதன்படி, ஐ.சி. குறியீடு உள்ள பயண டிக்கெட் முன்பதிவு செய்யும், ஒவ்வொரு நூறாவது பயணிக்கும் ஒரு டிக்கெட்டும் இரண்டு கூப்பன்ங்களும் இலவசமாக வழங்கப்படும்.  இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு நூறாவது பயணிக்கும் இணையதள பக்கத்தில் புதிய "பாப்-அப்' திரை தோன்றும். அதில் சலுகை குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.  நூறாவது பயணிக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட்டை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது. இலவச டிக்கெட்டுக்கான கட்டணம், விமான எரிபொருள் செலவுக்கான கட்டணம் ஆகியவற்றை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்.  இதர வரிகளை பயணிகள் செலுத்த வேண்டும். இந்த இலவச டிக்கெட்டை குறிப்பிட்ட பயணி பயன்படுத்தாமல், வேறு நபருக்கும் பரிசளிக்கலாம்.  இந்த திட்டம் ஜனவரி 9-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

anomo ponseka as a common candidate: இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: பொது வேட்பாளராக அனோமா பொன்சேகா?

தமிழ் ஈழ ஆதரவுத் தமிழர் ஒருவரை நிறுத்தி அவருக்கு அனோமா ஆதரவு தரலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: பொது வேட்பாளராக அனோமா பொன்சேகா?


கொழும்பு, ஜன.4- இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு மாநகர சபையின் தலைவர் பதவிக்கு அனோமா போட்டியிடுவார் என்றும், அதற்கான முயற்சிகளை ஜனநாயக தேசிய முன்னணி மேற்கொண்டு வருவதாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதிபர் தேர்தலில் பொன்சேகா பொதுவேட்பாளராக போட்டியிட்டார். அதுபோல் உள்ளாட்சித் தேர்தலில் அவரது மனைவி அனோமா பொது வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

govt.awards for scholars and politicians: தமிழ் மொழி, சமூக நீதிக்கான அரசு விருதுகள் அறிவிப்பு

அறிஞர்களின் பெயர்களுக்கான விருதாளர்கள் சரியான தேர்வு. அரசியல் தலைவர்களின் பெயர்களில் வழங்கப்படும் விருதுகள் கட்சி அரசியல்சார்புடையன என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனினும் விருதாளர்களுக்குப் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மொழி, சமூக நீதிக்கான அரசு விருதுகள் அறிவிப்பு

சென்னை, ஜன.4- தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோருக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.விருது பெறுவோர் விவரம் வருமாறு:2011-ம் ஆண்டுக்கான “அய்யன் திருவள்ளுவர் விருது” - முனைவர் பா. வளன் அரசு 2010-ம் ஆண்டின் சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது” - கோ. சாமிதுரை “அறிஞர் அண்ணா விருது” -. து.  ரவிக்குமார், எம்.எல்.ஏ"அம்பேத்கர் விருது” -   திருமதி டி. யசோதா, எம்.எல்.ஏ.“பெருந்தலைவர் காமராசர் விருது” - திருமதி. ஜெயந்தி நடராஜன், எம்.பி. “பாரதியார் விருது” - நா. மம்மது “தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது” - பேராசிரியர் அ. அய்யாசாமி“பாவேந்தர் பாரதிதாசன் விருது” - முனைவர் இரா. இளவரசு“முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது” - முனைவர் இரா. மதிவாணன் விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கப்பதக்கமும், தமிழக அரசின் சார்பில் அணிவிக்கப்படும். வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குவார்.இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

Braile thamizh dictionary: editorial,dinamani: தலையங்கம்: பார்த்தால் தெரியும்

தறகாலத் தமிழ் என்ற போர்வையில் டீச்சர்,சார் முதலான அயற்சொற்களை யெலலாம் தமிழ் என  இவ்வகராதியில்  காட்டியுள்ளனர். இது தமிழுக்குச் செய்யும் அநீதியாகும். உடனே மறு பதிப்பிலாவது இதனைக் களைய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: பார்த்தால் தெரியும்!


தமிழில் வெளிவந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற, கிரியா வெளியீடாகிய "தற்காலத் தமிழ் அகராதி' தற்போது பார்வையற்றவர்களுக்காக "பிரெய்ல்' புத்தகமாக வெளிவருகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை காலம் இவர்களுக்கு இத்தகைய அகராதி இல்லை என்பது ஆச்சரியம் தருவதுடன், இதுபற்றி ஏன் அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்று வேதனையாகவும் இருக்கிறது.  இதுவரையிலும், பார்வையற்றோர் சங்கங்கள் சார்பில் அவரவர்களாக உருவாக்கிய சில இன்றியமையாத சொற்களின் விளக்கமாக சில ஏடுகள் வந்திருந்தாலும், அவை பாடத்திட்டம் சார்ந்ததாக மட்டுமே இருந்துள்ளன. கல்விச்சூழலுக்கு வெளியே, பார்வையற்றவர்களுக்காகத் தனியாக ஒரு மொழி அகராதி இதுவரை இல்லை. இந்தியாவில் முதல்முறையாக தமிழ் மொழியில்தான் இத்தகைய விரிவான மொழி அகராதி வெளிவருகிறது என்று கூறப்படுகிறது.  தற்போது இந்த அகராதி மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது வருத்தம் தரும் செய்தி. இந்த நூலைப் பெறவேண்டுமானால், ரூ.15,000 பணம் செலுத்தினால் மட்டுமே முடியும் என்று தெரியவரும்போது, இந்த நிதிச்சுமை முழுவதையும் ஏன் தமிழக அரசே ஏற்கக்கூடாது என்று தோன்றுகிறது.  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மிக அற்புதமான பதிப்பாக சங்க இலக்கியம் முழுவதும் கொண்ட, தரமான தாளில் அச்சிடப்பட்ட தொகுப்பை ரூ.300க்கு வெளியிட்டது. இந்தப் பதிப்பு மற்ற சாதாரண காலகட்டத்தில் வெளியிடப்படுமேயானால், குறைந்தபட்சம் ரூ.3000 ஆகும். இதற்காக தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அதே நேரத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, பார்வையற்றவர்களுக்காக இத்தகைய தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி முயற்சியைச் செய்திருந்தால் எத்தனை சிறப்பாக இருந்திருக்கும்! இனியும்கூட அரசு தாமதிக்காமல் இதைச் செய்துவிட முடியும்.  இந்த "பிரெய்ல்' அகராதிகளைப் பொது நூலகங்கள் அனைத்திலும் அரசு வாங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அகராதியில் ஒரு சொல்லின் பொருளை அறிய, பார்வையற்ற ஒருவர் நூலகம் செல்ல வேண்டும் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத அவலநிலை. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பார்வையற்ற மாணவர்கள் சுமார் 30,000 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு "பிரெய்ல்' தமிழ் அகராதி வழங்குவது - அரசு மனது வைத்தால் இலவசமாக வழங்குவது அத்தனை கடினமான செயல் அல்ல.  வளர் கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் மாற்றுத் திறனாளிக்கான கருவிகள், பயன்படு பொருள்கள் வாங்கிவைக்கத் தனி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் தமிழ் அகராதியை, அந்த நிதியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் "பிரெய்ல்' அகராதி வாங்கி வைத்தல் சாத்தியம் என்று சர்வதேசப் பார்வையற்றோர் கல்விக் கழகத்தினர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.  தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.75 கோடியுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகள் வாங்கித் தருவதற்கென்றே தமிழக முதல்வர் ரூ. 5 லட்சத்தை கூடுதல் நிதியாக அறிவித்துள்ளார். அந்த நிதியைக் கொண்டு, அவரவர் தொகுதியில் உள்ள பார்வையற்ற மாணவர்களுக்கு இந்தத் தமிழ் அகராதியை அரசு வழங்கட்டுமே!.  பார்வையற்றோருக்கான "பிரெய்ல்' புத்தகம் தயாரிப்பு மிகப்பெரிய செலவு வைப்பதாக இருக்கிறது. இதில் அடிப்படைத் தேவையான தரமான கெட்டித்தாள் செலவு, புத்தகத் தயாரிப்பு செலவில் பாதியாகும். மீதமுள்ள செலவு "பிரெய்ல்' முறையில் ஒளிஅச்சு செய்தல், அச்சிடல் ஆகியவற்றால் நேர்கிறது. ஆகவே இதன் செலவு கூடுதல் என்றாலும் அதைப் பற்றி கவலைப்படாமல், குறைந்தபட்சம் கல்விபயிலும் மாணவர்களுக்காகிலும் இலவசமாகக் கிடைக்கச் செய்தல் வேண்டும்.  பார்வையற்றோருக்காக தற்போது ஒலி நூல்கள் (ஆடியோ புக்ஸ்) தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் உள்ள "மித்ரஜோதி' என்கிற அமைப்பு அதிக அளவில் அனைத்து மொழிகளிலும் இந்த ஒலிநூல்களை வழங்குகிறது. இவர்கள் தமிழிலும் ஒலிநூல் தயாரித்து வழங்குகிறார்கள். இருப்பினும், தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியம் மற்றும் தற்காலத் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைப் பார்வையற்றோரும் கேட்டு மகிழும் வகையில் ஒலிநூல்கள் வெளிவருவதில்லை.  ஆங்கிலத்தில் சில நூல்களை ஒலிநூல்களாக "சிடி'யில் விற்பனை செய்கிறார்கள். படிக்க முடியாதவர்கள் அந்த நூல்களைக் கேட்டு முடிக்கலாம். ஆனால் அத்தகைய நிலை தமிழ்நாட்டில் உள்ள பார்வையற்றோருக்கு இல்லை. அவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமே ஒலிநூல்களாகப் பெறமுடிகிறது. மற்ற தமிழ் இலக்கியங்களை அவர்கள் அறியும் வாய்ப்பில்லை.  சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள், பாரதியார் கவிதைகள்கூட ஒலி நூல்களாக வழங்கப்படலாம். இதற்கான தயாரிப்புச் செலவு குறைவு என்பதுடன், ஆயிரக்கணக்கான குறுவட்டுகள் தயாரிப்பு எளிது. மேலும், தற்போது "சிடி பிளேயர்' மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.  தற்போது ஒலிநூல் என்கிற அளவில் முழுமையாகக் கிடைக்கக் கூடிய ஒரே இலக்கியம் - நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்தான். திருமலை - திருப்பதி தேவஸ்தானம் இந்தக் குறுவட்டுகளை வெளியிட்டுள்ளது. இதுபோல் தேவாரம், சிலப்பதிகாரம், பாரதியார் கவிதைகள் எல்லாமும் வரட்டுமே! பார்வை உள்ளவர்களும் கேட்டுப் பயன்பெற ஒரு வாய்ப்பாக அமையும்!

entrance exam to medical education: மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: என்ன செய்யப் போகிறார் கருணாநிதி? ஜெயலலிதா கேள்வி

சரியான வினாக்கணைகளைச் சமாளிக்க முதலவர் உடனே நடவடிக்கை எடுத்து பொதுத் தேர்வு வேண்டா என்னும் தமிழக அரசின நிலைப்பாட்டை நிலை நிறுத்த வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: என்ன செய்யப் போகிறார் கருணாநிதி? ஜெயலலிதா கேள்வி

First Published : 04 Jan 2011 12:00:00 AM IST


சென்னை, ஜன. 3: மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வை தடுக்க முதல்வர் கருணாநிதி இனி என்ன செய்யப் போகிறார் என்று  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  2011 - 2012-ம் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் வலியுறுத்தி இருந்தேன்.  நுழைவுத் தேர்வு குறித்து எல்லா மாநிலங்களுடனும், மருத்துவக் கல்வியாளர்களுடனும் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக அப்போது கருணாநிதி கூறினார்.  நுழைவுத் தேர்வின் வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22.11.2010 அன்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் கருத்து அனுப்பப்பட்டு விட்டது எனவும் குறிப்பிட்டார்.  வரும் 2011-2012 கல்வியாண்டில் இப்போது உள்ள நிலையே தொடர்வதற்கு தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றும் எனக்கு பதிலளிக்கும் விதத்தில் கருணாநிதி கூறியிருந்தார்.  மேலும், எதையும் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்திருந்தார். புரிந்து கொண்டு யார் பேசியது புரியாமல் யார் பேசியது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.  எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புகளில் இனி சேர வேண்டுமானால் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அது இந்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டு விட்டது. இதே முறைதான் முதுநிலை மருத்துவப் படிப்புக்கும் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை. இதன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு பாதிக்கப்படும். மேலும், தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாத எந்த மாணவரையும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க அனுமதி இல்லை என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதன் மூலம் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வருமோ என்ற ஐயமும் ஏழை, எளிய மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.  உண்மையிலேயே ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்திருக்குமானால், இந்தச் சட்டம் வருவதற்கு முன்பே அல்லது என்னுடைய அறிக்கை வெளிவந்த பிறகாவது, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தச் சட்டம் வருவதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.  ஆனால் கருணாநிதி அதைச் செய்யவில்லை. இதன் விளைவாக தமிழக மாணவர்களுக்கு இப்போது மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போகிறாரா?  இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என்பது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்ற செயலாகும். இதன் மூலம் தமிழக மக்களுக்கு மன்னிக்க  முடியாத துரோகத்தை கருணாநிதி செய்துள்ளார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உடனடியாக மத்திய அரசிடம் மன்றாடி, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தத் துரோகச் செயலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
<<இங்கே பிரதமர் வருகிறார் என்றாலும் கூட அங்கே செல்லாமல் இந்த மன்னன் (முதல்வர் கருணாநிதி) இங்கே வந்ததற்கு காரணம் தமிழுக்குச் செய்யும் தொண்டு, தமிழ் நெறிக்கு ஆற்றுகின்ற கடமை என்பதை நான் கூற விரும்புகிறேன் (என்றார் முதல்வர் கருணாநிதி.) >>என்றுஉணர்ச்சிவயப்பட்டு நேற்றுப் பேசியிருந்திருக்க வேண்டா.  இன்று இந்த  விளக்கமும் அளித்திருக்க  வேண்டா. மரபினைப் பின்பற்றி வருகையின் பொழுது வரவேற்கா விட்டாலும் வந்த பொழுது ஊர்தி வரை வந்து வழியனுப்பிய தலைமையமைச்சரின் பண்பைப் பாராட்டுவோம்!  தமிழ்த்தொண்டு இல்லாத பொழுது தலைமை யமைச்சரைச் சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்படும் என்னும் கொள்கையை மறுஆய்வு செய்வோம்! 
கண் நலம்   பெற வாழ்த்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

பிரதமரைச் சந்திக்க முடியாதது ஏன்? முதல்வர் கருணாநிதி விளக்கம்

சென்னை, ஜன. 3: பிரதமரைச் சந்திக்க முடியாதது ஏன் என்பதற்கு முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து, தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:  கவிஞர் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி நீண்ட நேரம் கலந்து கொண்டிருந்தார். அங்கு செய்யப்பட்டு இருந்த அதிக ஒளி ஏற்பாட்டின் காரணமாக கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்தது.  பிரதமரை வரவேற்கவும், சந்திக்கவும் திட்டமிட்டு இருந்தபடி செல்ல இயலவில்லை. இதனால், பிரதமரைச் சந்திக்க திங்கள்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திங்கள்கிழமை காலை மருத்துவமனைக்குச் சென்று கண்ணுக்குச் சிகிச்சை செய்து கொண்ட பின் நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அரை மணி நேரத்துக்கு இந்தச் சந்திப்பு நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் புறப்படும் நேரத்தில் கார் வரையில் வந்திருந்து வழியனுப்பி வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங் என்று அரசு விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




periyar articles-writ petition dismiss: பெரியார் எழுத்துகள்: வீரமணி மனு தள்ளுப

பெரியார் எழுத்துகள் எனக் குறிப்பதை விடப் பெரியாரின் படைப்புகள் எனக் குறிப்பது சரியாக இருக்குமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பெரியார் எழுத்துகள்: வீரமணி மனு தள்ளுபடி


சென்னை, ஜன.3: பெரியார் எழுத்துகளை வெளியிடுவது தொடர்பாக பெரியார் சுயமரியாதை பிரசார மையத்தின் செயலர் கி. வீரமணி அளித்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  குடியரசு இதழில் பெரியார் எழுதியவற்றை பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதற்கு உரிமை இல்லை என்று கூறி கி. வீரமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அதே வழக்கில் பெரியாரின் எழுத்துகளை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இடைக்கால மனு தாக்கல் செய்தார்.  இந்த இடைக்கால மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி கடந்த 27.7.09-ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து வீரமணி செய்த மேல்முறையீட்டை நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் கடந்த 9.6.10-ல் தள்ளுபடி செய்தது.  பெஞ்சின் உத்தரவை எதிர்த்து வீரமணி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.) தாக்கல் செய்தார். அதில் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் 26.11.10-ல் உத்தரவு பிறப்பித்தது.  இந்த நிலையில், வீரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் அவர், ""நான் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் சில புதிய விஷயங்களைத் தெரிவித்துள்ளனர். எனவே, அது தொடர்பாக, எனது மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.  இந்த மனுவை நீதிபதி டி. மதிவாணன் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  "பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய எழுத்துகள் பொதுமக்களுக்கு உரியன என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, ""மனுதாரர் தான் கூற விரும்பும் விளக்கங்களை தனியாக அளிக்கலாம். ஆனால், அவரை மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது வழக்கின் தன்மையை மாற்றிவிடும். அது எதிர் மனுதாரர்களைப் பாதிக்கும்'' என்று சரியாகக் கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. மனுதாரர் வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதி மதிவாணன் கூறியுள்ளார்.

திங்கள், 3 ஜனவரி, 2011



புதுடெல்லி, ஜன.3-
 
"வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்" என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதைந்த வால்நட்சத்திரங்கள் வானில் விண் எரிகற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக்கட்டிகள் அடங்கிய கலவையாகும்.
 
இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து பூமிக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும்போது புவிஈர்ப்பு விசையால் ஊராய்வுக்குட்பட்டு எரிந்து சாம்பலாகின்றன.
 
இது ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஒரே நேரத்தில் அதிகமான விண் எரிகற்கள் பூமிக்குள் நுழைகின்றன. இப்படி நுழையும் விண் எரிகற்கள் எரிந்து மழையாக கொட்டுகின்றன. இந்த அரிய காட்சி இந்த ஆண்டு இன்றும், நாளையும் (செவ்வாய்க் கிழமை) அதிக அளவில் நடக்க இருப்பதாக இந்திய வானியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான விண்கற்கள் எரிந்து விழ உள்ளன. அவை மணிக்கு சராசரியாக 40 முதல் 60 கற்கள் வரை எரிந்து விழ வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எரிந்து விழும் விண் எரிகற்களை இரவில்தான் தெளிவாக காணமுடியும். இன்று அமாவாசை என்பதால் அவற்றை மக்கள் தெளிவாக கண்டுகளிக்க முடியும்.
 

borders of thamizh naadu: vengadam and kumari: வடவேங்கடமும் தென்குமரியும்


வடவேங்கடம் என்பதை இமயமலை என விளக்கியும் சிலர் கட்டுரைகள் படைத்துள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறிருப்பினும் தமிழகத்தின் தென் எல்லையை இயற்கையால் நாம் இழந்தோம். வட எல்லையை நம் செயல்பாடுகளால் அல்லது செயல்பாடுகள் இன்மையால் இழந்தோம். இருக்கின்ற நிலப்பரப்பையாவது காப்பாற்ற அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும்  அகற்றி மொழித்தூய்மை பேண வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவளளுவன்

வடவேங்கடமும் தென்குமரியும்


மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதிதானா? தென்குமரி என்பது இன்றைய குமரிமுனையா அல்லது கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டமா?சரித்திரகாலம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு தமிழ்நாடாயிருந்தது என்றும், அதில் வசித்தவர்கள் தமிழர்களாய் இருந்தார்கள்'' என்றும் ஹரப்பா நாகரிகத்தை ஆய்வு செய்த ஹெரஸ் பாதிரியார் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் படைப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே லெமூரியா கண்டம் அல்லது பண்டைய தமிழகம் பரந்த நிலமாக இருந்தது என்பது தெரிய வருகிறது.கலித்தொகை பாடல் 104:1-4, சிலப்பதிகாரம் 20:17-22 ""பஃறுளி ஆறும் பல குன்றும் சூழ்ந்த குமரிக்கோடும் சினங்கெழு கடலுள் ஆழ்ந்தன'' என்று குறிப்பிடுகிறது. உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இதனுடன் ""பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையே 700 கவதப் (அளவு) பரப்புடைய நிலம் இருந்ததென்றும்'' குறிப்பிட்டுள்ளார்.இது கருதியே தமிழக வரலாற்றை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் தமிழக வரலாறு எழுதிய வி.கனகசபை (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - தமிழில்: கா.அப்பாதுரை) ""நாம் குறிப்பிடும் காலத்திய மக்கள் தம் காலத்துக்கு முன் தமிழகத்தின் நிலப்பரப்பு அன்றிருந்த எல்லை கடந்து தெற்கில் நெடுந்தொலைவு பரந்திருந்தது. கடலின் ஒரு திடீரெழுச்சியால் குமரிக்கோடு என்ற மலையும், பஃறுளியாறு ஓடிய பரப்பும் மறைந்துவிட்டன'' என்று குறிப்பிட்டுள்ளார்.பனம்பாரனாரால் சுட்டப்படும் வடவேங்கடம் இன்றைய திருப்பதிதானா என்பதற்கு, ""நெடியோன் குன்றமும் தொடியோள் பெüவமும்'' என்பது சங்கப்பாடல் தரும் குறிப்பு. இங்கு நெடியோன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், குன்றம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் முருகக்கடவுள் கோயில்கொண்ட இடமாகவே அமைந்துள்ளது என அறியலாம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது முதுமொழி.இன்று அழகர்மலை என்று அழைக்கப்படும் மலை சோலைமலை என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. இதுபோல் பண்டைக் காலத்தில் தமிழகத்தின் வட எல்லையாக இருந்த வேங்கடத்தில் முருகனுக்குக் கோயில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.இதை உ.வே.சா., ""பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் வடவெல்லை கிருஷ்ணா நதியென்று சிற்பசாஸ்திரம் கூறுகிறதென்று கேட்டிருக்கிறேன். தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகவும், குமரியைத் தெற்கெல்லையாகவும் கொண்டிருந்தது'' என்கிறார். (சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும், பக்.14)மேலும், அவர் ""அழகர் மலையைச் சோலைமலை என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதுடன், அது முருகக் கடவுளுடைய திருப்பதி என்றும், நக்கீரர் பாடியிருக்கிறார். அப்படியே திருவேங்கடமும் முருகக்கடவுள் ஸ்தலமென்று சில பழைய நூல்களால் தெரிகிறது'' என்று கூறுவதால், வடவேங்கடம் என்று பனம்பாரனார் குறிப்பிடுவது தற்போதுள்ள திருப்பதிதான் என்பதை உறுதியாகச் சொல்லலாம். இரண்டாவது வினா தென்குமரி பற்றியது. ""வடவேங்கடந் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து'' என்ற தொல்காப்பிய பாயிரத்தில் குறிப்பிடப்படும் "குமரி' என்ற சொல், தமிழகத்தின் தற்கால எல்லையாக உள்ள குமரிமுனை அல்ல. சங்க காலத்தில் கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டத்தையே குறிக்கிறது என்பது பல ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.தொல்காப்பியப் பாயிரத்தில் குறிக்கப்படும் "குமரி' என்பது, பண்டைக் காலத்தில் பாண்டி நாட்டின் தென் பகுதியில் ஓடிய ஆற்றின் பெயராகும். சங்க காலத்தில் ஏற்பட்ட பேராழியால் (சுனாமி)- கடல் கோளால் அதில் இருந்த சில நாடுகளும் குமரி ஆறும் பஃறுளியாறும் அழிந்துபோயின என்பது ஆய்வாளர்களின் கருத்து.""செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி''""செந்தமிழியற்கை சிவணிய நிலம்''எனத் தொல்காப்பியரும் பனம்பாரனாரும் கூறிய செந்தமிழ் நிலம் என்பது முதலிடைச் சங்கங்கள் இருந்த நிலப்பகுதியாதலே தகுதி'' என்பது மு.இராகவையங்காரின் கருத்தாகும்.மேலும், ""பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையிலிருந்த 700 காத அளவுள்ள 49 நாடுகள் அழிவுற்றனவென்று சிலப்பதிகார ஆசிரியர் தெரிவிக்கிறார்.வடக்கெல்லை வடவேங்கடமென்றும், மற்ற மூன்று எல்லைகள் கடலென்றும் சிகண்டி ஆசிரியரும், சிறுகாக்கைப் பாடினியாரும் தத்தம் சூத்திரங்கள் முகமாக அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் காலத்துக்கு முன்பு குமரியாற்றை கடல்கொண்டது போலும்'' என்று உ.வே.சாமிநாதையர் கூறியுள்ளதால், கடல்கோளால் அழிந்துபோன சங்ககால குமரிக்கண்டமே தமிழகத்தின் தென் எல்லையாகும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

this is sovereignty: இறையாண்மை என்றால் இதுதான் – இலக்குவனார் திருவள்ளுவன்